காதல்-3

0
305

மஞ்சுளாவை பார்த்த அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்ட அந்த கருப்பு உருவம் திருதிருவென முழித்தபடி பின்னாள் நின்ற தியாவை பார்க்க.

மஞ்சுளாவின் பின்னாள் நின்றிருந்த தியா போச்சி போச்சி மாட்டின என்று அவளுக்கு புரிய வைக்க பரதம் ஆடிக்கொண்டிருந்தாள்.

அந்த உருவத்தின் பார்வை செல்லும் திசையை கவனித்த மஞ்சுளா தலை முதல் பாதம் வரை அவளை அளந்தவர் “என்ன இது கோலம்” என்று கோபமாக கேட்டார்.

சகதியில் உருண்டு புரண்டு தலை முதல் பாதம் வரை சேற்றை பூசிக்கொண்டு இரு கண்கள் மட்டும் தெரியும்படி நின்றிருந்த மகளை காணக் காண அவருக்கு இன்னும் கோபம் அதிகமாகியது

மஞ்சுளா மாணிக்கம் தம்பதியருக்கு இரு மகள்கள் மூத்தவள் கவி என்கின்ற பார்கவி இளையவள் தியா என்கின்ற வித்யா. இருவருக்கும் இரண்டு வருட இடைவெளி மூத்தவள் M.com முதலாம் ஆண்டு இளையவள் Msc bioஇரண்டாம் ஆண்டு இருவரும் கோயம்புத்தூரில் புகழ்பெற்ற கல்லுரியில் படித்து வருகின்றனர்.

“பொண்ணா லட்சணமா இல்லாமா!!! அடுத்தவிட்டுல திருட்டுபையன் சுவர் எறி குதிக்கிற மாதிரி கயிறு பிடிச்சி ஏறி வர” என்றார் அதட்டலாக

“அம்மா…. அது வந்து, அது வந்து” என்று தட்டுதடுமாறியவள் அம்மாவின் கோவத்தை பார்த்து ” எங்க காலேஜ்ல ஸ்போர்ட்ஸ் டே வருது நான் அதுல பார்ட்டிஸ்பேட் பண்றேன் மா… அதான் பிராக்டிஸ் பண்ணினேன்” என்று புலுகை அவிழ்த்து விட

நம்பாத பார்வை பார்த்த மஞ்சுளா இதை என்ன நம்ப சொல்றியா “படிக்கிற பொண்ணு மாதிரியா இருக்க எங்க போய் சேத்துல பொறண்டுட்டு வந்து இருக்க உண்மைய சொல்லு???” என்றார் அதே கோவத்துடன்

“அது ,அது அம்மா…. உண்மையாதாம்மா கயிறுல இருந்து கீழே இறங்கும் போது ஸிலிப் ஆகி பக்கத்துல இருந்த தண்ணீர் போற இடத்துல விழந்துட்டேன். அதான் சேறு ஆகிடுச்சி” என்று கூறி “ஏய் பாத்துக்கிட்டே இருக்க சொல்லு டி அம்மாகிட்ட நான் காம்பிடிஸன்ல கலந்துக்கிட்டு இருக்கேன்னு…” என்று தங்கையை துணைக்கு அழைக்க

“இவ எந்த காம்பிடிஷன்ல கலந்துகிட்டா!!! ஏதாவது நாமலா போய் நேம் கொடுத்தாலும் இவளுங்க கேங்கா போய் கெடுத்து விட்டுறாளுக இவ போய் கலந்துகிட்டேன்னு இப்படி வாய்கூசாம பொய் சொல்றா இதுல நம்மல வேற துணைக்கு கூப்புடுறா!!” என்று மைன்ட் வாய்ஸ் ஓடினாலும் அன்னிச்சையாய் உதடுகள் அக்காவிற்க்காக ஆமாம் என்று கூறி தலையையும் ஆட்டியது.

“ஏன் தியா உண்மையா இவ கலந்து இருக்காளா? நான் இவ எங்கன்னு கேட்டதுக்கு தெரியாதுன்னு சொன்ன?”

“அம்மா இவ கலந்துகிட்டு தான் இருக்கா… ஆனா வெளிய போனதுதான் எனக்கு தெரியாதுன்னு சொன்னேன். என்று மழுப்பலாக பதிலை கூறியவள் திருதிரு வென்று விழிக்க.

“இன்னும் நம்பாமல் இருந்தவர் இருவரையும் பார்த்து உன்னால இவ தம்பிச்சா… என்னைக்கு காம்பிடேஷன் சொல்லு?. இல்ல, இல்ல வேணா உங்க மேம் நம்பர் கொடு நான் பேசனும்..

“மா இதுதான் உன் பொண்ணு மேல நீ வைச்சிருக்க நம்பிக்கையா??” என்று வேண்டுமென்றே தாயை பார்த்து கோபமாக கேட்பது போல் கேட்க

“ஆமா அப்படித்தான் நினைச்சிக்கோ.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு இல்ல நம்பர கொடு… என்று இவரும் விடாபிடியாய் எண்ணை கேட்டார்.

இவளும் வாய்க்கு வந்த ஒரு தேதியை கூறி நம்பரையும் கூறி “வேனுன்னா மேம்கிட்டயும் தியாகிட்டயே கேளுங்க…” என்று கோபபடுவதுபோல் அவளையும் இழுத்து விட

அவள் பார்வையும் பேச்சும் நம்பும்படி இருந்தாலும் ஏதோ ஒன்று உறுத்த “என்ன தியா அவ சொல்றதெல்லாம் உண்மையா???”. என்றார் மீண்டும் அவளிடம்.

தமக்கையை வாய்க்குள்ளேயே திட்டி தீர்த்தவள் “ஆமா… ஆமா மா… அன்னைக்குதான்”. என்றாள் தமக்கையின் மேல் முறைப்புடனே.

தங்கையின் விழிமாற்றத்தில் இதற்க்கு மேல் சமாலிக்க முடியாமல் தாயை சரிக்கட்ட ” என்னம்மா உங்க பொண்ண நீங்களே நம்ப மாட்டிங்களா?!?… இதான் நீங்க உங்க பொண்ண வளர்த்த வளர்ப்பா சொல்லுங்க?|!! உங்க வளர்ப்பு மேல நீங்களே சந்தேக படலாமா?!?” என்று சரியாய் தாயின் மீது ஏவுகனையை திருப்ப அதுவும் வேலை செய்தது….

“நாம்ம வளர்ப்பு தப்பாகுமா?!… நம்ம பொண்ணுமேல நாமலே சந்தேகபட்டு தான் தப்பு செய்கிறோமோ?!?…” என்ற எண்ணம் ஏற்பட்டு யோசனையுடன் மகளின் முகத்தை பார்த்த மஞ்சுளா அப்படியே நிற்க

“ம் நல்லா இருக்கு… என்னை நம்பாம இப்படியே என்கொயரி பண்ணிட்டு இருங்க நல்லாருக்கும்… அங்க பாருங்க” என்று கடிகரத்தை காட்டி ” டைம் என்னாச்சின்னு… நேரத்துக்கு போய் அப்பாவுக்கு பிரேக்பாஸ்ட் ரெடி பண்ணுங்க… எங்களுக்கும் டைம் ஆச்சி… இப்படியே இங்கயே மசமசன்னு நின்னுகிட்டு இருந்தா பாத்திரம் அதுவா தானா ஸ்டவ் மேல ஏறி உட்காந்துக்குமா?!?… போங்கமா போய் வேலைய பாருங்க… நீங்களே உங்களையும் உங்க வளர்ப்பையும் குறைச்சி எடபோட்டுகாதிங்க…” என்று கூறி அடுக்களையையும் நினைவுபடுத்த

“நல்லா பேச கத்து வைச்சிருக்க!!… இன்னோரு முறை இப்படி பண்ண அப்புறம் வேற மஞ்சுவ பார்க்க வேண்டி வரும் ஜாக்கிரதை…” என்று எச்சரித்துவிட்டு “போய் சோப் போட்டு நல்லா குளி இன்னைய பொழுது உன்னோட வீணா போச்சி… இதுல நீ என்னை சொல்றியா!?!… உனக்கு இருக்குடி ” என்று அவளிடம் துண்டை தூக்கி வீசி எறிந்தவர் “சீக்கிரம் ரெண்டு பேரும் கீழே வாங்க…” என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் சென்று விட்டாரா என்று மெல்லமாக கதவின் பக்கம் எட்டி பார்த்த வித்தியா கதவை தாழிட்டு தமக்கையிடம் “நான் உன்னை போகதன்னு தானே சொன்ன… ஏன்டி இப்படி பண்ற??? நீ பண்ணிணது அம்மாக்கு தெரிஞ்சா!!! அவள்ளவுதான் தொலைச்சி கட்டிடுவாங்க அம்மாக்கு தெரிஞ்சா என்ன நடக்குமுன்னு தெரிஞ்சும் இதுமாதிரி பண்றியே உனக்கு இது தேவையா?!?” என்று தலையில் அடித்துக்கொள்ள

அதெல்லாம் பார்த்த திரில்லிங் இருக்காது தியா இப்போ பாத்தியா திரில்லிங்காவும் அதே நேரத்துல அம்மாகிட்ட மாட்டாம தப்பிச்சும் தப்பிச்சாச்சி என்றாள்

ம்…. அதுசரி. இது என்ன கோலம் பவி சேத்துல புரண்டு வந்துருக்க என்று களுக்கென்று சிரித்தவள் என்ன ஆனது என்று கேட்க

அய்யோ தியா அதயேன் கேக்குற ஒரு முட்டாள் குரங்கால வந்தது. அதுக்கு பைக்கும் ஓட்டத்தெரியல ஒரு கன்றாவியும் தெரியல அந்த முசுடால வந்தது.

ஹா…. ஹா…. என்ன பவி சொல்ற முட்டாள் குரங்கா

ம் ஆமா அந்த காட்டுஎருமைய வேற எப்படி சொல்றது அவனாலதான் எல்லாம் …. என்ன பேச்சு என்ன சிடுசிடுப்பு பாவம் பொண்ணாச்சேன்னு கூட இல்லாம என்ன திட்டு திட்டிட்டான் எனக்கு வந்த கோவத்துக்கு அவனை அப்படியே ஏதாவது செஞ்சிருப்பேன். என்று கோவத்தில் பொறிந்தவள் அம்மாவால தப்பிச்சான் எந்நேரம் அவங்கிட்ட பேச்சி வாங்கனுமுன்னு இருக்கு இல்லனா எப்பயோ வந்து படுத்துட்டு இருப்பேன் அம்மாகிட்டயும் மாட்டி இருக்க மாடேன் என்று ஆற்றாமையால் கூறிக்கொண்டிருந்தாள் .

என்ன பவி என்ன நடந்தது அம்மாவால தப்பிச்சானா என்று அவளும் ஆவளுடன் கேட்க

ம்.ஆமா.அம்மாவாலதான் என்று கூறியவள் அவள் போய் வந்த கதையை கூற தொடங்கினாள்.

அதேயேன் கேக்குற தியா ராஜீவ எல்லா ஏற்பாடும் கோயில்ல பண்ண சொல்லிட்டு ஷீலா வீட்டு பின்வாசல்பக்கமாய் அவளுக்காக காத்துட்டு இருந்தேன். அவ வரவே இல்ல ரொம்ப டைம் ஆகவும் எனக்கு பதட்டமா ஆகிடுச்சி சரி நாமாவது உள்ள போய் கூப்பிடுவோம்னு பாத்தா நம்ம வீட்டவிட பெரிய கம்பவுண்டா கட்டி வைச்சிருக்காங்க தெய்வமேன்னு அதையும் ஏறி உள்ள போய் பாத்தா வீடு முழுக்க சொந்தகாரங்க நாளைக்கு நடக்குர நிச்சயத்துக்கு வந்திருப்பாங்க போல அந்த கூட்டத்துக்கு நடுவுல மகாராணி உட்காந்திட்டு இருக்காங்க

நா சத்திமில்லாம மெதுவா போய் அவள வரசொன்ன நா எப்படி வர்ரது எனக்கு பயமா இருக்கு எங்க அப்பா எங்கள வாழ விடமாட்டாறு எங்க சொந்தகாரங்களெல்லாம் வந்து இருக்காங்க எனக்கு பயமா இருக்குன்னு ஒரே புலம்பல்

எனக்கு வந்த கோவத்துக்கு அவள என்ன செய்யரதுன்னே தெரியலை அவ என்கிட்ட ராஜீவ கல்யாணம் பண்ணபோறேன்னு சொல்லும்போதே உங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்கு நீங்க வேற ரிலிஜின் அவன் வேர ரிலிஜன் கொஞ்சம் நாள் பொருங்க உன் படிப்பு முடிஞ்சி உங்க சொந்தகால்ல நின்ன பிறகு இதெல்லாம் வைச்சிக்குங்கன்னு சொன்னா இல்ல இல்ல அவன் இல்லன்னா நான் செத்திடுவேன் நான் செத்தாலும் அவன் பொண்டாட்டியாதான் சாவேன்னு டைலாக்லாம் பேசினவ இப்போ பயமா இருக்குன்னு டக்குன்னு பல்டி அடிக்கிகிராலேன்னு சரி நல்ல முடிவுதான் எடுத்து இருக்க இங்கயே இரு நான் வந்த வழியே போறேன்னு திரும்பிட்டேன்.

என் கையபிடிச்சிட்டு அவன் கோயில்லதான் இருக்கானான்னு கேட்டா ஆமா அங்கதான் இருக்கான். அவனுக்கு என்ன ஆனா உனக்கென்ன நான் அப்படியே அவனை வீட்டுக்கு போக சொல்றேன்னு கோவமா சொல்லிட்டு கையவிலக்கி விட்டு நடந்தேன்.

கொஞ்ச இரும்மான்னு ஒரு குரல் கேட்டது யாருடா இது நம்மல கூப்பிடுறது அப்படின்னு நினைச்சிட்டே திரும்பி பார்த்த அவங்க பாட்டிமா நிக்கிராங்க எனக்கு உள்ளுக்குள்ளாற உதறல் தான் செத்தான்டா சேகருன்னு மனசுல நினைச்சிட்டே நின்னுட்டு இருந்தேன்.

ஷீலா நீ உன் பிரண்ட் கூட போன்னு சொன்னாங்க பாரு…. தூக்கி வாரி போட்டுச்சி ஆச்சர்யமா நானும் ஷீலாவும் அவங்களையே.பார்த்துட்டு இருந்தோம். இப்போ எதுவும் பேச முடியாது மா யாரச்சும் பார்த்துட்டா அவ்வளவுதான் நீ உன் மனசுக்கு பிடிச்ச பையன்கூட சந்தோஷமா வாழனும் உன் அப்பனோட பணத்தாசைக்கும் அகம்பாவத்துக்கும் உன்னை பலியாக்க நினைக்கிறான். எங்களால எதுவும் பண்ணமுடியாம நிக்கிறோம். நீ நல்லா இருக்கனும் போடகன்னு போட நல்லபடியா மாலையும் கழுத்துமா வந்து நில்லு அப்புறம் இவனுங்களால என்ன பண்ணமுடியுன்னு பாக்கலாம் என்று தைரியம் கூறி அனுப்ப நானும் ஷீலாவும் ஏதோ தைரியத்துல பின்பக்க கேட் வழியா வெளியே வந்தோம்.

மணி பார்க்க முகூர்த்தத்துக்கு அரைமணி நேரமே இருக்க அரக்கபரக்கன்னு அந்த மலைகோவிலுக்கு அவள கூட்டிட்டு போய் விட்டேன். ராஜீ முன்னேற்பாடா அவனோட பிரென்ட்ஸ் கிட்ட சொல்லி கொஞ்சம் அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் பண்ணி வைச்சிருந்தான். ஷீலா அவனை பார்த்தும் அழ ஆரம்பிச்சிட்டா இதுக்குதான் குட்டிமா சொன்னேன் இப்போ அவங்கிட்ட உண்மைய சொல்லி பொண்ணு கேக்குறேன்னு நீதான் எங்க அப்பா இதுக்கு ஒத்துக்கமாட்டாரு அவரு உங்கள ஏதாவது செஞ்சிடுவாறு அப்படின்னு பயந்து நாம உடனே கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு சொன்ன இப்போ ஒரு வார்த்த சொல்லு இதை நிறுத்திட்டு உங்க வீட்டுக்கு போய் பேசலாம் அதுக்கு அப்புறம் எதுவந்தாலும் பாத்துக்கலாம்ன்னு சொன்னான். ஆனா ஷீலா ஒத்துக்கவே இல்ல என் கழுத்துல தாலி ஏறி உங்க மனைவியாதான் எங்க வீட்டுக்கு போகனும்ன்னு உறுதிய சொன்னா சரின்னு அவளை சமாதானபடுத்தி அவளுக்கு ஆறுதல் சொன்னவன் ஒரு பேகை காட்டி இதுல இருக்கரத போட்டுக்கிட்டு நீ போட்டு இருக்கரத இதுல கழட்டி வைச்சிடுன்னு சொல்லி எங்க கிட்ட கொடுத்து அனுப்பினான். அவள அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வந்தேன் நல்ல பாசகலர்ல காப்பிகலர் பார்ட்ர்ல மயில் டிசைன் போட்ட புடவை நல்ல கலர் செலக்ஷன் தான் அவளுக்கு ரொம்ப அழகா இருந்துச்சி அதோட 6ஜோடி தங்க வளையல் ஆரம் செயின் கம்மல் இத எல்லாம் போட்டு கல்யாணபொண்ணா ஆகிட்டா ஷீலா அவ போட்டிருந்த டிரஸ் எல்லாம் அந்த கவர்ல போட்டு அவன்கிட்ட கொடுத்தா அதை அவன் பிரண்ட் கிட்ட கொடுத்து இதை அவங்க அப்பா வீட்டுக்கு போகும்போது கொடுக்கனும்ன்னு சொல்லி வைக்க சொன்னான். இப்போ புரிஞ்சது இவ ஏன் அவனை அவ்வளவு ஆழமா நேசிக்கிரான்னு ஒரு நாள் ஆனாலும் அவனோட மனைவியா இருக்க ஆசைபடுறான்னு நல்ல காதலனும், நல்ல கணவன் அமையரதும் ரொம்ப ரேர் அவளோட காதலுக்கு அவன் வொர்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன். ( இவங்களப்போலவே எனக்கும் என்ன மட்டுமே நேசிக்கிர ஒரு நல்ல இதயத்த காட்டுன்னு கடவுளை பிராத்திச்சிக்கிட்டேன் பின்குறிப்பு இதை என் தங்கச்சிக்கிட்ட சொன்னா என்ன ஏகத்திக்கும் வைச்சி ஓட்டுவா சோ இது அவளுக்கு சொல்ல கூடாது சென்சார்ல கட் ஆனதா இருக்கட்டும்????)

கல்யாணம் முடிஞ்சதும் டைம் பாத்தா 4.30 கடவுளே அம்மாகிட்ட மாட்டக்கூடாதுன்னு ரொம்ப ரொம்ப வேகமா அவங்ககிட்ட சொல்லிக்கிட்டு படு பாஸ்டா மலைக்கோவில்ல இருந்து இறங்கினேன் பட் என் போறாத நேரம் அப்போன்னு பாத்து வண்டியோட ப்ரேக் பிடிக்கல நான் சவுண்ட் கொடுத்துங்கிட்டே இறங்கிட்டு இருந்தேன் ஒரு டேர்னிங்ல என்னைவிட ஸ்பீடா வந்த பைக்மேலமோதி உருண்டுபோய் சேத்துல விழந்துட்டேன்.

எனக்கு வந்த கோவத்துல அவனை செமையா திட்டனுமுன்னு வாயேடுத்தான் ஆனா என்னை ஒரு.வார்த்த கூட பேசவிடாம என்னை பார்த்து அறிவிருக்கா இவ்வளவு பெரிசா வளர்ந்து இருக்க டர்னிங்ல இன்டிகேட்டர் போடனுமுன்னு அறிவு இல்லையா ஆக்ஸிடன்ட் ஆகனுமுன்னு ஆசையிருந்தா நீ தனியா மேல இருந்து உருண்டு வந்து விழுந்திருங்கனும் மத்தவுங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காதுன்னு சொல்லவும் அவனை அப்படியே நாலு அறை அறையலாம் போல இருந்துச்சி இதுல என்னை நக்கலா வேற பாக்குறான்.

நீ சும்மாவா விட்ட ஆச்சர்யமா இருக்கு என்றுதங்கை எடுத்து கொடுக்க

அவன்அப்படி பேசினதும் நான் சும்மாவா இருந்திருப்பேன் என்ன சார் உங்க அறிவ எங்க வாடகைக்கு விட்டிருந்திங்க நான்தான் இன்டிகேட்டர் போடல நீங்க ஹார்ன்பண்ணிட்டு வந்திருக்கலாமே கேட்டதும். மூஞ்சியும் ஆளையும் பாரு மனசுல கோயம்பத்தூர் ஜில்லா கலெக்டர்ன்னு நினைப்பு இவரு வர்ராருன்னு எல்லாரும் சலாம் போட்டு வழிவிடனுமுன்னு நினைச்சிட்டு வந்தா வழியில யாரு வர்ரா எது வருதுன்னு பாத்து வரனும் கண்ண வானத்துல வைக்கரதுக்கு பதிலா தரையில வைச்சி வண்டிய பாத்து ஓட்டு என்று வாய்க்கு வந்ததை பேச

அவனுக்கு வந்த கடுப்புல ஆமா ஆமா காலங்காத்தால உன்னை போல எந்தா அறிவு ஜீவியயம் இப்படி வரும்ன்னு எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா கண்டிப்பா ஹார்ன் பண்ணிண்டுதான் வந்திருப்பேன்னு நக்கலா சொன்னான்.

ஹே மைன்ட் யுவர் வேர்ட்ஸ் ரொம்ப ஓவரா பேசுற என்னை என்னன்னு நினைச்சிட்டு பேசிட்டு இருக்கன்னு கேட்டா

கண்டிப்பா நீ ஒரு பொண்ணு இல்லன்னுதான் நினைச்சிட்டு பேசிட்டு இருக்கேன் கண்டிப்பா நீ வால் இல்லாத சே சே அது பேர உனக்கு சொல்லி அதை கேவல படுத்த கூடாது பாரு அதுனால பெயர் வைக்கபடாத ஒரு ஜந்துகிட்ட பேசுறதா நினைச்சகட்டு இருக்கேன்.

இடியட்.ஸ்டுபிட் டேய் நீ என் கைல கிடைச்ச அவ்வளவுதாண்டா என்று எகிற

ஏய்.யாரபாத்து வாடா போடாங்குறே இன்னும் ஒரு வார்த்த பேசின பல்லு தட்டி கையில கொடுத்துடுவேன் பாத்துபோடி என்று அவன் போய்விட

இடியட் இடியட் உன்னை என்று தன் வண்டியை ஒரு உதை விட்டவள் எல்லாமே உண்ணாலதான் அவன் என்னை எப்படி திட்டிட்டு போறேன் எருமை எருமை என்று மீண்டும் அவனை வசைபாட.ஆரம்பித்தவள் மணியை பார்க்க அம்மாவின் முகம் மனகண் முன் வந்துபோக மறுபடியும் வண்டியை எழுப்பிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் கேட்க யாரு என்று கவி குரல் கொடுக்க நீ இன்னும் குளிக்க போகலியா என்று கதவை திறக்க முயல

அம்மா நான் எப்பயோ போய்ட்டேன் என்று சொல்லிக்கொண்டே குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

தாய் தந்தை இருவரையும் கலந்த சற்றே சிவந்த நிறத்தை கொண்ட மேனி நீல்வட்ட முகம் இயற்க்கையிலேயே நானெற்றிய மாறனின் வீல் போன்ற புருவங்கள், பழங்காலத்தில் கவிஞர்கள் எல்லாம் கண்களை மீன்களுக்கு நிகராய் கூறி இருக்கிறார்கள் இவளுக்கும் அழகிய விழிகள் தான் அதில் மை தீட்டி இருந்தால் இன்னும் வசிகரித்திருக்குமோ என்னவோ,
முக அழகை நிர்ணயிக்கும் எடுப்பான நாசியும், உதட்டு சாயம் பூசாதபடாத பட்டு போன்ற மென்மையான இதழ்கள், பலிங்கு கழுத்தில் மெல்லிய சங்கிலியும் காதில் சிறு தங்க தோடும்
மேனியின் நிறத்திலேயே இள மஞ்சள் நிற உடையும் காண்போர் கண்களை உறுத்தாத தோற்றம் கொண்டு சேற்றில் குளித்து செந்தாமரையாக இருந்தவள் இப்போது இன்று பூத்த இள மஞ்சள் மலராக படிகளில் இறங்கினாள். (அதாங்க எப்பவும் அலட்டிகாத சாதராண உடையிலும் ஸ்டிக்கர் பொட்டுலயும் ஒரு முறை பார்பவர்களை கூட வசிகரிக்கும் அழகு நம்ம கவி என்கின்ற பார்கவி )

அன்னையை தேடி கிச்சன் மேடையில் அமர்ந்தவள் அம்மா அம்மா…. டிபன் என்று பாட தொடங்கி தட்டை எடுத்து தாளம் போட ஆரம்பித்தாள்.

சமையல் வேலையில் இருந்த மஞ்சுளா அவளின் அழகை கண்டு ஒரு நிமிடம் புன்னகை அரும்பினாலும் மகளின் ஆர்பாட்டம் அவரை திண்டாட வைத்தது பொண்ணா அடக்க ஒடுக்கமா அமைதியா இருடி பக்கத்துல தானே இருக்கேன் அம்மா அம்மான்னு பாட்டு பாடுறேன்று ஏலம் விடுற கொஞ்சம் ஒரு இடத்துல பொறுமையா உட்காரு தோசையை வைக்கிறேன். என்றவர் தியா எங்க அவள காணும் நீ மட்டும் கீழே வந்து இருக்க அவ இன்னும் ரெடி ஆகலையா என்றார்.

ரெடி ஆகிட்டுதான் மா இருக்கா அவ லேட்டா வருவா…. எனக்கு டைம் ஆச்சி பசிக்குது மா … என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூறிய பார்கவி மஞ்சுளா ஊற்றிய தோசையை எடுத்து தட்டில் அடிக்கிக்கொண்டே

லேட்டா வர்ர மகாராணிய மட்டும் தேடுறிங்களே மா உங்க எதிரவே இருக்கேன் என்னை கண்டுகிட்டா மாதிரியே தெரியல என்று தாயை வம்பு இழுத்தாள்.

அவள கேட்டாக்கா .. உன்னை தேடலன்னு அர்த்தமா காலைல நீ பண்ண வேலைக்கு எனக்கு நேரம் போனதுதான் மிச்சம் இப்போ உக்காந்து சாப்பிடறதே அதிகம் பேசாம சாப்பிடு காலேஜ் கிளம்புற வழிய பாரு என்று படபடக்க

அம்மா பேசாம எப்படிமா சாப்பிடறது ஆனாலும் அம்மா நாங்க எல்லாம் கிரேட் தெரியுமா என்று தாயிடம் கூற

ஏதோ சொல்ல போகிறாள் என்று உணர்ந்த மஞ்சுளா பார்கவியை பார்த்திருக்க

இந்த இடத்துல நீங்க எப்படின்னு சந்தேகம் கேக்கனும்மா

என்னமோ சொல்லபோற…. எங்கிட்ட அடிவாங்கம தப்பிச்சி போயிடு என்று கரண்டியை காட்டி எச்சரிக்க

இதுகெல்லாம் பயந்தா எப்படிமா!???? இந்த 22 வருஷமா நீங்க செய்ற சாப்பாட சகிச்சிக்கிட்டு சாப்பிட்டு உயிர் வாழுற நாங்கெல்லாம் கிரேட்ல்லமா என்றவள்

பொருமையில பூமாதேவியா, சகிப்பு தன்மையிலும் தியாகத்திலும் அன்னை தெரசாவா , எங்கள நாங்க மாத்திக்கிட்டு நீங்க போடுறத சாப்பிட்டே இத்தனை வருசம் வாழ்ந்துட்டு வர்றோம் என்று காமெடி கலந்த மாடுலேஷனில் அவள் கூற

மகளின் வம்பு பேச்சை ரசித்தவர் அவள் அறியா வண்ணம் அதை மறைத்து முகபாவணையை மாற்றாமல் கோபம் கொண்டவரை போல் அவளை திட்ட ஆரம்பித்தார். பேச்சா பேசுர நீ அடுக்கலை பக்கம் ஒரு நாள் சமைக்கரேன்னு வந்திருப்ப நீ என்ன கிண்டல் பண்றியா …. ஒழுங்க சுடுதண்ணி கூட வைக்க தெரியாது கைய சுட்டது கால சுட்டதுன்னு வந்து நிக்கிரவ என் சமையல சொல்றியா மவளே வரேன் இருடி உன்னை என்று கரண்டியை எடுத்து அவளை துரத்த

என்னை காப்பத்துங்களேன் என்னை யாரவது காப்பாத்துங்களேன்
என்னை அடிக்கிறாங்களே அய்யோ அம்மா அடிக்கிறாங்களே அப்பா வாங்க வாங்க என்று சமையல் அறையில் இருந்து மாடிக்கு கூக்குரல் கொடுத்தபடி ஒடியவள்.

தந்தையின் பின்புறம் மறைந்து கொண்டாள். ஏய் ஒழுங்க வந்திடு இல்ல தோலை உறிச்சிடுவேன் என்று தாய் எச்சரித்தும் அதை சட்டைசெய்யாமல் அப்படியே நின்றிருந்தாள் பவி

என்னடி என்ன ஆனது ஏன் இப்படி குழந்தைய துறத்துர

ம்.. குழந்தையா இன்னும் எல் கே ஜி பாப்பா தூக்கி மடியில வைச்சி கொஞ்சிங்க இரண்டு கழுத வயசு ஆகுது இன்னும் குழந்தையா வாயிமட்டும் நல்லா ஆடுறா நீங்க தான் மெச்சிக்கனும் உங்க பொண்ண நாள பின்ன கல்யாணம் காட்சின்னு ஆச்சின்னா உங்கள எதுவும் கேக்க மாட்டாங்க இவ செய்ற வேலைக்கு நிமிஷம் ஒரு முறை நான் தான் அங்க போய் நிக்கனும் அப்படி வளர்ந்திருக்கா என்று பொறிய

என்னடா ராஜா இப்படி காய்ச்சார உங்க அம்மா என்னதான்டா அப்படி செய்த

நான் ஒன்னுமே செய்ல பா அம்மா சமையல் எப்படி சாப்பிடுறோம்ன்னு சொன்னேன் அதான் கோவம் வந்துட்டுது போல என்று சிரிக்காமல் சொல்ல

அவள் கூற்றில் மாணிக்கத்திற்க்கு சிரிப்பு வந்துவிட சரி சரி நீ இரு மஞ்சு ஏன்டா இப்படித்தான் உண்மைய போட்டு உடைப்பியா என்று அவர் பங்குக்கு அவரும் கேலி பேச

நீங்க கொடுக்குற இடம் தான் இப்படி இருக்கா ராஜாவாம் ராஜா கண்ணே மணியேன்னு கொஞ்சமாட்டாறு ஆண்பிள்ளை போல வாட போட பின்ன இவ எப்படி பொண்ணு மாதிரி நடந்துக்குவா

பின் மறைவில் இந்து வெளிபட்டவள்
ஆஹா பின்ன என்ன செய்ய சொல்றிங்க உங்கள மாதிரி இருக்க சொல்றிங்களா நோ வே நான் இப்படி தான்….. சரி சரி டைம் ஆச்சி டிபன் வை மஞ்சுளா…. என்று அன்னையை அழைத்துக்கொண்டே கிச்சனுக்குள் புகுந்தாள்.

தட்டில் ஊற்றிய தேங்காய் சட்னியை பார்த்ததும் அம்மா கார சட்டினி வைக்காம ஏன் மா தேங்காய் சட்னி வைக்கிர எனக்கு புடிக்கவே இல்லமா என்று புலம்பியபடி சாப்பிட ஆரம்பிக்க

ஹோஹோ… அதான் பிடிக்கல பிடிக்கலன்னு சாப்பிட்டுகிட்டே இருக்கே போல என்று வித்தியா கேட்டுக்கொண்டே பார்கவியின் பக்கத்தில் இருக்கும் மேடையில் வந்தமர்ந்தாள்.

என்ன செய்ய அம்மா சமையல நாமலே சாப்பிடலனா எப்படி அதான் சகிச்சிகிட்டு சாப்பிடுறேன் என்று தியாவிடம் கண் அடித்துக்கொண்டே பார்கவி கூற

கையில என்ன இருக்குன்னு பாத்தியா ஓவரா பேசினா வாயிலயே ஒன்னு இழுத்திடுவேன் ஒருவாரத்துக்கு ஒன்னும் சாப்பிட முடியாது..

தெய்வமே…… அப்படியெல்லாம் கோபபடக் கூடாது. என்று வசனம் பேசியவள் சாப்பிடுவதில் குறியானாள்.

Hi friends story nalla iruka….. Neega padichitu appadi ye pogama oru 4 vartha comments sonninga na enaku innum ezhudha vasathiya irukum ????

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Previous Postகாதல்-2
Next Postகாதல் 4
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here