தீரா மயக்கம் தாராயோ 20

0
756

கண் விழிக்கும் போது மகிழ்ச்சியான மனநிலையை உணர்ந்தான் புவி., தனது காதல் உண்மையானது இல்லையென்றால் இத்தனை வருட காத்திருப்புக்கு பிறகு எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்த பிறகு எனக்கு கிடைத்திருக்குமா என்ற எண்ணத்தோடு எழுந்தவன் எப்போதும் போல தன் உடற்பயிற்சியை பார்க்க சென்று விட்டான்.

ஸ்ருதியும் அதுபோன்ற ஒரு சந்தோஷமான மனநிலையிலேயே எழுந்தாள். அவள் மனதிலும் காதல் வந்ததை அவள் அறியாமல் போனாலும் புவியின் அருகில் இருக்கும் போது பாதுகாப்பாக உணர்வதே அவளை மிகவும் மகிழ்ச்சியாகவே வைத்திருந்தது…

காலை கடமைகளை முடித்துக்கொண்டு குளித்து அவன் எப்போதும் அணிவது போல புடவை அணிந்து கொண்டாள். அதன்பிறகு அவன் வீட்டில் இருந்த சிறிய பூஜையறையில் இருந்த தன் பெற்றோரின் புகைப்படத்திற்கு அருகில் வந்து மானசீகமாக பெற்றோரிடம் பேசினாள். தான் இப்போது மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக சொன்னாள். அதன் பிறகு விளக்கேற்றி வைத்துவிட்டு நந்தினியை தேடி சென்றாள்..

“ஸ்ருதி” என்ற நந்தினியின் சந்தோஷமான அழைப்பு நந்தினியையும்., ஸ்ருதியையும் முகம் மலர வைத்தது. அதன்பின் இருவரும் காலை நேர காபிக்காக தயார் செய்து கொண்டிருக்க நந்தினி தான் ஸ்ருதியிடம் “காலையிலேயே என்னைய தேடி வந்திருக்க., புவி அண்ணா எங்க இருக்காங்கனு போய் பார்க்க வேண்டியதுதானே”., என்றாள்.

“அவங்க மாடியில் உள்ள ரூம்ல எக்சசைஸ் பண்ணிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்., அங்கிருந்துதான் சத்தம் வந்தது அவங்க ஃப்ரெண்ட் விக்கி கூட மாடியில்தான் தங்கியிருந்தாங்க.., அதனால அங்க போய் இருப்பாங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்..

“ஸ்ருதி உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று நந்தினி சொன்னாள்.

ஸ்ருதியும் “ஆமா மனசெல்லாம் நிம்மதியா ஒரு ஃபீல் பண்றேன்.., ரொம்ப நாளைக்கப்புறம் பாதுகாப்பான ஒரு இடத்தில இருக்கிற மாதிரி ஒரு உணர்வு.., அப்பா அம்மா ஆக்சிடெண்ட் அப்புறம் நான் எப்பவுமே தனியா இருக்க ஒரு பீல் இருந்துட்டே இருந்துச்சு.., ஒரு பயம் நமக்கு யாரும் இல்லை என்ற உணர்வு எல்லாம் மனசுல இருந்துச்சு.., நீ பக்கத்துல இருந்தாலும் பாதுகாப்பா என்னை பார்த்துகிட்டாலும்., எனக்கு வந்து மனசுக்குள்ள ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு…, இப்ப அந்த எண்ணம் இல்லை., நிஜமா இன்னைக்கு காலையில எந்திரிக்கும் போது நான் அப்பா அம்மா இருக்கும்போது…, எங்க வீட்ல எழுந்துக்கும்போது எப்படி மனசு முழுக்க சந்தோஷத்தோட எழுந்துப்பனோ., அதுபோல ஒரு விடியல் எனக்கு இன்னைக்கு தான் கிடைத்தது”. என்று சொன்னாள்.

நந்தினியும் மிகவும் மகிழ்ந்தாள் “இந்த சந்தோஷம் உனக்கு என்றைக்கும் நிலைக்கனும் ன்னு நானும் பிரேயர் பண்ணிக்கிறேன்.., உன் மனசுக்கு நீ எப்பவும் ஹாப்பியா தான் இருப்ப,” என்று சொல்லி நந்தினி ஸ்ருதியை கட்டிகொண்டாள்…,

அப்போது மனதிற்குள் ‘ஸ்ருதி நந்தினியும் இதேபோல ஒரு மகிழ்வான வாழ்வில் அமர வைக்க வேண்டும். என்ற எண்ணம் அவளுக்கு தோன்றிக் கொண்டிருந்தது. அதைப்பற்றி இன்று எப்படியாவது அவளிடம் பேச வேண்டும்’ என்று நினைத்து கொண்டாள்.

தோழிகள் இருவரும் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு காலை காபியை தயாரித்துக் கொண்டிருக்க விக்கியும் புவியும் மாடியிலிருந்து இறங்கி வந்தனர். அவர்களுக்கு காலை நேரத்திற்கான காபி எடுத்து வரவா என்று கேட்க.,

அவர்கள் இருவரும் கிரீன் டீ என்று சொன்னார்கள். எனவே இருவருக்கும் நந்தினியே கிரீன் டீ கலந்து எடுத்துக் கொடுத்தாள்.

அதன் பிறகு “இருவரும் பயப்படாம வீட்டில் இருங்கள். வீட்டில் எப்பொழுதும் செக்யூரிட்டி இருப்பார். அதனால வீட்டில எந்த பயமும் கிடையாது. சமையலுக்கு ஒரு ஆள் வருவாங்க., அது என்னோட வேலை காரணத்தினால் என்னால செஞ்சு சாப்பிட முடியாதுன்னு ஒரு ஆள் இருக்காங்க., இப்ப வந்துருவாங்க அவங்க ஈவினிங் வரை இருப்பாங்க” என்று புவி தகவல் சொன்னான்.

ஸ்ருதியோ “இல்லை நான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிறேன் எல்லாத்தையும்” என்று சொன்னாள்.

” இல்லை நீ உன்னோட லைன்ல இருந்து விலக வேண்டாம்., சமையல் , வீட்டு வேலைன்னு., உன்னோட தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது”., என்று சொல்லவும் நந்தினிக்கு பெருமையாக இருந்தது…, ஸ்ருதியை புரிந்துகொண்ட கணவன் ஸ்ருதிக்கு கிடைத்ததை நினைத்து…,

ஆனால் ஸ்ருதியோ சிரிப்போடு “ஏன் என் சமையல் சாப்பிடுவதற்கு அவ்ளோ பயமா” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.., ஸ்ருதியே மனதளவில் தான் பழைய நிலைக்கு திரும்புவதை உணரத் தொடங்கினாள்.

அதன்பிறகு நந்தினி அவள் அறைக்கு செல்ல., விக்கியும் கிளம்பி வருவதாக சொல்லி விட்டு மாடிக்கு சென்று விட்டான்.

புவியும் ஸ்ருதியும் தனியாக இருந்த அந்த இடத்தில் ஸ்ருதி புவியிடம் தான் உணர்ந்ததாக நந்தினியிடம் சொன்ன அதே விஷயத்தை புவியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்…

புவிக்கு எப்போது இவள் மனதளவில் காதலை உணர்கிறாளோ., அப்போதே அவள் மனம் ஏற்றுக் கொள்ளும் கணவனாக மாற வேண்டும்., அதுவரை நல்ல தோழமையுடன் அவளை பாதுகாப்புடன் பார்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்…

காதல் கொண்டவனாக முதல்நாள் இரவில் அவன் மனம் பல விதமாக யோசித்து இருந்தாலும் , அவளின் மகிழ்ச்சியும் அவளது முகத்தில் தெளிவையும் பார்த்தவனுக்கு அவள் பழைய ஸ்ருதியாக மாற வேண்டும்., என்ற எண்ணம் இன்னும் திடமாக வந்தது. அதன் பிறகே தன் காதலை மொத்தம் அவள் உணரும்படி செய்ய வேண்டும், என்று நினைத்துக் கொண்டான். அவள் காதலை அவள் உணர்ந்து கொள்ளும் வரை காத்திருக்க வேண்டும். என்றும் மனதிற்குள் எண்ணிக் கொண்ட பிறகு இருவருக்குமான சிறுசிறு உரையாடல்கள் உடன் அப்போதைய நேரம் கடந்தது..

அவனது அலுவல் அவனை அழைக்க அவனும் “தான் வரும் வரை பத்திரமாக இருக்க வேண்டும்” என்று ஸ்ருதி இடமும் நந்தினியிடம் சொல்லிவிட்டு, வாயில் செக்யூரிட்டியிடம் “வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம். எப்போதும் உள்ளவர்களை தவிர” என்று சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பினான்.

இதுவரை இவர்கள் இந்தியா வந்து சேர்ந்தது ரகுவிற்கும், முகுந்தனிற்கும் தெரியாது. ஆனால் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற எண்ணம் புவிக்கு இருந்தது.. ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனமாக செய்திருந்ததாலும், மற்ற இருவரின் நடமாட்டம் எவ்வாறு உள்ளது என்று அறிந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்ததாலும், தைரியமாகவே இருந்தான்.

காலை உணவை புவியரசனோடு எடுத்துக் கொண்டதால் அதன்பிறகு தோழியர் இருவரும் நிதானமாக அமர்ந்து கதை பேச தொடங்கினர்., வெகுநாட்களுக்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தனர்…

இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது வேந்தனை பற்றி இன்று எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று எண்ணிய ஸ்ருதி ., முதலில் மகிழினி பற்றிய பேச்சை தொடங்கினாள். “நந்து மகிழினி பத்தி என்ன நினைக்கிற” என்று குழந்தையை பற்றிக் கேட்கவும் நந்தினியின் முகம் மலர்ந்தது…

“க்யூட் பேபி இல்ல.., வரேன்னு சொல்லி இருந்தேன்., ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வரேன்., சாக்லேட் வாங்கிட்டு வரேன்னு ஏமாத்திட்டேன்., அங்கே இருக்கும்போதே போய் பாத்துட்டு வந்து இருக்கணும் இல்ல”., என்று கேட்டாள்.

ஸ்ருதிக்கு மனதிற்குள் இவளின் பாசம் கண்டு வியந்தாள்., ஒருமுறை மட்டுமே பழகிய குழந்தை மனதில் அவளோடு ஒன்றி போனதை நினைத்து நந்தினியின் குணத்தை நினைத்து பெருமைப் பட்டாள்.

” மிஸ் பண்றியா”என்று கேட்டாள்.

“தெரியலை., ஆனா செம பேச்சு., துருதுரு குழந்தை” என்று சொன்னாள்.

“உன்கூட ஐஸ்கிரீம் சாப்பிட்டா துருதுரு குழந்தை., நல்ல குழந்தை., இல்லையா” என்று ஸ்ருதி கேட்டாள்.

“அப்படி இல்ல., ஏனோ தெரியல அந்த குழந்தை கூட ஒரு ஒட்டுதல்” அவ்வளவுதான் “மற்றபடி வேற ஒன்னும் இல்ல” என்று சொன்னாள்.

இது என்ன வகையான ஈர்ப்பு., என்ற யோசனையோடு ஸ்ருதி இருந்தாள்.

“வேந்தன் சார்ட்ட வேற சொல்லாம வந்துவிட்டோமே” என்று நந்தினி சொல்லிக் கொண்டிருக்கும்போது ஸ்ருதி குறுக்கே பேசினாள்.

“அது பிரச்சனை இல்லை ன்னு நினைக்கிறேன்., சார்க்கு மெயில் பண்ணிட்டேன்”., என்று அப்போதுதான் அவள் மெயில் செய்த விஷயத்தையும் சொன்னாள்.,

அதன் பிறகு நந்தினி கார்த்திகை பற்றி பேச தொடங்கினாள். “எப்படி ஒரு சீட் பார்த்தியா., அவனுடைய முதலாளிக்கு விசுவாசமாக இருக்கிறான் அப்படிங்கறது காக என்னை எப்படி ஏமாற்றி இருக்கான் பார்த்தியா” என்று வருத்தப்பட்டாள்… “என்ன ஒரு புத்தி பாரேன்., அவனுக்கு வேற எதுவும் ஐடியா தோணலையா., லவ் ன்னு சொல்லலை., ஏன் அந்த மாதிரி ஒரு பீல் பண்ண வச்சான்” என்று சொல்லி மனதிற்குள் நந்தினி வருந்துவதை கண்ட ஸ்ருதி.,

” நந்து அதுக்கு பேர் லவ் அப்படி ன்னு கிடையாது., ஜஸ்ட் அவன் உன்கிட்ட என்னை பத்தி தெரிஞ்சுக்கனும்., அதற்காக கேம் பிளே பண்ணி இருக்கான். நீ அதை நம்மிட்ட” என்று சொன்னாள்.

“அப்படித்தான் போல., நான் அந்த அளவுக்கு லூசா இருந்து இருக்கேன்., அதனால தானே என்னை ஏமாற்றி இருக்கான்”., என்று மறுபடியும் பேச தொடங்கவும்

“அவன பத்தி பேசாத., இந்த உலகத்துல இந்த மாதிரி ஆட்கள் தான் அதிகமா இருக்காங்க., நான் இப்பதான் சில நாட்களாக புரிஞ்சுகிட்டு இருக்கேன். அவங்களோட காரியத்துக்காக நம்மள வச்சு விளையாடுறாங்க”….

“அது உண்மைதான் ஸ்ருதி எல்லாருமே முகமூடி போட்டுட்டு தான் நடமாடுறாங்க., நம்ம தான் அது முகமூடி ன்னு தெரியாம முகம் ன்னு நினைத்து ஏமாந்து விடுறோம்”.., என்று சொன்னாள்.

அவள் பேச்சு திசை மாறிப் போவதை உணர்ந்த ஸ்ருதி நந்தினியிடம் மீண்டும் மகிழினி பற்றி பேச தொடங்கவும்., நந்தினியும் சந்தோஷமாக மகழினி பற்றி பகிர்ந்து கொண்டாள்….

ஸ்ருதி நந்தினியிடம் “காதலைப் பற்றி என்ன நினைக்கிற நந்து” என்று கேட்டாள்.

“எனக்கு தெரிஞ்சி அது ஒருத்தர ஒருத்தர் ஏமாத்துறாங்க ன்னு தோணுது., ஆனா புவி அண்ணாவை பார்க்கும் போது உண்மையான காதல் எவ்வளவு நாள் ஆனாலும் எப்படியும் சேரும் அப்படின்னு தோணுது”., என்று சொன்னாள்.

“அப்போ வேந்தன் சார் காதல் உண்மையா இருக்கும் ன்னு எனக்கு தோணுறது” என்று ஸ்ருதி சொன்னாள்.

” யாரு வேந்தன் சாரா., யாரை லவ் பண்றாங்க”., என்று ஆச்சரியமாக வினாவினாள்.

அதைக் கேட்ட ஸ்ருதி “உன்னத்தான் நந்து., வேந்தன் சார் உன்னை அந்த அளவு விரும்புறாங்க”., என்று சொல்லி அன்று அலுவலக பார்ட்டியில் வைத்து ஸ்ருதியிடம் வேந்தன் நந்தினி மேல் உள்ள காதலை வெளிப்படுத்தியதை சொன்னாள்.,

நந்தினிக்கு ஒருபுறம் பயமாகவும்., மற்றொரு புறம் யோசனையாக இருந்தாலும்., தான் கார்த்தியை விரும்புவதாக நினைத்து அவனோடு பேசிக்கொண்டிருந்ததை இப்பொழுது நினைக்கும் போது மனதிற்குள் வருத்தமாகவும் இருந்தது., அதையும் வெளிப்படையாக ஸ்ருதியிடம் சொன்னாள்.

ஸ்ருதியோ ” நீ வேந்தன் சார் ட்ட பேசு” என்று சொன்னாள்.

நந்தினியோ., மனதிற்குள் வருத்தத்தோடு “அவரோட அந்த உண்மையான காதலை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எனக்கு தகுதி இருக்கான்னு தெரியலையே ஸ்ருதி” என்று பேச தொடங்கியவளை, நிறுத்தி ஸ்ருதி கேட்டாள்.

“மகிழினி பற்றி நீ என்ன நினைக்கிற” என்று ., அது ஒன்னு தான் சந்தோஷம்.., மகிழினி குழந்தை அவளை பத்தி ஒன்னும் பிரச்சனை இல்ல., அவள என்னால ஏத்துக்க முடியும்.., ஆனா அவரோட காதல் என்னால ஏத்துக்க முடியுமான்னு தெரியல”… என்று சொன்னாள்.

நந்தினியிடம் மகிழினி பற்றியும் ஸ்ருதி தெளிவாக சொல்லி விட்டாள்., ஒருவேளை குழந்தை அவனது என்று நினைத்து தான் இரண்டாம் தாரமாக அவனைத் திருமணம் செய்ய வேண்டியது வருமோ., என்று நந்தினி யோசிக்கிறாள் என்ற நினைவோடு அவள் மகிழினி பற்றி சொன்னாள்.

அவளோ “மகிழினி அவர் குழந்தையாக இருந்தால் கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்.., இதில் அண்ணன் குழந்தை என்று சொல்லிவிட்டாய்., இதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல…, ஆனா நான் கார்த்தி கிட்ட பேசினது., எனக்கு ஒரே உறுத்தலா இருக்கு., நான் என்னை லவ் பண்றதா நினைச்சுட்டு., அவனுக்காக நிறைய விஷயங்கள் பண்ணிட்டேன்”.., என்று சொன்னாள்.

“அப்படி என்ன பண்ணின” என்று கேட்டாள்.

“உன்னை பற்றி அவனிடம் பேசியதுதான் வேறு ஒன்றுமில்லை” என்றாள்.

” அப்புறம் எதுக்கு யோசிக்கிற அவன் என்ன உன்கிட்ட காதல் டயலாக் விட்டானா., இல்ல நீ டயலாக் விட்டீயா இல்ல இல்ல.. என்ன பத்தி தெரிஞ்சுக்க உன்னை யூஸ் பண்ணிக்கிட்டான்., நீ எதுக்கு அப்படி யோசிக்கிற” என்று கேட்டாள்.

” இல்லை நான் இதை பத்தி கே.கே ட்ட பேசுகிறேன். மனசு விட்டு பேசிட்டு அதுக்கப்புறம் நான் ஒரு முடிவுக்கு வாரேன்” என்று சொன்னாள்.

“ரொம்ப சந்தோஷம் கே.கே ங்கிறது யாரு” என்றாள்.

“அது வேந்தன் சார் தான்” என்று சொன்னாள்.

“கே. கே என்றால் என்ன அர்த்தம் ” என கேட்டாள்.

சிரித்துக்கொண்டே “இன்னொரு முறை சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டாள்.

“அப்போ வேந்தன் சார் ட்ட எப்ப பேசுற” என்று ஸ்ருதி மகிழ்வாக கேட்டாள்.

” ஒரு ரெண்டு நாள் போகட்டும், நம்ம ஊரு டைமுக்கு நைட் நேரத்துக்கு கூப்பிட சொல்லு பேசுறேன்”. என்று சொல்லிவிட்டு கண்மூடி சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள்.

அதை அப்படியே வேந்தனுக்கு மெயிலில் அனுப்பிவிட்டு நந்தினியை பார்த்து சிரித்த முகமாகவே அமர்ந்திருந்தாள் ஸ்ருதி…

மதிய உணவுக்கான நேரம் நெருங்கி இருக்க நந்தினி., ஸ்ருதியிடம் ஒரு பாட்டு பாடேன் என்று கேட்கவும். அவளும் மகிழச்சியான மனநிலையில் இருந்ததால்.,

பல்லவி ( ராகம் : சிவரஞ்சனி )

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாகுறை ஒன்றும் இல்லை கண்ணாகுறை ஒன்றும் இல்லை கோவிந்தாகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாகுறை ஒன்றும் இல்லை கண்ணாகுறை ஒன்றும்
இல்லை கோவிந்தா

அனுபல்லவி ( ராகம் : சிவரஞ்சனி )

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணாகண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1 ( ராகம் சிவரஞ்சனி )

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்கவேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணாமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

சரணம் 2 ( ராகம் : காபி )

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணாகண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா உன்னைமறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணாகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதாகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதாகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

சரணம் 3 ( ராகம் : சிந்துபைரவி )

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கிநிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கிநிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாயாதும் மறுக்காத மலையப்பாயாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னைஎன்றும் இருந்திட ஏது குறை எனக்குஎன்றும் இருந்திட ஏது குறை எனக்குஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணாஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணாமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

என்ற பாடலை பாடி முடிக்கவும். புவியும் விக்கியும் வீட்டிற்கு வருவதற்கும் சரியாக இருந்தது., இவள் பாடலைக் கேட்டுக்கொண்டே வந்த புவி ஸ்ருதியின் மனநிலையை நன்றாக புரிந்து கொண்டான். அவள் ஏற்கனவே காலையிலே சொல்லியிருந்தால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அதை இப்போது பாடல் உணர்த்தியதை அறிந்துகொண்ட புவிக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. நேரே அவள் அருகில் வந்தவன். நந்தினியோ., விக்கியோ இருப்பதை பொருட்படுத்தாமல்., ஸ்ருதி நெற்றியில் முத்தம் வைக்க அவளோ சிவந்த முகத்தை மறைக்க அவன் மார்பிலேயே முகம் புதைத்து கொண்டாள். அருகில் இருந்தவர்கள் தான் சிரித்து கொண்டே விலகி சென்றனர்.

ரகு பாரீஸில் முழுவதும் தேடி சலித்த பின் இந்தியா திரும்பினான்… அவனுக்கு சந்தேகம் முழுவதும் முகுந்தன் மேல் தான்.

இங்கு வந்த பிறகு முகுந்தன் இங்கு எப்போது வந்து சேர்ந்தான் என்று விசாரித்த பின் அவனது சந்தேகம் வலுத்தது. இப்போது அவன் கோவாவில் இருப்பதை அறிந்து கொண்டவன் அங்கு சென்று ஸ்ருதியை அழைத்து வரவேண்டும் என்ற முடிவோடு கிளம்பி சென்றான்.

அதே நேரத்தில் முகுந்தனிற்கும் ஸ்ருதி பாரிசில் எங்கும் இல்லை. அவள் பாரீஸில் இருந்து நந்துவோடு கிளம்பி விட்டாள் என்ற செய்தி கிடைத்தது. அச்செய்தி கிடைத்த நேரத்தில் அவனது போதை முழுவதும் இறங்கியது.,

“கார்த்திக் எங்கடா போயிருப்பா” என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு.

“தெரியலையே., சார் நான் வேணும்னா விசாரிக்க சொல்லவா” என்றான்.

நாலு மோசமான வார்த்தை சொல்லி திட்டிவிட்டு., “கண்டிப்பா தெரியனும், அவ எனக்கு வேணும்” என்றான் ரௌத்திரமாக.

சில மணிநேரம் கடந்த நிலையில் ரகு நேராக முகுந்தன் தங்கியிருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தான். வந்தவன் முகுந்தன் சட்டையை பிடித்து இழுத்து அடிக்க வர.. இருவருக்கும் கைகலப்பு வந்தது..

“எங்கடா., ஸ்ருதி” ரகு முகுந்தனை கேட்டான்.

முகுந்தனோ., ரகுவை பிடித்து தள்ளியவன். “டேய் இந்த கேள்விய நான் கேட்கனும்., நீ தானே அவ காணாம போறதுக்கு இரண்டு நாள் முன்னாடி அவளை பார்த்து பேசினது”. என்றான்.

“இல்ல நீ தான் கடைசியா வீட்டுக்கு போய்ருக்க” என்றான்.

அதே நேரம் வெளியே சென்றிருந்த கார்த்திக் வந்து சேர்ந்தான்.” நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டு ஒண்ணும் ஆகப் போறது இல்ல., நந்தினியும், ஸ்ருதியும் சேர்ந்து தான் போயிருக்காங்க. ஆனா எங்க போனாங்கன்னு தெரியலை., ப்ளைட்ல டிக்கெட் டிடெயில் விசாரிக்க சொல்லியிருக்கேன்”.என்றான்.

இருவருமே அவளை எங்கே தேடுவது என்ற எப்படி தேடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here