தீரா மயக்கம் தாராயோ 14

0
770

அந்த ஆடம்பரமான ஸ்டுடியோவில் முகுந்த் தன் இடது கையில் குலாப்ஜாமுனை ஏந்திக்கொண்டு இடது காலை மடக்கி தரையில் பதித்து வலது காலை ஊன்றி அதில் தன் வலது கையை வைத்தவாறு அவன் முன்நின்ற காதலை தலையை நிமிர்த்தி பார்த்துக் கொண்டிருந்தான்

“முகுந்த் நீங்க”

“நான் இப்போ உன்கிட்ட காதல யாசிக்கல ஸ்ருதி ஜஸ்ட் இந்த இனிப்பை சாப்பிட்டுட்டு ஒரு சிரிப்பு தரலாமே” என்று கூற அவளின் முகத்திலும் லேசாக புன்னகை வந்தது

படக்கென தன் கண்களைத் திறந்து கொண்டாள் ஸ்ருதி தன் இரவு உறக்கத்தில் இருந்து

” இது எதுக்கு எனக்கு இப்போ ஞாபகம் வந்துச்சு “என்று தன் மனதிடம் கேள்வி கேட்க அங்கு பதிலேதும் இல்லை மீண்டும் தன் படுக்கையில் படுத்த சுருதியின் கண்களில் தூக்கம் சிறிதளவும் வரவில்லை

சிறிது நேரம் அங்குமிங்கும் புரண்டு பார்த்தவள் பின் இது சரிவராது என்று எழுந்து தன் வழக்கமான இடத்தில் சென்று அமர்ந்து வானத்தை வெரிக்க ஆரம்பித்தாள். தூங்கா இரவுகளில் இதுவும் ஒன்று என்று நினைத்தவாறு

அவள் மனதில் விடையில்லா பல கேள்விகள் ரகுவிடம் பேசிய பின்னும் மறையாமல் இருந்தது தன் மனசாட்சியை நந்துவாக நினைத்துக் கொண்டு அதனிடமே கேள்வி கேட்டு பதில் பெற விரும்பினாள்.

” இப்போ பார்க்கும்போது எல்லாமே சரியான மாதிரிதான் இருக்கு இப்ப என்னோட காதல எனக்கு கிடைக்கப் போகுது இருந்தும் இந்த கேள்வி எல்லாம் என் மனசுகுள்ள ஏன் இருக்கு

(மனசாட்சி )”காதல் கிடைச்சதா எனக்கு தெரியாம எப்படி கிடைச்சது”

” அத்தான் பேசினதுல அவங்க மேல எந்த தப்பும் இல்லைன்னு புரிஞ்சிடுச்சு இதுக்குமேல நான் அவங்கள மன்னிக்கிறது தவிர வேறு எதுவும் இல்லையே”

“இவ்வளவு நாள் உன்னோட அத்தான மன்னிக்கிறதுக்கு காரணம் தேடிட்டு இருந்தியா”

“இல்லை ஒருவேளை காரணம் தேடி இருந்தா அத்தான் கிட்ட நேரடியாக கேட்டு இருப்பேனே அவங்க மேல கோவம் இருந்து அதனாலதான் விலகி வந்தேன்”

“ஓ அப்படியா நான் கூட நீ இதுக்காக தான் வெயிட் பண்ணேன்னு நினைச்சுட்டேன்”

” இப்பதான் அத்தான் கிட்ட தப்பு இல்லேன்னு தெரிஞ்சிடுச்சே தப்பு எல்லாம் அந்த முகுந்த் மேலதான்”

“இதுல முகுந்தோட தப்பு என்ன இருக்கு”

“நான் ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட பொண்ணுன்னு தெரிஞ்சும் என் மேல ஆசைப்பட்டது தப்பு இல்லையா”

“இதையே ஒரு படமா எடுத்தா எல்லாரும் ரசிக்கிறீங்க இல்ல அதுவே முகுந்த் பண்ணா மட்டும் தப்பா என்ன?”

“காதலித்தது தப்பு இல்லைன்னு வெச்சுக்கோ ஆனா அவரு அதுக்காக தேர்ந்தெடுத்த வழி அதால நான் இழந்தது அதிகம் இல்லையா”

” இதுதான் நீ பண்ற தப்பு முன்னாடி எல்லாத்துக்கும் காரணம் ரகு அத்தான்னு சொன்னே இப்ப எல்லாத்துக்கும் முகுந்த் காரணம்னு சொல்லுற ஆனா இதுல ஒருத்தரோடு தப்பு மட்டும் இல்லையே ரெண்டு பேரோட தப்புமே இருக்கு”

” எப்படி”

“முதல்ல உன்னோட ரகு அத்தான் ஏதுக்காக கல்யாணத்துக்கு அவசரப்படவேண்டும் உன் மனசு மாறிடும்னு பயமா”

“முகுந்தால எனக்கு ஏதும் பிரச்சனை வந்துரும்னு தான் பயந்திருப்பார்”

“முகுந்த் இது வரைக்கும் உனக்கு கஷ்டம் கொடுத்து இருக்காரா”

“அவரால்தானே நான் என்னோட அப்பா அம்மா ரெண்டு பேரையும் இழந்தேன்”

“நேத்து வரைக்கும் உன்னோட அத்தானாலேனு தானே சொன்னே”
“ஆனா இப்ப தான் எல்லாம் மாறிப்போச்சே”
“என்ன மாறிச்சு முகுந்தா ரகு கிட்ட சொன்னாரு இந்த மாதிரி போன் பண்ணி உங்க அப்பாக்கு நெஞ்சு வலி வரனும்னு அது முழுக்க முழுக்க ரகுவோட கோவத்தால இல்லையா”
“அது”

“முகுந்த உன்னோட மனச முழுசா அடைய நினைச்சார் உன்னை முழுசா சொந்தமாக்க நினைச்சார் அவர் பண்ண ஒரே தப்பு அந்த நியூஸ் ரிப்போர்ட் ஆனா அது கூட அவர் பண்ணாரா இல்லையான்னு இன்னைக்கு வரைக்கும் தெரியாது”

“அது அவர்தான் பண்ணாருனு அத்தான் கன்ஃபார்மா சொல்றாரே”

“நேத்து வரைக்கும் அவர் சொல்றத கூட கேட்கல இன்னைக்கு அவர் சொல்றது எல்லாத்தையும் கேட்கிற”

“எனக்கு இப்ப என்ன பண்றதுன்னே தெரியல”

நன்றி “நீ இவ்ளோ கேள்வி கேட்ட நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா”

“ம் கேளு”

மனசாட்சி “என்ன இப்போ எதுக்காக நந்துவா உருவகப்படுத்தி கிட்ட”

“ஏன்னா இப்போ அவ தான் எனக்கு இருக்கிற ஒரே ஃபிரண்ட்”

மனசாட்சி “நான் கூட நந்து முகுந்தனுக்கு சப்போர்ட் பண்றது நாலேனு நெனச்சுட்டேன் அதோட இன்னொரு விஷயமும் கேட்கணும் இத்தனை நாள் ரகுக்கு சாதகமா யோசிக்காத நீ முகுந்தன் மேல தான் தப்பு இருக்குன்னு உனக்கு தோணுன ஒரு நாளிலேயே முகுந்த்துக்கு சாதகமாக யோசிக்கிற மாதிரி இல்ல” என்று கூறி அடுத்த நொடி மறைந்த சென்றது

அது கூறி சென்ற வார்த்தைகளில் ஸ்ருதி தான் மொத்தமாக அதிர்ந்தாள். ” இத்தனை மாசத்துல ஒரு நாள் கூட அத்தானை பத்தி நான் இப்படி யோசிக்கலயா இப்ப நான் முகுந்தனுக்கு சாதகமா நினைக்கிறேனா கிருஷ்ணா நான் இப்ப என்ன பண்ணுவேன்” என்று கண் கலங்கினாள்

மகிழ் வேந்தன் “என்னாச்ச ரகு இவ்வளவு சீக்கிரமா என்னைத் தேடி வீட்டுக்கு வந்திருக்க “என்று கேட்க ரகு அதற்கு பதில் அளிக்காமல் வேகமாய் வந்து அவனை அணைத்துக் கொண்டான்

“ஸ்ருதி என்ன மன்னிச்சுட்டா சார்”

“இந்த சார் எல்லாம் வேண்டாம்னு நான் எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்”

“நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்றேன் நீ அத விட்டுட்டு சார் ல நிக்கிற”

“இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு”

ஆனால் யாராலயும் உங்களை மாதிரி இருக்கவே முடியாது அதுதான் உங்கள என்னால எப்பவும் ஒருமையாக கூப்பிட முடியல”

“நான் அப்படி என்ன செஞ்சிட்டேன் “

“ஸ்ருதியுடைய அம்மா அப்பா வந்த கார் மோதி தானே இன்னைக்கு மகிழினி அப்பா அம்மா இல்லாம இருக்கா”

“அது ஒரு ஆக்சிடெண்ட் அது பத்தி பேசுறதுக்கு வேற எதுவும் இல்ல அதோட அதனால் தானே நீங்க எனக்கு பிரண்டா கிடைச்சீங்க”

மகிழ் வேந்தன் கூறியதைக் கேட்டு சிரித்த ரகு “சரி உன் காதலை எப்போ நந்து கிட்ட சொல்ல போறீங்க”

” ஸ்ருதி கிட்ட நந்துவ லவ் பண்றது பத்தி சொன்னேன் இன்னைக்கு நந்து கிட்ட பேசுறதா சொல்லி இருக்கா பார்க்கலாம் என்ன பதில் வருதுன்னு”

“கண்டிப்பா நல்ல பதில் தான் வரும்”இன்று கூட மகிழ் வேந்தன் சிரித்துக்கொண்டான்.

“வெளிய போலாமா நந்து”

“நீ சாரிக்கட்ட மாட்டேன்னு சொன்னா வெளியே போகலாம்”

“கோயில் வேண்டாம் வேற எங்க போறது”

“நந்து காபி ஷாப்புக்கு போய் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் “

“காபி ஷாப் ல ஐஸ்க்ரீம் ஆ”

“காபி ஷாப்பில் ஐஸ்கிரீம் கிடைக்காதுன்னு சொன்னாங்களா என்ன”

“சரிசரி பேச்ச நிறுத்திட்டு கிளம்பு போகலாம்”

காபி ஷாப்பில் நந்துவும் ஸ்ருதியும் எதிரெதிரே அமர்ந்து தங்களுடைய ஐஸ்க்ரீமை சுவைத்துக் கொண்டிருந்தனர்

“நந்து உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”

“சொல்லு ஸ்ருதி”

ஸ்ருதி “மகிழ் வேந்தனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல”

“அப்ப அந்த கேகே கல்யாணம் பண்ணிக்கம குழந்தை பெத்து கிட்டாறா ரொம்பவே மாறி போச்சு காலம்”

“நான் பேசுறத முதல்ல முழுசா கேளு”

“சரி முறைக்காத கேட்கிறேன்”

“மகிழினி அவரோட அண்ணா பொண்ணு அவங்க ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க சோ இப்ப மகிழ் இவர் பொறுப்பில் இருக்கா”

“ஆமா இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்”

“மகிழ் வேந்தன் தான் சொன்னார்”

“உனக்கு ஆல்ரெடி இரண்டு ஹீரோ இருக்காங்க இப்ப இவரு சேர்ந்த மூணா அம்மாடியோ”

ஸ்ருதி “அவரு எனக்கு ஹீரோவாக நினைக்கல உனக்கு ஹீரோவாக நினைக்கிறார்”

“என்ன சொல்ற கேகே எனக்கு ஹீரோவா”

“மகிழ் வேந்தன் சார் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் படுறார் உன்னை காதலிக்கிறதா சொன்னார்” அவள் கூறிய அடுத்த நொடி கண்களில் காதலோடு அவளை ஏறிட்ட கார்த்திக்கின் முகம் கண்முன் வந்தது நந்தினிக்கு

“என்னாச்சும்மா அமைதியா கிட்ட நீ உடனே சொல்லனும்னு அவசியம் இல்லை யோசிச்சு பதில் சொன்னால் போதும் இது உன்னோட வாழ்க்கையில் முக்கியமான ஒரு கட்டம் எவ்ளோ டைம் வேனும்னாலும் எடுத்துக்கோ”

“நான் ஒன்னு சொல்லட்டுமா”

“சொல்லு”

“கார்த்திக் என்ன விரும்புறார்னு நினைக்கிறேன்”

“யாரு கார்த்திக்”

“முகுந்தன் கூட “என்று கூறியதுமே ஸ்ருதியின் முகத்தில் லேசான மாற்றம்

“அவரே உன்கிட்ட சொன்னாரா”

“இன்னும் சொல்லல”

“அப்புறம் எப்படி… ஒரு வேளை உனக்கு பிடிச்சிருக்கா”

“தெரியல காரணம் இல்லாம அவரோட ஞாபகம் அடிக்கடி வருது”

“ஹாய் கேர்ள்ஸ்” என்ற குரல் கேட்டு அந்தப் பக்கம் திரும்ப முகுந்தும் கார்த்திக்கும் நின்று கொண்டிருந்தனர்

நந்துவின் கண்களும் கார்த்திக்கின் கண்களும் பசைபோட்டது பொல் விலக மறுத்து ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது பார்வை

முகுந்த் “எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இப்ப முடியுமா “என்று ஸ்ருதியை பார்த்து கேட்க அவள் பதில் கூறும் முன்னால் எழுந்த நந்து “நீங்க பேசுங்க நான் வெளிய வெயிட் பண்றேன்” என்று கூறி வெளியே சென்றாள் கார்த்திக்கும் அவள் பின்னேயே சென்றான்

அவர்கள் சென்று சிறிது நேரம் ஆகியும் முகுந்தன் எதுவும் பேசாமல் நந்தினி இருந்த நாற்காலியில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்

“என் மனசுக்குள்ள சில கேள்விகள் இருக்கு அதுக்கு உண்மையான பதில் சொல்லுவீங்களா”என்று கேட்டாள் ஸ்ருதி.

“உனக்கு உண்மையான பதில் மட்டும்தான் வேணும்னா என்கிட்ட இருந்து உண்மை மட்டும் தான் பதிலா வரும்”

“நீங்க இன்னும் என்னை காதலிக்கிறீங்களா”ஒரு நொடி கூட தாமதம் இல்லாமல் வந்தது பதில்

“ஆமாம்”

ஸ்ருதி அவனின் கண்களை உற்று பார்த்தவாரே “என் வாழ்க்கையில் அந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னாடி நீங்க என்னோட அத்தானை பார்த்து பேசினீங்களா”

என்னோட அத்தான் என்று அவள் கூறிய ஒரு வார்த்தையில் அவன் கைமுட்டி இறுகியது ஆனாலும் அவன் பதில் கூற மறுக்கவில்லை அவள் கண்களை அதே பார்வையோடு பார்த்தவாரு “ஆம்” என்று பதிலளித்தான்

“அந்த பேப்பரில் வந்த நியூஸ்க்கு நீங்க தான் காரணமா”

“ஆமா”

“ஏன் இப்படி பண்ணீங்க முகுந்த்”

“நான் உன்னை காதலிக்கிறேன்”

“இன்னொருத்தருக்கு நிச்சயம் ஆன பொண்ணுன்னு தெரிஞ்சும் நீங்க பண்ணது தப்பு இல்லையா”

“உன்ன என்னோட மனசுல காதலியா வடிக்கும்போது அது எனக்கு தெரியாது”

“சரி அது தெரிய வந்த அப்புறம் விட்டு இருக்கலாமே”

” இது மனசு சும்மா அடிச்சு அடிச்சு எழுதமுடியாது”

“இதே வார்த்தையை நான் சொல்லலாமே “

“உன்னோட அப்பா இவன் தான் மாப்பிள்ளை என்று ரகுவை காட்டாம இருந்தா உன் மனசுல அந்த எண்ணம் வந்திருக்குமா” இந்த கேள்விக்கு நிச்சயமாய் அவளிடம் பதிலில்லை

“ஒருவேளை அந்த நிச்சயம் நடக்காம நான் உன் வாழ்க்கைல வந்து இருந்தா என்ன ஆகி இருக்கும்” இப்போதும் அவளிடம் மௌனம் மட்டுமே

“உனக்கு தெரியுமா நேத்து கொஞ்சம் தண்ணி ஓவராயிடுச்சு போதையில் உன்னோட அப்பா அம்மா பரலோகம் போய் எனக்கு ஹெல்ப் பண்றாங்கன்னு சொன்னேனாம் கார்த்திக் சொன்னா”

“என்ன சொல்றீங்க”

“அந்த பேப்பர் நியூஸ் அப்புறம் நான் எந்த அளவுக்கு உன்ன காதலிக்கிறேன் எல்லாமே உன்னோட அப்பா அம்மாக்கு தெரியும் அந்த ரகு உனக்கு புரிய வைக்க முடியாதுன்னு உன் அப்பா அம்மாக்கு புரிய வச்சுட்டான் வேஸ்ட்”

“ஆக்சிடெண்ட் நீங்க”

“அந்த ஆக்சிடென்ட்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது ஒரு ஆக்சிடென்ட்”

“அப்புறம்”

“அதனால் தானே நீ அந்த ரகுவ விட்டு பிரிந்து வந்த எனக்கு இந்த காதலால பைத்தியம் பிடிக்குது என்னோட காதல்ல என்ன தப்பு இருக்கு “

“ஒருவேளை எனக்கும் ராம் அத்தானுக்கும் கல்யாணம் முடிஞ்சுருச்சுன்னா அப்போ என்ன பண்ணுவீங்க”

” இருந்த இடம் தெரியாமல் அழிச்சுடுவேன்”

“முகுந்த்!”

“அது உனக்கு கஷ்டத்தை கொடுக்கும் ஏற்கனவே நான் அந்த இடியட் கிட்ட பைத்தியக்காரத்தனமாக ஏதோ பேச போய் தான் உன் வாழ்க்கை இப்படி எல்லாம் நடந்தது சொல்லி என் மனசுக்குள்ள கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன் இதுல உனக்கு இன்னொரு கஷ்டத்தை கொடுப்பேன்னு நினைக்கிறியா ஸ்ருதி”

ஸ்ருதி எந்த பதிலும் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்

“ஆனா நிச்சயமா அவன் கையால உன் கழுத்தில் தாலி ஏற விடமாட்டேன் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் எதுக்காகவும் யாருக்காகவும் என்னால் உன்ன விட்டுக்கொடுக்க முடியாது உனக்காக கூட”

ஸ்ருதியின் மனதில் என்னவென்று தெரியாத ஒரு உணர்வு இதற்கு எப்படி பதில் கொடுப்பது என்று கூட அவளுக்கு புரியவில்லை இருந்தும் “நீங்க ரொம்ப கெட்டவரா மாறிட்டு இருக்கீங்க முகுந்து உங்களுக்கு தெரியுதா”

முகுந்த் அவள் கண்களை உற்றுப் பார்த்து “பொண்டாட்டிகிட்ட கெட்டவனா தான் இருக்கணும்னு சொல்லுவாங்க தெரியாதா என்ன “என்று கேட்டு கண்ணடித்தான்

ஒரு நொடியில் அவள் முகம் செவ்வானமாய் மாறியது அது கோபத்தினாலா இல்லை வெட்கத்தினாலா அவள்(ன்) அறிவாளா(னா)

“இப்போ கேள்வி யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க அது இல்ல பேபி உன்னோட மனசுல யாரு மேல காதல் இருக்கின்றது தான் இங்க கேள்வி யோசிச்சு பதில் சொல்லு”

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here