தீரா மயக்கம் தாராயோ – 29

0
621

மாத்திரையை போட்டுக்கொள் மிது என்ற முகுந்தனின் குரல் அவளை நடப்புக்கு கொண்டு வந்தது ….அவள் மாத்திரை போட்டதும் அவளைக் கட்டிலில் படுக்க வைத்தவன் ‘ தூங்க முயற்சி செய் , ஒரு வேளை போரடித்தால் ரைட்டர் மதுமதியின் புத்தகங்கள் கொஞ்சம் வைத்திருக்கிறேன் …படித்து கொண்டிரு என்றுவிட்டு அவளின் தலையில் கை வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான் ……

வெளியே வந்தவன் ….. கார் பார்க்கிங் சென்று மொபைல் ஆன் செய்தவன் …. நேராக கார்த்திக் எண்ணிற்கு அழைத்தான் ….

முகுந்தன் : ஹெலோ …கார்த்திக் எங்க இருக்க ??????

கார்த்திக் : நம்ம ஆபிஸ் கேபின்ல இருக்கேன் சார் …..

முகுந்தன் : ஸ்ருதி இப்போ அவங்க வீட்டுல இருக்காளா ????

கார்த்திக் : ஆமா சார் …புவி … ஏதோ கேஸ் விஷயமா கமிஷனர் ஆபிஸ் போயிருக்கான் ….

முகுந்தன் : அப்டியா …சரி ஓகே …நான் பாத்துக்கிறேன் .. என்று கூறிவிட்டு அவனிடம் ரகசியமாக …. ஒரு சில கட்டளைகளை இட்டு பின் காரை ஸ்ருதி வீட்டை நோக்கி செலுத்தினான் ….

ஸ்ருதியின் வீட்டை அடைந்தவன் …..மறுபடி கார்த்திக்கிற்கு அழைத்து அவன் கேட்ட பொருளை கார்த்திக் எடுத்து வருவதை உறுதிசெய்து கொண்டவன் …. காலிங்பெல் அடித்துவிட்டு காத்திருந்தான் …. அடுக்களையில் வேலையை முடித்து முகம் கழுவி கொண்டிருந்த ஸ்ருதி … காலிங் பெல் சத்தம் கேட்க …… காலையில் கூறியதை போல் நந்து வந்துவிட்டால் போலும் ..என்று எண்ணிக்கொண்டு ….. முகத்திலிருந்த தண்ணீர்துளிகளை புடவை முந்தானையால் துடைத்தவாறு புன்னகை முகத்துடன் கதவை திறக்க … அங்கிருந்த முகுந்தனை பார்த்து அப்படியே சமைந்து நின்றாள் …. அவளை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றவன் …. நேராக சென்று கதிரையை இழுத்துப்போட்டு அதில் உக்கார ……

முகுந்தன் : என்ன ஸ்ருதிமா …இப்டி முழிக்குற ???? வீட்டுக்கு வந்தவங்களுக்கு தண்ணி கூட கொடுக்க மாட்டிங்களா ?????என்று கேட்க ….

ஸ்ருதி : சாரி முகுந்த் ….. சொல்லுங்க என்று திணறியவாறு கேட்க ….

முகுந்த் : முக்கியமான விஷயம் பேசணும் …. கொஞ்சம் காபி கிடைக்குமா ?????

ஸ்ருதி ; தடுமாறியவாறு உள்ளே சென்றவள் …. நேராக அடுக்களையில் சென்று முதல் வேலையாக …..புவியின் எண்ணிற்கு அழைத்தாள் ….புவிவீடு திரும்ப வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவன் …. இவளது அழைப்பை பார்த்து புன்னகை முகமாக அதை ஏற்று ஹெலோ என்க … அவளிடம் எந்த பதிலும் இல்லை ….. புவி பதட்டமடைந்து …… அவனது வீட்டின் வரவேற்பறையில் யாருக்கும் தெரியாமல் செட் செய்திருந்த கேமெராவை ஆன் செய்து பார்க்க …அங்கு அவன் கண்டதும் கேட்டதும் புவியை கலவரமூட்டியது ….

முகுந்த் : என்ன கார்த்தி ..சீக்கிரமா நான் சொன்ன பொருள் எல்லாம் வாங்கிட்டு வா …என்று கூறிவிட்டு அவன் வைக்க ..இதை கேட்ட புவிக்கு உலகமே சுற்ற ஆரம்பித்தது …. வேகமாக அவன் வண்டியை விரட்ட தொடங்கினான் ….

இங்கு ஸ்ருதி இரண்டு காபி கப்பை டிரேயில் அடுக்கி காபி ஊத்திக்கொண்டிருக்க …. அவளுக்கு வெகு அருகில் கேட்ட முகுந்தின் குரலில் ….பட்டென கையிலிருந்த டீ அடங்கிய பீங்கான் ஜாடியை கீழே விட …. அதிலிருந்த டீ அவளது காலை பதம் பார்த்தது ….

முகுந்தன் : ஸ்ருதி …..ஐயோ …உங்கிட்ட நல்ல விஷயம் சொல்லனுனு நினைச்சு வந்தேன் …வா ஹாஸ்பிடல் போகலாம் ..என்று அவளது காலை பிடித்துக்கொண்டிருக்க …. அப்பொழுது சரியாக உள்ளே நுழைந்தான் புவி …..அங்கு அவன்

கண்ட காட்சியை தப்பாக புரிந்து கொண்டவன் ….. கைய எடுடா முதல ..என்று கத்திகொண்டே வந்தவன் அவளை தள்ளிவிட்டுவிட்டு ….. ஸ்ருதி என்று அவளை அணைத்துக்கொள்ள …… அவள் நடுங்கி கொண்டிருந்தாள் ….

புவி : ஒன்னும் இல்ல ஸ்ருதிமா ….. ஒன்னும் இல்ல …. என்று அவளது முதுகை தடவி கொடுத்தான் ….. அவனது அணைப்பில் அவளது நடுக்கம் குறைய …. அவளை விட்டு விலகியவன் ….. அங்கு நின்றிருந்த முகுந்த் கார்த்திக் இருவரையும் அவர்கள் நின்ற கோலத்தையும் பார்த்து அதிர்ந்து நின்றான் ….

நேராக அவர்கள் அருகில் வந்து நின்ற முகுந்த் அவனது கையிலிருந்த தாம்பூலத்தை நீட்ட …. அவர்கள் இருவரும் அதிர்ந்து நின்றனர் …..

முகுந்த் :நல்ல வேளை புவி …… உங்களுக்கு கால் பண்ண சொல்லலாம்னு வந்தேன் ..அதுக்குள்ள அவ டீயை அவமேல கொட்டிக்கிட்டா ….. நீங்க வந்து என்ன ஒரு வழி பண்றிங்க …. ஆனா,ஒன்னு புவி ….. ஸ்ருதி ஏன் என்ன வெறுத்தானு நேத்து வரைக்கும் புரியாம இருந்துச்சு …… அது இப்போவும் எனக்கு தெரியல … நீங்க ரெண்டு பேரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தப்போ … ஸ்ருதி உங்க கண்ணை பாக்குறப்போ இருக்க காதலை நான் மிது என்னை பாக்குறப்போ உணர்ந்தேன் ….உங்க ரெண்டு பேரு காதலை புரிஞ்சிக்கிட்டேன் ….. மிது அடிப்பட்டபோ என் உயிரே என்னை விட்டு போன மாதிரி இருந்துச்சு …. அப்போதான் …எனக்கு ஸ்ருதிமேல இருந்த வெறிக்கும் மிது மேல இருக்க காதலுக்கும் வித்தியாசம் தெரிஞ்சிது …. அதுக்கான ஒரு முடிவு தான் இப்போ யோசிச்சிருக்கேன் …. இதை இன்னும் நான் மிது கிட்ட கூட சொல்லல …எனக்கு என் காதலை உணர்த்துனது நீங்கதான் …. அதுனால உங்ககிட்ட முதல சொல்லனுனு வந்தேன் …. அதுக்குள்ள இப்டி நடந்துருச்சு …. பிரிச்சு பாருங்க என்று நீட்ட ………

புவி அதிலிருந்த பத்திரிகையை பிரித்து பார்க்க …. அதிலிருந்த ..இருவரின் புகைப்படத்தை பார்த்து …. ஸ்ருதி, கார்த்திக் , மற்றும் புவி உறைந்து நின்றனர் ….

(இது என்ன ஷாக் மேல ஷாக் குடுக்குறீங்கன்னு நீங்க நினைக்குறது எனக்கே கேக்குது…. என்ன பண்றது????? இப்படித்தான் எனக்கு எழுத வந்துச்சு பா… ஹாஹாஹா ….)

அந்த பத்திரிக்கையில் …,முதலில் முகுந்த் மிது புகைப்படம் இருக்க …. அடுத்ததாக ….. கார்த்திக் மற்றும் சத்யா புகைப்படம் இருந்தது ….

அதை பார்த்து கார்த்திக் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான் …. அவரகளது அதிர்ச்சியை பார்த்து தனது காந்த புன்னகையை வீசிய முகுந்த்…..

” வாயை பொளந்தது போதும் …. இந்த விஷயதுக்கு நீ என்ன முடிவு சொன்னாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்ல …ஆனா, சத்யா கழுத்துல தாலி நீதான் கட்டணும் …. அப்புறம் ஸ்ருதி புவி ரெண்டு பேரும் மறக்காம கல்யாணத்துக்கு வரணும் …. கொழப்பத்துல இருக்கீங்க …. நான் அப்புறம் மீட் பண்றேன் …. வர வெள்ளிக்கிழமை நிச்சியதார்தம் வெச்சிருக்காங்க …அதுக்கும் வந்துருங்க ….நாங்க கெளம்புறோம் என்று விடைபெற ….. தெளித்த புவி …..கண்டிப்பா வந்துறோம் …. உங்கள் வாழ்க்கை இனியமையாக அமைய எங்க ரெண்டு பேரு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் முகுந்த் என்று கூற ..சிறிய தலையசைப்புடன் விடை பெற்றனர் இருவரும் ….

அவர்கள் சென்ற உடன் புவி விக்கியை அழைத்தான் …அவனிடம் நடந்தவைகளை கூறியவன் ……

புவி : எனக்கென்னவோ முகுந்த் பெருசா பிளான் பண்ற மாதிரி தெரியுது விக்கி ….. இவன் இப்டி மாறுறவன் கிடையாது ……….

விக்கி : எனக்கும் அப்டித்தான் தோணுது டா …அதுவும் திடிர்னு …….

புவி : எதுக்கும் அவன்மேல் ஒரு கண்ணு இருக்கட்டும் …..என்று கூறிவிட்டு இவ்ளோ நாளா என்னோட பொம்மியை எவ்ளோ டார்ச்சர் பண்ணிருப்ப …அதுக்கான கணக்கு பாக்கியை நீ இன்னும் முடிக்கல முகுந்த் ….காத்துக்கிட்டே இரு …… என்று மனதினுள் கனன்றுகொண்டிருந்தான் புவி ……

கார்த்திக் : சார் …. நான் வெறும் வேலையாள் …. அவங்க உங்க சித்தி பொண்ணு …எனக்கு சொந்த வீடு கூட கிடையாது …… சொந்தம் னு சொல்லிக்கிற அளவுக்கு இருக்குறது என் அப்பா மட்டும்தான் … அவரும் கோவில் கோவிலா சுத்திகிட்டு இருக்காரு ….. இது சரியா வராது சார் ….

முகுந்த் : வாயை மூடு டா ….என்ன நினைச்சுட்டு இருக்க கார்த்திக் …. நீ என் தம்பி ..அவ எனக்கு பொண்ணு மாதிரி …. சின்ன வயசுல இருந்தே அம்மா அப்பா பாசத்துக்கு ஏங்குனவ டா அவ …… உனக்கு அம்மா அப்பாவா அவளும் அவளுக்கு அம்மா அப்பாவா நீயும் தான் இருக்கனும் …. ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையை அழகா மாத்துவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு …. என்மேலே நம்பிக்கை இருந்தா ..இனிமேல் இதப்பத்தி பேசாத … எத பத்தியும் யோசிக்காம …. சீக்கிரம் ரெண்டு பெரும் மேரேஜ்க்கு அப்புறம் தங்குற மாதிரி வீடு பாரு ….. இனிமேல் எனக்கு நீ பி.ஏ கிடையாது …..
உனக்கு நான் 3 கோடி ரூபாய் கடனா கொடுக்குறேன் ….. உனக்குன்னு கம்பெனி தொடங்கு … இந்த பணத்தை அடுத்த வருஷம் திருப்பி குடுத்துறணும் ….. இதுக்குமேல எதுவும் பேசாத … சத்யா கிட்ட உன் நம்பர் குடுத்துருக்கேன் …. மதியம் வெளிய போகனுன்னு சொன்னா …நீயே கூட்டிட்டு போய்ட்டு வந்துரு ….. ” என்று தனது உரையை முடித்துக்கொள்ள …. கார்த்திக் குழம்பிய மன நிலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் …. அப்பொழுது ரோட்டிற்கு ஓரமாக …நந்தினி மற்றும் வேந்தன் இருவரும் நின்றுகொண்டிருக்க ….. அவர்களது டிரைவர் பஞ்சர் ஆன டயரை மாற்றிக்கொண்டிருந்தார் ….. அவர்களை கவனியாது கார்த்திக் செல்ல ……

முகுந்த் : ஒரு நிமிஷம் காரை திருப்பு கார்த்திக் ….. அவன் இதை கவனியாது வண்டியை செலுத்த …..

ஹெலோ மச்சான் …என்று உறக்க அழைத்தான் முகுந்த் ….அதில் அதிர்ந்த கார்த்திக் அவனை பார்க்க …..வண்டியை திரும்புமாறு கூற …. இவனும் அவன் கூறிய திசையில் வண்டியை செலுத்த …. சிறிது நேரத்தில் அவனது கண்ணில் வேந்தன் நந்து பட ….. அதற்குள் முகுந்த் அவர்கள் அருகில் வண்டியை நிறுத்த கூறினான் ……

கார்த்திக் எந்த உணர்வும் காட்டாமல் அவன் சொன்ன படி செய்ய ….இறங்கிய முகுந்த் இன்னொரு தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு ….வேந்தனிடம்…

முகுந்த் : ஹாய் வேந்தன் …நந்தினி ..எப்படி இருக்கீங்க ???? என்று அவன் தாம்பூலத்தை நீட்ட …அவர்கள் இருவரும் சேர்ந்து வாங்கிக்கொள்ள …. ” எனக்கும் என் தங்கச்சிக்கும் அடுத்த மாசம் 6ம் தேதி கல்யாணம் …. பாருங்க …என்று கூற …வேந்தன் ஒரு எதிர்பார்ப்புடன் அந்த பத்திரிகையை பிரிக்க ….அவனது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் மிது புகைப்படம் அதில் இருந்தது … ஆனால் அதிலிருந்த கார்த்திக்கின் புகைப்படத்தை பார்த்து வேந்தன் நிமிர்ந்து முகுந்தை பார்க்க ….

முகுந்த் : சாரி மிஸ்டர் வேந்தன் …எனக்கு எல்லாரையும் விட கார்த்திக் ரொம்ப முக்கியம் …அவன் எந்த நாளும் யாரு முன்னாடியும் இறங்கி போக கூடாதுனு ஆசை படறேன் ….. அதுனாலதான் …..எங்க கல்யாணத்தை உங்க கல்யாணத்துக்கு 3 நாள் முன்னாடி வெச்சிருக்கேன் …உங்க கல்யாணத்துக்கு வரப்போ ..அவன் நந்தினிமேல நேசம் வெச்ச கார்த்திக்கா வர மாட்டான் …. என் தங்கை சத்யாவோட காதல் கணவனா …. என்னோட ஒரே தங்கையோட மச்சானா வருவான் ……. அப்டி வரணுன்னு ஆச பட்டேன் …நான் கிளம்புறேன் என்று கூறிவிட்டு சட்டென விடைபெற்றான் ….நந்தினிக்கு புயலடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது ……” அவளை அணைத்துக்கொண்டவன் …..

வேந்தன் : கண்டதையும் மனசுல போட்டு குழப்பிக்காதன்னு அன்னைக்கே சொன்னேன்ல ….எனக்கு தெரியும் …முகுந்த் என்னைக்கும் கார்த்திக்கை விட்டு குடுக்க மாட்டான் ..எங்க அவன் பழைய முகுந்தா ..நம்ம கல்யாணத்துல பிரச்சனை பண்ணுவான்னு நினச்சேன் …..ஆனா , இதை நான் எதிர்பார்க்கவில்லை …. ஆனா , மனசுல இருந்த சஞ்சலம் எல்லாம் தீர்ந்த மாதிரி இருக்கு …. என்று அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான் ….

காரில் பயணித்த இருவரும் வீட்டை அடைய …. முகுந்த் கார்த்திக்கிடம் சத்யாவை அழைத்து கடைக்கு செல்லுமாறு கூறிவிட்டு ….நேராக மிதுவின் அறைக்கு சென்றான் ….. அங்கு அவள் முழுமதியாகுமோ என் வெண்ணிலா என்ற நாவலை படித்துகொண்டே தூங்கி கொண்டிருந்தாள் ….

அவளின் அருகில் சென்று அந்த புத்தகத்தை எடுத்து ஓரமாக வைத்தவன் …அவளது அருகில் கால் நீட்டியவாறு அவள் பக்கமாக சாய்ந்து அமர்ந்து கூந்தலை ஒதுக்கி நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் …. அவனது ஸ்பரிசத்தில் லேசாக அசைந்தவள் அவனது வாசத்தை உணர்ந்து அவனது கழுத்துக்கு அருகில் திரும்பி படுத்து உறக்கத்தை தொடர்ந்தாள் …. அவளது மூச்சு காத்து இவனது கழுத்தில் பட …இவன் நகர முடியாதபடி அவளது கால்களால் அவள் இழுத்து படுதிருக்க முகுந்தால் தன்னை கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கலானான் …… அவளது முகத்தின் அருகே தனது முகத்தை கொண்டு சென்றவன் மெதுவாக சரிந்து அவளுடன் ஒன்றி படுத்துகொண்டான் …. அவளது கைகளை தனது கைகளில் கோர்த்துக்கொள்ள முயல …அவள் முழித்துக்கொண்டாள் ….

மிது : என்ன பண்றிங்க ???? என்று அவள் கேட்டு முடிப்பதற்குள் அவளது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்திருந்தான் ………… மிது திமிர …. தன் இரு கைகளால் அவளது கன்னங்களை பிடித்துக்கொண்டவன் ….. விட்டுவிட்டு அவளது இதழ்களுக்கு ஒத்தடம் கொடுக்க ….மிது அவனது முத்தத்தில் கிறங்க தொடங்கினாள் ….

இதுப் போதை நேரம் ,
எதுவும் பேசாதே ..!
தடுமாறினாலும் ,
தயக்கம் காட்டாதே ..!!…

அடியே .. அடியே ..
உன் வானில் தள்ளாதே ..!
அடியே .. அடியே ..
விழித் தூக்கம் கொல்லாதே ..!…
அடியே .. அடியே ..
இளமை விழியே ..!
இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம் ..!!….”

இதழ்களை பிரித்து எடுத்தவன் …. அவளது கண்களில் முத்தமிட ……. அவள் மேலும் அவனோடு ஒன்றினாள் ….. அவளை இறுக்கி அணைத்தவன் ….சட்டென்று அவளை பிரித்து …… அவளது கைகளில் பத்திரிகையை திணித்தான் …. அவன் பிரிந்து ஏதோ ஒரு கோப்பை கையில் கொடுக்கிறான் என்று கடுப்பில் திரும்பிபடுத்து அதனை பார்க்க ….

ஒரு நொடி உலகத்தின் உச்சிக்கே சென்றதுபோல் உணர்ந்தாள் …….. அவள் விழி விரித்து அதனையே விரித்து பார்த்திருக்க ……. எட்டி அவளது முக பாவனையை பார்த்தவன் …. பின்னிருந்து அவளை அணைத்து கன்னத்தில் நச்சென ஒரு இச் வைக்க …. அவளது கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோட ……….

முகுந்த் : எனக்கு ப்ரொபோஸ் பண்ண தோணல …. எனக்கு ஸ்ருதிமேல காதல் வந்தப்போ ..அதை எப்படியாவது அவகிட்ட சொல்லி அவளை என்வசமாக்கிக்கனுன்னு ஒரு உத்வேகம் இருந்துச்சு …. அவளை என் வசமாக்கணும்னு மட்டும்தான் எனக்குள்ள தோணுச்சு …ஆனா , உன்மேல இருந்த காதலை நான் உணர்ந்தப்போ … உன்கூட இந்த ஜென்மம் முழுக்க இருக்கனும் …… உனக்கு இந்த உலகத்துலயே நான் தான் எப்போவுமே முக்கியமா இருக்கனும் …. உன்னை பத்திரமா பாத்துக்கணும் …. உன்கூட என்னோட சின்ன சின்ன ஆசைகளை நிறைவேத்திக்கணும் ….. எப்போவுமே உன்ன என்னோட கை அணைப்புலயே வெச்சுக்கணும் …..உன் மடியில தினம் தினம் தலை வெச்சு தூங்கணும் …அன்னைக்கு ஒருநாள் என் முடியை கோதி ஒரு முத்தம் கொடுத்தியே , அந்த முத்தம் என் உயிர் போறப்போ கூட எனக்கு வேணும் …….குட்டி முகுந்த் இல்ல குட்டி மிது வந்தா கூட ..உனக்கு நாந்தான் முக்கியமா இருக்கனும் …. இந்த கண்டிஷன்க்கு ஓகேனா என்னை கல்யாணம் பண்ணிக்குறியா ????

(இதைவிட எப்படி ஒருத்தன் தன்னோட காதலை வெளிப்படுத்த முடியும் ??? நீங்களே சொல்லுங்க பா …. ரொம்ப சீன் போடறேனு நினைக்காதீங்க …நீங்க கடைசியா வந்த புவி ஆர்மி தான் ….நாங்க முதல இருந்து இருக்குற முகுந்த் ஆர்மி ..அதுனால அப்டித்தான் இருக்கும் …. ஹாஹா ….)

கண்கள் நிறைந்த கண்ணீரோடு அவனது கைகளினுள்ளே திரும்பி படுத்தவள் …அவனது கேள்வியின் பதிலாக …. அவனது முடியை லேசாக கலைத்துவிட்டவள் …அவனது நெற்றியில் அழுத்தமான ஒரு முத்தத்தை பதித்தாள் …

இவர்கள் இருவரும் இங்கு இப்படி இருக்க ….அங்கோ ….சத்யா எதுவும் பேசாமல் கார் ஓட்டிக்கொண்டிருந்த கார்த்திகை பார்த்தவண்ணம் வந்தாள் ….

கார்த்திக் என்ன பேசுவதென தெரியாமல் அமைதியாக வர …அவளே பேச்சை துவங்கினாள் ….

சத்யா : உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா எனக்கு தெரியும் …..

கார்த்திக்கிற்கு தூக்கிவாரி போட…அவளை பார்க்க …

சத்யா : ஹாஹா …. அப்போ அதுதான் உண்மை போல ..இப்டி முழிக்குறிங்க ….. எனக்கு நந்து விஷயம் கூட தெரியும் …அண்ணா சொன்னாங்க …….. நான் உங்களை கட்டாய படுத்த மாட்டேன் …இப்போவும் நீங்க வேண்டான்னு சொன்னா …நானே அண்ணாகிட்ட பேசுறேன் ….நீங்க நந்துவை கல்யாணம் பண்ணிக்குறிங்களா ????

கார்த்திக் : ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தியவன் … உனக்கு என்னை பிடிச்சிருக்கா ???

சத்யா : எனக்கு மட்டும் பிடிச்சா நம்ம லைப் நல்லா இருக்காது ….

கார்த்திக் : நான் உனக்கு பிடிச்சிருக்கானு கேட்டேன் …நீ எப்போவோ நாம ஒன்னாதான் இருக்க போறோம்னு முடிவே பண்ணிட்டு பேசுற ..நம்ம லைப் பத்தி இப்போவே கவலை வந்துருச்சு ….நான் நந்துவை லவ் பண்ணல …. ஆனா லவ் பண்றேன்னு எல்லாரும் நினைக்குறாங்க …. எனக்கு சார் ஸ்ருதி மேடம் மேல இருந்த காதலுக்கு அவங்க கல்யாணம் நடக்கனுன்னு தான் நான் அவகிட்ட நடிச்சேன் …இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும் ….. சாருக்கும் தெரியாது ….நீயும் சொல்லாத ….. எனக்கு உன்னை பிடிக்குமான்னு தெரியல … ஆனா, எந்த சூழ்நிலையிலும் உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன் ….என்மேல நம்பிக்கை இருக்குனு நீ உன் வார்த்தையிலே காட்டிட்டே ….எனக்கு சார் சொல்றதுதான் முக்கியம் …. அவர் கண்டிப்பா எனக்கு எந்த ஒரு தப்பான விஷயத்தையும் கொடுக்க மாட்டாரு …. என்னால அவரு வார்த்தையை மீர முடியாது …… எனக்கு இந்த கல்யாணத்துல எந்த கஷ்டமும் இல்லை ……ஆனா , நீ கஷ்ட படனும் ….. முடியுமா???

சத்யா : கஷ்டம் னா ????

கார்த்திக் : பாஸ் எனக்கு 3 கோடி ருபாய் அமௌன்ட் தராரு …. நான் பிசினெஸ் ஸ்டார்ட் பண்ணனும் …அதுனால …சின்ன வீடா தான் பாப்பேன் …செலவும் ஆடம்பரமா பண்ண முடியாது ….

சத்யா : காசு தான கஷ்டம் …. காதல் வெச்சு சமன் செஞ்சுக்கோங்க …..இப்போ கெளம்பலாமா???

கார்த்திக் : கடைக்கு போகலாமா ????

சத்யா : பரவலா …நான் என் புருஷன் வாங்கி குடுக்கிறதையே போட்டுகிறேன் ….எனக்கு வேலைக்கு போகனுன்னு ஆசை … பக்கத்துல இருக்க நர்சரி ஸ்கூல்ல வேலை கிடைச்சிருக்கு …நான் போகவா ????

கார்த்திக் : உனக்கு ஆசையா இருந்தா தாராளமா போகலாம் ….

சத்யா : ரொம்ப தேங்க்ஸ் …. கிளம்பலாம் …

அன்று சாயுங்காலம் வந்ததும் ரகு ரிஷியை தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கிவிட … ரிஷி அவனது செயலில் அப்ப்பாஆஆஅ …………என்று ஆனந்த கூச்சலிட ……….. அவனது கன்னக்குழிகளை பார்த்த ராகுவிற்கு ஏனோ மனதுக்குள் சஞ்சனாவை இப்படி தூக்கி சுற்றினாள் எவ்வாறு இருக்கும் என்று எண்ணம் தோன்ற …..

அவனது மூளை : ஏன்டா ..லூசாடா நீ …. இப்படி யோசிக்கிறேன்னு அவளுக்கு தெரிஞ்சா அவ உன்னை கேவலமா நினைக்க மாட்டா …..

அவனது மனமோ : டேய் அவ உன் பொண்டாட்டி உனக்கு இல்லாத உரிமையா ?? என்று எதிர்கேள்வி கேட்க ….

அவனது பட்டிமன்றத்தை அறியாது …சஞ்சனா அவனிடம் இருந்து ரிஷியை வாங்க கைகளை தூக்கியவாறு அவனருகில் வந்து அவன் கையிலிருந்து ரிஷியை வாங்கி ….. என்னாச்சு உங்களுக்கு????என்று கேட்க …..

ரகு …அவளது கேள்வியை கவனியாது ….அவளை கண்களால் விழுங்க தொடங்கினான் …. ரிஷி அவளை தூக்கி சுற்றுமாறு கேட்க …. அவள் ரிஷியை கைகளில் அள்ளி சுற்ற ….. அப்பொழுது அவளது சேலை இடுப்பிலிருந்து விலகி …அவளது இடையை வெளிச்சமிட்டு காட்ட …… ரகு …அந்த இடையில் தன்னை தொலைத்திருந்தான் ….. நேராக அவளிடம் சென்றவன் …. சற்று குனிந்து …. அவளை கைகளில் தூக்கி கொண்டான் .. அவள் கைகளில் ரிஷி இருக்க ….அவன் கைகளில் அவள் இருக்க … அவளது இடுப்பிற்கு நேராக தனது முகம் இருக்க …….. மெதுவாக தனது மீசை முடிகள் உரசுமாறு அவளது இடுப்பில் தனது கன்னத்தை பதித்தான் ரகு ….. சஞ்சு நிலை குழைந்து …. கீழே சரிய …அவன் அவளது மொத்த பாரமும் அவன்மீது சாய்த்து ..அவளை இருக்க….. அதற்குள் ரிஷி …. அவனது தாத்தா பாட்டி சத்தம் கேட்க அவர்களிடம் சென்றவன் …. அவர்களிடம் ….. தனது தந்தை தன்னையும் அன்னையையும் சுற்றியதை கூற …. கண்களில் நீர் நிறைய அந்த பெற்றோர் கடவுளை பிரார்த்தனை செய்தனர் ….

அங்கு அவளை அணைத்தவாறே ரகு அவளது கழுத்தில் முத்தம் பதிக்க …. சஞ்சனா தன்னிலை இழக்க துவங்கினாள் …. மெதுவாக அவளது முகத்திற்கு முன்னேறியவன் …. அவளது கண்ணத்தில் இதழ் பதித்து …அவளது உதடுகளில் தன் இதழ்கள் படுமாறு நின்று ….

” உனக்கு ஓகே தான சஞ்சு?? ” என்று அவளிடம் கேட்க ….அவளிடமிருந்து … ஒரு முனகல் மட்டுமே வெளிப்பட்டது …அதிலேயே அவளது மனதை படித்தவன்.. அவளது இதழ்களில் ஆழமாக தனது முத்திரையை பதித்தான் …. அவனது கைகள் எல்லைமீற …அதை தாங்காமல் அவள் அவன்மீதே சரிய…. அவளை அள்ளி சென்று கட்டிலில் கிடத்தியவன் …. அவளுடன் கரைய துவங்கினான் …

ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
செல் என்று சொனேன்
என்னுள்ளே சென்றான்

உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்
எழுப்பி விடுகின்றான்
சிறிது சிறிதாய் கிரகங்கள் எல்லாம்
கிளப்பி விடுகின்றான் …”

டிசம்பர் 6 , 2019 ,….

மங்கள வாத்தியங்கள் முழங்க ….. முக்கோடி தேவர்கள் ஆசிர்வதிக்க … முதலில் முகுந்த் மிதுவின் கழுத்தில் மங்கள நாணை அணிவிக்க …. அந்திவானமாய் சிவந்திருந்த முகம் முழுக்க தேஜஸ்மின்ன அதனை ஏற்றுக்கொண்டாள் மிது ……

நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்துடுச்சு
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு ..

விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிடுச்சு
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு ..

கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு ..

கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு … “

அதற்கு அடுத்து….. கார்த்திக் சத்யாவின் கழுத்தில் தாலியை கட்டப்போக ….அவள் அவனை பார்த்து கண்ணடித்தாள் ….

கார்த்திக் மனதினுள் …” ஐயோ ..ராட்சசி எல்லாரும் இருக்கப்போ … இப்படி பன்றாலே ” என்று செல்லமாக கடிந்துகொண்டு … அசடு வழிய தாலியை அவள் கழுத்தில் கட்டினான் …..

தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா
கூட வர என்ன கொறை அது போதும் ..

ஆலமரத்து மேல கூவும் ஒருக்குயிலா
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும் ..

என்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா
வேறேதும் வேணாமே அது போதும்

வீடு திரும்பையிலே வாசல் தொறக்கையிலே
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும் … “

அனைவரும் மேடையேறி வாழ்த்துக்கள் தெரிவிக்க ….. அப்பொழுதுதான் முகுந்த் அவளை கண்டான் ……..

முகுந்த் : ஹே அர்ஷி …….. எப்படி இருக்க ???? அப்பா வரலையா ??? நான் நந்தகுமார் சார் வரணுன்னு ரொம்ப ஆசைப்பட்டேன் …

அர்ஷிதா : அப்பா வர முடியல ..உங்களை விருந்துக்கு கையோட அழைச்சுட்டு வர சொன்னாரு …அவர்க்கு கொஞ்சம் ஹெல்த் ப்ரோப்லேம் …வர முடியலன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு ,…..

அவள் கூறியதை கேட்டு சில வினாடிகள் கனத்த மௌனம் நிலவ …..அதை சரிசெய்ய …..

அர்ஷிதா : என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டியா முகுந்த் … அப்டினு நெனச்சு சந்தோசமா இருக்கியா ????

முகுந்த் : குறுநகை சிந்தியவன் …அப்டிலாம் இல்ல ….. நீயே புரிஞ்சிக்குவ …. பிசாசுகிட்ட இருந்து குட்டி சாத்தன்கிட்ட மாட்டிக்கிட்ட கதையா ஆயிருச்சு ….. என்று பொய்யாய் சலித்துக்கொள்ள ….. மிதுஅவனதுகையில்நறுக்கென்று கிள்ளிவைத்தாள்….. ஸ்ஸ்ஸ் என்று அவன் மெலிதாய் அலற… அந்த இடமே சிரிப்பால் நிறைந்தது…

அங்கு வந்திருந்த ஸ்ருதி புவியை காதலுடன் பார்க்க …. விக்கி பவியை பார்த்தான் ….. மிது வின் அப்பா அவரது மகளுக்காக கண்ணீர் வடிக்க …. அதை பார்த்த பவி அவளது தந்தையின் நினைவுடன் கண்ணீரை சுரந்துகொண்டிருந்தது அவளது கண்கள் …..

புவியின் மொபைல் ஒலிக்க ….. கட்டுண்டிருந்த கண்களிலிருந்து அவன் விழிக்க ….. அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் ….. பவியின் அப்பாவிற்கு மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் செய்தியை கேட்டு …… விக்கியிடம் கூற முற்பட …. அவளது கண்ணீரையும் ….விக்கி அவளை பார்த்துக்கொண்டிருப்பதையும் கண்டவன் .. ஸ்ருதி விக்கியிடம் கூறி ..அவளை மருத்துவமனை அழைத்து செல்ல …… அங்கு ………….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here