நாம்
பச்சைக் கிளியானால்
கூண்டில் அடைத்து
கீ…கீ…யை மறக்கடித்து
பேச கற்றுக்கொடுத்து சொல்வார்கள்
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என!!!!
கூண்டைத் தாண்டினால் சிறகை உடைத்து
சிரமம் கொடுத்து சிந்தனையைத் தடுத்து சொல்வார்கள்
திமிர் அதிகம் என!!!
ஆம்!!!
நாங்கள் உரக்கச் சொல்வோம்!!!
எங்களுக்கு திமிர்ந்த ஞானச்செருக்கு அதிகம் என!!!
கூண்டுக்கிளியாக மாட்டோம்!!
பீனிக்ஸ் பறவையாய்
மீண்டும் மீண்டும்
எழுந்து வருவோம்!!!
Facebook Comments