தானம்

0
25

தானமோ அன்போ நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை.

அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன் வாதிட்டான்.

கண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார். அர்ஜுனனை அழைத்து, ”இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால், நான் உன்னை கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,”என்றார்.

அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள் வரவர, தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான். எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு கூட தானம் செய்து கொடுக்க முடியவில்லை.

அப்போது அந்தப் பக்கம் கர்ணன் வரவே, கண்ணன் அவனை அழைத்து, ”கர்ணா, இந்தத் தங்கக் குன்றை நாளை காலைக்குள் தானம் செய்து கொடுத்து விட வேண்டும், உன்னால் முடியுமா?”என்று கேட்டார்.

கர்ணனும், ”இது என்ன பெரிய வேலையா?” என்று கூறிக் கொண்டே அந்தப் பக்கம் வந்த வறியவர் இருவரை அழைத்தான். அவர்களிடம், ”உங்கள் இருவருக்கும் இந்த தங்க மலையை தானம் அளிக்கிறேன். வெட்டி உபயோகித்துக் கொள்ளங்கள்,”என்று கூறியபடியே,சென்று விட்டான்.

அப்போது கண்ணன் அர்ஜுனனிடம் சொன்னார், ”இப்போது உனக்கு வித்தியாசம் தெரிகிறதா? உனக்கு முழுமையாகக் கொடுக்கலாம் என்ற எண்ணம் கடைசி வரை வரவில்லை..

தானமோ அன்போ நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here