தந்தையுமானவள் 1

0
59

தந்தையுமானவள்….

சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு…

ஆத்தூர் நரசிங்கபுரத்திலிருந்து சுமார் நாலு ஐந்து கிழோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய கிராமம் புதுப்பளையம்(இத கிராமம்னுக்கூட சொல்லமுடியாது ஒவ்வொரு தோட்டத்திற்கு நடுவிலும் கூறைவேயிந்த வீடுகளும்,ஓட்டு வீடுகளும் கட்டி வசித்துவந்தனர்) அந்த கிராமத்தை சுற்றிலும் கண்ணுக்கெட்டியதூரம் வரைலும் பசுமை மட்டுமே… சிலர் தன் தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஏத்தம் கட்டி தண்ணி இரைத்துக்கொண்டிருந்தனர்… சிலர் தன் வயலில் காளைமாடுகள் பூட்டி ஏர் ஓட்டிக்கொண்டிருந்தனர்…ஒருபக்கம் நற்றங்காலில் பெண்கள் களைப்பு தெரியாமலிருக்க பேசிக்கொண்டே களையெடுத்துக்கொண்டிருந்தனர்….அதில் நம்கதையின் நாயகி பதிமூன்று வயதே ஆன மீனாட்சியும் இருந்தாள்…பாவாடை சட்டைப்போட்டு தலையில் மண்டைக்கட்டுடன் மாநிறத்தில்(வெயிலில் வேலைசெய்வததால் நிறம்மங்கி மாநிறத்துக்கும் இன்னும் குறைவான நிறத்தில்) கூலிவேலையும் செய்யும் கிராமத்து பெண்ணாக இருந்தாள்…மிகவும் ஏழ்மையான விவசாய வீட்டில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களுக்கு பிறகு ஆறாவது பெண்குழந்தையாக பிறந்தவள்.தந்தையை சிறுவயதிலே இழந்து தாயின் வளர்ப்பில் வளர்பவள்… இன்று விவரம் தெரியாத வெள்ளந்தியான சிறு பெண்ணாக இருந்தவள் பின்னாட்களில் வாழ்க்கையையே(கணவனை) இழந்தும் மனம் உடைந்துபோகாமல் ஒரு தைரியமான பெண்ணாக இக்கதையில் வளம் வரப்போகிறாள்.

வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்த மீனாட்ச்சி திடீர் என்று தன் வயிற்றை பிடித்துக்கொண்டே அம்மா என கத்திக்கொண்டு அழுதாள்…அவளின் அழுகுரல் கேட்டு பக்கத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த மீனாட்ச்சியின் அக்காக்களும் மற்ற பெண்களும் அவளைசுற்றி நின்று ஏம்புள்ள அழுகர என்னாச்சுனு சொல்லுபுள்ள?? என கேட்டனர்…

அவர்களுடன் வேலை செய்துக்கொண்டிருந்த பவளாயி ஆத்தா ஏன்டி புள்ளைங்ளா பதரிங்க…எல்லா நல்லவிசயம்தே மீனாபுள்ள பெரியமனசி ஆயிட்டா…இவள ஆம்பளைங்க ஆரும் பாத்துப்போடரதுக்குள்ள வூட்டுக்கு கூட்டிப்போட்டுபோங்க புள்ளைங்ளா???

அங்கு வேலை செய்து கொண்டிருந்த இன்னொரு அம்மா,என்ன ஆத்தா சொல்ரிங்க இவளவிட மூத்தவ இருக்கும்போது சின்னவ சமைஞ்சிட்டாளா???

ஏன்டி கூறுகெட்டவளே புள்ளைங்க பெரியமனசி ஆகரதெல்லாம் நம்ம கைலையா இருக்கு அது அது எப்போ நடக்கோணும்னு இருக்கோ அது நடந்தூதானே ஆகோணும்…

ஏய்புள்ள தனம் மசமசனு நிக்காம எதாவது நிழல் படரதுக்குள்ள உன்ற ஆத்தாக்காரிய வந்து கூட்டிப்போகசொல்லுடி….

பக்கத்துக்காட்டில் பரம்பு அடித்துக்கொண்டிருந்த(காளைமாடுகள் பூட்டி நாத்து நடரதுக்கு முன்னாடி சேத்து ஒலவு ஓட்டரதுக்கு பேர்) மீனாட்சியின் அம்மா நல்லம்மாவிற்கு தகவல் சென்றவுடன் ஏரை அப்படியே உட்டுப்போட்டு ஓடிவந்தவர் வரப்பில் உட்கோர்ந்து கடவுளே என்ன ஏ இப்படி சோதிக்ர மூத்தவ இருக்கும்போதே இளையவ உட்கோர்ந்துட்டாளே இவள எப்படி நா கரைசேத்துவேன் என நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்…

அவர் அழுவதைபார்த்து மீனாட்சியும் அவரின் மற்ற மகள்களான தனமும்,செல்வியும் அழுக ஆரம்பித்தனர்…

பவளாயி ஆத்தா, அடியேய் நல்லம்மா இப்போ என்னாகிப்போச்சுனு ஒப்பாரி வச்சிப்போட்டு இருக்க??

அழுகாம வேர என்னங் பெரியம்மா நா பண்ணுவேன் இவளுக்கு முன்னாடி பொறந்தவ இருக்கும்போது இவ உட்கோர்ந்துட்டா ரெண்டையும் நா எப்படி கரைசேக்கபோறேனு தெரியலையே என சொல்லிக்கொண்டே அழுதார்…

அவரின் பக்கத்தில் வந்து உட்கோர்ந்த பவளாயி ஆத்தா இங்கன பாரு புள்ள எது நடக்கோணும்னு இருக்கோ அது நடந்துத்தா தீரும் நாலுபுள்ளைங்ல கரைசேத்த உண்ணால இவங்க ரெண்டுபேரையும் கரைசேர்க்க முடியாம போயிடுமா என்ன??சின்ன வயசுலையே கட்டுனவன பறிகுடுத்துப்போட்டு ஆறு புள்ளைங்ளையும் வச்சிப்போட்டு ஒன்டியாளா பண்ணையம் பாத்தவடி நீ… நீயே இப்படி கண்ணகசக்கிப்போட்டு இருந்தினா புள்ளைங்களா பயந்து போயிடாது?? எழுந்து கண்ணதொடச்சிப்போட்டு புள்ளைக்கு ஆகவேண்டியத பாரு என நல்லம்மாவிடம் கூறியவர் ஏ புள்ள செல்வி மசமசனு நிக்காம வெரசா போய் உன்ற மாமன்காரனையும் அக்காகாரியையும் கூட்டிப்போட்டு வா…

சரிங் ஆத்தா என்றவள் பக்கத்து தோட்டத்தில் குடியிருக்கும் தன் மாமனை கூட்டிவர சென்றாள்…

நல்லம்மா எந்திருச்சி புள்ளைய கூட்டிப்போட்டு வா புள்ளைக்கு செய்யவேண்டியதெல்லாம் செய்யோணும்ல…ஏய் தனம் நீயும் எந்துருச்சி வாடி ….

வூட்டிற்கு வந்ததும் பவளாயி ஆத்தா ஏ புள்ள தனம் உன்ற தங்கச்சிய கூட்டிப்போய் வூட்டுக்கு பொறவால ஆரும் பாக்காதமாரி இவள உட்கோரவைடி… மாமான்காரன் வந்து குடிசை கட்டுனதுக்கப்பரம்தா தண்ணி ஊத்தி குடிசைக்குள்ள வுடோணும்…

பவளாயி ஆத்தா பேசிக்கொண்டிருக்கும்போதே மீனாட்சியின் தாய்மாமனும் அக்கா கனவருமான முருகனும் பெரிய அக்கா ராசாத்தியும் வூட்டிற்கு வந்தனர்…

ராசாத்தி,மாமா நீங்க அம்மாகிட்ட பேசிப்போட்டு இருங்க நா மீனாட்சிய போய் பாத்துப்போட்டு வாறேன் என்றவள் வூட்டிக்கு பொறவால இருந்த மீனாட்சியிடம் சென்றாள்…

நல்லம்மா தின்னையில் கவலையாக உட்கோர்ந்திருந்ததை பார்த்த முருகன் ஏனுங்க்கா இப்படி உட்கோர்ந்துப்போட்டிங்க?? எல்லாம் நல்லவிசயம்தானே நடந்துருக்குது??

வாடாப்பா நீயே வந்து உன்ற அக்காகாரிக்கிட்ட சொல்லு என்னமோ குடியே முழுகிப்போனமாதிரி உட்கோர்ந்துருக்கா…

நல்லம்மாவின் அருகில் சென்று உட்கோர்ந்தவாறு அக்கா நீங்க இப்படி இடிஞ்சிப்போய் உட்கோர்ந்துருக்கரத பாத்தா எனக்கு கஷ்டமா இருக்கு எம்புட்டுபெரிய கஷ்டம் வந்தாலும் அத ஈசியா சமாளிச்சிருக்கிங்க அப்படிபட்ட நீங்க இன்னைக்கு இப்படி இடிஞ்சிப்போய் உட்கோர்ந்துப்போட்டிங்களே??

பெரியவ இருக்கும்போது சின்னவ உட்கோர்ந்துட்டாளே தம்பி இவள எம்புட்டு நாளைக்கு கட்டிகுடுக்காம வூட்ல வச்சிருக்க முடியும்.அப்படியே கட்டிகுடுத்தாலும் நாளைக்கு பெரியவளுக்கு ஏ இன்னும் கண்ணாலம் ஆகலனு வரவங்க எல்லாம் கேக்கமாட்டாங்ளா??

அக்கா கேக்கரவங்க கேக்கத்தா செய்வாங்க அதுக்காக நீங்க இப்படி கவலைபட்டுட்டு உட்கோர்ந்துருந்தா எல்லாம் சரியாகிடுமா??முதல்ல எந்திரிங்க அதா உங்களுக்கு தொனையா உன்ற பொறந்தவன் நா இருக்கேன்ல அப்பரமென்னங்க்ககா?? நல்லநேரம் போரதுக்குள்ள புள்ளைக்கு ஆகவேண்டியத செய்யுங்க்கா நாம்போய் மட்டைவெட்டி கீத்து பின்னிப்போட்டு வாறேன்…ஆமா ரெண்டு மாப்பிள்ளைங்களும் எங்கங்க்கா??

என்றக்கூடத்தே வரப்பு கங்கு எடுத்து கட்டிப்போட்டு இருந்தானுங்க தம்பி நா பாதி வயல் பரம்பு அடிச்சிப்போட்டு இருக்கப்ப சின்னவ பெரியமனசி ஆகிட்டானு கேள்விபட்டதும் அப்படியே பரம்ப வயல்ல உட்டுப்போட்டு ஓடியாந்துப்போட்டேன் அவனுங்க வயல் சேர் அடிச்சி முடிச்சிப்போட்டு வருவானுங்க என நல்லம்மா முருகனிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வயலில் இருந்து கிருஷ்ணனும்,கணேசனும் வந்தனர்…

பவளாயி ஆத்தா,டேய் கிருஷ்ணா நீ வெரசாப்போய் வன்னாமாத்துக்கு சொல்லிப்போட்டு வா புள்ளைக்கு தண்ணி வூத்துனா வேணும்…

சரிங் ஆத்தா…

கிருஷ்ணன் சென்றதும் கணேசனும் முருகனும் தென்னம்மட்டை வெட்ட சென்றனர்…

தாய்மாமன் குடிசை கட்டி முடித்ததும்
நல்லநேரம் பார்த்து தண்ணிவூத்தி கொண்டுவந்திருந்த வன்னாமாத்தை குடுத்து மீனாட்டியை குடிசைக்குள் விட்டனர்…

ஒன்பதாம் நாள் காலையில் மீனாட்சியை முக்காலியில் உட்கோரவைத்து வைத்து மாமன் பொண்டாட்டி மீனாட்சிக்கு செஞ்சோறு சுற்றி தலைக்கு தண்ணீர் ஊற்றி தீட்டு கழித்து முடித்ததும் வூட்டிற்குள் விட்டனர்…

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here