சிகரெட்

0
21

ஒரு தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது, யாரும் குடிப்பதும் கிடையாது…!!

அங்கு உள்ள சிகரெட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது. அவன் ஒரு பிரச்சார உக்தியை கையாண்டான்.

அதற்கு ஒரு விளம்பரம் செய்தான்..!!

சிகரெட் குடித்தால்..:-
1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்..!
2 உங்களுக்கு முதுமையே வராது..!
3 உங்களுக்குப் பெண் குழந்தையே பிறக்காது..!

இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர், இந்தக் கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

நீதி மன்றத்தின் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

சிகரெட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜரானார்.

நீதிபதி அவரிடம், “இப்படி சில கருத்துக்களை விளம்பரம் செய்து உள்ளாய். இவை அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே?“ என்று கேட்டார்.

அதற்கு அவன், “முதலில் நான் என்ன சொன்னேன்…?”

  1. திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்.

“ஆமாம் வரமாட்டான். காரணம்? எப்பொழுது சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்களோ, அப்பொழுதே இருமல் வந்து விடும். இருமிக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரவேமாட்டான்!”

2 வது என்ன சொன்னேன்?

“முதுமையே வராது. ஆமாம். எப்படி வரும்…? சிகரட் குடித்தால் இளமையிலேயே செத்து விடுவான். எப்படி முதுமை வரும்?”

3 வது என்னசொன்னேன்?

“பெண் குழந்தை பிறக்காது. ஆமாம். எப்படி பிறக்கும்…? சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும். பிள்ளை பேறே இருக்காது ..! இதில் ஆண் என்ன? பெண் என்ன..? பிள்ளையே பிறக்காது….!“ என்று சொல்லி முடித்தான்.

அவன் சொன்னது சரிதான். நாம் தான் யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம் என்று வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி…!!

தந்திரமான பேச்சைதான் விளம்பரம் செய்வோர்கள் கையாள்கிறார்கள்….!!
நாம்தான் விழிப்புடன் இருத்தல் வேண்டும்….!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here