தனது இருக்கையில் அமர்ந்திருந்த ராகவை பார்த்தவனின் முகம் ஒரு நிமிடம் திகைத்து பின் அடுத்த நொடி இயல்பிற்கு வந்து இருந்தது. லேசான சிரிப்பு கூட புதிதாக உதயமாகி இருந்தது உதட்டில் கூடவே எதிரில் இருந்த ராகவிற்கு ஈக்குவலான திமிர் தெனாவெட்டு இவனுக்கும் தோன்ற…
எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். கண் அவனது கையில் நிலைக்க அப்புறம் எப்படி இருக்கறிங்க சார். கிண்டலாக வந்து விழுந்தது வார்த்தைகள்.
செம.. குரு செமையா இருக்கிறேன். அப்புறம் நீ… நீ எப்படி இருக்கற. கை காயம் அதுக்குல்ல சரி ஆகிடுச்சா…
அப்புறம் அடுத்ததாக என்ன சொல்ல போற. வேலைய விட்டு தூக்கிட்டேன்னு தான. அந்த சிரமம் உனக்கு வேண்டாம். நானே என்னோட ராஜினாமா லெட்டரை தரேன். எழுந்தவன் வெளியேற…
குரு பயந்துட்டான்னு சொல்லுவேன் பரவாயில்லையா.
வாசல் வரை சென்றவன் திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்து நான் ஏன் உன்னை பார்த்து பய படணும்.
நான் எதுவுமே சொல்லாமல் வெளிய போறேன்னு சொன்னா நான் அப்படி தான் முடிவு பண்ண வேண்டியது இருக்கும்.
சரி. போகலை. என்ன பண்ணறதா இருக்கறிங்க. சொல்லு கேட்கிறேன்.
குரு உன் தைரியம் ரொம்ப பிடிச்சி இருக்கு. அப்பா கிட்ட விசாரிச்சா ஆகா ஓகோன்னு செம பாராட்டு. விசாரிச்ச வகையில ஒன்னும் குறை சொல்ல முடியாது. உன்னை அனுப்பிட்டா நஷ்டம் எனக்குத்தான. அதாவது எங்க ஆர்.எஸ் குரூப்ஸ்க்கு. சோ வேலையில கை வைக்க மாட்டேன். உனக்கான என்னோட தண்டனை என்னன்னு முடிவு பண்ணிட்டேன். என்னன்னு தெரிஞ்சுக்க காத்திரு . இப்போதைக்கு இந்த சீட் உன்னோடது தான் பை.
கூறியபடி ராகவ் வெளியேற…
கொஞ்சம் பயமாக இருக்கு சார் . உங்கள பார்த்து…அவனுக்கு கேட்கும்படி கூறியவன். …என்ன செஞ்சுடுவான்னு பார்க்கலாமே…
நினைத்தவன் தோலை குழுக்கியபடி குரு தனது வேலையை கவனிக்க சென்றான்.
இங்கு வேலைக்கு சேர்ந்த நாள் முதல்
இந்த நிமிடம் வரை எந்த பிரச்சனையும் வந்ததில்லை. இது வரை எந்த குழறுபடியும் இல்லாமல் போகும் வாழ்க்கையில் இவனால் என்ன ஆக போகிறது. அந்த நிமிடத்தில் அத்தனையையும் மனதில் இருந்து தூற அகற்றியவன் தனது வேலையில் கவனம் செலுத்தினான்.
உருகும் ஐஸ்கிரீமை பொருட்படுத்தாது பத்தாவது முறையாக கேட்டுக்கொண்டு இருந்தாள் சுமித்ரா.
உண்மையாதான் சொல்லறையா ராகவ். நிஜமாகவே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டியா…
சுமித்ரா நீ என்ன பேச விடுவியா . மாட்டயா. மொதல்ல ஐஸ்கிரீமை சாப்பிடு. தெளிவாக உனக்கு புரியற மாதிரி சொல்லறேன்.
ராகவ்… எனக்கு புரியலை. யாரையோ பழி வாங்க போறேன்னு சொன்ன. இப்ப தீடின்னு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல போறேன்னு சொல்லற. நிஜமாகவே எனக்கு புரியல.
அவனுக்கு என் ஸ்டைலில் தண்டனை தரணும் அதுக்கு நீ உதவி செய்வியா. இல்லையா….
டேய் நீ மொதல்ல என் ப்ரெண்ட் அப்புறம் தான் மத்தது . சோ சொல்லு என்ன செய்யணும்.
சரி நான் சொல்லறத நல்லா கேட்டுக்கோ… தன்னுடைய திட்டத்தை அவளுக்கு கூற அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டு இருந்தாள்.
ராகவ் வேற ஏதாவது யோசி . இது வேண்டாம். ஒரு வேளை உண்மை தெரிஞ்சா என் நிலைமையை யோசிச்சு பாரு.. இது சரி வராது. நீ சொல்லறதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். இது சீட்டிங். நீ நேரா போய் நாலு அரை வேணும்னாலும் அரைஞ்சுடு. இது வேண்டாம். நான் மட்டும் இல்லை. யாருமே சம்மதிக்க மாட்டாங்க.
ஸாரி சுமி. நானும் இதை உன்னை தவிர யார் கிட்டேயும் கேட்க மாட்டேன்.
என் கூட இருக்கற ஒவ்வொருத்தரும் என்ன ஹிரோவா கொண்டாடறாங்க.
அவங்க கிட்ட இத சொல்ல முடியாது.
நீ தான் பண்ணனும். எனக்காக….
எனக்காக இது கூட பண்ண மாட்டியா.
ராகவ்….டேய் வந்து அப்பா கிட்ட என்ன சொல்ல . அப்பாவுக்கு தெரிஞ்சுதுன்னா….
தெரியாம நான் பார்த்துக்கறேன். உன்னை தனியா விட மாட்டேன். ஒவ்வொரு அசைவிலேயும் கூட இருப்பேன். சரி நாளையில் இருந்து ஆபீஸிக்கு ரெடி ஆகு.
என்னது ஆபீஸ் போகணுமா….
எதுக்கு இப்போ இவ்வளவு அதிர்ச்சி ஆகற… இங்கே பாரு அவன் அங்கே இருந்து இந்த பக்கம் வர மாட்டான். அப்போ நாம தான் தேடி போகணும். மூனு மாசம் அங்கே அந்த ஆபீஸ் போணா போதும். மூன்று மாசம் கழிச்சு நம்ம நிச்சயம். இது தான் அவனுக்கு குடுக்கற தண்டனை. உன்னை மறக்க முடியாம அவன் சாகற வரைக்கும் நினைச்சுக்கிட்டே இருக்கணும். என்ன போல ஆளுங்க கிட்ட மோதினா இப்படி கூட நடக்குமின்னு அவனுக்கு தெரிய வைக்கணும்.
ராகவ் எனக்கு எந்த வேலையும் தெரியாதுடா. நீ பாட்டுக்கு போன்னு சொன்னா. எனக்கு இந்த பிளானே புடிக்கல…
கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட் தான நீ. அந்த வேலைதான் அங்கே போய் பார்க்க போற. சரி ஒன்னு பண்ணலாம். அவன் உன்னை விரும்பினான்னு தெரிஞ்சா அன்றையில் இருந்து நீ ஆபீஸ் போக வேண்டாம். அது ஒரு மாதத்தில் நடந்தாலும் சரி… சரியா. சுமி… சரின்னு சொல்லு….
தொடரும்.