தீரா மயக்கம் தாராயோ 27

0
934

அன்று காலை சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த ஸ்ருதி… கதவு திறக்கும் ஓசையில் திரும்பிப்பார்த்தாள்… கேஷுவலாக ஒரு டீசர்ட்டும் ஜீன்ஸ் பேண்டும் போட்டுகொண்டு வந்தான் புவி…. அந்த டிரஸில் அவன் கம்பீரமாகவும் அழகாகவும் தெரிந்தான்….

அவனையே பெருமையாக.. ‘இவன் என் கணவன் எனக்கு மட்டுமே சொந்தம்’ என்று நினைத்து… விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி… அந்த பரபரப்பான வேலையிலும் அவளின் பார்வை… தன்னைத் துளைப்பதை உணர்ந்து… மனதிற்கு உற்சாகத்தை பரிசளிக்க… உல்லாசமாக “என்னடி பார்வை எல்லாம் பலமா இருக்கு” என்றான் புவி…

“ஏன் பார்க்க கூடாதா” என்றாள் முகத்தில் ரத்தம் சூடேற… வெட்கத்தில் குனிந்து கொண்டு…
“தாராளமாக பார்க்கலாம் உனக்காக தாண்டி நான்…..” என்று சொல்லி அவள் அருகில் சென்று முகத்தை உயர்த்தி கண்ணைப் பார்த்தான்…

“ விடுங்க எனக்கு வேலை இருக்கு” என்று சிணுங்கினாள் ஸ்ருதி… “அப்படியெல்லாம் விட முடியாது கம்முனு போனவனை நீதான்டி உசுப்பேத்தி விட்ட…. இப்ப நான் வந்தா மட்டும் உனக்கு வேலை இருக்கா… அதெல்லாம் முடியாது எனக்கு ஒரு கிஸ் குடு உன்னை விட்டு விடுகிறேன்” என்றான்…

ஸ்ருதியும் இவன் இப்படி எல்லாம் கூட பேசுவானா…. என்று நினைத்து உதடு துடிக்க வெட்கத்தில் திரும்பி நின்று கொண்டாள்…

விடாக்கண்டனான புவியும் அவளை சுற்றி இழுத்து அவள் இதழை சிறைப்படுத்தினான்….

முதலில் எதிர்ப்பு தெரிவித்த ஸ்ருதி அவனின் ஆளுமையில் அடங்கிப்போனாள்… விக்கியிடமிருந்து போன் வரவும் அவளை விலக்க மனமில்லாமல் … போனை எடுத்தான் விக்கியின் நம்பரை பார்த்ததும்… “இதோ வந்துட்டேன்” என்று சொல்லி போனை வைத்துவிட்டு… ஸ்ருதியை பார்த்தான்..
அதற்குள் சுதாரித்துக்கொண்ட ஸ்ருதி அவனை முறைத்தாள்…. “சரிடி போதும் முறைக்கிற மாதிரி நடிக்காத நான் கிளம்புறேன்” என்றான்… சிரித்துக்கொண்டே வழியனுப்பினாள் ஸ்ருதி…. அதுவரை இருந்த இலகு தன்மை போய் அவன் முகத்தில் கடுமையும் கோபமும் தெரிந்தது…

தொடர்ந்து பெண் குழந்தைகள் கடத்தப்படுவதும்… அதுவும் 7 வயது முதல் 18 வயது வரை இருக்கும் பெண் குழந்தைகள்… காணாமல் போவதும் அதுவும் வால்பாறையை சுற்றி… அதிக அளவில் காணாமல் போயிருந்தது…. இதைக் கண்டுபிடிக்க தான் டிபார்ட்மெண்டில்…. சஸ்பெண்ட் செய்து மினிஸ்டரால் ரகசியமாக அனுப்பப்பட்டான் புவி…

“என்ன விக்கி விசாரிச்சுயா என்ன ஆச்சு?” என்றான் புவி… “விசாரித்தவரை யாருக்கும் எதுவும் தெரியவில்லை… ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியாக…. ஸ்கூலில் இருந்து வரவில்லை என்பதே பதிலாக சொல்கிறார்கள்… பெத்தவங்களும் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்கள்… ஆனால் எல்லாம் கிணற்றில் இறைத்த கல் மாதிரி… எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது” என்றான் விக்கி….

“பத்து மாதம் சுமந்து பெத்து கண்ணே மணியே என்று கொஞ்சி வளர்த்து… அந்த குழந்தைகள் அம்மா அப்பான்னு ஆசையாக அழைத்து… விளையாட வேண்டிய வயதில் பெத்தவங்க குழந்தையை தொலைத்தாள்…. நினைத்துப் பார்க்க முடியாத வேதனை… அவங்களுக்கு இந்த வாழ்க்கையே நரகமாகிவிடும்” என்றான் புவி….

“சரியாக சொன்னடா மச்சான் …. அதுமட்டுமில்லை கடத்திட்டு போற குழந்தைகளை… பாலியல் தொல்லை, பிச்சை எடுக்க, விபச்சாரம், கட்டாயத் திருமணம், உறுப்பு மாற்று அறுவை, இத்தனைக்கும் ஈடுபடுத்தி… குழந்தைகளுக்கு நரகத்தை இங்கேயே காண்பித்து விடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 2 வருடமாக கடத்தப்பட்ட குழந்தைகள் 9 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்… அதில் 688 குழந்தைகள் இன்னும் தேடிட்டு இருக்காங்க… பெரு நகரங்கள்ல குழந்தைகள் கடத்தலில் முதல்ல இருக்கிறது டெல்லி தான்…. இரண்டாவது இடத்தில் மும்பையும் மூன்றாவது இடத்தில் பெங்களூரு இருக்கு…

போலீசும் சரி அரசாங்கமும் சரி இதைக் கண்டுபிடிக்க பல வகையிலும் முயற்சி பண்ணிகிட்டு இருக்காங்க என்றான் புவி… ஆமாம் முதல்ல அத்தியா அவசியத்திற்கு செய்தார்கள்… அதனால் குற்றம் குறைவாக இருந்தது…. இப்போ ஆடம்பரமாக வாழ குற்றம் செய்கிறார்கள் அதனால் தான் குற்றம் அதிகரிக்கிறது…. மனிதனின் புத்தி நாளுக்கு நாள் மிருகத்தைவிட கேவலமாக இருக்கு” என்றான் சூடாக விக்கி…

“ இந்த கேஸ்ல அந்த பொண்ணு… பவித்ராவை பற்றி என்ன சொல்கிறார்கள்” என்றான் புவி…
“அந்த பொண்ணு காலேஜ் விட்டு டூவீலர்ல வரும் போது…. ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் வண்டி நின்னுகிட்டு இருந்து இருக்கு பக்கத்துல குழந்தை அழும் சத்தம் கேட்கவும்…. இந்த பொண்ணு போய் பார்க்கலாம்னு போய் இருக்கு….

அங்க இருவர் இந்த குழந்தையை இன்னும் கொஞ்சம்.. இருட்டான பிறகு நம்ம இடத்துக்கு கொண்டு போகலாம் என்று பேசிட்டு இருக்காங்க… இந்த பொண்ணு பயத்தில் ஓடி வரவும்… கால் தடுக்கி விட்டு விழுந்திருக்க பார்த்துட்டாங்க… இந்த பொண்ணு எழுந்து பயத்தில வண்டி எடுத்துக்கிட்டு வேகமா வீட்டுக்கு போயிருச்சு…

மறுபடி மனசு கேட்காம போலீஸ்ல போய் சொல்லிடலாம்னு…. ஸ்டேஷனுக்கு வந்து இருக்கு அவன்ங்களில் ஒருத்தன் இந்த பொண்ணா…. வாட்ச் பண்ணவும் இந்த பொண்ணு போலீஸ்ல சொல்லி விட்டு வரும்போது கடத்திட்டு போயிட்டாங்க…. அவங்க அம்மா அப்பா கேஸ் கொடுத்து இருக்காங்க” என்றான் விக்கி…

“சரி வா அந்த பொண்ணு சொன்ன இடத்தில் ஏதாவது தடயம்…. இருக்குமான்னு பார்க்கலாம் என்ன வண்டி ன்னு சொல்லுச்சு “ என்றான் புவி….
“ஆம்னி” என்றான் விக்கி…
இருவரும் அங்கே சென்று அந்த காட்டிற்குள் வெகுநேரம் தேடி… பிறகு கால்தடம் நிறைய பதிந்திருப்பதை கண்டான் புவி….

பக்கத்தில் குழந்தைகள் சாப்பிடும் சாக்லெட் காகிதம், அதோடு ஹான்ஸ் பாக்கெட் கிடந்தது…. கையில் கர்ச்சீப் சுற்றிக்கொண்டு அதை எல்லாம் கரலேக்ட் பண்ணிட்டு…. விக்கியிடம் தடவியல் நிபுணர்களை வரவழைத்து கால்தடத்தை பதிவு செய்யச் சொன்னான்….

பிறகு இருவரும் குழந்தைகள் காணாமல் போன பள்ளியிலும்…. இதற்கு முன் காணாமல் போன குழந்தைகளின் பள்ளியிலும்…. அதன் முன்னாடி இருக்கும் கடைகளிலும் விசாரித்தார்கள்… எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி ஆம்னி வேன் ரொம்ப நேரமா நின்னுது… நாங்க ஸ்கூல் பிள்ளைகளை கூட்டிட்டு போற வேன்னு நினைத்தோம்… அதுல ஒருத்தன் கையை வெளியே நீட்டி கொண்டிருந்ததான்…

அவன் போட்டிருந்த மோதிரம் Xன்னு பெரியதாக போட்டு இருந்தது… என்றார் ஒரு பெண் எல்லாம் விசாரித்து முடித்து… வீடு வந்து சேர இரவு ஆகிவிட்டது…
“ஏன் இவ்வளவு லேட்” என்றாள் ஸ்ருதி….

“தெரிந்தவர்களை பார்க்க வெளியில் போய் இருந்தோம் பொம்மி” என்றான் புவி….

விக்கியும் பார்த்தாள் அவனும் களைத்து தெரிந்தான்…

“சரி இருவரும் கை கழுவிட்டு வாங்க… சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றாள் சுருதி.

“சிஸ்டர் நம்பி சாப்பிடலாமா” என்றான் விக்கி…
“நம்புங்க பிரதர் நம்பிக்கைதானே வாழ்க்கை… எங்க தலைவர் சொல்லியிருக்கிறார்” என்றாள் ஸ்ருதி…
“உங்க தலைவர் யார்?…
“சொன்னவர்தான் எங்க தலைவர்” என்றாள் குறும்பாக…

அவள் சொன்னதில் புவிக்கும் விக்கிக்கும் புன்னகை அரும்பியது… “இப்படி சிரிச்சிட்டு வந்தா தான் சாப்பாடு போடுவேன்” என்று சொல்லிவிட்டு… சமையல் அறைக்கு சென்றாள்… “பழைய ஸ்ருதியா மாறிக்கிட்டு வர்ற என்ற புவி, பாவம்டா அவளும் ரொம்ப கஷ்டப்பட்டுடா…

அப்பா அம்மா இறந்து போய்… கூட இருந்தவங்க யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க என தெரியாமல்…. யாரையும் நம்ப முடியாமல் பாதுகாப்பில்லாத ஒரு குழப்பமான சூழ்நிலையிலேயே வாழ்ந்துட்டா… இனிமேலாவது அவளை நான் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றான் புவி…

“கரெக்ட் மச்சான் நீ சொல்வது… அந்த அந்த முகுந்தனை சும்மா விடக்கூடாது…. எத்தனை வேலை பண்ணி வைத்திருக்கிறான்…. எல்லா பிரச்சினைக்கும் ஆணிவேரே… அவன் தான் அவனை” என்று பல்லைக் கடித்தான் விக்கி….
“பொறுமையா இரு எங்க போய்ட போறான்… இந்த கேச முடித்துவிட்டு அவனுக்கு முடிவு கட்டலாம்….நாம் அவனை தேடி போக வேண்டியதில்லை… அவனே ஸ்ருதியை தேடி வருவான்” என்றான் புவி…
பின் இருவரும் சாப்பிட்டுவிட்டு ஸ்ருதியிடம் “நாங்க கொஞ்சம் வெளியில செல்லவேண்டும்…. பத்திரமா இரு” என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள்….

இருவரும் வண்டியில் பாழடைந்த பங்களா… குடோன் அண்டர்கிரவுண்ட் ஏரியா என்று…. சல்லடை போட்டு தேடினார்கள்… இரவு நேர செக்யூரிட்டி இடம் விசாரித்தார்கள்… செக்போஸ்ட் கேமரா புட்டேஜ் எடுத்துப் பார்த்தார்கள்… ஆனால் எந்த க்ளுவும் கிடைக்காமல் சோர்ந்து போய் வீடு வந்து சேர்ந்தார்கள்….

விக்கியை ஒரு ரூமில் படுக்க சொல்லி விட்டு.. தங்களது அறைக்கு சென்றான் புவி… ஸ்ருதி நல்ல தூக்கத்தில் இருந்தாள்… சப்தம் செய்யாமல் டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றான்…. குளித்துவிட்டு வந்து ஸ்ருதி அணைத்தபடியே தூங்கிப் போனான்..

காலையில் கண்விழித்த ஸ்ருதி தான் கணவனின் அணைப்பில் இருப்பதை பார்த்து…. வெட்கத்தில் முகம் சிவந்தது… அவனையே கொஞ்ச நேரம் பார்த்து… ‘எங்கே இருந்து வந்த என் மனதில்… அடி ஆழத்தில் அமிழ்ந்து கிடந்த காதலை…. தட்டி எழுப்பி அந்த காதலை நீ எப்படி உணர்ந்தாயோ… அதே போல் என்னையும் உணர வைத்து விட்டாயே…

இனி நீ இல்லாமல் ஒரு நொடி என்வாழ்வில் என்னால் இருக்க முடியாது…. என்கிற அளவு என்னை உன் மேல் பைத்தியமாக்கி விட்டாயே’ என்று நினைத்தாள்…. பின்பு அவள் சிரித்துக் கொண்டு மெதுவாக அவனை விலக்கி… எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு…. குளித்து விட்டு சமையல் செய்யச் சென்றாள் ….

விக்கி எழுந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்… ஸ்ருதி காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்து… அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தானும் அமர்ந்து ரசித்துக் குடித்தாள்…
“தேங்க்ஸ்” என்றான் விக்கி…
“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் வந்து என்னோடு சமையலில் உதவி செய்யுங்கள்…தேங்க்ஸ்சை வைத்துக்கொண்டு நான் என்ன பண்ண” என்றாள் ஸ்ருதி…

சிரித்துக் கொண்டே “சரி வாங்க” என்று இருவரும் பேசிக்கொண்டே… ஸ்ருதி சமைக்க விக்கி காய்கட் பண்ணி கொண்டிருந்தான்… புவி கண்விழிக்கும் போது அருகில் ஸ்ருதியை காணாமல் தேடினான்…

பின் மணியை பார்த்து விட்டு குளிக்கச் சென்றான்… புவி ரெடியாகி வரும் போது சமையலறையில் சிரிப்பு சத்தம் பலமாக கேட்டது… அவனும் புன்னகைத்துக் கொண்டு சென்றான்… அங்கே செய்யும் வேலையை பார்த்து விட்டு… “போடா போய் ரெடியாகு இங்கே என்ன பண்ற என்றான் புவி… ரொமான்ஸ் பண்ணனும்னா சொல்லுங்க… மச்சான் போய்விடுகிறேன் அதற்காக இந்த சின்ன பையனை மிரட்டுவீங்களா… “

“இப்ப போகப் போறியா இல்லையா” என்று சத்தம் போடவும்…
“இப்படி பாசமா சொன்ன போக போறேன்” என்று சொல்லிவிட்டு புவியைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றான்…

புவி ஸ்ருதியை பின்னாடி இருந்து அணைத்துக் கொண்டு அவள் கூந்தலில் முகம் புதைத்து ஆழ்ந்து சுவாசித்தான்….

“என்னடி சாம்பு மணக்குது..”. ஸ்ருதி படபடப்புடன் வாய் தந்தியடிக்க “சாம்பா எங்கே” என்று உளறினாள் …. அவள் உளறலையும் படபடப்பையும் ரசித்த புவி… “என் காதலை உன்னால் உணர முடியுதாடி… “ என்றான்,

“வார்த்தையால் சொல்வதைவிட உணர்ந்து…. என் மீது உன் காதல் வெளிபடணும்னு நினைக்கிறேன்டி பொம்மி… இன்னும் எவ்வளவு நாள் காத்திருப்பது” என்றான் புவி… காதலை உணர்ந்து சொல்ல முடியாமல் போய்விட்டதை நினைத்துப் பார்த்தாள் ஸ்ருதி… பின் அவனை இறுக கட்டிக்கொண்டாள்… அவள் அணைப்பின் வேகத்திலேயே தெரிந்தது…

அவள் காதலை உணர்ந்துவிட்டால் என்று… அவனும் இறுக அணைத்துக் கொண்டான்… எவ்வளவு நேரம் ஒருவரை ஒருவர் மறந்துபோன நிலையில் இருந்தார்களோ…. ஸ்ருதியின் போன் அடிக்கவும் சுயநினைவுக்கு வந்தவள்… வெட்கத்துடன் அவனை விட்டு விலக…

“எங்க போற என் கைக்குள் இருந்து கொண்டே பேசு…” என்று எட்டி போனை எடுத்து கொடுத்தான்… அழைப்பை பார்த்து நந்தினிதான் என்று சொல்லிவிட்டு… எடுத்து பேசினாள்…
“எப்படி இருக்க என்றால் ஸ்ருதி… என் ஞாபகம் இருக்கா” என்றாள் “நந்தினி…. உன்ன மறக்க முடியுமா, மறந்தாலும் நீ விடுவியா” என்ன என்ற ஸ்ருதி…. குரலில் ஒரு துள்ளல் தெரியுது என்ன விஷயம்” என்றாள் …

“நந்தினி எனக்கும் வேந்தனுக்கு நிச்சயம் பண்ணலாம் என்று பெரியவங்க முடிவு பண்ணியிருக்காங்க… உன்னையும் புவிஅண்ணாவையும் தவிர எனக்கு யார் இருக்காங்க” என்றாள் வருத்தத்தோடு…
அதுவரை தோழிகள் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருந்த புவி…. “தங்கச்சி நீ ஏன் வருத்தப்படுற உனக்கு ஒரு நல்ல அண்ணனா… உனக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் சிறப்பாக… உன் காலம் முழுவதும் செய்வேன்… நீ கவலைப்படாத சந்தோசமாக நிச்சயத்திற்கு தயாராகு… இந்த அண்ணனும் அண்ணியும் உனக்கு அம்மா அப்பாவா வந்து சேருறோம்” என்றான் புவி.

அங்கே நந்தினி கண்கலங்கினாள்… வேந்தன் கூட இருந்து கேட்டுக் கொண்டிருந்தான்… இப்பொழுது அவள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்…. இங்கே சுருதியும் அழுதாள் என் வாழ்வில் நான் எடுத்த சரியான முடிவு… புவியை கல்யாணம் செய்து கொண்டது தான் என்று நினைத்தாள் ….

விக்கி வந்து “நான் எதுவுமே பார்க்கவில்லை” என்றான் சிரித்துக்கொண்டே… அவர்களும் சிரித்துக்கொண்டு விலகினார்கள்… பின் சாப்பிட்டுவிட்டு புவியும் விக்கியும் கேஸ் விஷயமாக வெளியில் சென்றார்கள்….

நிறைய பேரிடம் விசாரித்து எந்தவித முன்னேற்றமும் இல்லாமல்… சோர்ந்து போய் வரும்போது….ஒரு டீக்கடையில் நிறுத்தி டீ சாப்பிட்டார்கள் இருவரும்….

ஒரு நபர் பால் வாங்கிக் கொண்டு செல்ல… எதேச்சையாக திரும்பிய புவி அவன் விரலில் எக்ஸ் மோதிரத்தை பார்த்துவிட்டு..
விக்கியிடம் ஜாடை செய்தான்.. அவனைப் பின் தொடர்ந்தார்கள்…

ஆனால் அவன் இவர்கள் பின் தொடர்வதை பார்த்துவிட்டான்…. வேறுவேறு தெருவை சுற்றி கொண்டிருந்தவன்… கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டான்… புவி விக்கியிடம் இந்த ஏரியாவுல தான் இருக்க வேண்டும்… ஒரு வீடு விடாமல் எல்லாவற்றையும் சர்ச் பண்ணலாம்….ஹெட்டிடம் சொல்லி ஐந்து ஆட்களை ரகசியமாக அனுப்பி வைக்கச் சொன்னான் புவி….

அவர்களில் ஒருவனை டீ கடையில் நிறுத்திவிட்டு… மற்றவர்களை அந்த ஏரியாவை சுற்றி வளைத்து…. ஒவ்வொரு வீடாகச் செக் பண்ண சொன்னான்… சந்தேகப்படும்படி ஒரு வீடு இருக்கவும் அதன் பக்கத்து வீட்டில் விசாரித்தான்…. அவர்கள் அந்த வீட்டில் ஆண்கள் ஐந்து பேர் இருக்காங்க… வந்து வந்து போவாங்க….

நேற்று இரவு குழந்தை அழும் சத்தம் கேட்டது… ஒரு பெண்ணும் இருந்தாள்….என்னவென்று கேட்டதற்கு ஊரிலிருந்து தங்கச்சியும் குழந்தையும்… வந்திருப்பதாகச் சொன்னார்கள் என்றனர்… அந்த வீட்டிலிருந்து ஜன்னல் வழியாக நோட்டம் விட்டார்கள்… ஒருவர் மாற்றி ஒருவர் வருவதும் போவதுமாக இருக்க….

அவர்களில் 2 பேர் வெளியில் செல்லும்போது பிடித்து…. அவங்களை பாதுகாப்பான இடத்தில் புல் செக்குரிட்டியோடு வைத்து… அவனை அடித்த அடியில் அவர்கள் நெட்வொர்க்கை பற்றி சொன்னான்…. மற்ற மூன்று பேரும் போனவர்களை காணாமல்…. தேடஒருவன் செல்ல அவனையும் பிடித்தார்கள்…

அவனையும் காணாமல் மற்ற 2 பேரும் உஷாராகி துப்பாக்கி முனையில்… குழந்தைகளையும் பவித்ராவை ஆம்னி ஏற்றிக் கொண்டு போனார்கள்…. புவியும் விக்கியும் அவர்களைப் பின்தொடர…. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கி நின்று கொண்டார்கள்….

புவி அவனைப் பார்த்து வண்டியை நிறுத்தி… “இங்கேயே பார் குழந்தைகளை ஒன்றும் செய்துவிடாதே” என்றான் புவி….
“கிட்ட வந்த குழந்தைகளையும் கொன்று விடுவேன்” என்று மிரட்டினான்….
“எங்களை பின் தொடராதே உனக்கு தான் ஆபத்து… உயிரோடு போய் சேர மாட்டாய்” என்றான்… புவியும் விக்கியும் போவதுபோல் திரும்பினார்கள்…. அதற்குள் கடத்தல்காரன் வண்டியில் ஏற திரும்பவும்… விக்கியும் புவியும், கையில் ஒருத்தனையும், காலில் ஒருத்தனையும், சுட்டார்கள்… சுட்டதும் வேகமாக ஓடி அவனைப் பிடித்து விட்டார்கள்…

புவி ஆட்களை அங்கே வரச்சொல்லி அவனிடம் இருவரையும்… அவர்கள் இடத்துக்கு அழைத்துச் செல்ல சொன்னான்… பவித்ரா மருண்ட விழிகளோடு பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்… குழந்தைகள் மயங்கி கிடந்தார்கள்.. தண்ணீர் தெளித்து பார்த்து எழவில்லை ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணினான் புவி….

விக்கி நடுங்கிக் கொண்டிருந்த பவித்ராவிற்கு “பயப்படாதே….. அவர்களைப் பிடித்துவிட்டோம் உங்க வீட்டு நம்பர் கொடு” என்றான்… அவள் பயத்தில் ஓ என்று கத்திக்கொண்டு அவனைக் கட்டிக்கொண்டாள்…. விக்கிக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை… அவனை மீறி அவன் கை அவள் தோளை வருடி ஆறுதல் படுத்தியது….

கொஞ்ச நேரம் கழித்து அவள் விலகிக் கொண்டாள் வெட்கத்தோடு தலை குனிந்து…. “ஸாரி” என்றாள் விக்கிக்கு அவளின் வெட்கம்…. புதிதாக ஒரு சுவாரசியம் கொடுத்தது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்…. அவள் இவனைப் பார்ப்பதும் கீழே பார்ப்பதுமாக இருந்தாள்….

அதற்கு ஆம்புலன்ஸ் வரவும் குழந்தைகளை ஏற்றி விட்டு…. அவர்களை பின் தொடர்ந்தார்கள் மூன்று பேரும் காரில்…. குழந்தைகளை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு… அவர்களின் பெற்றோருக்கு தகவல் சொல்லும்படி… ஹெட்டிடம் புவி போன் பண்ணி சொன்னான்…. இனி மத்ததை எல்லாம் அந்த ஊர் போலீசை வைத்து பார்த்துக்கொள்கிறேன்…

“உன் வேலை அங்கே முடிந்தது சீக்கிரமாக சென்னை வந்து சேர்” என்றார்… அவரிடம் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் புவி… விக்கியும் புவியும் பவித்ரா வீட்டிற்கு கிளம்பினார்கள்… பவித்ராவின் பெற்றோர் இரண்டு ஆண்களுடன் வரும் பெண்ணை பார்த்து…. கோபத்தில் கத்தினார்.

“நீ எனக்கு பெண்ணே இல்லை” என்றார் பவித்ராவின் அப்பா… நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று வாதாடி பார்த்தாள்… அவர் மனம் இரங்கவில்லை…
விக்கியும் “சார் உங்க பொண்ணு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா” என்று அவளுக்காக பரிந்து பேசினான்…. அவர் யார் பேச்சையும் கேட்க வில்லை.

பவித்ராவை வீட்ட விட்டு வெளியேறச் சொன்னார்…. புவியும் எவ்வளவோ சொல்லி பார்த்தான்… அவர் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை… புவியும் விக்கியும் பவித்ராவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்… நடந்ததை ஸ்ருதியிடம் சொன்னான் புவி…. பவித்ராவிற்கு ஆறுதல் சொல்லி உள்ளே அழைத்து சென்றாள் ஸ்ருதி…

பவித்ரா விக்கியை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்… விக்கியும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்..

புவி “கண்டுபிடித்தேன் கண்டுபிடித்தேன் காதல் நோயை கண்டு பிடித்தேன்…” என்று நக்கலடித்து பாடவும்… விக்கி சிரித்தான் அவனோடு சேர்ந்து பூவியும் சிரித்தான்.

ரகு டிவி பார்த்துக் கொண்டிருந்தான்… “அத்தை மாமா சாப்பிட்டு விட்டார்களா” என்றாள் சஞ்சனா…
“சாப்பிட்டுவிட்டாங்கம்மா” என்றார்…
“ எத்தனை இட்லி சாப்பிட்டாங்க அத்தை…
“இரண்டு இட்லி தான்மா…. “
“மாமா மாத்திரை சாப்பிட வேண்டும் இரண்டு இது பத்தாது…. இன்னும் ரெண்டு இட்லி சாப்பிடுங்கள்…”.

“என்னால முடியலமா வாயெல்லாம் கசப்பாக இருக்கு” என்றார்…. “இந்தாங்க சாப்பிட வேண்டும்” என்றாள் கண்டிப்புடன்…. அவரும் வாங்கி சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக் கொண்டார்…. ரகுவிற்கு கண் டிவியை பார்த்தாலும் காது சஞ்சனாவின் பேச்சைத்தான் ரசித்துக் கொண்டிருந்தது….

அவள் ஸ்ருதிக்காக பேசியது ரகுவின் மனதில் அவள் மேல் ஒரு பிடிப்பை ஏற்படுத்தி இருந்தது… தன் கணவனின் முன்னாள் காதலி இப்பவும் காதலிக்கிறான்…. என்று தெரிந்தும் கொஞ்சம்கூட பொறாமை இல்லாமல்…. அவள் நல்வாழ்விற்காக என்கூட சண்டை போடுகிறாள்…. என்று அவள் போட்ட சண்டையை ரசித்து சிரித்தான்….

“ அப்பா தூக்கம் வருது” என்றான் ரிஷி, அவனை தூக்கி கொண்டு போய் மெத்தையில் படுக்க வைத்துவிட்டு… அவனும் படுத்துக்கொண்டான். ரிஷியை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான் ரகு… சஞ்சனா பால் எடுத்துக் கொண்டு வந்து ரகுவிடம் கொடுக்கவும்…. வாங்கி அவளை பார்த்துக்கொண்டே பருகினான்… பாலோடு சேர்த்து அவளையும்,

அவனின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்து…. சஞ்சனா இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்… பாதி பாலை குடித்து விட்டு மீதியை அவளிடம் கொடுத்தான்…. மறுக்காமல் வாங்கிக் குடித்தாள் சஞ்சனா… பின் அவளும் ரிஷியின் மறு பக்கத்தில் படுத்துக்கொண்டாள்…

ரகுவும் இனி நடந்தது எதுவும் மாற்ற முடியாது.. இவளும் நல்ல பெண்ணாக தெரிகிறாள்… நம் அப்பா அம்மாவை அனாதை மாதிரி விட்டு விட்டுச் சென்றோம்… ஆனால் இவள் நம் அப்பா அம்மாவைப் பெற்ற பெண் போல் பார்த்துக் கொள்கிறாள்…. இவ்வளவு நாளாக எனக்காக வாழ்ந்துவிட்டேன் சுயநலமாக… மீதியிருக்கும் வாழ்க்கையை மற்றவர்களுக்காக வாழ வேண்டும்… சஞ்சனாவையும் ரிஷியையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தூங்கினான் ரகு.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here