தீரா மயக்கம் தாராயோ 13

0
748

ரிலே ஸ்டோரி அடுத்த எபி போட்டாச்சு மக்களே… ஒவ்வொரு எபியும் ஒவ்வொருத்தர் எழுதிக்கிட்டு இருக்காங்க… அதில் சிலர் உங்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள்… சிலர் முதன்முறையாக அடி எடுத்து வைக்கும் வாசகர்கள்.எல்லாருக்குமே உங்க கருத்துக்கள் ரொம்ப முக்கியம் மக்கா.படிச்சுட்டு ஒரு இரண்டு வார்த்தை சொன்னா எழுதினவங்க சந்தோசப்படுவாங்க.

13
கையில் மது கோப்பையும் கண்களில் வெறியுடனும் இருந்தவன் கையில் இருந்த ஆல்கஹாலை சுவற்றில் வீசி எறிந்தான்.
“சே…. எவ்வளவு நாள் …எவ்வளவு நாள் அவள கண் கொத்தி பாம்பா பாத்துட்டு இருந்தேன்… அப்புறம் எப்படி எப்படி அவ மனசு அவன் பக்கம் சமாதானம் ஆச்சி அதுவும் அவன் கூட வெளிய போற அளவுக்கு” என்று ரகுவின் மேல் ஆத்திரமாய் கத்தினான் முகுந்த்.

“டேய் ரகுராம் உன்னை எப்போதும் ஸ்ருதி கூட சேரவே விடமாட்டேன்டா அவ எனக்கு தான் எனக்கு மட்டும் தான் “ என்று உரக்க கத்தியவன் “அவள அடைய நான் எந்த எல்லைக்கும் போவேன்னு உனக்கே தெரியும்…. அந்த வலியோட சுவடைத்தான் நீ இன்னும் அனுபவச்சிக்கிட்டு இருக்க…” என்று அகங்காரமாய் சிரிக்கலனான்

“ ரகு உன் நிலமைய என்னன்னு சொல்றதுடா…. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்ன்னு சொல்லுவாங்க … அது உன் விஷயத்துல சரியா போச்சி நீ கல்யாணம் சீக்கிரம் வைக்கனும்ன்னு அவசரம் காட்டினியே தவிர என்கூட அவள பழகவிடமா இருக்க உன்னால ஒன்னும் பண்ண முடியலையே அங்க இருக்குடா என்னோட திறமை… நீ காட்டின அவசரம் தான்டா என் முதல் வெற்றியே உன்னை அவ கிட்ட இருந்து பிரிக்கனுமுன்னு நினச்சி நான் அவகிட்ட நெருங்க நெருங்க உனக்குள்ள எரிஞ்ச தீய எனக்கு சாதகமா ஆக்கிட்டேன்டா உன்னோட பொசசிவ்னஸாதான் எனக்கு ஆயுதமா இருந்துச்சிடா உன்னை அவகிட்ட இருந்து அடியோட பிரிக்க நெனச்சி வேறோட வெட்டி எறிஞ்சும் இப்போ சின்ன விதையா முளைச்சி இருக்க உன்னை புடுங்கி எரிஞ்சாதான் என்னால அவள அடைய முடியுன்னா அதை செய்யவும் நான் தயங்கமாட்டேன் டா…..” என்று ரகுராமனின் மேல் தீரா ஆத்திரத்தோடு இருந்தவன்

“எல்லாம் கைகூடி வர்ற நேரத்துல ஸ்ருதியோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்னை பத்தி தெரிஞ்சிருக்கலைனா ஸ்ருதி இன்னைக்கு என்னோட மனைவியா ஆகி இருப்பாடா… ம் பரவாயில்லை அதான் அவங்க பரலோகம் போய் எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்காங்களே.. ஆனா நீ இருந்து என் உயிர வாங்குரியேடா என்று ஆள் உயர கண்ணாடியில் டீபாயில் கிடந்த பாட்டிலை வீசி எரிந்த வினாடியில் சுக்கு நூறாய் சிதறிய அத்தனை சிதறல்களிலும் அவனின் பிம்பமே தெரிந்தது…


கோவிலில் கண்மூடி கண்ணனை நினைத்து பாடியவளின் கண்களுக்குள்ளே தந்தையின் சிரிப்பையும் தாயின் இதத்தையும் கண்டவளின் மனது அமைதியாய் நிச்சலனமாய் இருந்தது…

ஏனோ இன்று புது தெம்பு எதனால் என்று அவளுக்கும் தெரியவில்லை தான் தந்தை தாய் இறந்த இந்த இரண்டு வருடங்களில் இன்று போல் என்றும் அவள் மனதில் அமைதி என்பது மருந்திற்கும் இருந்தது இல்லை எப்போதும் உழன்று கொதிக்கும் உலை களமாய் மட்டுமே இருந்திருந்த மனம். அவ்வப்போது நந்தினியின் சிறு குறும்பும், குழந்தை தனமான பேச்சிலும் மட்டுமே கொந்தளிக்கும் மனதினை சிறிது மட்டுபடுத்தும்… பிறகு மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுவாள் இன்று அவள் ஆழ்மனம் கொண்ட அமைதி அவளுக்கு ஆச்சர்யமே!!!!!

கண் திறந்து பார்த்தவளின் கண் முன்னே கண்களின் ஏக்கத்துடன் தன் காதலித்த பெண் தன்னை புரிந்துகொள்ள மாட்டாளா தனக்கு பேச ஒரு வாய்ப்பேனும் தரமாட்டாளா என்ற தவிப்புடன் இருந்த ரகுராமை கண்டவள் வருத்த புன்னகையை உதிர்த்தாள்.

அவள் வருத்தம் அவன் மனதினை கூத்தீட்டியாய் குத்தி குற்றம் சாட்ட இப்படியே தன் கால்களுக்கடியே பூமி பிளந்து உள்ளே சென்று விட மாட்டோமா என்று இருந்தது… அத்தனை வலி கண்களில் நீ தானே எல்லாவற்றிக்கும் காரணம் என்று சொல்லாமல் சொல்ல தன்னை திடப்படுத்திக்கொண்டு அவளையே பார்த்திருந்தான்…

அவளின் துயரில் தவறு முழுவதும் தன்னையும் சார்ந்தது என்று அவனை குற்றவாளி ஆக்கிய விதியை நொந்து கொள்வதா இல்லை எல்லவற்றிற்க்கும் பங்கு கொண்டு இந்த பெரிய இழப்பிற்க்கு காரண கர்த்தாவாகிய முகுந்தை நல்லவனாக சித்தரித்த இந்த காலத்தை நொந்து கொள்வதாஎன்று புரியாமல் தத்தளித்தான் ரகு

அவனின் தோற்றத்தை இன்று தான் நன்றாக ஆரய்ந்தவள் அவன் தோற்றத்தில் ஏதோ ஒன்று தவறுதலாக உணர்ந்தவள் அதை கண்டும் பிடித்துவிட்டாள். அவனின் ஆளுமை கலந்த கம்பீரமும் அவனின் சிரித்த முகமும் தான் அதை மனதில் குறித்துக்கொண்டாள்…

பேசவென்று வந்தவர்கள் மௌனத்தையே பஷையாக கொண்டு
ஒருவரை ஒருவர் பார்வையால் வருடியபடி இந்த இருவரில் யார் முதலில் ஆரம்பிப்பது என்ற தயக்கத்தில் இருக்க அதை தகர்த்து முதலில் பேச விழைந்தது ஸ்ருதியே

“சொல்லுங்கோ ரகு அத்தான் பேசனும்ன்னு சொன்னேளே” என்றாள் திடமான குரலுடன் தன் சோர்வை முகத்தில் காட்டாது.

“ம்.. என்று மௌனத்தை உடைத்தவன் பேசனும் மா.. நிறைய பேசணும் என் மனசுல இருக்கறத அப்படியே உன் காலடியில கொட்டணும் “ என்று உணர்ச்சிமிகுதியாய் கூறினான் ரகுராம்.

அவனின் வாக்கியத்தில் மனது இறங்கினாலும் இறங்கிய மனதை எட்டி பிடித்தவள் “சொல்லுங்கோ அத்தான் அதை கேட்கத்தானே வந்திருக்கேன்.. சொல்லுங்கோ” என்றாள் அவன் கண்களை பார்த்தபடி

“என்னை நீ இன்னும் வெறுக்கிறியா ஸ்ருதி மா”

“ வெறுக்க கூடிய காரணம் இருக்கே அத்தான் என் வாழ்க்கை திசையையே மாத்திட்டேளே” என்று கூறும்போதே அவள் குரல் உடைந்து கரகரப்பாய் மாறியது.

“நான் மாத்திட்டேன்னு நீ நம்பறியா ஸ்ருதிமா” என்றான் இல்லை என்னும் பதில் வேண்டி

“அப்போ அன்னைக்கு என் கண்முன்னே என் தோப்பனாருக்கு போன் பண்ணது கற்பனைன்னு சொல்றேளா அத்தான்…”

“பச்…. என்று தலையில் கை வைத்தவன் நான் கற்பனைன்னு சொல்லல ஸ்ருதிமா நடந்த தப்புக்கு நான் மட்டுமே காரணம் இல்லேன்னு சொல்ல வந்தேமா”

“இப்போ இங்க உங்கள நிரூபிக்க எத்தனை பாடுபடறேள் அன்னைக்கு நான் உங்கள விட அதிகமா பாடுபட்டு அழுதேனே அத்தான் நான் நல்லவ நான் தப்பு பண்ணலன்னு சொன்னேனே கேட்டேளா… உங்களுக்கு அந்த அளவு பொறுமை இருந்தா என்னை பழி சொல்றதே கண்ணா இருந்தாளே நான் சென்னது காது கொடுத்து கேட்டேளா” என்றாள் அதே தோனியில்

“அய்யோ ஸ்ருதி இப்பவும் சொல்றேன் நீ ஒரு தப்பும் பண்ணலடா அன்னைக்கு நடந்தது என்னன்னு உனக்கு முழுசா தெரியாதுமா நான் உன்னை கேட்டது மட்டும் தான் உனக்கு தெரியும் அதுக்கு முன்ன என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா நீ நம்ம ஆத்துக்கு வர முன்ன என்ன பார்த்து பேசினது முகுந்த்.”

அதை கேட்டு அதிர்ச்சியானவள் “இது என்ன புது கதை சொல்றேள்” என்றாள் சற்று அதிர்வுடன்.

“நீ சொல்றத நான் கேக்கலன்னு சொன்னல நீ எப்போவவது என்னை பேச விட்டுருக்கியா ஸ்ருதி” என்றவன் சற்று நிறுத்தி அவள் முகத்தையே பார்த்து , “இப்போவாவது நான் சொல்றத முழுசா கேட்டுட்டு பேசு ஸ்ருதிமா” என்று அழுத்தமாய் கூறினான் அவன்.

அவன் அழுத்தமாய் கூறவும் அவன் கூற்றில் சற்று அமைதியானவள் அவன் கூறுவதை கேட்கலானாள்.

அவள் அமைதியை பார்த்தவன் முகுந்த் தன்னை பார்த்த அந்த நாளை கூற துவங்கினான்.

அன்று

வேகமாக வந்த ரகுவின் பைக்கை ஒரு நவவீ வகை கார் மின்னல் வேகத்தில் வழி மறித்து நிற்க காரில் இருந்து இறங்கினான் முகுந்த்.

“முகுந்த்தை பார்த்த ரகு இவனா இவன் ஏன் நம்மல வழி மறைக்கிறான்.. என்ற கேள்வியோடு அவனை பார்த்திருக்க அவன் அருகில் வந்த முகுந்த் “என்ன ரகு கல்யாண வேலை எல்லாம் ரொம்ப பாஸ்டா நடக்கற மாதிரி இருக்கு “என்றான் கண்களில் வெறுப்புடன்

அவன் கண்களில் இருந்த வெறுப்பை பார்த்தவன் “அதான் உங்களுக்கு தெரிஞ்சி இருக்கே மிஸ்டர் முகுந்த் கல்யாண இன்விடேஷனோட வர்றேன் அவசியம் கல்யாணத்துக்கு வந்திடுங்க” என்றவன் அதோடு உனக்கும் எனக்கும் பேச்சில்லை என்ற நோக்கோடு பைக்கை எடுக்க அதில் கை வைத்து நிறுத்தியவன்…

“நல்ல கனவுதான்” என்று நக்கலாய் சிரித்தான்..

“கனவா?” என்று கேள்வியோடு முகுந்தை நோக்க

“ம் கல்யாண கனவு ஆனா அது நிஜத்துல நடக்கபோறது என் கூடதானே”

“மிஸ்டர் மைன்ட் யுவர் லேங்வேஜ்” என்று ரகு ஆத்திரத்துடன் கத்த

“பின்ன என்னடா நான் அவளை என் பக்கம் திருப்ப… படாத பாடெல்லாம் பட்டு என்னை லவ் பண்றதா இமெஜ் கிரியேட் பண்ணி போட்டோ எல்லாம் எடுத்து பத்திரிக்கைல பேரு வர்ற மாதிரி பண்ணா நீ அதையே காரணமா மாத்தி நடத்தற… அவ உன்னைத்தான் லவ் பண்றாளாம் என்னை பிரெண்டா நினைக்கிறாளாம்” என்றான் ஆத்திரத்துடன் அவனின் ஆத்திரத்தில் அப்பட்டமாக தெரிந்தது ஸ்ருதியின் மேல் அவனுக்குள்ள வெறித்தனம் .

“ மிஸ்டர் முகுந்த உங்களுக்கு இன்னும் யார் வந்து இந்த விஷயத்தை கிளாரிஃபை பண்ணனும்னு எதிர்பார்க்கிறீங்க ? எல்லாத்துக்கும் மூலக்காரணமா இருக்கிற ஸ்ருதியே வந்து என்னத்தான் விரும்புறேன்னு சொல்லிட்டா …. வேற என்னதான் உங்க பிரச்சனை … வற்புறுத்தி வர்றதுக்கு பேர் லவ் இல்ல அது ஆத்மார்த்தமா வர்றது … அத புரிஞ்சிக்காம நிறைய பேர் சுத்திக்கிட்டு இருக்காங்க … அந்த கூட்டத்துல நீங்களும் ஒருத்தரா ஆகிடாதீங்க … எங்க வழில குறுக்க வராதீங்க எங்களை எங்க வாழ்கைய வாழ விடுங்க .. இத நீங்க அட்வைஸா எடுத்துக்கிடாலும் சரி ஆர்டரா எடுத்துக்கிட்டாலும் சரி… இட்ஸ் யுவர் விஷ் … பட் இனி என் வாழ்கைல வந்தீங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் …”

“ ஏய் … யார் முன்னாடி நின்னுகிட்டு என்ன பேசிட்டு இருக்க … ஆஃப்டர் ஆல் நீ ஒரு சாதாரண ஜர்னலிஸ்ட் நீ எனக்கு ஆர்டர் போட்றியா ? எரிச்சிடுவேன்டா உன்னை… நான் சொல்றதை நல்லா காதுல வாங்கிக்கோ … நான் ஒரு வியாபாரி தொழில்ல எப்படி போட்டி போட்டு ஜெயிக்கிறதுன்னு ஒரு வியாபாரிக்கு தெரியும் . அதே போல நான் என் வாழ்க்கையில் ஸ்ருதியை ஜெயிச்சு காட்டுவேன் ……. அவ எனக்குதான் …. “

“ இடியட் …. என்னடா கிளிப்பிள்ளைக்கு சொல்றமாதிரி சொல்றேன் … இன்னும் பைத்தியக்காரத்தனமா உளறிக்கிட்டு இருக்க… தொழிலும் காதலும் ஒண்ணாடா ? ஸ்ருதியை ஜெயிக்கிறதுக்கு அவ என்ன ஃபுட்பால் மேட்ச்சா … ரத்தமும் சதையும் இதயமும் இருக்கிற ஒரு பொண்ணுடா … என் தேவதைடா …. அவ உன்ன கண்டிப்பா திரும்பிக்கூட பார்க்கமாட்டா …
“ ஹாஹாஹா… என்னது உன்னோட தேவதையா… சரி உன் தேவதைகிட்ட போய் இப்ப நான் சொன்ன எல்லாத்தையும் சொல்லிப்பாரு கண்டிப்பா நம்பமாட்டா… அப்படி ஒரு இமேஜ நான் கிரியேட் பண்ணி வச்சிருக்கேன் … உன்னால முடிஞ்சா என்கிட்ட ஸ்ருதிய பேசவிடாம செய் பார்க்கலாம் …. “

முகுந்த் இவ்வாறு கூறவும் ரகு தன்கட்டுப்பாட்டை இழந்து ஆத்திரக்காரனாக மாற ஆரம்பித்தான்
“ டேய்……நீ உன் லிமிட்ட ரொம்ப கிராஸ் பண்ற “… என்று பேச ஆரம்பித்த ரகுவின் வார்த்தையை முடிக்க கூட விடாமல் “ ஏய் ஜர்னலிஸ்ட் … உன் வீரவசனத்தை தூக்கி குப்பைல போட்டுட்டு போய் உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய் … புவர் பாய்…. “ என்று நக்கலாக கூறியவன் ரகுவின் பதிலுக்கு கூட காத்திராமல் விருட்டென்று தன் காரில் ஏறி சென்றுவிட்டான் .

…….

கண்களில் நீர் தளும்ப தான் சொல்வதை தன்னவள் நம்பிவிட மாட்டாளா ? என்ற ஏக்கமே அவனுடைய கண்களில் நிரம்பி இருந்தது .

அவன் கூறிய அத்தனையையும் செவியுற்றவள் “ அத்தான் என்ன சொல்றேள்…. முகுந்தா இதெல்லாம் பேசினா…. என்னால நம்ப முடியல அத்தான் “ என்றாள் ஸ்தம்பிதத்துடன் .

“ ஸ்ருதிமா…. இப்பவாச்சும் என்ன நம்புடா…. அவன் நல்லவன் இல்லைடா … உன்ன அவன் தப்பான கண்ணோட்டத்தோடதான் பார்த்தான் பார்த்துக்கிட்டும் இருக்கான்…. நீ அவனை ஒரு நல்ல நண்பனாதான்டா பார்க்கிற ….. அவனும் அப்படி பார்த்திருந்தான்னா எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்குமேடா…. ஆனா அவன் உன்னோட புனிதமான நட்புக்கு தகுதியில்லாதவன்டா ப்ளீஸ்டா ட்ரஸ்ட் மீ… அவன் மேல உள்ள ஆத்திரத்துலதான் நான் அன்னைக்கு அவ்வளவு கோபமா நடந்துகிட்டேன் … அந்த கோபம் கூட உன் மேல உள்ள பாசத்துல வந்ததுடா என் கண்ணம்மா …. . சத்தியமா நான் பொய் சொல்லலை … அவன் மேல பொறாமையும் இல்ல … ப்ளீஸ்டா இப்பவாச்சும் நான் சொல்றதை கேளு…. என்னோட சுவாசம்டா நீ… நீ இல்லாத என்னோட ஒவ்வொரு நொடியும் நரகத்துக்கு சமமா எனக்கு இருக்குடா “ என்றவனின் கண்களில் இருந்த நேசம் தெளிவாகவே புலப்பட்டது ஸ்ருதிக்கு .

“ அத்தான் … ப்ளீஸ் அத்தான் அழுகாதேள்…. எனக்கு உங்களை இப்படி பார்க்க முடியலை …. இந்த நாள் வரையிலும் உங்களை வெறுக்க முயற்சி பண்ணி பண்ணி ஒவ்வொறு முறையும் என்கிட்டையே நான் தோத்துகிட்டுத்தான் இருந்தேன் … உங்களை முழுசா வெறுக்கவும் முடியலை வெறுக்காம இருக்கவும் முடியலை …. இதுக்கெல்லாம் காரணம் எனக்கும் உங்க மேல இருந்த காதல்தான்… ஆனா ப்ளீஸ் அத்தான் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க … நான் இப்ப கொஞ்சம் குழப்பமான மனநிலையில இருக்கேன் …. ப்ளீஸ் “ கண்களில் கண்ணீர் முத்துக்கள் சிந்தக் கேட்கலானாள் ஸ்ருதி”

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here