தேடி வந்த சொர்க்கம் -22

0
322

கன்னத்தில் விழுந்த அரையில் கைகளை கன்னத்தில் தாங்கியபடி எதிரில் இருந்த தன் தந்தையை பார்த்துக் கொண்டு இருந்தான் ராகவ் . எதிர் பார்த்த ஒன்று தான் ஏன் என்றால் அது சுமி மீது கொண்ட பாசம் நிச்சயம் அடியை எதிர் பார்த்து வந்ததால் பெரிய அதிர்ச்சியாய் தெரியவில்லை.

ராகவின் தாய் மீராவிற்கு தான் மனது பதறியது. தப்பே செய்யட்டும் அதுக்காக அடிப்பிங்ளா ..

பேசாத எல்லாம் நீ கொடுத்த இடம் தான். இப்படி குட்டி சுவராகி நிக்கறான். எப்ப கேட்டாலும் அவனுக்கு தெரியும். அவனுக்கு தெரியும்….இப்ப பாரு என்ன செஞ்சு வச்சிருக்கறான்னு. என்றைக்காவது இத செய்யாத. இப்படி இருன்னு ஏதாவது சொல்லி வளர்ந்து இருக்கறயா …

பார்த்துக் கொண்டு இருந்த சுமதியின் தகப்பனாருக்கு தான் அவ்வளவு அதிர்ச்சி. ஏண்டா பிரபா தோழுக்கு மேல வளர்ந்தவனை கை நீட்டி அடிக்கிற..

நீ பேசாதடா… கொஞ்ச நாளா எங்கேயும் போகாமல் வீடு தொழில்ன்னு ஒழுங்காக இருக்கறான்னு நினைச்சா இவன் என்ன செஞ்சு வச்சி இருக்கறான்னு.
உலகம் தெரியாம வளர்ந்த பொண்ணு….. சுமியை என் கூட ஆபீஸ் கூப்பிட்டுட்டு போறேன்னு உன் கிட்ட என் கிட்ட பொய் சொல்லிட்டு… ஒரு வேளை அந்த பையன் தப்பானவனா இருந்தா இப்ப வேற மாதிரி பிரச்சனை ஆகி இருக்குமே…

வந்ததுமே சுமி விஷயத்தில் நடந்ததை சொல்லி இருந்தான். வேலை விஷயத்தில் மிகவும் பொறுப்பானவன் தான். எதிலும் குறை கூற முடியாது ராகவை…. அவன் பொறுபேற்ற பிறகு நிறைய மாற்றங்கள்… அனைத்தும் ஆன்லைனில் விற்பனை செய்ய எதிர் பாராத அளவிற்கு நல்ல விற்பனை நடந்து கொண்டிருந்தது. சில நேரம் சிறுபிள்ளைத்தனமான காரியத்தை செய்யும் போது…

இப்போது சுமதியின் தகப்பனார் பேச ஆரம்பித்தார். எனக்கு சுமியோட வாழ்க்கை அவளுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும் அவ்வளவு தான். அந்த பையன் சரியானவன் தானான்னு மட்டும் இப்போ பார்த்தா போதும். நீயும் நானும் இந்த பணத்தோடு பிறக்கலையே….

அவன் நல்லவன் தான் அங்கிள். நான் தான் தேவையில்லாமல் பிரச்சனை பண்ணிட்டேன். சுமி கிட்ட வாக்கு கொடுத்து இருக்கிறேன். நான் சரிபண்ணிடறேன்னு.

இப்போது பிரபா பேச ஆரம்பித்தார். இன்னும் ரெண்டு நாள் டைம் தா குமாரு நான் முழுசா விசாரிச்சிடறேன். அப்புறம் போய் பார்க்கலாம்.

நேராக வீட்டிற்கு சென்றவர் சுமதியின் முகம் பார்த்தே ஏதோ சரியில்லை என நினைத்து நேரடியாக ராகவிடம் பேச எண்ணி வந்திருக்க… ராகவ் வந்ததும் யோசிக்காது அனைத்தையும் சொல்லி இருந்தான்.

ராகவ் சுமி கிட்ட இத பத்தி எதுவும் பேச வேண்டாம். இப்போதைக்கு அவங்க அவங்க வேலைய பாருங்க சரியா…

ஆனால் அன்று மாலையே பிரபாகர் குமாரவேலுவிடம் சொல்லி விட்டார்.
பையன் நல்ல பையன்டா. நம்ம பொண்ண நம்பி கொடுக்கலாம்.
நாம நாளைக்கு காலையில் போய் பார்த்து பேசிவிடலாம். அப்படியே மகனுக்கும் அழைத்து பேசியவர். நாளைக்கு நீயும் வர்ற ராகவ். பேசும் போது நீயும் கூட இருக்கணும்.

அவர் அழைத்து கூறவும் கொஞ்சம் நிம்மதியாக இப்போது நேராக நிஷாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான். இவன் போகும் போது நேரம் ஏழு மணியை நெருங்கி இருந்தது. ஏற்கெனவே நிஷாவின் தாயார் அறிமுகமாகி இருந்ததினால் அவரை இரவு உணவு உண்டு நிஷாவிற்கும் வாங்கி வர அனுப்பியவன் நிஷாவின் அருகே வந்து அமர….

இப்போது நிஷாவின் இதயம் டிரம் வாசிக்க ஆரம்பித்தது. ராகவ் எதுவுமே பேசாமல் இவளையே பார்த்துக் கொண்டு இருக்க….

நிஷாவின் ஒரு கையில் குளுக்கோஸ் ஏறியபடி இருக்க நான்கு மணிக்கு மேல் இந்த அறைக்கு மாற்றி இருந்தனர். அவனுக்கு முந்தைய நாள் இரவில் அழைத்தது ஞாபகம் இருக்க அவனிடம் பேசியது அவ்வளவாக ஞாபகத்தில் இல்லை. பதறியபடி இவளை தூக்கிக் கொண்டு வந்தது எல்லாமே கனவாய் தெரிய இப்போது இவன் அருகில் எதுவுமே பேசாமல் இருக்கவும்…

சற்று நேரம் அமைதியாக கழிய நிஷாவை மெதுவாக ஸாரி என ஆரம்பித்தாள். இப்போதும் பேசாமல் அவளையே பார்க்க. … பண்ணினது தப்பு தான். அம்மா அப்பாவை பத்தி யோசித்து இருக்கணும். எனக்காக வாழறவங்க. அம்மா அழுத அழுகையை பார்க்கும் போது தான் தெரிஞ்சது. ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆகி இருந்தா… கடைசி வரைக்கும் அந்த இழப்பை எப்படி தாங்கி இருப்பாங்க… அந்த நிமிஷம் என்னோட பிரச்சனை தான் எனக்கு பெரிசா தெரிஞ்சது. நான் எவ்வளவு சுயநலவாதி . பெத்தவங்கல நினைச்சி கூட பார்க்க தோனலயே கண்கள் ரெண்டும் கலங்கி இருந்தது.

நீ என் கிட்ட சொன்னது நிஜமா….

உன் கிட்ட என்ன சொன்னேன்…

தெரியலையா…பரவாயில்லை நான் சொல்லறேன். அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவளது கையை எடுத்து தனது கைக்குள் வைத்து கொண்டவன். இப்போது நிஜமாகவே நிஷாவின் கை லேசாக நடுங்கிக் கொண்டு இருந்தது. உன்னை இங்கே அட்மிட் பண்ணும் போது தான் ஒரு விஷயம் தெரிஞ்சு கிட்டேன். நீ இல்லாம என்னால வாழ முடியாதுன்னு …

அதுக்காக உடனே எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.
எனக்குன்னு நிறைய கனவு இருக்கு.

என்ன கனவு….

அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு முன்னாடி மூணாறு வரையாவது ஒரு டிரிப் போக வேண்டாமா நாம ரெண்டு பேரும் தனியா …. நிஷாவை பார்த்து கண்சிமிட்டி கேட்க வேகமாக அவனிடம் இருந்த கையை உருவிக்கொண்டு திருதிருவென முளிக்க ஆரம்பித்தாள் நிஷா.

இதுக்கு பேர் என்ன….

ப்ரபோஷல்மா… புரியலை…இப்போது நன்றாகவே முகம் சிவக்க ஆரம்பித்தாள். எதிலுமே வேகம் தான் மனதில் நினைத்தபடி….

நீஷாவின் தாய் வரும் சத்தம் கேட்க சீக்கிரம் சரி ஆகிட்டு வா நிறைய பேசலாம். சொல்லியவன் எழுந்து அவளது நெற்றியில் முத்தமிட்டபடி வாசலில் வந்து கொண்டிருந்த நிஷாவின் தாயாருக்கு ஒரு தலையசைப்போடு வெளியேறினான்.

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here