உள்ளத்தின் காதலை
உணர்த்திட எண்ணியே
உச்சிவிரலின் நுனியிலே
உதிரத்தை எடுத்தேனே
புரியாத நேரத்தில்
புதிதாக மாற்றமும்
புதிராக வந்திடுதே
புண்படுத்தி செல்கிறதே
வருத்தங்கள் சொல்லாமல்
வலிகளையும் தோற்கடித்து
உன்னோடு சேர்ந்திடவே
துடிக்குதடி என்னிதயம்
வருடங்கள் முழுவதிலும்
வந்து சென்ற சண்டையிலே
பிரிவென்ற சொல்லில்லையே
புரிந்துகொண்ட காதலிலே
உயிரே…
குழப்பத்தில் எழுதிவிட்டேன்
குருதியிலே கடிதத்தை
குப்பையிலே வீசுகின்றாய்
குழந்தையென நானும்
பழமையை மறந்துவிட்டு
பைத்தியமாய் நினைக்கின்றாய்
பதிலேதும் இல்லாமல்
பரிதவிப்பில் நானடி…
சிதைந்து போன காதலால்
சிவந்துபோன காகிதமும்
சிந்திய நுனிவிரலும்
சிரிக்கிறதடி எனை பார்த்து
கண்மணியே…
காதலெனும் வாழ்வினிலே
கண்ணீரே பரிசென்று
களவாடி சென்றுவிட்டாய்
கனவுகள் மட்டும் மிச்சமடி……
- சேதுபதி விசுவநாதன்