அத்தியாயம் 2
“ஹேய்! எல்லாரும் வந்தாச்சு … நம்ம ஹனி மட்டும் இன்னும் வரலை…”
“கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்டி. வழக்கமா நடக்குறது தானே? வெறுமனே மேக்கப் மட்டும்னா பரவாயில்லை. அவளுக்கு உடம்பை எடுப்பா காட்டணும்.. அதுக்கே தனியா ஒரு அரைமணி நேரம் ஆக்குவாளே” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டவர்கள் கிளுக்கி சிரித்தார்கள்.
“அவ என்ன நம்மளை மாதிரி சாதாரண கிராக்கி தேடுறவளா? அவ தனி ரகம்… பேசிகிட்டே இருந்தா நமக்கு தான் நேரம் போகும். ஆளுக்கு ஒரு திசைக்கு போய் நில்லுங்க. அப்ப தான் கிராக்கி மாட்டும்” என்றவர்கள் தங்களின் அழகை ஊரார் பார்க்கும் வண்ணம் மெல்லிய கண்ணாடி புடவையும், சரம் சரமாக பூவும், உதட்டில் அழுத்தமான வண்ணத்தில் லிப்ஸ்டிக்கும் அணிந்திருந்தார்கள்.
சில நிமிடங்கள் கடக்க… இரவின் அமைதியையும் தாண்டி அவர்கள் அனைவரையும் ஈர்த்தது ஹை ஹீல்சின் ஒலி.
“ஹனி வந்துட்டா”
ஜீன்ஸ், டாப்பில் நாகரீக யுவதி வந்து நின்றாள். அணிந்து இருந்த ஒவ்வொன்றும் அவளது அழகை பன்மடங்கு கூடுதலாக காட்டியது. தோள் வரை புரண்ட முடியை ஸ்ட்ரைட்டன் (straighten) செய்து இருந்தாள். வெள்ளை நிற டாப் அபாயகரமான விதத்தில் கழுத்துப் பகுதி கீழே இறங்கி இருந்தது. சிக்கென இடுப்பை கவ்விக் கொண்டிருந்தது ஜீன்ஸ்.
அதிக நகைகள் இல்லை. கழுத்தில் மட்டும் மெல்லிய செயின். கழுத்துக்கும் நெஞ்சுக்கும் இடையில் வரையப்பட்டு இருந்த டாட்டூவை பாதி காட்டி முழுதாக பார்க்கத் தூண்டும் வகையில் அணிந்து இருந்தாள் டாப்பை.
இடுப்பில் ஜீன்ஸுக்கும், டாப்புக்கும் இடையில் இருந்த மெல்லிய செயின் ‘என்னைக் கொஞ்சம் பாரேன்’ என்றது. உதடுகளுக்குள் சூயிங்கம் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தது. மொத்தத்தில் அவளது தோரணையே அவளை தோட்டமாக மாற்றி ஆண்களை பயிரை மேயத் துடிக்க வைக்க எண்ணுமளவிற்கு இருந்தது.
அங்கே நின்ற ஒவ்வொரு பெண்களையும் ஒவ்வொருவர் வந்து அழைத்து செல்ல… ஹனியின் அருகில் வந்து பேசிய சிலர் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு அகன்று விட்டனர். பைக்கில் வந்தவர்களை எல்லாம் அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. பத்து, இருபது லட்ச ரூபாய் கார்களையும் பார்த்து அசட்டையாக முகம் சுளித்தாள்.
காற்றைக் கிழித்துக் கொண்டு சென்ற ஆடி கார் ஒன்று இவளைப் பார்த்ததும் அரை வட்டமடித்து இவளுக்கு அருகில் வந்து நிறுத்த… உள்ளிருந்து வந்த வழுக்கைத் தலை கிழவனைப் பார்த்த பிறகும் கூட அவளது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
“கெட் இன்…”
“இந்த கார் உங்களோடதா?”
“எஸ்…”
“கல்யாணம் ஆகிடுச்சா?”
“ம்ச்! ஆகிடுச்சு”
“எத்தனை பிள்ளைங்க… ஆணா, பெண்ணா?”
“நான்சென்ஸ்… நீ கேட்கிற காசு கிடைக்கும்… தேவை இல்லாத கேள்வி எல்லாம் எதுக்கு கேட்கிற… வந்து வண்டியில ஏறு” என்றார் எரிச்சலுடன்.
“இதெல்லாம் தெரிஞ்சா தான் நான் உங்க கூட வர்றதை பத்தியே யோசிப்பேன்”
“வாட்! யோசிப்பியா? இடியட்… காசு கொடுத்தா கூட **** மட்டும் தான் உன் வேலை… நான் யாரு என்ன அப்படின்னு எல்லாம் கேள்வி கேட்கிற வேலை வச்சுக்காதே”
“யோவ்! நீயும் ரோட்டு ஓரத்தில் நிற்கிற மத்த பொண்ணுங்க கிட்டே பேசுற மாதிரி என்கிட்டே பேசாத…” என்றவள் ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அவரிடம் நீட்டினாள்.
“இங்கிலீஷ் படிக்க தெரியும்ல” நக்கல் விரவியது அவள் குரலில்.
“…”
“அது என்னோட விர்ஜினிட்டி சர்டிபிகேட்… அர்த்தம் புரியுது தானே? இங்கே நீ பார்க்கிற ஆயிரம் கால் கேர்சில் ( call girl) ஒருத்தி நான் இல்லை”
“காசு கூடுதலா வேணும்னா சொல்லித் தொலைய வேண்டியது தானே” எரிந்து விழுந்தார் அவர்.
“எனக்கு காசு கூட வேணும் தான். ஆனா என்னால உன்னோட வர முடியாது”
“ஏன் காசு தான் அதிகமா தர்றேன்னு சொல்றேன்ல”
“என்னோட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு… எனக்கு முக்கியமா உங்க குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சாகணும்”
“ம்ச்! எனக்கு கல்யாணம் ஆகி காலேஜ் போற ஒரு பையன் இருக்கான்.. போதுமா”
“பை” என்று அவருக்கு ஒரு அலட்சிய கை அசைவை தந்தவள் ரோட்டில் சென்று கொண்டு இருந்த ஒரு கால் டேக்சியை நிறுத்தி அந்த வழுக்கைத் தலை ரோட்டில் நின்று கத்துவதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சென்று ஏறி விட்டாள்.
‘எனக்கு பையன் இருந்தா இவளுக்கு என்னவாம்?’
ரோட்டில் நின்ற அந்த பெரிய மனிதன் அதற்குப் பிறகு அவளை திட்டிய பச்சை வார்த்தைகள் எதையும் அச்சில் ஏற்ற முடியாது. கோட் போட்ட மனிதருக்குள் ஒளிந்திருந்த அந்த லோக்கல் முனுசாமி வெளியே வந்த நேரம் அது.
காரில் ஏறியவள் அங்கிருந்து சென்றது ஒரு சொகுசு ஹோட்டலை நோக்கி.
அவள் மனம் எதிர்பார்ப்பது என்ன என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று… காரை விட்டு கீழிறங்கியவள் பணத்தை கொடுத்து விட்டு உள்ளே செல்ல முயல… அவள் முன்னே வழியை மறித்தபடி வந்து நின்றான் குணசேகரன்.
“தேனம்மா”
“சை! எத்தனை தடவை சொல்றேன்… என் கிட்டே வந்து பேசாதேன்னு.. சோறு தானே திங்குற… வந்துட்டான். சனியன் பிடிச்சவன்.. தேனு… பேனுனு சொல்லிக்கிட்டு” அவன் காதில் விழ வேண்டும் என்று கத்தி சொன்னவள் அவனைத் தாண்டிக் கொண்டு சென்று விட குணசேகரன் முகத்தில் புன்னகை அப்படியே மிச்சம் இருந்தது.
“காதலாம் காதல்… அஞ்சு காசுக்கு பிரயோஜனம் இல்லாத காதல்.. தூ” என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றவள் அங்கிருந்த பாரை நோக்கி சென்றாள்.
சலதி tamil novels 2
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
2
+1
3
+1
+1
+1
+1