சலதி 6 tamil novels

0
147

“எக்ஸ்க்யூஸ் மீ . மை நேம் இஸ் ஹனி (excuse me, my name is honey) எனக்கு இந்த கம்பெனி மேனேஜர் கூட ஒரு அப்பாயின்மென்ட் இருக்கு” என்று ரிஷப்ஷனில் சொல்லியவள் அவர் பதில் கூறும் முன் அங்கிருந்த சேரில் போய் ஒயிலாக அமர்ந்தாள்.
“மேடம் சார் உங்களை உள்ளே வர சொன்னார்” என்று சொன்னதும் அதற்கு மேலும் அங்கே நின்று நேரத்தை வீணாக்காமல் அழகாய் நடை பயின்று மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள்.
உள்ளே சேரில் சாய்ந்து அமர்ந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் முப்பதுகளில் இருந்த ஒருவன்.
“ஹாய்… ஐ யம் ஹனி”
“ஐ யம் நட்ராஜ்… மாடலிங் சான்ஸ் கேட்டு நேத்து பேசுனியே.. அது நீ தானே?”அவன் பார்வை அவளை துகிலுரித்தது.
“ஆமா…” அசட்டை நிரம்பி வழிந்தது அவள் குரலில்.
“உன்னோட ப்ரோபைல் கொடு… இதுக்கு முன்னாடி மாடலிங் செஞ்ச எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?” அணிந்திருந்த கண்ணாடியையும் தாண்டி அவன் கண்கள் வக்கிரத்தை காட்டியது.
“நானே நேர்ல வந்து இருக்கேனே… அப்புறம் எதுக்கு ப்ரோபைல்? எக்ஸ்பீரியன்ஸ்… ம்ஹுகும்… இது தான் முதல் தடவை” என்று சொன்னவளை எதிரில் இருந்தவன் நோட்டம் விட்டான். அவன் பார்வையில் நிச்சயம் நேர்மை இல்லை. கண்களால் அவளை மேய்ந்தான்.
“இந்த பீல்டு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?”
“மாடலிங் செஞ்சா நிறைய காசு வரும்னு தெரியும்.”
“ஸோ.. காசு தான் முக்கியம்னு சொல்றீங்களா?” தூண்டிலை வீசினான் அவன்.
“ஏன் நீங்க இந்த கம்பெனியில் சும்மா பொழுதுபோக்குக்காக வந்துட்டு போறீங்களா?”
“இந்த பீல்டில் லேடிஸ்க்கு கிடைக்கிற அனுபவமும் சம்பளமும் ஆண்களுக்கு கிடைக்கிறது இல்லை” என்றான் குறிப்பாக.
“கஷ்டப்பட்டு வேலைப் பார்க்க தயாரா தான் வந்து இருக்கேன்”
“நீங்க ரெடியா இருந்தா மட்டும் போதாது… உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க நாங்களும் தயாரா இருக்கணும்”
“ஏன்.. எனக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டீங்களா?” உடலை லேசாக நெளித்தாள்.
“நம்ம கொஞ்சம் நேரடியா பேசுவோமா? இப்போ மாடலிங்ல டாப்ல இருக்காங்களே சுனிதா அவங்களுக்கு முதன்முதலா நான் தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தேன். அதை வச்சு அவங்களும் ஹேப்பி… பதிலுக்கு அவங்க செஞ்ச அட்ஜஸ்ட்மெண்ட்டால நானும் ஹேப்பி… அது மாதிரி உங்க கிட்டேயும் நான் எதிர்பார்ப்பேன். எங்களுக்கு திருப்தி கொடுக்கிற மாதிரி நீங்க ஒத்துழைப்பு கொடுத்தா உங்களையும் அடுத்த நம்பர் ஒன் மாடலா மாத்திடுவோம்”
“மாடலிங் பத்தி தெரியாமலா வருவாங்க.. இந்த பீல்டை பத்தி தெரியும் சார். அதுக்காக போஸ்டர் விக்கிறவன், புண்ணாக்கு மூட்டை போடுறவனை எல்லாம் அட்ஜஸ்ட் செய்ய என்னால முடியாது” என்றவள் மறைமுகமாக அவளைப் பற்றி சொல்ல… எதிரில் இருந்தவனின் முகம் ஒளிர்ந்தது.
“மேனேஜர் லெவல்னா?”
“மேனேஜர்னா எங்கே? வேர்ல்ட் பேங்க்லயா?” என்று கேட்டு அவரது மூக்கை உடைத்தாள்.
“ஸோ…”
“யெஸ்… சும்மா போறவன் வர்றவனை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு தான் இங்கே இருக்க முடியும்னா அதுக்கு நான் ஆள் கிடையாது. எனக்குனு ஒரு ரேஞ்ச் இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி…”
“பசை உள்ள பார்ட்டினா மட்டும் தான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்னு சொல்றீங்க…”
“வெறும் பசை எல்லாம் போதாது… இன்னும் தெளிவா சொல்லணும்னா எனக்கு புளியம் கொம்பு எல்லாம் வேண்டாம்.. புளிய மரமே வேணும்” என்று அழுத்தி சொல்லி தன்னுடைய தேவையும் எதிர்பார்ப்பும் அதிகம் என்பதை தெளிவாக சொன்னாள் ஹனி.
“அதிகமா ஆசைப்பட்டு கிடைக்கிறதை விடக்கூடாது”
“தகுதிக்கு ஏத்த மாதிரி தான் அவங்கங்க எதிர்பார்ப்பும் இருக்கும்”
“ஓ.. பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் மாசத்துக்கு ஒன்னு வச்சுக்கிற காரைக் கூட சும்மா வாங்க மாட்டாங்க.. டெஸ்ட் ட்ரைவ் செஞ்சு பார்த்துட்டு தான் வாங்குவாங்க. அப்படி இருக்கும் பொழுது…” வேண்டுமென்றே இழுத்து நிறுத்தினான்.
“காரும் நானும் ஒன்னு கிடையாது. யூஸ் பண்ணிட்டு வேண்டாம்னு சொன்னா எனக்குத் தான் நஷ்டம். அதுவும் இல்லாம இந்த மாதிரி டெஸ்ட் டிரைவ் செஞ்சு பார்க்கிறதுக்கு தனியா ஒரு கார் வச்சு இருப்பாங்க. ஏற்கனவே பல பேர் ஓட்டின காரா இருக்கும். புத்தம் புதுசை யாரும் கொடுக்க மாட்டாங்க” சளைக்காமல் அவளும் பதில் கொடுத்தாள். கூச்சம் பார்க்கவோ, அவனது துச்சாதன பார்வையால் சங்கடப் படவோ அவளுக்கு விருப்பம் இல்லை. இங்கே வரும் பொழுதே மனதில் தெளிவாக முடிவு எடுத்த பிறகு தானே வந்தாள்.
“அப்போ எல்லாத்துக்கும் துணிஞ்சு தான் வந்து இருக்கேன்னு சொல்றீங்க?”
“ம்ச்! ஷாலினி தான் என்னை இங்கே அனுப்பினா” என்றாள் பட்டென்று.
“ஷாலினியா?” நட்ராஜ் லேசாக அதிர்ந்தான்.
பின்னே எவ்வளவு நேரம் தான் அவளும் அவனது கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பாள். அவனும் ஏதோ ஒன்னும் தெரியாத பிள்ளைக்கு சொல்வதைப் போல பேசிக் கொண்டிருக்கிறான். அவளால் அதற்கு மேலும் பொறுமை காக்க முடியவில்லை. அதனால் தான் பட்டென்று ஷாலினியின் பெயரை சொல்லி விட்டாள்.
‘இவனை என்னமோ என்னை காப்பாத்த வந்த ஆபத்பாந்தவனா நான் நினைக்கணுமா? பார்க்கிறது ஓநாய் பார்வை. வந்துட்டான் பரதேசி…’ மனதுக்குள் வஞ்சனையின்றி அவனை திட்டித் தீர்த்தவள் வெளியே முகத்தை நல்ல பிள்ளையாக வைத்துக் கொண்டாள்.
“இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே” என்று சொன்னபடி அவள் கைகளின் மீது கையை வைத்து தடவ முற்பட… நாசுக்காக கைகளை நகர்த்திக் கொண்டாள்.
“நான் காஸ்ட்லி கார்… என்னைத் தொட்டுப் பார்க்கக் கூட கொஞ்சம் தகுதி வேணும்” என்றவளின் திமிரான பதிலில் எதிரில் இருந்தவனின் முகம் கறுத்தது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here