தீரா மயக்கம் தாராயோ 18

0
790

முகுந்தனிடமிருந்து தங்களை காத்து கொள்ள நினைத்தவர்கள் ஒன்றை யோசிக்க தவறிவிட்டார்கள்.. இத்தனை நேரம் ஆகியும் கார்த்தியிடமிருந்து நந்துவிற்கு அழைப்பு வரவில்லை.. புவியிடமிருந்து ஸ்ருதிக்கும் அழைப்பு வரவில்லை.. ரகுவிடமிருந்தும், முகந்தனிடமிருந்தும் தப்பித்து ஊர் போய் சேர்ந்தால் போதும் என்ற நினைப்பே அவர்களின் பிரதானமாக இருந்தது..

நந்து, “ பேபி நாம எப்படி போறது? நீ ஏதாவது ப்ளான் வச்சி இருக்கியா? பிளைட் டிக்கெட் புக் பண்ணணுமே!! என்ன பண்றது? ஆன்லைன்ல பண்ணுவோமா?” என்று அவள் பேசி கொண்டே போக எப்பொழுதும் போல் மெளன சாமியாராக அமர்ந்திருந்தாள் ஸ்ருதி..

அவளை பார்த்ததும் தலையில் அடித்துக் கொண்டு ‘இவ வேற எப்ப பாரு சைலண்ட் மோடுல போய்டுறா’..

ஸ்ருதியை தோள் தொட்டு உலுக்க ஆரம்பித்தாள் நந்து..அவள் உலுக்கியதும் சுய நினைவு வந்தவளாய்..

ஸ்ருதி, “என்ன நந்து? எதுக்காக என்னை பிடிச்சி இப்படி உலுக்குற?”.

நந்து, “அதுவா ஒண்ணும் இல்லை.. உன் மாப்பிள்ளை இங்கு வந்து இருக்காரு அதான் உன்ன கூப்பிட்டேன்”.

மாப்பிள்ளை என்றதும் புவி நினைவு வர மறைக்க நினைத்ததை மறந்து” என்ன புவி வந்து இருக்காரா? எங்க நந்தும்மா அவருக்கு ஏதாவது சாப்பிட எடுத்துக்கிட்டு வா” என்று அவளையும் அறியாமல் பேசி கொண்டே போனாள்.

நந்து,” ஏய் வெயிட் யார் புவி? நீ ஏன் இவ்வளவு எக்ஸைட் ஆகுற? மாப்பிள்ளைனு சொன்னதும் உனக்கு ஏன் அவர் நியாபகதிற்கு வந்தார்? என்கிட்ட என்ன மறைக்கிற? உண்மைய சொல்லு
“.

ஸ்ருதி தன்னையே நொந்து கொண்டு” அதெல்லாம் ஒன்னும் இல்ல நந்து.. வா டிக்கெட் புக் பண்ண முடியுமான்னு பார்ப்போம் என்று சமாளிக்க எண்ணினாள்.. ஆனால் நந்துவால் அதை நம்ப முடியவில்லை..

நந்து, “பேபி உனக்கு பொய் சொல்ல வரல.. ஒழுங்கா உண்மைய சொல்லு.. இவ்வளவு நேரம் எங்க போன? போன இடத்துல என்ன நடந்தது ஒழுங்கா எதையும் மறக்காம சொல்லு இது என் மேல சத்தியம்.”

அதன் பிறகு ஸ்ருதியால் உண்மையை மறைக்க முடியவில்லை.. புவியுடன் நடந்த அனைத்தையும் சொன்னாள்.. அதை சொல்லும் போது அவள் கண்களில் அத்தனை மின்னல்..

இது ரகுவை பற்றி பேசும் போது கூட அவள் கண்களில் நந்து கண்டதில்லை.. தன்னிடம் சொல்லாமல் திருமணம் வரை சென்றது சங்கடமாக இருந்தாலும் அவள் முகத்தில் தெரிந்த பொலிவும் மகிழ்ச்சியும் நந்துவிற்கும் ஒட்டிக் கொண்டது..

நந்து, “ ஆக மேடம் கல்லூரி கால காதலை கல்யாணம் வரை கொண்டு போயாச்சு அப்படிதானே.. என்கிட்ட மறைக்குற அளவுக்கு போயாச்சி இல்ல.. பரவாயில்லை நீ சந்தோஷமா இருக்கியா அது போதும்.. உன்னை உன் உணர்வுகளை புரிந்து கொண்ட ஒருத்தர் உனக்கு வாழ்க்கை துணையாக வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்.. எனிவே வாழ்த்துக்கள் மிசர்ஸ். ஸ்ருதி புவியரசு “என்றாள் சிரித்தபடி..

அவளை கட்டியணைத்துக் கொண்டு” சாரி நந்து எனக்கு பயம் அதான்.. ஊருக்கு போய்ட்டு அப்பறம் உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள நீ கண்டுபிடிச்சிட்ட.. என்னை மன்னிச்சிடு” என்றாள் கண்ணீர் மல்க.

நந்து,” ஏய் நோ வோரிஸ்.. நான் தப்பா நினைக்கல உனக்கு இருந்த சூழ்நிலை அந்த மாதிரி.. சரி டிக்கெட் பாரு.. ஊருக்கு வந்து என் செல்லத்தை மயக்கிய கள்வன் யாருன்னு பார்க்க ஆவலா இருக்கேன் “.

ஸ்ருதி,” சரி இரு பார்க்கிறேன்.. ஞாபகம் வச்சிக்கோ நந்து கார்த்திக் கால் பண்ணா அட்டென்ட் பண்ணாத “.

அவளும் சரி என்று தலையசைத்து விட்டு அமர்ந்திருந்தாள்.. டிக்கெட் புக் செய்ய மொபைல் எடுக்கவும் தான் சிக்னல் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.. எவ்வளவு முயற்சித்தும் சிக்னல் கிடைக்காமல் போகவே நந்துவின் மொபலை எடுத்தால் அதிலும் அதே நிலைதான்.. என்ன செய்வது என்று குழம்பியபடி அறையை சுற்றிலும் நோட்டம் விட்டுக்கொண்டு திரும்பி பார்க்க அங்கே ஒரு லேண்ட் லைன் போன் இருந்தது.. அதன் மூலம் புவியின் நண்பனான விக்கியை தொடர்பு கொண்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து முடித்தாள்..

விக்கி, “ ஸ்ருதி உங்க மொபலைல எப்போதிலிருந்து சிக்னல் இல்ல உங்களுக்கு தெரியுமா?”.

ஸ்ருதி, “அது வந்து நான் இப்ப தான் மொபைலை பார்த்தேன்.. ஆனா நான் வீட்டுக்கு வந்த போது ஒரு முறை எதேச்சையாக பார்த்தேன் அப்ப இருந்தது அதாவது ஒரு மணி நேரம் முன்னாடி”.

விக்கி, “ஒரு மணி நேரம் முன்னாடி உங்கள பார்க்க ஒருத்தர் வந்தாரே யார் அது?”.

ஸ்ருதி,” சார் யார் வந்தா? யாரும் வரலையே!! நானும் என் பிரண்டும் தான் பேசிட்டு இருக்கோம்.. நீங்க யார சொல்றீங்க? எப்படி இருந்தார் அவர்? சொல்லுங்க சர்” என்று அவள் கேட்கும் பொழுதே உள்ளுக்குள் பயம் கவ்வ தொடங்கியது..

விக்கி,” பேஸ் தெரியல பட் மாநிறம், கண்கள் அவ்வளவு ஒரு கூர்மை, ஆறடிக்கும் குறையாமல் இருக்கும் அவருடைய உயரம்.. முகத்தை பார்க்க முடியல ஸ்கார்ப் கட்டி இருந்தார் பிளாக் கலர்ல.. யார் அவர் உங்கள பார்க்க வந்துவிட்டு ஏன் பார்க்காம போனார்? உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கா? “.

ஸ்ருதி சற்றும் தாமதிக்காமல்” முகுந்த் “என்றாள்.

விக்கி,” ஓஓ ஓகே.. அது யாரு? உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? அவர் பெயர சொல்லும் போது உங்க குரல்ல ஏதோ மாற்றம் தெரியுதே!! ஏதாவது பிரச்சினையா? “.

ஸ்ருதி,” அதெல்லாம் ஏதுவும் இல்ல சார்.. ப்ளீஸ் நீங்க இங்க வர முடியுமா?”.

விக்கி, “ஒரு நிமிடம் நான் உங்க வாசல்ல தான் இருக்கேன்.. புவி தான் உங்களுக்கு ஏதோ பிரச்சனை மாதிரி தெரியுது அதனால கண்காணிக்க சொன்னான் “.

புவி என்ற பெயரை கேட்டதும் அவளுக்குள் மின்னல்.. ‘எத்தனை அன்பு என் மீது அவனுக்கு? நான் சொல்லாமல் என் முகத்தை வைத்தே பிரச்சனை என்று தெரிந்து கொண்டுள்ளானே!!’ என்று நினைத்து கொண்டு இருக்கும் போது விக்கி வந்து அழைப்பு மணியை அழைத்திருந்தான்..

ஸ்ருதி,” சார் வாங்க..”

விக்கி, “ லாக் ஆகி இருக்குமா ஓபன் பண்ணுங்க”.

ஸ்ருதி, “ நான் லாக் பண்ணல சார்.. அப்ப.. ஒரு நிமிடம் சார் என்று அவளிடம் இருந்த சாவி கொண்டு கதவை திறந்தாள்..

விக்கி,” ஸ்ருதி உங்க வீட்டு வாசல்ல இந்த ஜாமர் இருந்தது..
இங்க பாருங்க நீங்க சொல்ற ஆள் டிவி சேனல்ல பார்த்து இருக்கேன்.. அண்ட் அவங்க பிரோகிராம் ஒன்னுல நீங்க நீதிபதியா இருந்து இருக்கிங்க.. சோ இப்ப உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சினை? இப்படி சிக்னல் பிளாக் பண்ணி உங்கள பேச விடாம செய்யற அளவுக்கு?”.

நந்து,” சார் அந்த முகுந்த் இவள லவ் பண்றார் வேற யாரும் இவ லைப்ல வர கூடாதுன்னு அவர் எண்ணம்.. அதே மாதிரி இவர் அத்தை பையன் ரகு.. இவங்க இரண்டு பேரும் என் பேபிய டார்ச்சர் பண்றாங்க சார்.. புவி சார் கிட்ட சொல்லி இவங்க தொல்லைய முடிக்க சொல்லுங்க “.

அவள் பேச பேச விக்கிக்கு விவரம் புரிந்தது.. ஆனால் ஸ்ருதிக்கு தான் குற்ற உணர்வாக இருந்தது.. இவன் மூலமாக இந்த விசயம் புவிக்கு தெரிய வந்தால் என்ன நினைப்பான் என்பதாலே அது..

விக்கி,” ஓகே பைன் நாளைக்கு மதியம் புவி கிளம்புறான் அவன் கூடவே டிக்கெட் ஏற்பாடு பண்றேன் பீ ரெடி… எதுக்காகவும் பயப்படாதீங்க”.

நந்து, “ அப்போ புவி சார் இங்க தான் இருக்காங்களா? சூப்பர்.. அப்பறம் சார் அவங்க இரண்டு பேருமே மோசம் சார்.. எங்க இரண்டு பேரையும் ஏர்போரட் வரைக்கும் தனியா போக சொல்றீங்களே!!”.

விக்கி, “டோண்ட் வொர்ரி நான் உங்க கூட தான் வருவேன்” என்று புன்முறுவல் பூத்தான்..

அங்கே முகுந்த் அறையில் பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு அங்கு வந்தான் கார்த்திக்..

கார்த்திக்,” ஏய் என்ன பண்ணிட்டு இருக்க..? பைத்தியமா உனக்கு?”.

முகுந்த்,” ஆமாம்டா பைத்தியம் தான்.. நான் அவள எவ்வளவு நேசிச்சேன்? என்னை புரிஞ்சிக்கவே இல்லையே அவ!! நான் தப்பு பண்ணேன் தான் ஆனா அது யாருக்காக? அவள் மேல உள்ள காதல்னால தானே? என்று கலங்க ஆரம்பித்தான்..

இதுவரை அவன் கலங்கி பார்த்திடாத கார்த்திக்கிற்கு அது கோபத்தை தூண்ட “ஏய் இப்ப சொல்லு அவங்கள தூக்கிட்டு வந்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றது தான் தாமதம் அவன் கன்னம் பழுத்திருந்தது..

முகுந்த், “ ஏய் நான் என்ன அவ்வளவு கோழையா? அவளே என்னை தேடி வந்து கல்யாணம் பண்ணிக்க ரெடின்னு சொல்ல வைக்குறேன்.. அதுக்காக எத்தனை பேரை இழக்கவும் நான் தயாராக இருக்கேன்.. அந்த ரகு குறுக்கே வந்தா அவனை கொல்லவும் தயங்க மாட்டேன் என்று கர்ஜித்தவனை பார்க்க கார்த்திக்கிற்கு பேச்சே வரவில்லை.. மேலும் அவனே தொடர்ந்தான்.. “இப்ப நீ என்ன பண்ற அந்த நந்தினிக்கு கால் பண்ணி நான் இனி ஸ்ருதியை தொந்தரவு பண்ண மாட்டேன்னும் அவ எப்பவும் போல என்கிட்ட நட்பா இருக்கலாம் யாரா வேணும்னா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லு.. கடைசியா பேசின பிறகு எனக்கு மனசே சரி இல்லன்னும் அவ முகத்தை கஷ்டமா பார்க்க முடியலை அப்படின்னும் சொல்லனும்.. புரியுதா?

கார்த்திக், “எதுக்காக அப்படி சொல்லனும்?”.

முகுந்த், சிரித்த படி.. “விட்டு பிடிக்கிறேன்.. அப்புறம் நாளைக்கு பிளைட்ல நமக்கு டிக்கெட் புக் பண்ணிடு.இந்தியா போனதும் அவளை அவளுக்கு இருக்கு. இனியும் அவளை கெஞ்சிக்கிட்டு இருக்க முடியாது”.

கார்த்திக்கிடம் இருந்து அழைப்பு வந்ததும் என்ன செய்வது என்று முழிக்க அங்கு வந்து சேர்ந்தான் விக்கி.. அவன் அட்டென்ட் செய்ய சொன்னதும் ஸ்பீக்கரில் போட்டவளுக்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. முகுந்த் சொன்னதாக இதற்கு மேல் அவளை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொல்ல சொன்னதாக சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விட்டான்..

இதை கேட்டதும் குதிக்க ஆரம்பித்தாள்.. ஸ்ருதிக்கும் சந்தோஷமே.. விக்கிக்கு அவன் பேசியதில் சிறது நம்பிக்கை இல்லை என்றாலும் முழுதாக சந்தேகிக்கவும் இல்லை.. அதன் பிறகு மறுநாள் மதியம் ஏர்போர்ட்டில் இவர்களுக்காக காத்திருந்தான் புவி..

கண்களில் காதல் கடலளவு பொங்க… இருக்கும் சூழல் மறந்து அவளை நோக்கி ஓடி வந்தான்.

புவி, “பொம்மி வா என்று அவளை இறுக்க அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.. அதை கண்ட நந்து ஆஆவென பார்க்க..” பொம்மிமா இது யாரு? ஏன் இந்த பார்வை பார்க்குறாங்க? “

ஸ்ருதி, “புவி இவ என்னோட குளோஸ் பிரண்ட்.. உங்கள இதுவரைக்கும் பார்த்தது இல்லையா அதனால தான் இப்படி பார்க்குறா.. நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க” என்று அவளை கிள்ளி சுய நினைவிற்கு கொண்டு வந்து பின்னர் பிளைட் பிடித்து நால்வரும் சென்னை பயணமானார்கள்..

மறுநாள் காலை விமான நிலையத்தில் அமர்ந்திருந்த முகுந்திற்கு யாரோ தன்னை கவனிப்பது போல் தோன்ற சுற்றும் முற்றும் தன் பார்வையை சுழற்றினான்.. யாரும் அகப்படாமல் போகவே சரி என்ற நினைத்த அதே நேரம் அவன் செல்ல வேண்டிய விமானத்தின் அழைப்பு வரவே எழுந்து கார்த்திக் உடன் சென்று தன் இருக்கையில் அமர்ந்தான்..

கண் மூடி அமர்ந்திருந்தவனின் அருகே அவனுக்கு பழக்கப்பட்ட வாசனை தோன்றவும் கண் திறந்து அருகில் இருந்தவளை பார்த்தான்.. ‘ச்சே இவளா ‘ என்ற எண்ணமே தோன்றியது.. யோசித்து கொண்டு இருந்தவனை கலைத்தது அவளின் குரல் “முகுந்த் எப்படி இருக்க?”.

முகுந்த்,” யார் நீ? தெரியாதவங்க கிட்ட பேசும் போது மரியாதையா பேசனும்னு ஒரு பேசிக் மேனர்ஸ் கூட தெரியாதா? ஷிட்”.

“ஏய் என்ன நீ நடிக்கிறியா? என்னை உனக்கு தெரியாது அப்படியா? சரி நான் நியாபகப்படுத்திறேன்.. நான் மிருதுளா உன்னை எட்டு வருஷமா காதலிக்கிறேன்.. ஐந்து வருடமா உன் பேச்ச கேட்டு உன் முன்னாடி வராம இருந்தேன்.. இனி அப்படி இருக்க வேண்டாம்னு நினைச்சி தான் இப்ப பேசிட்டு இருக்கேன்.. போதுமா?.

முகுந்த், “பைத்தியமா நீ? உன்ன தெரியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன்.. காதல் அதுன்னு ஒளறிக்கிட்டு இருக்க? தெரியாத ஒருத்தன் கிட்ட இப்படி தான் பேசுவாங்களா? கெட் லாஸ்ட்.. பணக்காரனா இருந்துட்டா போதுமே ஈஈஈஈன்னு இளிச்சிக்கிட்டு பின்னாடியே வர்றது.. என்ன மாதிரி பொண்ணோ…!என்று பொரிந்து தள்ளி கொண்டு இருந்தான்..

அவன் பேச பேச மிருதுளாவின் முகம் மாற தொடங்கியது.. “என்ன சொன்ன நான் உன் பின்னாடி காசுக்காக வரேனா? உன்னை விட ஒரு மடங்கு அதிகமாகவே இருக்கு நீ சொல்ற அந்த பணம்.. இதுவரைக்கும் உன்னோட திமிருக்காக, உன்னோட திறமை இதை தான் பார்த்து லவ் பண்ணிட்டு இருக்கேன்.. இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ நீயா வந்து மிருதுளா ஐ லவ் யூன்னு சொல்ல வைக்குறேன்.. இது என் காதல் மேல சத்தியம்.. “.

முகுந்த்,” இங்க பாரு நல்லா கேட்டுக்கோ.. நான் ஸ்ருதினன்னு ஒரு பொண்ண லவ் பண்றேன்.. அவள தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. இனிமேல் இந்த மாதிரி பைத்தியகார தனமா என் பின்னாடி சுத்தாம வேலைய பாரு “.

மிருதுளா,” ஓஓ ஓகே.. சோ நீ அவள லவ் பண்ற தானே கல்யாணம் பண்ணிக்கல.. பைன் நான் சொல்றத நல்லா உன் மெமரில பிக்ஸ் பண்ணிக்கோ.. உனக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கும்.. அவ கூட கல்யாணம் மேடை வரைக்கும் கூட போகலாம் ஆனா தாலி என் கழுத்துல தான் ஏறும்.. போடா “என்று சொல்லி விட்டு வேறு ஒரு இடத்திற்கு அனுமதி வாங்கி கொண்டு சென்று விட்டாள்..

அவனும் திமிரு திமிரு.. பார்க்குறேன்டி.. உன் கண் முன்னாடியே ஸ்ருதி கழுத்துல தாலி கட்டி என் பொண்டாட்டி ஆக்கி காட்டறேன்.. என்று தன் நிலை மறந்து இருவரும் சண்டை இட்டு கொண்டு இருந்தனர்..

ஸ்ருதிக்கு திருமணம் ஆன விசயம் முகுந்தனுக்கு தெரிய வந்தால் என்ன ஆகும்? புவியின் துணை கொண்டு ஸ்ருதி முகுந்தனை சமாளிப்பாளா? பொறுத்திருந்து பார்ப்போம்..

தொடரும்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here