தேடி வந்த சொர்க்கம் -17

0
377

குருவை அழைத்தபடி சென்ற ரெண்டாவது நிமிடம் சுமதியின் முன்பு வந்து நின்றிருந்தான் ராகவ் சுமிக்குமே சற்று ஆச்சரியம் இவ்வளவு விரைவாக வந்தது. அவளது கை நடுக்கத்தை உணர்ந்தவன் அவளது கை பிடித்து எழுப்பி வா கார்ல் வீட்டுக்கு போகலாம். உன்னோட வண்டியை டிரைவர் ஓட்டிட்டு வரட்டும். கையை நீட்ட எதுவுமே சொல்லாமல் சாவியை கொடுத்தாள்.

சாதாரண நேரமாய் இருந்து இருந்தால் நான் வண்டியை ஓட்டறேன். நீ பின்னால் உட்காரு என வம்பிழுத்து இருப்பாள். இப்போதைக்கு எதுவுமே தோன்றாமல் அமைதியாக அவனோடு செல்ல…

காரில் ஏறியவுடன் ராகவ் வண்டியை ஆன் செய்தபடி…. செம தைரியம் இல்ல. ஒருத்தனே நாலு பேரை அடிக்கறான்.

அவனை அதிர்ச்சியாக பார்த்தவள் . .நீ பார்த்துட்டா இருந்த….

பின்ன உன் கிட்ட என்ன சொன்னேன். வந்துவிட்டு இருக்கறேன்னு தான….நீ கூப்பிடவும் முதல்ல போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணினேன். ரகு அங்கிள் தான் இந்த ஏரியா இன்சார்ஜ் பக்கத்தில் தான் இருந்தாங்க போல. உடனே வந்துட்டாங்க. அவங்க வரலைன்னா நான் வந்து இருப்பேன். உன்னை பயம் காட்டினவங்கல சும்மா விடுவேன்னு பார்த்தியா. இன்னும் பத்து நாளைக்கு எவனும் எழுந்திரிக்க மாட்டான். அந்த குரு முதற்கொண்டு…
அவனை நான் தான் அடிக்க மாட்டேன்னு சொன்னேன். அவனா ஆசையா அவன் மாமியார் வீட்டுக்கு போய் இருக்கறான்… வாங்கிட்டு வரட்டும்….

சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ராகவ் என கத்தியிருந்தாள்…. ஒரு நிமிடம் வண்டி ஆட்டம் கண்டு நேரானது.

ஏய் ஏன்டி இப்படி கத்தற…

வண்டியை நிப்பாட்டு… வண்டியை நிப்பாட்ட போறியா இல்லையா…

இரு… ஒரமாய் நிறுத்தியவன் இவளது
முகம் பார்த்து என்ன என கேட்க…

வண்டியை திருப்பு நேரா ஸ்டேசனுக்கு வண்டியை விடு. உன்னோட பிரச்சனைக்கு நீ அவன நேர்ல கூட நாலு அடி அடிச்சிக்கோ… இன்றைக்கு அவன் என்னை காப்பாத்தி இருக்கிறான். அவன் மேல சின்னதாய் கூட எதுவும் ஆக கூடாது.

அவளையே அவள் பேசுவதையே பார்த்தவன். வித்தியாசமா தெரியற சுமி. அதுவும் இவ்வளவு வேகமா சத்தமாக வேற பேசற…
ம்….நீ கேட்டு என்னைக்கு மாட்டேன்னு சொல்லி இருக்கிறேன். அங்கே எல்லாம் போக வேண்டாம்.
இரு… என்றவன் தனது செல் போனில் ரகுவிற்கு போன் அடித்தான்…

ரகு அங்கிள் அங்கே கீரிம் கலர் ஷர்ட்ல கொஞ்சம் ஹெட்டா ஒருத்தன் இருப்பான். பேரு குரு. அவன் தான் நம்ம சுமியை காப்பாற்றினது. அவனை ஓன்னும் செய்ய வேண்டாம். விட்டுடுங்க. நம்ம ஆபீஸ்ல தான் வேலை செய்யறான்….மிச்ச நாலு பேரையுமே நல்லா கவனியுங்க …
முடிஞ்சா குருவ உங்கள் வண்டியிலயே அவனை ஆபீஸ்ல டிராப் பண்ணிடுங்க.

போனை கட் செய்தவன். இப்ப ஓகே வா…. வீட்டுக்கு போனதும் ஆபீஸ்க்கு போன் பண்ணி தர்றேன். அவன் ஆபீஸ்க்கு வந்துவிட்டதா தகவல் வரும். போதுமா….

அங்கே அதே நேரம் லத்தியோடு இவனை நெருங்க… குருவுமே ஒரு நிமிடம் பயந்து இருந்தான். கேட்டா சொல்லலாம். கேட்காமலே அடிக்கறவங்க கிட்ட என்ன சொல்ல…
திகைத்தபடி பார்த்து இருக்க….

உள்ளேயிருந்து வந்தவரோ மாரியப்பன் அந்த பையன உள்ள அனுப்புங்க .. குரு தான உன் பேரு.
உள்ள வாப்பா….அழைத்து சென்றவர்
ஸாரி பயபடுத்திடாறா. ப்ளாஸ்கில் இருந்த காபியை ஊற்றி கைகளில் தர…

இல்ல. வேண்டாம் ஸார். நான் கிளம்பறேன்.

நோ நோ அப்படி சொல்ல கூடாது. நீங்க எவ்வளவு பெரிய காரியம் செஞ்சு இருக்கறிங்க. நானே உங்கள் கூப்பிட்டுட்டு போய் விட்டுடறேன்.

என்ன ஏதுனே கேட்காமல் இப்படி அடிச்சா எப்படி ஸார். நாளைக்கு எங்கையாவது தப்பு நடந்தால் ஜனங்க எப்படி தைரியமா முன்னாடி நின்னு தட்டி கேட்பாங்க.

ஸாரி குரு சில நேரம் இப்படி தான் ஆகுது. இனி இந்த பசங்களால எந்த பிரச்சனையும் வராது. வாங்க…

நன்றி ஸார். நான் ஆட்டோவில் போய்க்கறேன். உங்கள் வண்டியில் வேண்டாம்.

சரி..சரி வாங்க. மாரியப்பன் இவங்க நமக்கு வேண்டிய பையன். சொன்னவர் வாசல் வரை வந்து கை குலுக்கி அணுப்பி வைத்தார்.

அங்கே வீட்டுக்கு அழைத்து வந்தவனோ சுமியையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஏண்டா அப்படி பார்க்கற.

நிறைய வித்தியாசம் தெரியுது. உன் கிட்ட…

அதெல்லாம் ஒன்றும் இல்ல. நீ என்ன வாங்கிட்டு வந்தே டெல்லியில இருந்து.

அப்பா கேட்டுட்ட. இந்தா டிரஸ்… அப்புறம் நிறைய சாக்லேட். பிரிஜ்ல இருக்கு… சரி நான் கிளம்பட்டா…

ஆபீஸ்க்கு போன் அடிச்சி குடு …

நீ நம்பல இரு…. ரீங் போய் கொண்டு இருக்க சற்று நேரத்தில் குருவின் குரல் காதில் விழ போனை இவள் புறம் நீட்டினான். எதிர் முனையில் ஹலோ ஹலோ என்ற குருவின் ஆழ்ந்த குரல் அவளுக்கு கேட்க எதுவும் பேசாமல் கட் செய்தவள் இவனிடம் போனை நீட்டினாள். கொஞ்சம் நிம்மதி திரும்பி இருந்தது சுமிக்கு…

அடுத்த நாள் விடியல் அவளை ஏதோ ஒரு உலகத்தில் சுற்ற வைத்து கொண்டிருந்தது. அவளுடைய அப்பாவோடு உணவு உண்டவள் அவர் புறப்படவும் இந்த வழியே கிளம்ப தயாராய் இருந்தாள். பிங்க் நிற சுடிதார் அதே நிறத்தில் கார்ட்டன் ஷால் என அழகாய் கிளம்பியவள். ஏனோ காலையில் இருந்தே ராகவ் அவளை அழைக்க வில்லை. புறப்படும் நேரம் அழைத்தவன். அப்பா புது வேலை தந்துட்டாங்க சுமி. சோ அங்கே வர முடியாது.

என்ன வேலைடா….

பர்னிச்சர் எக்ஸ்போ டெல்லியில் போட்ட மாதிரி இங்கேயும் போட போறாங்க. இங்க பக்கத்தில் இருக்கற மண்டபத்தை பதினைந்து நாளைக்கு
வாடகை எடுத்து இருக்கறாங்க. எல்லாம் அரேன்ஜ்மென்ட்டும் நான் தான் பார்க்கணுமாம். இப்போதைக்கு ரெண்டு நாள் பயங்கர பிஸி … நேரம் கிடைச்சா வந்து பார்க்கிறேன். …

ம்…சரி.

குருவோடு நிறைய பேசணும். ஏதேதோ நினைவில் அங்கு செல்ல
அன்று அதுவும் நடக்கவில்லை. ராகவ் ஏற்கனவே சொல்லி இருக்க இங்கே இருந்த பர்னீச்சர்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். கூடவே நின்று கவனித்து கொண்டு இருந்தான். சில நேரம் அதிக பளு உள்ளதை அவனும் சேர்ந்து தூக்கியபடி….இரண்டு முறை சென்று பார்க்க இரண்டு முறையும் அதையே செய்து கொண்டிருந்தான்.

இருக்கைக்கு வந்தவளுக்கோ அவ்வளவு கோபம். இவனை என்ன சொன்னாங்க. பொறுப்பா ஆபீஸை பாருண்ணா. வெயிட்டை தூக்கிட்டு இருக்கறான். கை கால்ல விழுந்தால். இவனுக்கு அறிவே கிடையாதா….
வாய்க்குல்லேயே திட்டியபடி அமர்ந்து இருந்தாள்.

எல்லாமே மாலை வரை தான். நேரம் மூன்று மணியை தாண்டி இருக்க புறப்பட தயார் ஆனவள் வழக்கம் போல் பின்புறத்தில் வேலை செய்யும் பெண்கள் பிரிவிற்கு செல்ல…

அங்கே..எதிர் பாராமல் அடுக்கி வைத்த மரம் சரிய
அருகில் நின்றிருந்த பெண்ணின்
கையில் நீளமாக சற்று ஆழமாக கிழித்து இருந்தது மரபலகையில் இருந்த ஆணி ஒன்று.

பார்த்தவள் பதறியபடி அருகில் செல்ல
சிறு வயது என்பதினால் ரத்தம் சற்று வேகமாக வர ஆரம்பித்தது. சொட்டு சொட்டாக ரத்தம் வழிய எதுவும் யோசிக்காமல் தனது ஷாலை எடுத்து கட்டியவள். கைகளை பற்றிய படி அமர்ந்து வைத்தாள். சற்று நேரத்திற்கு எல்லாம் பரபரப்பு தொற்றிக் கொள்ள அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சுமி….கூடவே குருவும்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து அந்த பெண்ணை அழைத்து வந்தனர் செவிலியர் கையில் நான்கு தையலோடு…ஏற்கனவே அந்த பெண்ணின் தகப்பனாற்கு போன் செய்திருக்க அவரிடம் ஒப்படைத்து வேண்டிய மருந்துகளை வாங்கி அணுப்பி விட ஒரு மணி நேரம் கடந்து இருந்தது.

இப்போதுதான் சுமியை பார்க்க
மிகவும் சோர்வாக அமர்ந்து இருந்தாள். பார்த்தவன் அருகில் இருந்து ஒரு டம்ளர் காபி வாங்கி வந்தவன் இவளிடம் நீட்ட…

எதுவுமே சொல்லாமல் வாங்கி கொண்டாள். சுமித்ராவை நினைக்க சற்று ஆச்சயர்யமாக உணர்ந்தான். முதல் முதலில் ரத்தம் பார்த்துக் மயங்கி விழுந்தவள் இன்று யோசிக்காது ஷாலை சுற்றி கையை உயர்த்தி பிடித்தபடி வந்தது. பெண்களின் மனமே விசித்திரம் தான். இதை மனதில் நினைத்தபடி அவளை பார்க்க அப்போது தான் தெரிந்தது. அவளது பிங்க் நிற சுடிதாரில் ஒரு புறம் முழுவதும் ரத்தக்கறை திட்டு திட்டமாக இருந்ததை…..

ஒரு நிமிடம் சுமித்ரா இங்கேயே இருங்க. வந்திடறேன்.

என்ன என்பது புரியாமலே தலையாட்டினாள். அவளை பொறுத்தவரையில் அந்த இடமே பிடிக்கவில்லை. அதை அவளது முகமே காட்டி கொடுத்தது. உடையில் ரத்தகறை ஆனது அதுவும் அவளுக்கு தெரியவில்லை.

ஐந்து நிமிடம் தாண்டி கையில் பார்சலோடு வந்து இருந்தான். சுமி இது டிரஸ் இத மாத்திகங்க. போட்டு இருக்கற டிரஸோட வீட்டுக்கு போக வேண்டாம்.

அப்போது தான் தனது உடையை பார்த்தவள் .அவன் வாங்கி தந்த உடை அவனது அன்பை பறைசாற்ற வாங்கி வந்த உடையோடு அவனையும் அவ்வளவு பிடித்தது அந்த நிமிடம் அவளுக்கு… மகிழ்ச்சியோடு உடை மாற்ற சென்றாள்.

இந்த மகிழ்ச்சி மொத்தமும் சில நாட்களில் மொத்தமாய் மறைய போவது அப்போது அவளுக்கு தெரியவில்லை.

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here