தீரா மயக்கம் தாராயோ 31

0
1334

மவுனமான நேரம் .
மஞ்சத்திலே இரு உயிர்கள் தவிழ்திடும் நேரம் .
இரு மனம் ஒரு மனம் ஆகிவிடும் நேரம் .
இருட்டை கொண்டாடும் நேரம் .
இடைவெளி குறையும் நேரம் .
இனிமைகளை இன்பமாக ரசிக்கும் நேரம் .
இன்ப ரசம் பொழியும் நேரம் .
காதல் பரிபாஷைகள் பறிமாறும் நேரம் .
மோகம் உச்சம் தொடும் நேரம் .
காமன் கலைப்பாரும் நேரம் .
உயிர்கள் உண்ணதம் அடைந்த நேரம் .
மவுனம் பேசும் நேரம் .

அலைபேசிக் கொடுத்தச் செய்தியில் அரண்டு போய் நின்றிருந்தான் முகுந்தன் . இந்த நேரத்தில் இப்படியொரு செய்தியா .? இதற்கு யார் காரணம் என்ற சுய அலசல் வேறு . தான் விதைத்த வினை , இப்போது வளர்ந்து விருடமாகிவிட்டது . வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்து தானே ஆகவேண்டும் . தப்பைச் செய்துவிட்டுத் திருந்தி விட்டால் தண்டனையை யார் அனுபவிப்பது . நெடும் யோசனை அவன் மனதில் .

கணவனின் முகத்தில் தோன்றிய உணர்வுகளில் அவனைப் படித்தவளுக்கு , யார் போன் செய்தார்களோ என்றுக் கவலையாகிப் போனது . இப்போது தான் அனைத்தையும் விட்டு தன்னிடம் வந்திருக்கிறான் . மறுபடியும் புதிதாக என்ன ? என்ற எண்ணவோட்டத்திலேயே அவனின் முகம் பார்க்க , அதுவோ ஆழ்ந்த யோசனையில் இருந்தது .

முகுந்த் என்னாச்சு , என்ன பிரச்சினை , என்ன போன் கால் , யார் பண்ணா ..?” என வரிசையாகக் கேள்விகளைத் தொடுக்க ,

ஹேய் .. எதுக்கும்மா இத்தனைக் கொஸ்டீன் டெலிவர்ட் பன்ற , பொறுமையா ஒவ்வொன்னாக் கேளு என்றவன் , நான் இப்போ நம்ம கொடவுன் வரைக்கும் எமர்ஜென்சியாப் போகனும் மிரு .. நான் வர லேட்டாகும் . வெயிட் பண்ண வேண்டாம் டா ..” என வேகமாக உடையை மாற்றிவிட்டுக் கிளம்பியவனைப் பிடித்தவள் ,

என்ன முகுந்த் பெரிய பிரச்சினையா .. இல்லன்னா நீங்க கிளம்ப மாட்டீங்களே என்றாள் கவலையோடு .

நான் ஃபீல் பன்றது , நான் நினைக்குறது , என்னோடக் கவலையெல்லாம் உனக்கு என் முகத்தைப் பார்த்தேத் தெரியுதா டார்லிங்க் என்றான் உல்லாசமாக . அவனுக்கு சற்று முன் புவி போன் செய்தது கூட மறந்துப் போயிருந்தது , மங்கையவளின் அக்கறையில் . உண்மையிலேயே அவன் இப்போது தான் இந்த மனநிலையை உணர்கிறான் . காரணம் தன் காதல் மனைவி .

ஆம் காதல் மனைவி தான் , அவள் காதலித்தாள் அது எல்லாருக்குமேத் தெரியும் . அவன் காதலித்தானா ? அது அவனுக்கேத் தெரியாது , ஆனால் எப்போது ரத்தம் சொட்ட , சொட்ட அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தினானோ , அன்றே அவனது அத்தனை அகங்காரங்களும் தூள் தூளாகிப் போயிருந்தது .

அன்றிலிருந்து அவனில் உதித்த காதல் மெல்ல மெல்லத் துளிர்க்க ஆரம்பித்து இன்று விஸ்வரூபமெடுத்திருந்தது . தன் வாழ்க்கையை மாற்றிக் கொடுத்தத் தேவதைக்காக என்ன வேண்டுமானலும் செய்யலாம் . இவளோடு தன் வாழ்வு முழுமைக்கும் வாழவேண்டும் , அதுவும் நிம்மதியாக , மகிழ்ச்சியாக . அதற்கு தன் கடந்த காலங்களின் சிறு துரும்பு கூடத் தன் வழியில் இருக்கக் கூடாது , என்று நினைத்தவன் அதை இன்றேத் தீர்த்துவிடும் நோக்கில் , புவியைத் தேடிப் போக ஆயத்தமானான் .

எதிரில் பரிதவிப்புடன் நின்றிருந்த மனைவியை நெருங்கியவன் , அவள் முகத்தைத் தன் கைகளில் தாங்கி , “ அதட்டி , உருட்டி லவ் பண்ணி என்னை P பைத்தியமாக்கின மிருவைக் காணோம் , அவங்க தான் எனக்கு வேனும் . இந்தப் பயந்தாங்கொள்ளி மிரு வேண்டாம் என கண்களில் குறும்பு மின்னக் கூற ,

முகுந்த் உங்களுக்கு ஏதோ ஆச்சு , சம் இஸ்ஸூ எங்கிட்ட மறைக்கிறீங்க , எனக்குத் தெரியக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா .. இல்லை இவக்கிட்ட சொல்லனுமான்னு யோசிக்குறீங்களா ?” என்றவளின் இதழ்களைத் தன் இதழ் கொண்டு வன்மையாக மூடியவன் , சில நிமிங்களுக்குப் பிறகு விட்டு , “ உன்னை வருத்த வேண்டாம்னு நான் தனியாக் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தா , எனக்கும் கொடு , நானும் வருத்தப்படுறேன்னு சொல்றவளை என்ன செய்ய ..? ம்ம் .. பிரச்சினைதான் , ஆனா பெரியப் பிரச்சினையெல்லாம் இல்லடா ..”

நான் ஆரம்பிச்சு வச்சப் பிரச்சினை , நான் தானே முடிச்சும் வைக்கனும் , வினை விதைத்தவன் , அறுவடையும் அவனே செய்தா தான் சரி . பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் போய்டக் கூடாதில்லையா ? அது நம்ம குழந்தைகளையும் பாதிக்கும் . நான் எப்படி வேனும்னாலும் இருந்துருக்கலாம் . ஆனா என்னோட குழந்தைகள் என்னை மாதிரி ஆகிடக் கூடாது . சோ இன்னையோட எல்லாத்தையும் முடிச்சிடலாம் . இனி முகுந்த் புது மனுஷனா , இந்த மிருவுக்கு மட்டுமேச் சொந்தக்காரனா வரப்போறான் எனக் கண்சிமிட்ட , அப்போதும் அவள் முகத்தில் தெளிவு வரவில்லை .

தன் கைகளில் வைத்திருந்த அவள் முகத்தைத் தன் மார்போடு அனைத்துக் கொண்டவன் , “ நமக்கான நாள் இது இல்லையோ என்னவோ நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன் நீ தூங்கி ரெஸ்ட் எடு . நீ ரெஸ்ட் எடுக்கிறது இன்னைக்குத் தான் கடைசி டே வா இருக்கப் போகுது . பிறகு நீ கேட்டாலும் மாமா உனக்கு ரெஸ்டே கொடுக்க மாட்டேன் . வரட்டா பேபி .. டேக் கேர் என அவள் உச்சந்தலையில் அழுத்தி ஒரு முத்தம் வைத்துக் குறும்பாகப் பேசினாலும் , அது அவன் கண்களை எட்டவில்லை என்று காதல் கொண்ட பெண்ணுக்கு தெரியாதா .?

என்னாச்சு இவனுக்கு , என்ன ஃபோன் கால் , என யோசித்தபடியே கார்திக்கிற்கு அழைக் , அவன் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வர , கார்த்திக் அப்படியெல்லாம் போனை ஆப் செய்பவன் இல்லையே . முகுந்த் தான் கார்த்திக்கின் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து எடுத்து வைத்திருக்க வேண்டும் எனச் சரியாக யோசித்தவள் , பிறகு தயக்கமாகவே புவிக்கு அழைத்தாள் .

முதல் ரிங்கிலேயே எடுத்தவன் என்ன சிஸ் இவ்வளவு லேட்டாவாக் கண்டுபிடிக்கிறது .” என நக்கலாகக் கேட்க ,

ப்ரோ திஸ் இஸ் டூ மச் . முகுந்த் இப்போத் திருந்திட்டார் , தப்பு செய்யும் போது விட்டுட்டு , திருந்தின பிறகு தண்டிக்காதீங்க . ப்ரோ அவர் மாறுறதுக்காக நான் ரொம்பவேக் கஷ்டப்பட்டிருக்கேன் . பிளீஸ் புரிஞ்சுக்கோங்க என வேண்டியவளை ,

சிஸ்டர் என் ஸ்ருதியும் இப்படித்தானே கெஞ்சிருப்பா , தப்பு செய்யும் போது தண்டனை கொடுத்தா அது அவ்வளவு வலியைக் கொடுக்காதும்மா , திருந்தி வாழனும்னு ஆசை வரும் பாரு , அப்போ அடிக்கணும் , அதுதான் சரியான தண்டனை . ஒரு ஆம்பள அவன் செஞ்ச தப்புக்காக நீ இவ்வளவு கெஞ்சுறியே , என் ஸ்ருதி .. அவளுக்காக நான் எந்தளவுக்கும் இறங்குவேன்னு இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே .

அவ ஓரு பொண்ணு எந்தத் தப்பும் செய்யாம , எந்தப் பாதுகாப்பும் இல்லாம இந்த நாட்டை விட்டே போனா இல்ல அதுக்கு யார் காரணம் உன் புருஷன் தான . என் ஷ்ருதி இன்னைக்கு பேரண்ட்ஸ் இல்லாம இருக்கிறதுக்கு அவன் தானே காரணம் , ஷ்ருதியொட நிலையில நீ இருந்தா என்ன செஞ்சிருப்ப சொல்லு எனக் கோபமாகப் பேசவும்

அண்ணா பிளீஸ் அவர் செஞ்ச எதையும் நான் இல்லைன்னு சொல்லல , நியாயப் படுத்தவும் இல்ல . ஆனா அவர் இப்போ திருந்தி ஒரு மனுஷனா ஒரு வாழ்க்கை வாழனும்னு நினைக்கிறார் . அதைக் கெடுத்து அவரைப் பழைய மாதிரி ஆக்கிடாதீங்க பிளீஸ் . நான் ஒரே பொண்ணு எங்க வீட்ல , எனக்கு பிரதர் சிஸ்டர்னு யாரும் கிடையாது நான் உங்களை என் பிரதரா பார்க்கிறேன் . எனக்கு முகுந்த் தான் லைஃப் , அவரை எனக்கு கொடுத்துருங்க please” எனக் கெஞ்ச

ஹாஹாஹா சென்டியா ..? நான் சென்டிமென்டல் இடியட்னு உனக்கு யார் சொன்னா எனக் கடகடவென சிரித்தவன் பின் சிஸ்டர் பீ சீரியஸ் , முகுந்த் பிஸினஸ் பாக்காம சுத்தின காலத்தை பயன்படுத்தி , அவர் கம்பெனில டிரக்ஸ் மிஸ் யுஸ் பண்ணிருக்காங்கன்னு , எங்களுக்குத் தகவல் வந்து புல் அண்ட் புல் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டுதான் முகுந்த்கிட்ட சொல்லிருக்கேன் .”

இதுல நான் போலீஸ் ஆஃபிசரா மட்டும்தான் இன்வால் ஆகிருக்கேன் , வேற யாராவும் இல்ல . தென் உனக்காக செய்யலனாலும் திருந்தி வாழனும்னு நினைக்கிற ஒரு மனுஷனுக்கு உதவி செய்றேன் . இந்த வாய்ப்பை நான் கொடுக்கிறேன் பயன்படுத்திக் வேண்டியது உன்னோட புத்திசாலி தனம் . அண்ட் வெரி சாரி மா இப்போ முகுந்தை வர வைக்குற மாதிரி ஆகிடுச்சு , பார்மாலிட்டீஸ் முடிச்சு ஒன் ஹவர்ல அனுப்பிடுவேன் . ஓகே வா என்றவன் ,

பிறகு இந்த ஒரு தடவைப் பொழச்சுப் போகட்டும்ன்னு விடுறேன் . ஆனா மறுபடியும் எங்களைத் தொந்தரவு பண்ணனும்னு நினைச்சாக் கூட , அவன் இந்த உலகத்துல வாழ்றது அன்னைக்குத் தான் கடைசி நாளா இருக்கும் , பார்த்து இருக்கச் சொல்லுங்க ..” எனவும் , இங்கோ மிருதுளாவுக்கு அப்படி ஒரு அழுகை தேங்க்ஸ் அண்ணா தேங்க்ஸ் அண்ணா என்றவாறு ,

சிஸ்டர் காதல்ல பிரச்சனை வந்தா , அது எப்படி வலிக்கும்னு எனக்கும் தெரியும் . இது உன்னோடக் காதலுக்கு நாங்க செய்யும் மரியாதைன்னு வச்சுக்கோங்க , சரியா . இப்போ எனக்கு டைமாச்சு நீங்க ஃப்ரீ ஆனதும் ஒருநாள் வீட்டுக்கு வாங்க . சரியாம்மா என்று வைத்துவிட ,

கேட்ட மிருதுளாவிற்கோ மனதில் ஒரு ஆசுவாசம் , நிம்மதி , இனி எந்தப்பிரச்சினையும் தங்கள் வாழ்க்கையில் வராது என்று முழுமையாகத் தோன்ற , அதன் பிறகு முகுந்த் சென்ற பிரச்சினை ஞாபகம் வர , தன் தந்தைக்கு அழைத்து புவிக் கூறியதைச் சொல்லி , போய் பார்க்குமாறு கேட்டவள் , அடுத்து அவன் வரும் நேரத்திற்காக , ஆனந்தமாகக் காத்திருந்தாள் .

இங்கோ மிருதுளாவிடம் பேசிவிட்டு , ஏதோ யோசனையில் இருந்த புவியைப் பார்த்து விக்கி முறைத்துக் கொண்டிருந்தான் .

ஏண்டா மாப்ள பாசமா முறைச்சிட்டு நிக்குற ..” – புவி

ஏன் முறைக்குறேனு உனக்கு தெரியாது , நாமளே தேடினாலும் கிடைக்காது , அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சது , அவனை ஆயுளுக்கும் தூக்கி உள்ளே வைக்குறதுக்கு . ஆனா நீ அவனை விட்டுடலாம்னு சொல்ற . இவனாள நம்ம ஸ்ருதி பட்டக் கஷ்டமெல்லாம் மறந்து போயிடுச்சா ? எவ்வளவு வில்லத்தனம் பண்ணி இருக்கான் .” – விக்கி

மாப்ள எனக்கும் அவனக் கொண்ணுடனும் போல வெறி இருக்கு , ஆனா அப்படி செஞ்சா ஸ்ருதி நிம்மதியா இருப்பாளா சொல்லு . கண்டிப்பாக் கிடையாது , இதே முகுந்தும் மிருதுளாவும் சேர்ந்து சந்தோசமா வாழ்ந்தா , அவ மனசும் நிம்மதியா இருக்கும் , தப்பு செய்தா தண்டனை அனுபவிக்கனும் தான் இல்லைனு சொல்லவே இல்ல , ஆனா அந்த தண்டனை எப்படி இருக்கணும் சொல்லு , அதுதான் முக்கியம் .”

மன்னிச்சு அவங்களை வாழவிட்டு , அவங்க முன்னாடி நாம வாழரது தான்டா உண்மையிலேயே அவங்களுக்கான தண்டனை . இதைத்தான் ஸ்ருதியும் விரும்புவா , நீ வர வேண்டாம் நானே எல்லாம் பார்த்து பார்மாலிட்டீஸை முடிச்சு அனுப்பிடுறேன் , நீ வந்தா ஓவர் ரியாக்ட் பண்ணுவ ,” – புவி

என்னவோ போ , வர வர நீ தியாகியா மாறிகிட்டு இருக்க , வேற என்ன சொல்ல , அந்தக் கார்த்திக்கை சும்மா விடறோம்னு நினைக்கும் போது தான் ,” எனக் கடுப்பாகப் பேசியவனிடம் , “ விடுடா , விடுடா . இன்னொரு வாய்ப்புக் கிடைக்கும் பார்த்துக்கலாம் . நான் மட்டும் போறேன்னு சொன்னா பொம்மி என்ன சொல்லுவா தெரியல , சரி நான் அவக்கிட்ட சொல்லிட்டுக் கிளம்புறேன் .” என்றபடியே அந்த அறைக் கதவைத் திறக்க , அதுவரை அதில் சாய்ந்திருந்தவள் , கேட்ட செய்திகளின் தாக்கத்தில் மயங்கி அப்படியே அவன் மேல் விழுந்திருந்தாள் .

பொம்மி .. பொம்மிம்மா என்னடா பண்ணுது , விக்கி தண்ணி எடுத்துட்டு வா ,” என்றவன் , தன்னவளை அள்ளிக் கொண்டு அறைக்குள் ஓடியவன் , மெத்தையில் படுக்க வைத்துக் கன்னத்தைத் தட்ட , அதற்குள் நீரோடு வந்த விக்கி அவள் முகத்தில் அதைத் தெளிக்க , அப்போது அவள் கண்விழிக்காமல் போக ,

விக்கி பொம்மியை நான் பார்த்துக்குறேன் . நீ ஸ்டேஷன் க்கு போ .. வேற யாரும் கேன்டில் பன்றதுக்குள்ள நீ போயிடு . ரொம்ப முக்கியம் , முகுந்த் மேல ஒரு அடி விழக் கூடாது . நான் மிருதுளாவுக்கு வாக்குக் கொடுத்துருக்கேன் . அவனை எதுவும் செய்யாம இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியக் கொண்டுவருவேன்னு .. உனக்குத்தான் நான் முக்கியமா சொல்றேன் . பார்த்துக்கோ . கோ ஹெட் ..” என்று விட்டு , மீண்டும் ஸ்ருதியிடம் கவனமாகி விட , வேற வழியில்லாம் விக்கி ஸ்டேஷன் நோக்கி கிளம்பினான் .

சில நிமிடப் போராட்டங்களுக்குப் பிறகு , மெல்லக் கண் விழித்தாள் புவியரசனின் ராணி . “ என்ன பொம்மிம்மா , என்னை இப்படி பயங்காட்டிட்ட , நீ முழிக்குற வரை என் உயிரே எங்கிட்ட இல்ல . ம்ப்ச் .. எப்போ சாப்பிட்ட , பாரு மயக்கம் போட்டு விழற அளவுக்கு உன் ஹெல்த் இருக்கு . முதல்லக் கிளம்பு , நாம டாக்டர்கிட்டப் போயிட்டு வந்துடலாம் என் பதட்டமாகப் பேசியவனைத் தன்னை நோக்கி இழுத்தவள் , பேசிக் கொண்டிருந்த அவன் வாயைத் தன் வாய் கொண்டு மூடினாள் வேகமாய் .

இப்படியொரு செய்கையை எதிர்பார்க்காதவன் , சற்றுத் தினறி , அவளிடமிருந்து விலக , விட்டாள் தானே அவள் . அவனது கெஞ்சல்கள் கொஞ்சலாக மாறி , காமனின் கலைக் கூடத்தில் அடியெடுத்து வைக்க , அழகாக ஆரம்பமானது அவர்களது இல்லறம் .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here