தீண்டாத தீ நீயே டீசர் 47

5
1801

அன்று காலையில் ஆற்றில் பிடித்த மீன்களை எடுத்து சுத்தம் செய்து கொண்டு இருந்தாள் வானதி.

‘சுத்தம் செய்து மசாலா தடவி கொஞ்ச நேரம் ஊற வைத்து விட்டால் அவர் வந்ததும் சமைப்பதற்கு வசதியாக இருக்கும்’ என்று எண்ணியவள் அந்த வேலையில் மும்மரமாக இறங்கி இருக்க… கதவை திறக்கும் சத்தம் கேட்க…

‘இப்போ தானே வெளியே கிளம்பி போனார்..எதையும் மறந்துட்டாரோ?’ என்று கேள்வியாக எட்டிப் பார்த்தவள் அங்கே மூர்த்தியைக் கண்டதும் ஸ்தம்பித்து போனாள்.

‘இவன் எப்படி இங்கே?’ என்று அவள் அவனை பார்க்க…. அதே நேரம் மூர்த்தியும் அவளைப் பார்த்தபடியே கதவை தாளிட்டான்.

“நீ.. நீ… எப்படி இங்கே?”

“ஏன் என்னை எதிர்பார்க்கலையா இங்கே…. வேற யாரை எதிர்பார்த்தே? உன் புருசனையா? அவனை இனி உன்னால் பார்க்கவே முடியாது…”

“ம்ச்… என்ன உளறல் இது?”

“எது உளறலா? உனக்கு அப்படித்தான்டி தோணும்… உன் பின்னாடியே நாய் மாதிரியே சுத்தி வர்றேன்ல”

“பழைய கதை வேண்டாம் மூர்த்தி.. நான் இப்போ இன்னொருத்தரோட மனைவி… நீங்க இங்கே இருந்து கிளம்புங்க முதல்ல…” பேசியபடியே வானதியின் பார்வை மூர்த்தியை அளவிட்டது. முகமெல்லாம் தாடி வளர்ந்து… உடல் இளைத்து முன்பை விட முகம் அதிகமாக பொலிவிழந்து காணப்பட்டது.

‘தன்னை மறக்க முடியாமல் தேடி அலைந்ததின் விளைவு போலும் இது.. எடுத்து சொன்னால் புரிந்து கொள்ளக்கூடும்’ என்று எண்ணினாள் வானதி.

“ஹ.. மனைவி… தாலி கட்டிட்டான் .. அவளோ தானே… அதை கழட்டி எறிஞ்சுட்டு என்னோட கிளம்பு வானதி”

“முட்டாள் மாதிரி பேசாதீங்க… அவர் வருவதற்குள் இங்கே இருந்து கிளம்பிடுங்க.. அது தான் உங்களுக்கு நல்லது” என்று அவள் எச்சரிக்கை செய்ய.. அவளை கேலியாக பார்த்தான் மூர்த்தி.

“அவனால் இப்போதைக்கு இங்கே வர முடியாது… நீ உடனே என்னோடு கிளம்பு வானதி… நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்”

“ஓஹோ.. ஒரு முடிவோட தான் வந்து இருக்கீங்க போல… அவர் கட்டின தாலியை கழட்டி வச்சிடலாம்… ஆனா வயித்தில வளருதே அவரோட வாரிசு… அதை என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க?” என்று வானதி நிறுத்தி நிதானமாக கேட்க… மூர்த்தியின் முகம் பயங்கரமாக மாறியது.

“என்ன குழந்தையா? எப்படி? இல்லை.. அதுக்கு வாய்ப்பு இல்லை.. நீ பொய் சொல்லுற… என்னை ஏமாத்த பார்க்கிற” மூர்த்தியின் முகத்தில் நிதானம் போய் பதட்டம் வரத் தொடங்கியது.

“பொய் சொல்ல எனக்கு அவசியம் இல்லை… என் வயிற்றில் அவரோட வாரிசு வளருது… அதை நீங்க நம்பித் தான் ஆகணும்.. இது தான் நிதர்சனம். இப்பவாவது உங்க முடிவை மாத்திக்கோங்க… உங்க வாழ்க்கையில் இருந்து என்னை நீக்கிட்டு அதுக்கு பதிலா வேற ஒரு பொண்ணை நீங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டு சந்தோசமா இருங்க….”

“என்னடி விட்டா பேசிக்கிட்டே போற… என்னை வேற ஒருத்தியை கல்யாணம் செஞ்சுக்க சொல்றியே… நீ அவனை தூக்கி போட்டுட்டு வாடி… இப்போ என்ன? உன் வயித்துல அவனோட குழந்தை வளருது அதுதானே உன்னோட பிரச்சினை… என்னோட வா… ஒண்ணு அந்த குழந்தையை அழிச்சிடலாம்… அது முடியாதுன்னா அந்த குழந்தைக்கு நானே அப்பனா இருந்துட்டு போறேன்” என்று மூர்த்தி பேசிக் கொண்டே போக வானதிக்கு அருவருப்பில் குமட்டிக் கொண்டு வந்தது.

Facebook Comments

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here