தீரா மயக்கம் தாராயோ 3

0
1505

“ஹே மிஸ்டர் என்ன இடிச்சது மட்டுமில்லாமல் இவ்ளோ கர்வமான பேச்சு “என்று திமிறினாள் அக்ஷ்ரதா.

ரகு பிடிவாதக்காரன்தான் ஆனால் பெண்களை மதிக்கும் பண்பு அவன் அன்னையிடமிருந்து அவனுக்கு வந்தது என்றே சொல்லலாம். தேவிகா பெண்களை இழிவாக பேசக்கூடாது என்று சிறுவயது முதலே போதித்திருந்தாள்.

எனவே ரகு கோபத்தை சற்று நேரம் அடக்கலானான். “சாரி சிஸ்டர் பைமிஸ்டேக் அவர் மேல இடிச்சுட்டேன், அவரும் எடுத்தெரிஞ்சு பேசுனதால இப்படி கத்திட்டேன்” என்று தணிவாக பேசினான்.

அக்ஷ்ரதாவிற்கு என்னவோ போலாகிவிட்டது “சாரி ப்ரோ”எனக்கேட்டுவிட்டு இருவரும் நந் தகுமாருடன் காரை நோக்கிச் சென்றனர்.

முகுந்திற்கு மட்டும் மனம் வெம்பியது. அவன் எல்லாவற்றிலும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பவன். முதன்முதலாக நந்தகுமார் அவர்களை வரவேற்கும்போது பூங்கொத்தை தட்டிவிட்டது இவனுக்கு சரியாக படவில்லை.

ரகு டேக்ஸி நோக்கி விரைந்தான் அவனுக்குள் பீ.பி மட்டும குறையவில்லை முகுந்த் பேசிய விதத்தில். அதற்குள் அவன் ஃபோன் சிணுங்கியது .

“ஹலோ அப்பா சொல்லுங்கோ,நான் ஆத்துக்குத்தான் டாக்ஸியில் வந்துண்டு இருக்கேன்” என்றபடி படக்கென ஃபோனை கட்செய்தான்.

ரகுவின் தாய் தன் மகனின் வரவை நோக்கியவாறே வத்தல்குழம்பும் அதற்கு எடுப்பாய் புடலங்காய் கடலைப்பருப்பு உசிலியும்,எண்ணையில் பொன்னிறமாய் வறுத்த உருளைக்கிழங்கும் செய்து முடித்தாள்.மகனின் வருகைக்காகவும் அவளுக்கு மாமியார் பதவி கிடைக்கப்போகும் காரணத்தினாலும் மகிழ்ச்சியோடு நெய்யும் முந்திரியும் மணக்க பாயாசம் செய்து வைத்திருந்தாள்.

டேக்ஸி ரகுவின் வீட்டருகே வந்து நின்றதும் ஜீவானந்தமும் தேவிகாவும் ஆவலோடு அவனை வரவேற்றார்கள்.

தேவிகா வேகமாக அடுக்களைக்குள் நுழைந்து சூடான டிகிரி காபியை மகனுக்கு தயார் செய்து கொடுத்தாள்.

அந்த காபியானது ரகுநந்தனின் டென்ஷனுக்கு மருந்தாய் அமைந்தது.

இதற்கிடையில் முகுந்த் , நந்தகுமாரையும் அவர் மகளைஅக்ஷ்ரதாவையும் ஃபேமஸ் ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் செய்து அதற்கு அழைத்துச்சென்றான்.

அக்ஷ்ரதா வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தாய் மண்ணின் மீதொரு பற்றிருந்தது அதிலும் தமிழர்களென்றால் அவளுக்கு கொள்ளைப்பிரியம் .அக்ஷ்ரதாவின் தாய் வடமாநிலமென்றாலும் தந்தை தமிழ்காரரல்லவா.முகுந்தின் கம்பீரமான நடை அழகான தோற்றம் பெண்களை கவரும் தோற்றம் அக்ஷ்ரதாவையும் அவன்பால் ஈர்த்தது.

அவர்களை ரூமிற்குள் அழைத்துச்சென்று விடைபெற்று வீடு திரும்ப முகுந்த் எத்தனிக்கையில் அக்ஷ்ரதா “ஹே டுமாரோ என்னைய ஊர்சுத்தி காட்றியா ட்யூட்” என்று உற்சாகமாய் கேட்டாள் அக்ஷ்ரதா.

அக்ஷ்ரதா கேட்பதை கண்ட நந்தகுமார் தன் செல்லமகளின் ஆசைக்காக “முகுந்த் நீங்க எனக்காக ப்ளீஸ் என் மகளை ஊர்சுத்தி காட்டுங்க..நம்ம மீட்டிங்கை டே ஆஃப்டர் டுமாரோ வச்சுக்கலாம்”என்று தாழ்மையோடு கேட்டார்.

“ஓகே அங்கிள் அக்ஷியை நான் அவுட்டிங் கூட்டிட்டு போறேன்…பீ ரெடி ஸார்ப்லி அட் மார்னிங் 9” என சொல்லிவிட்டு விடைபெற்றான் முகுந்த்.

அக்ஷ்ரதாவின் கண்களுக்குள் காதல் போதை மெல்ல குடியேற ஆரம்பித்தது. இரவெல்லாம் முகுந்த்தின் காந்தவிழிப்பார்வையின் வேகம் அவளை ஏதோ செய்தது.

முகுந்த் வீட்டிற்குள் நுழைந்ததும் தொம்மென சோஃபாவில் அமர்ந்தான் அங்கு கையில் தேநீருடன் மாரிக்கண்ணு (அந்த வீட்டு வேலைக்காரர்) வந்து நின்றார்.

தேநீரை அருந்தியவன் எங்கோ உள்ள எரிச்சலை அவர மீது காட்டினான்.”தூஉஉ..இதெல்லாம் ஒரு டீயா இப்படி கேவலமா போட்டிருக்கீங்க ….வேற குக்கைதான் நியமிக்கனும் ” எனக்காட்டமாய் கத்திவிட்டு அவனுடைய ரூமிற்குள் நுழைந்து டொம்மென கதவை சாத்தினான்.

ரகுவை நினைக்கவே இவனுக்குள் ஆத்திரம் பொங்கியது.சிறிது நேரம் அவன் தன்னுடைய மொபைலில் யூடியூப்பினை தட்டலாமென தட்டியபொழுது ஸ்ருதியின் இரண்டு நாட்களுக்கு முந்திய நிகழ்ச்சி பதிவிடப்பட்டிருந்தது அதற்கு அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் மற்றும் அதிகமான வியூவ்ஸ்,கமெண்ட்ஸ் என வெளுத்து வாங்கியிருந்தது.

இவனும் சப்ஸ்க்ரைப் செய்துவிட்டு அதனை ப்ளே செய்தான் தலைநிறைய மல்லிகைசரத்துடனும் ஸ்ருதியின் லயத்தில் அவளது மையிட்ட கண்களை மூடியவாறு பாட ஆரம்பிக்கும்பொழுதே இவன் மனம் அவளோடு லயித்தது.

“என்ன தவம் செய்தனை யசோதா

என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறைபரம்பிரெம்மம் அம்மா என்றழைக்க

என்ன தவம் செய்தனை யசோதா

ஈரேழு புவனங்கள் படைத்தவனை

கையிலேந்தி பாலூட்டி சீராட்டி

என்ன தவம் செய்தனை யசோதா

என்ன தவம் செய்தனை யசோதா

என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள

உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை…..”

என பாடும் விதத்திலேயே சாட்சாத் அந்த கிருஷ்ணபெருமானே இறங்கி வந்ததைப் போன்ற உணர்வு இவனுக்குள் ஏற்பட்டது தெய்வாதீகமான குரல் என்றே சொல்லலாம் அதுவும் அவள் கைகளால் தாளம்போட்டு பாடுவதை பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது. இதுவரை ஸ்ருதியை தன் சேனலில் பாடுவதற்கு அவளே வழிக்கு வரவேண்டும் என நினைத்தவன் ,ஏன் அவளை தன் மனைவியாக்கி கொள்ளக்கூடாது என்ற காதல் விழிப்பார்வை வீசினான்.ஏனோ அவளுக்குள் அவள் கண்களுக்குள் குடியேறிட அவன் மனம் நாட்டம் கொண்டது.

ரகு தன் ரூமிற்குள் சென்று கட்டிலில் அமர்ந்தான்.அங்கு வந்த தேவிகா ரகுவை குசலம் விசாரித்துவிட்டு “ரகு நாளைக்கு ஸ்ருதியை பெண் கேட்க போகலாம்னு உன் தோப்பனார் முடிவு பண்ணியிருக்கா.. உனக்கு ஏதும் ஆட்சேபனையில்லையே”என்றாள்.

ரகுவின் மனதில் ஒரே குதூகலம் ஆனால் எதையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் “சரிம்மா…எதுனாலும் உங்களோட விருப்பம்” என்றான். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் நான் ஸ்ருதிக்கிட்ட பேசிட்டுதான் கல்யாணத்தை பற்றி பேசனும்.அவளுக்கு இந்த விவாகத்துல சம்மதமிருக்கானு நான் கேட்டு தெரிஞ்சுக்கனும்னு நினைக்குறேன்” என்றான்.

தேவிகாவும்”சரிடா கண்ணா நீ ஒத்துக்கொண்டதே போதும்..நீங்க பேசி முடிவெடுங்கப்பா”என்றாள்.

சுந்தரத்திற்கு நாளை தன் மகளை பெண்பார்க்க வரப்போகிறார்கள் என்றதும் இரவெல்லாம் தூக்கமில்லை…தன் மகாலஷ்மி மற்றொரு வீட்டிற்கு சென்று வாழும் வேளை வந்ததன் களிப்பா இல்லை தன மகளை விட்டு எப்படி இருக்கப்போகிறோம் என்ற தவிப்பா ஒன்றும் விளங்கவில்லை ஆனால் அவருக்கு அசதியிருந்தும் தூக்கம் வரவில்லை.நேரே ஸ்ருதியின் ரூமிற்குள் சென்றார்.அங்கு அயர்ந்து உறங்கும் தன் மகளை பார்த்தவாறே அவள் தலையை தடவிக்கொடுத்துகொண்டிருந்தார்.தவமாய் தவமிருந்து பெற்ற மகளல்லவா அவளை பிரியும் காலம் மிக அருகில் வந்ததன் தாக்கமது .

மறுநாள் காலை புலர்ந்தது சூரியன் எட்டிப்பார்த்த வேளைக்கு முன்பே ஸ்நானம் செய்து மொட்டைமாடியில் தன் வீணையை ஏந்தியவாறே சரஸ்வதி தேவியைப்போன்று அமர்ந்தவள் லலிதா ஸகர்ஸ்நாமம் பாடிக்கொண்டிருந்தாள். கிட்சனில் காயத்ரி காபியை போட்டு மாடிக்கு ஏறி வரவும் அவள் பாடி முடிக்கவும் சரியாயிருந்தது.

“இங்கே பாருடிமா ஸ்ருதி.. காபியை குடிச்சுண்டு உன் மஞ்சள் கரை வைத்த பட்டையெடுத்துண்டு கீழே வாடிமா.. அம்மா கட்டி விடறேன்.”என்றாள்.

“இன்னைக்கு எங்கேயும் கட்சேரி இல்லையேமா எதுக்கு இன்னைக்கு பட்டு கட்ட சொல்றேள்”என்றாள் ஸ்ருதி.

“அடி அசடு இன்னைக்கு உன்னைய உன் மாமா பையன் ரகு பெண்பார்க்க வர்றான்.நீ சீக்கிரம் ரெடியாகனும்”என்றாள்.

ஸ்ருதியின் மனதில் தன் பால்ய நண்பனாகிய ரகுவின் சேஷ்டைகள் வந்து சென்றது.பிள்ளை பருவத்தில் அவளுக்கு பாதுகாவலன் அவன்தான்.யாரையும் ஒருவார்த்தை பேசவிடமாட்டான் , பாட்டி வீட்டிற்கு சென்றபொழுது இவளுக்காக எதிர்வீட்டு கிட்டுவுடன் சண்டை போட்டான் “என் ஸ்ருதியை குள்ளச்சினு கூப்பிட நீ யாருடானு”அத்தனை கொள்ளைப்பிரியம் அவள் மேல் அவனுக்கு.இப்படி விட்டுக்கொடுக்காதவன் தனக்கு கணவனாய் வந்தால் வாழ்க்கை எப்படி அழகாகும். சிறுவயது ஞாபங்கள் அவளுக்கு வந்து தொலைத்தது.இதை காதலென்று சொல்ல இயலாது ஆனால் காதல்தான்(என்ன குழப்புற மாதிரி இருக்கா???).

ரகு காலையில் எழுந்து குளித்து சிறுவயதில் ஸ்ருதிக்கு ஊதா நிறமென்றால் ரொம்பப்பிடிக்கும் அந்த நிறத்திலேயே செக்ட் சட்டையை அணிந்துகொண்டான்.மாப்பிள்ளைக்கான சர்வலட்சணமும் அவன் முகத்தில் குடியேறியிருந்தது.தன் மகன் ரூமிலிருந்து வந்ததை பார்த்ததும் யார்கண்ணும் என் மகனுக்கு படக்கூடாது என்று திருஷ்டிகழித்தாள் தேவிகா.

பழம்,வெற்றிலை,பாக்கு வரப்போகும் மாட்டுப்பெண்ணுக்கு மல்லிகைச்சரமும் தொடுத்து வைத்திருந்தாள்.எப்படியோ சொந்தத்திலேயே இந்த சம்பந்தம் அமைந்துவிடவேண்டுமென்பது அவளின் பிரார்தனை.தன் மதினி காயத்ரியை நன்கறிவாள் தேவிகா அதிகம் பேசாத அடக்கமானவள், காயத்ரியை அவள் நாத்தனார் என்று சொல்வதை விட அவளுடைய சகோதரி என்றே சொல்லலாம்.அவள் பார்த்து வைத்த பெண்ணல்லவா.இருவரும் பள்ளித்தோழிகள் வேறு.அப்படியிருக்க அவளுடைய பெண் எப்படிப்பட்டவளாய் இருப்பாள்.அதற்கு தேவிகா தான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியமாக கருதினாள்.எப்படியும் இருவருக்கும் பிடிக்கவேண்டுமென குலதெய்வமான ஸ்ரீரங்க பெருமாளுக்கு நாணயத்தை மஞ்சள்துணியில் முடிந்து வைத்தாள்.

ஓலா கேப்பிற்கு புக்செய்து சுந்தரம் வீடு நோக்கி வண்டி புறப்பட்டது.காயத்ரிக்கு தலைகால் புரியவில்லை பட்சணங்கள் பலவற்றை செய்து கண்ணனுக்கு படைத்து நெய்வேத்தியம் செய்தாள்.ஸ்ருதியும் தன் தாயோடு சேர்ந்து கடவுளை வழிபட்டு நமஸ்காரம் செய்து எழுந்திரிக்க எத்தனிக்கையில் அவள் தலை திறந்து வைத்திருந்த அலமாரி முனையில் அடித்தது.வந்தமாத்திரமே ரகு பொறுக்க இயலாமல் தலையை ஓடி வந்து தேய்த்துவிட்டான்”என்ன ஸ்ருதி பார்த்து எழுந்திரிங்க மாட்டியா இப்படியா பண்றது”என படபடவென பொறிந்தான்.

ஸ்ருதி ரகுவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.அந்த நாட்களில் ரகு தன் மேல் எப்படி பாசமாயிருந்தானோ அப்படித்தான் இன்றளவு வரை இருக்கிறான் என்பதை அவள் கண்களை விட அவளுடைய மனம் நம்பியது.

அதற்குள் தேவகி கலகலவென சிரிக்க அவளோடு சுந்தரம்,காயத்ரி,ஜீவானந்தம் மூவரும் சேர்ந்துகொண்டனர் அந்த இடமே சிரிப்பில் தத்தளித்தது.ரகுவிற்கு என்னவோ போலாகிவிட்டது சடாரென பின்வாங்கினான்.ஸ்ருதியின் முகம் வெட்கத்தில் சிவந்து போயிற்று.

இத்தனை நேரம் அந்த அழகுபதுமையை நேரில் காணாதவன் அவளை மெல்ல பார்த்தான் வட்டமான முகத்தில் நீண்டு வில்லைப்போல் வளைந்திருந்த புருவம் அதற்கு நடுவில் லட்சணமாய் ஒரு பொட்டு அதன் கீழ் துளி குங்குமம் வைத்திருந்தாள் கண்களோ கயல்மீனைப்போல நீண்டிருந்தது அதற்குள் மையிட்டிருந்தாள் இவன் மையல் கொள்ளாமல் இருக்க இயலுமா சொல்லுங்கள். செதுக்கி வைத்தாற்போல் நாசியில் வைரமூக்குத்தி பளபளத்தது அதன் கீழ் கோவை பழமென செவ்விதழ் சிறியதாய் இருந்தது. இதழ்களுக்கு மேல்வலதுபுறம் சிறிய மச்சம் இருந்தது அது அவள் சிரிக்கையில் சேர்ந்து சிரித்தது.காதுமடல்கள் அழகான முத்துஜிமிக்கியால் நிரப்பப்பட்டிருந்தது.

தலைநிறைய மல்லிகைச்சரமும் தெய்வாதீகமான முகமும் சிவந்த அவள் தேகத்தை மெருகூட்டின .மஞ்சள் புடவையில் சர்வசாமுத்ரிகா லட்சணமும் பொருந்தியவளாய் காட்சியளித்தாள்.

“ஸப்பாஆஆஆ என் ஸ்ருதியா இவள் ….ஐயோ தேவதைக்கணக்கா இருக்காளே” என சந்தோஷமடைந்தான் ரகு.ரகுவிற்கு ரொம்பவே பிடித்துபோயிற்று.

“அம்மாடி பெரியவா கால்ல விழுந்த நமஸ்காரம் செஞ்சுக்கோ”என சுந்தரத்தின் குரல்கேட்டதும் தன் சேலை முந்தானையை பிடித்தவாறு கீழே விழுந்து நமஸ்காரம் செய்தாள்.

அடுத்ததாக காயத்ரி ட்ரேயில் காபியை வைத்து கொடுத்தனுப்பினாள் அவள் அனைவருக்கும் கொடுத்தபின்னர் கடைசியாக ரகுவிடம் கொடுத்தாள்.இருவரின் விழிகளும் ஒருசேர பேசிக்கொண்டன.

ரகு கேட்கும் முன்னரே அவனுக்காக அவள் தாய் தேவிகா ” மாப்பிள்ளை பொண்ணு கொஞ்சநேரம் பேசிண்டு வரட்டும் அவாள் இருவரும் முடிவெடுத்துண்டு வரட்டும் மேற்கொண்டு நம்ம பேசலாம் சரிதானே” என்றாள்.

அதற்குள் காயத்ரி சிரித்துக்கொண்டே மன்னி”இரண்டு பேரும்தான் வந்ததுமே பேசிண்டாளே ஹாஹா ஹா”என சிரித்தாள்.

அதற்குள் சுந்தரம் “அம்மாடி ஸ்ருதி கொஞ்ச நேரம் மாப்பிள்ளையும் நீயும் பேசிண்டு வந்து உங்க முடிவை சொல்லுங்கோமா” என்றாள்.

மாடி பால்கனியில் இருவரும் அமர எதிரெதிரே நாற்காலி போடப்பட்டிருந்தது.

ரகு அமர்ந்துகொண்டான் ஸ்ருதி தயங்கியவாறு நின்றிருந்தாள்.ரகு சிரித்தவாறே “ஸ்ருதி உட்காருமா”என்றான்.

அவள் மறுபடி தயங்கினாள்”ஏய் குள்ளச்சி உட்காரு” என சொல்லி கலகலவென சிரித்தான்.

“போங்க கொழுகொழு கொழுகட்டை மிஸ்டர் ரகுநந்தன்”என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

இருவரும் சிரித்தவாறு தங்களை குசலம் விசாரித்தனர் இருபது வருடங்களுக்கு முன்னர் இருந்த பால்ய சிநேகிதம் துளியளவும் மாறவில்லை.

சட்டென ரகு அருகில் நாற்காலியை போட்டு அமர்ந்துகொண்டாள் ஸ்ருதி நண்பண் என்ற உரிமையோடு.இருவருக்கும் வயது வித்தியாசம்கூட அதிகமில்லை இரண்டு வருடம்தான்.

“என்ன மேடம் கச்சேரிலாம் பலமா செய்றேள்…உங்களோட ஒரு கச்சேரிகூட யூடியூப்ல பார்க்க மிஸ் பண்ணதில்லை…நான் உங்களோட பெரிய ஃபேன் கொஞ்சம் ஆட்டோகிராப் கிடைக்குமா”என்றான்.

ஸ்ருதிக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை”போங்க ரகு அத்தான் உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதான்” என்று குழந்தைத்தனமாய் கொஞ்சும் குரலில் பேசினாள்.

“ஸ்ருதி சீரியஸா உனக்கு என்னைய பிடிச்சுருக்கா இல்லை மாமா அத்தை சொன்னாங்கனு கல்யாணத்துக்கு ஒத்துண்டியா” என வினவினான் ரகு.

ஸ்ருதி வெட்கத்தோடு “உங்களுக்கு ஆட்டோகிராஃப் வேண்டுமா இல்லை இந்த ஸ்ருதி ஆத்துக்காரியா வேண்டுமா?”என வினவினாள்.

அவளின் ஒற்றை வரியில் ஓராயிரம் அர்த்தங்கள் கூடியிருந்தன. சிரித்துக் கொண்டே ரகு “அப்போ இந்த ரகுநந்தன் ஜர்னலிஸ்ட்டை பிடிச்சிருக்குனு சொல்றியா அசடு “எனக்கேட்டான்.

அவளோ கண்ணக்குழி விழுகுமாறு ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு எழுந்தாள்.

ரகு அவன் கரத்தை இறுகப்பற்றி”பிடிச்சிருக்கா …என்னைய கல்யாணம் செஞ்சுண்டு என்கூட எங்கனாலும் வருவியா “என்றான்.

ஸ்ருதி “ம்ம்ம்…நீங்க எங்கே போனாலும் உங்கூட வர்றதுக்கு நான் தயார் . ஆனால் என் அப்பாவைப் பார்க்க மட்டும் அடிக்கடி அனுப்பிடுங்கோ”என்றாள்.

இவன் சிரித்துக்கொண்டே”இந்த மகாராணியின் உத்தரவே சேவகனுக்கு உசிதம்” எனச்சிரித்தான்.

இருவரும் கீழே இறங்கி வந்தனர்.இருவரின முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பை பார்த்த பெரியவர்கள் தாம்பூலம் மாற்றிக்கொண்டனர்.

தேவகி தன் அண்ணன் மகளுக்கு பூச்சரத்தை சூட்டிவிட்டு உச்சி முகர்ந்தாள்.காயத்ரி முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது சுந்தரத்தின் முகத்தில் மட்டும் சிறிய கவலை தன் மகளை பிரியப்போகிறோமென்று.

இன்னும் மூன்று மாதத்தில் ரகு மறுபடி வெளிநாட்டிலிருந்து வருவான் அப்போ திருமணத்தை வச்சிடலாம்.ஜானாவாசத்திற்கு முந்தியநாள் நிச்சயதார்த்தம் வச்சிடலாமென்று முடிவு செய்தனர்.

சுந்தரத்தின் வீடுகட்டப்பட்டு கிரகப்பிரவேசம் செய்து இரண்டுமாதங்கள் தான் ஆகிறது.எனவே “வீட்டை மாப்பிள்ளைக்கு சுற்றிக்காட்டுமா”என்றார் சுந்தரம் .ஒவ்வொரு இடமாக சுற்றிக்காட்டினாள் ஸ்ருதி.

இறுதியாக அவள் ரூமை காட்டினாள்.ஸ்வரங்களும் ஜதிகளும் இசைந்து பாடுமாறு எடுத்த பொருள் கலைத்துவிடாமல் வைத்திருந்தாள் அவள்.

ரகு தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு சின்ன மோதிரத்தை எடுத்தான் .”ஹே ஸ்ருதி கண்ணை மூடு உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு”என்றான்.

அவளும் கண்களை இறுகமூடினாள் அந்த மோதிரத்தை அவள் கைகளில் மாட்டிவிட்டான்.

“ஏன் ரகு அத்தான் இதைத்தனியா தர்றீங்க எல்லார் முன்னாடியும் தரவேண்டியதுதானே”என்றாள்.

“அடி அசடு இது உனக்காக ஆசையா வாங்கிண்டு வந்தது என்னோட பெர்ஸனல் கிஃப்ட் என்றவாறு”லவ்யூ ஸ்ருதி”என ஒற்றைரோஜாவும் ஃபாரின் சாக்லெட் பாக்சையும் பரிசளித்தான்.

அவள் சிரித்தவாறே”உங்களோட குறும்புத்தனம் துளியளவும் குறையலை”என சிரித்தவாறு அவன் கொடுத்த ரோஜாவை அவனுக்கு சம்மதம் தெரிவிக்கும் விதமாக தலையில் சூடிக்கொண்டாள்.அவன் கொடுத்த மோதிரத்திற்கு ஒரு முத்தமிட்டாள்.

“அடிப்பாவி மோதிரத்துக்கு முத்தம் கொடுக்கற ஆனால் அதை வாங்கித்தந்த எனக்கு தரமாட்டேங்குற”என்றான் ரகுநந்தன்.

” எதுனாலும் கல்யாணத்துக்கப்பறம்தான் இப்போ மோதிரத்துக்குதான் கொடுப்பேன்”என சொல்லி படாரென அவன் கன்னத்தில் கிள்ளிவிட்டு கீழே இறங்கினாள்.

எத்தனை அடக்கமான பெண்ணாயிருந்தாலும் தனக்கு வரப்போகிறவனுக்கு குறும்புத்தனத்தை பரிசளிப்பது இயல்புதானே அதைத்தான் அவளும் செய்தாள். அனைவரும் மகிழ்ச்சியோடு சம்மந்தம் முடிந்ததாக எண்ணி வீட்டிற்கு கிளம்பினர். பிரியாவிடை பெற்று வீட்டிற்கு சென்றான் ரகு ,அவன் மனம் முழுக்க ஸ்ருதியிடம் ஒரே நாளில் எளிதாய் பறிபோய்விட்டதல்லவா….

அக்ஷ்ரதா மகிழ்ச்சியோடு முகுந்தின் வரவையெண்ணி காத்திருந்தாள். இருவரும் பீச்,பார்க்,மால் என ஒருநாள் முழுவதும் சுற்றினர்.ஸ்பென்சர் பிளாசாவில் ஸ்ருதியின் கலை நிகழ்ச்சி அறிவிப்பு பலகை இருந்ததைப்பார்த்து ஒருநிமிடம் ஸ்தம்பித்தான் முகுந்தன்.அக்ஷ்ரதா அவன் நடை உடை பாவனை அவளை நடத்தும் விதம் என எல்லாவற்றிலும் அவனை விரும்பலானாள்.

இந்தியாவை விட்டு போவதற்குள் எப்படியும் தன் காதலை வெளிபடுத்த வேண்டுமென எண்ணினாள்.

அக்ஷத்ராவிற்கு முகுந்தின் நடவடிக்கைகளை பார்க்க பார்க்க அவன்மேல் அலாதியான பிரியம் ஏற்பட்டுவிட்டது. அக்ஷத்ரா மாடர்னான யுவதி என்றபொழுதும் கொஞ்சும் தமிழ்பேச்சு என்றுமே இனிமை குறைந்ததில்லை. முகுந்துடன் மறுநாள் பெசன்ட் நகர் பீச்சிற்கு வாக்கிங் சென்றாள் அக்ஷத்ரா அங்கு கடலலையில் கால்நனைத்தபடி விளையாடினாள்.முகுந்த் எதையோ எண்ணியபடி அவளுக்கு சைகை காட்டியபடியும் அமர்ந்திருந்தான்.

அங்கே ஸ்ருதி தன் தந்தையுடன் ஜாகிங் வந்தாள். ஞாயிற்றுக்கிழமையென்றால் பீச்சில் வாக்கிங் செல்வது தந்தைக்கும் மகளுக்கும் வழக்கமான ஒரு நிகழ்வு.இருவரும் ஜாகிங் செய்துவிட்டு கடற்கரையில் அமர்ந்து அந்த வாரம் முழுக்க நடந்ததை உரையாடுவர். ஸ்ருதிக்கு ஆண்நண்பன்,ஆசான்,தந்தை என சொல்லப்போனால் எல்லாமே அவளுடைய தோப்பனார்தான்.அம்மாவிடம்கூட அத்தனை செல்லம் கிடையாது.

“ஏன்மா உன்கிட்ட தனிப்பட்ட முறையில் கேட்காமல் முடிவுபண்ணிட்டேன்…இந்த திருமணத்தில் உனக்கு மனபூர்வ சம்மதமா?” எனக்கேட்டார் சுந்தரம்.

“அப்பா உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்…நீங்க வேறு யாரையும் கைகாட்டலையே நம்ம ரகுஅத்தானைதானே கைக்காட்டுனேள்… அவர் நீங்க நினைக்குற மாதிரி என்னைய நல்லா பார்த்துப்பார்..எனக்கும் அவரை பிடிச்சிருக்குப்பா”என்றவள் தனக்கு ரகு பரிசளித்த மோதிரத்தை வெட்கத்தோடு தன் தந்தையிடம் காட்டினாள்.

“இது அத்தான் என்னைய பிடிச்சிருக்குனு சொல்லிண்டு வாங்கிக்கொடுத்தது”என்றாள் ஸ்ருதி.

திருமணத்திற்கு முன்பே இத்தனை பிரியமாய் இருக்கிறானே, கண்டிப்பாக தன் மகளை தங்கத்தட்டில் தாங்குவான் என்று ரகுநந்தன் மீது சுந்தரத்திற்கு நம்பிக்கை துளிர்ந்தது.இருவரும் பேசிக்கொண்டே வருகையில் முகுந்தனின் கால்கள் இடறிவிட்டு அவள் டொம்மென முகுந்தனின் மேலே விழுந்தாள்.நம்முடைய கோபக்காரன் எரிச்சலோடு பேச நினைக்கையில் அவன் கைகளை பற்றியிருந்த கைகள் ஸ்ருதியுடையதாயிருந்தது.அப்படியே ஸ்தம்பித்து பார்த்தான்.ப்ளு கலரில் அவள் போட்டிருந்த சுடிதாரும் அவளின் பால்போன்ற முகமும் அவனை ஆட்கொண்டது.

“ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி சார் நான்தான் பேசிட்டு வரும்போது விழுந்துட்டேன்….ப்ளீஸ் மன்னிச்சுக்குங்க “எனக் கெஞ்சும் தோரணையில் பேசினாள்.

“மன்னிச்சுக்குங்க தம்பி என் பொண்ணு தெரியாம விழுந்துட்டா”என மகளுக்காக இறைஞ்சி பேசினார் அன்புத்தந்தை சுந்தரம்.

முகுந்தனிற்கு காதல் பித்துதான் தலைக்கேறியிருந்த தவிர அவள் மேல் கோபமெல்லாம் வரவில்லை.

“ஓகே ஓகே ஸ்ருதி ..உங்களுக்கு எதுவும் அடியில்லையே”எனக்கேட்டான் முகுந்தன்.

“என் பெயர் எப்படித்தெரியும்? நீங்க யார் எங்கிருந்த வர்றீங்க?” என்று அடுத்தடுத்த கேள்வி கேட்டாள் ஸ்ருதி.

தன்னைபற்றி இன்ட்ரோ கொடுத்தவன் அவளைத்தன் டிவி நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டான் .

அவள் சம்மதம் தெரிவிக்கும் முன்பே அவள் அப்பா சுந்தரம்”கண்டிப்பா என் பொண்ணு நிகழ்ச்சியில் கலந்துக்குவா “என்று உறுதியளித்தார்.

அதற்குள் அக்ஷத்ரா அங்கே வந்தாள். “ஏய் முகுந்த் வாங்கப்பா வேவ்ஸ்ல விளையாடலாம்”என்றழைக்க அவளுக்கும் ஸ்ருதியை இன்ட்ரோ செய்துவைத்தான்.

முகுந்தின் எண்ணம் தவறென்று அவனுக்கு புரிந்தது ஸ்ருதி பெண்களுக்கே உண்டான அச்சம்,மடம்,நாணம் ,பயிர்ப்பு எற்று நால்வகை குணநலன்களோடு வளர்க்கப்பட்ட அக்மார்க் பிராமண வீட்டுப்பெண் என்பது விளங்கியது.அவளை தன்னவளாக்கிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இன்னும் பலமாகிப்போனது.

வீட்டிற்கு வந்த முகுந்த்திற்கு அவளை மடியிலேந்திய நினைவுகள் பிரமையை போன்று ஆட்டிப்படைத்தது.

“எங்கேயோ பார்த்த மயக்கம்

எப்போதோ வாழ்ந்த நெருக்கம்

தேவதை இந்த சாலை ஓரம்

வருவது என்ன மாயம் மாயம்

கண் திறந்து இவள் பார்க்கும் போது

கடவுளை இன்று நம்பும் மனது

இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்

ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்

அறிவை மயக்கும் மாய தாகம்

இவளை பார்த்த இன்பம் போதும்

வாழ்ந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும்–

கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்

கதைகளிலே கேட்ட பெண்ணாய் திரும்பி திரும்பி பார்க்கிறேன்

அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து ஏங்குதே”

என்ற பிளேயரில் அவனுக்கு பிடித்தமான பாடல்தான் ஓடியது அந்த நாள் முழுவதும்.

அன்று ஞாயிறு விடுமுறையென்பதால் வீட்டில் சுத்தம்செய்யும் பணியை அப்பாவும் மகளும் செய்தனர்.அம்மா சமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.ஸ்ருதி வேலைகளை முடித்துவிட்டு மாடிக்கு சென்று குளிக்கத் தயாரானாள் .அவள் வீட்டு வாசலில் ரகு அவனுடைய புது புல்லட்டில் ஸ்ருதியின் வீட்டிற்கு எதிர்புறம் நின்றான் ரகுநந்தன்.ஜன்னல் வழியே அவனைப்பார்த்தவள் அவன் மொபைலுக்கு குறுச்செய்தி அனுப்பினாள் வாட்சாப்பில்”என்ன சார் காலையிலேயே என்னைய பார்க்க வந்துட்டீங்களா”என்றாள்.

“ஹே இல்லமா என் நண்பனைப் பார்க்க வந்தேன் அப்படியே உன்னைய பார்த்துட்டு போலாம்னுதான்”என்றான் ரகு.

“கல்யாணத்துக்கு இன்னும் மூன்று மாதமிருக்குது அதனால என்னைய அடிக்கடி என்னைய பார்க்க வரவேண்டாம்..அப்பா கோவிச்சுப்பாரு”என்றாள் ஸ்ருதி.

“சரிங்க மேடம் நான் அடிக்கடி பார்க்க வரமாட்டேன்….அப்படியே வந்தாலும் நேரே உங்க வீட்டுக்குதான் வருவேன் ..வித் பர்மிஷன் பார்க்கலாம் …ஆனா போன்ல கதை சொல்லாதீங்க சின்னக்குயில் சித்ரா மேடம் இந்த அத்தானுக்கு கரிசனம் காட்டுமா “என்றான் ரகு.

ஸ்ருதி கலகலவென சிரித்தாள்.ரகு இருக்கப்போகும் இந்த பத்து நாட்களும் இவளுக்கு பித்துபிடிக்கப்போகிறது என்பதை இவள் மனதறிந்து கொண்டது.

ரகுவின் அன்பு ஸ்ருதியின் மனதில் காதல்மயக்கத்தை தோற்றுவித்தது.ரகுஅத்தான் என அவள் பேசும் விதமே ரகுவை ஒருநிமிடம் உயரப்பறக்கச்செய்தது.

முகுந்த் தன் தேவதை தன் சேனலில் அன்று ஜட்ஜாக வரப்போகிறாள் என்பதால் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான்.

ரகுவிடம் ஸ்ருதி ஃபோனில்”ஹலோ ரகு அத்தான் நைட் வந்து பேசறேன் ஆடிஷன் நடக்குற பிளேஸ் வந்துடுச்சு..வச்சிடறேளா”என நக்கலாய் பேசி காலை கட்செய்தவாறு கீழே காரை விட்டு இறங்கினாள்.

முகுந்திற்கு கையும ஓடவில்லை காலும் ஓடவில்லை அவள் வரவை எதிர்பார்த்தவனாய் மேளதாளத்தோடு அவளை வரவேற்றான்.ஸ்ருதிக்கே சற்று ஆச்சர்யமாகிவிட்டது”என்னடா இது ..ஜஸ்ட் நம்ம ஜட்ஜாதான் வந்துருக்கோம் இதை ஏன் இவ்ளோ ஆர்ப்பாட்டத்தோடு மிஸ்டர் முகுந்த் செய்கிறார்”என்று.

முகுந்தின் மனதில் தனக்கே தனக்கானவள்தான் ஸ்ருதி என்ற எண்ணம் குடிகொண்டது. ஒவ்வொரு நாளும் அவளை ராணியாக பார்த்துக்கொள்ளவேண்டும் விரைவில் அவர்களுக்கிடையான நட்பு காதலாக மாறவேண்டுமென எண்ணினான்.

நட்போடு முகுந்த் பேசினாலும் கேட்பதற்கு மட்டுமே பதிலளிக்கும் குணம் கொண்டிருந்தாள் ஸ்ருதி.ரகுநந்தனுக்கு மட்டுமே அவள் வாயாடி ஆகிப்போனாள் அவன்மேல் அவளுக்கு அத்தனை காதல் கசிந்துருகியது.

அக்ஷ்ரதா முகுந்தை ஃபாலோ செய்வதையே வேலையாக வைத்திருந்தாள்.அவன் அன்பு அவளுக்கு மட்டுமே உரியதாக நினைத்திருந்தாள். ஸ்ருதியுடன் நட்பாய் பேசுவதுகூட அவளுக்குள் புகைச்சலை கிளப்பியது.அவன் பின்னாலேயே சுற்றுவதையே வேலையாய் வைத்துக்கொண்டாள் அக்ஷ்ரதா.யார் மனதில் யாரிருந்தாலும் விதி யாருக்கு யாரென நிர்ணயித்திருக்குமே. நான் இன்னாருக்கு இன்னாரென முடிவுசெய்துவிட்டேன் என்றவாறு முகுந்தின் பூஜையறையிலிருந்த கிருஷ்ணர் சிரித்தவாறு பார்த்துக்கொண்டிருந்தார்.

ஸ்ருதிக்கு ரகுநந்தனின் மேல் காதல் சோலைவனமாய் அரும்பியது அன்று ரகு பத்துநாள் லீவ் முடிந்து ஊருக்கு செல்வதாக இருந்தான். அவனைப் பிரியப்போவதை எண்ணி வருந்திய ஸ்ருதி.அவனுக்காக தன் கையால் செய்த முறுக்கு,தட்டை சீடையையெல்லிம் எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் சென்றாள் ஸ்ருதி.அவளுக்காக ஒருமணிநேரத்திற்கு முன்பாகவே காத்திருந்தான் ரகு. இருவருக்கும் பேச நாயெழவில்லை ஸ்ருதியின் கண்முழுவதும் ரகுவை பிரியும் ஏக்கம் சூழ்ந்தது.அவள் கொண்டுவந்ததை கொடுத்துவிட்டு”ரகு அத்தான் சீக்கிரம் வந்துடுங்கோ” என்று பொலபொலவென கண்ணீர்துளிகளை உதிர்த்தாள்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here