தேடி வந்த சொர்க்கம் _13

0
434
4-andhranews|677x500

அடுத்த நாள் காலை எட்டு மணியை தொட அலைபேசி அழைப்பு கேட்டு கண் விழித்தாள் சுமி. ஹலோ என்ற குரலில் விலகாத தூக்கம் மிச்சமிருந்தது.

ஏய்… தூங்கு மூஞ்சி இன்னும் எழுந்திருக்கலையா. மணி எட்டு ஆகுது. இன்றைக்கு ஆபீஸ் போகணும். ஞாபகம் இருக்கா. அரைமணி நேரத்தில் அங்கே வரேன். ரெடி ஆகி இரு ..

இங்க வர்றியா… கேட்டவள் பொபைலை கட் செய்தபடி வேகவேகமாக குளித்து சுடிதார் ஒன்றை எடுத்து மாட்டியவள் வெளியேற சில நிமிடங்களில் ராகவ் இவளை காண வந்திருந்தான்.

கையில் சுமந்ததிருந்த ஷாப்பிங் பையை பார்த்தவள்… என்னது ராகவ்

செய்யற வேலையை சரியா செய்யணும்ல. இது டிரஸ். உன் கிட்ட எல்லாமே காஸ்ட்லியா தான் இருக்கும். அது அந்த வேலைக்கு சரி வராது. இதுல பத்து செட் டிரஸ் இருக்கு. டெய்லி ஒவ்வொன்றா யூஸ் பண்ணிக்கோ. மறுபடியும் வாங்கிகலாம். அப்பா எங்க. …

அப்பா காலையிலேயே கிளம்பிட்டாங்க போல. நான் எழுந்தது லேட். அவளை நிமிர்ந்து பார்க்க போட்டு இருந்தது ஒரு காட்டன் சுடிதார் கொஞ்சமாக கற்கள் பதித்து
அழகாய் இருந்தது. பார்த்த போதே தெரிந்தது இருப்பதிலேயே அவளிடம் உள்ள சாதாரண உடை அது தான் என்று. அதுவே அவளை ராணியை போல் அவ்வளவு கம்பிரமாய் காட்டியது.

டேய் தூங்கி எழுந்துரிச்சா எல்லாத்தையும் மறந்திடுவேன்னு பார்த்தா இப்படி வந்து ஷாக் குடுக்கற…நிஜமாகவே போகணுமா…

நேற்று உன் கிட்டதான பேசினேன். வெளிய வா. உனக்கு இன்னோன்றும் வச்சி இருக்கிறேன்.

என்னதுடா .. கையை பிடித்து அழைத்து வந்தவன் அவளுக்கு காட்ட அங்கு பிங்க் நிற ஸ்கூட்டிபெப் அழகாய் நின்றிருந்தது.

ராகவ் நான் ஸ்கூட்டி ஓட்டி கிட்டத்தட்ட நாலு வருஷம் மேல ஆகுது. தீடின்னு தந்தால் எப்படி ஓட்டறது.
நீ என்ன காலி பண்ணறதுன்னு ப்ளான் போட்டுடயா….

அடிச்சன்னா பாரு. என்ன பேசற. வண்டியை எவ்வளவு வேகமாக ஓட்டின . அதுதான் அப்ப வண்டி ஓட்டவிடல. இப்ப வழி இல்லையே.
கார்ல எல்லாம் போக முடியாது . செய்யறத சரியா செய்யணும். வா மொதல்ல ஒரு ரவுண்ட் ஓட்டிக் காட்டு… இரு.. இரு நான் பின்னாடி உட்கார்றேன். விழுந்தா ரெண்டு பேரும் சேர்ந்தே விழலாம்.

அப்பா. என்ன நல்லெண்ணம். உட்காரு… ஆரம்பத்தில் லேசாக தடுமாறினாலும் பிறகு ஓரளவு நன்றாகவே ஓட்டினாள். சரி வா வீட்டுக்கு போகலாம். மிச்ச டீடெய்ல் சொல்லறேன்.

வீட்டின் உள் வந்தவர்கள் அவளிடம் சொல்ல ஆரம்பித்தான். காலையில பதினோன்று டூ மூன்று மணி வரைக்கும் தான் உனக்கு அங்கே வேலை.

சுமித்ரா சிரித்தபடி ….எந்த ஆபீஸ்ல நீ சொல்லற டைம்ல வேலை குடுக்கறாங்க. நம்ப மாட்டாங்க.

குறுக்கே பேசாத அவசர குடுக்க…
உனக்கு மெயின் ஆபீஸ்ல வேலை இங்கே சொன்னதால அந்த டைம்ல அங்கே போய் வேலை செஞ்சு தர்ற. அந்த டைம் முடிஞ்சதும் திரும்ப மெயின் ஆபீஸ் வந்திடற மாதிரி சரியா. அங்கே யாரும் உன்னை எதுவுமே கேட்க மாட்டாங்க..

என்ன வேலை அத சொல்லு முதல்ல. . நான் செய்யற மாதிரி என்ன வேலை இருக்க போகுது.

மூனு வருஷத்தோட அக்கவுண்ட்ஸ்ல
கம்ப்யூட்டர்ல்ல ஏத்தணும். ஆடிட்டிங்க்கு முன்னாடி. இந்த வேலைக்கு கூட ஒரு ஆளை அணுப்ப சொல்லி ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கிறான். சோ நீ அங்கே போ…

நான் வர்றது தெரியுமா…

ம்… நேற்றே மெயில் செஞ்சுட்டேன்.
தனி டேபில் கூடவே கம்ப்யூட்டர் எல்லாம் செட் பண்ணியாச்சு.

எதுல இருந்து….

அப்பாவோடதுல இருந்து. கூடவே அப்பா கிட்டேயும் சொல்லிட்டேன். இந்த வேலைக்கு ஆள் எடுத்து இருக்கறேன்னு. சந்தேகம் வராது.

ஒரு வேளை என் அப்பாவுக்கு தெரிஞ்சுடுச்சின்னா.

நான் உன் கூட தான் இருக்கிறேன். தெரிய விட மாட்டேன். சரியா. அப்புறம் அது நார்மல் பர்சன் இருக்கற ஏரியா.
இங்கே மாதிரி கிடையாது. காலை நேரத்தில பசங்க வேலைக்கு போற பொண்ணுங்கல கிண்டல் பண்ணறவங்களும் இருக்கறாங்க . யார் கிட்டேயும் அதிகமாக பழகாத. உனக்கு ஆபீஸ்லதான் வேலை. பின்னாடி குடோனுக்கு எப்பவுமே போகாத. அங்கே டஸ்டா இருக்கும். வேடிக்கை பார்க்கறேன்னு போய் நிக்காத புரியுதா…

போகலாமா… சுமி.

நீயும் வர்றயா.

மொத டைம் தனியா வண்டி ஓட்ட போற. எப்படி தனியா விடுவேன்னு நினைச்ச.

என் கூடவா வர போற…

இல்லையே. விநாயக் வர சொல்லி இருக்கிறேன். அவன் டூ விலர்ல பின்னாடி வருவேன். மேலும் அரைமணி நேரம் பேசியபடி கிளம்ப நேரம் பத்து பதினைந்தை தொட்டு இருந்தது. இவள் முன் செல்ல சிறு இடைவெளி விட்டு இவன் அவளை தொடர்ந்தான். கிட்டத்தட்ட அரைமணி நேர பிரயாணத்திற்கு பிறகு இவர்களது ஆபீஸ் வர அருகில் நெருங்கிய ராகவ்… சுமி திரும்பி வரும் போது வண்டியை மெதுவாக ஓட்டு. இந்தா இது நம்ம ஆபீஸ்ஸோட
ஐ. டி கார்டு. இத காட்டு போதும். பை…
ஈவினிங் பார்க்கலாம். வாசலோடு விடை பெற்று அவன் திரும்பி செல்ல… கொஞ்சமாய் மனம் படபடக்க உள் நுழைந்தாள்.
கொஞ்சம் படபடப்போடு வாசலில் நின்றிருந்த வாட்ச்மேனிடம் தனது ஐடி யை காட்டியவள் நேராக அலுவலக வாயிலுக்கு வண்டியை விட்டவள்
நிறுத்தி விட்டு இறங்க….

கையில் வைத்திருந்த மொபைலில் பேசியபடி சில பேப்பரை கையில் வைத்தபடி உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தான் குரு. இளநீலநிற முழுக்கை சட்டை கையை முழுவதும் மறைத்திருக்க கருப்பு நிறுத்தில் பேண்ட் அவனுக்கு அவ்வளவு பொருத்தமாய் இருந்தது. தலைகேசம் களைந்தாட சிரித்தபடி பேசிக்கொண்டு இறங்கியவன் இவளை பார்த்து…

வந்தவனை பார்த்தவள் பார்டா நம்ம ஆபீஸ்ல கூட பார்க்கறமாதிரி ஆளுங்கட்சி இருக்கறாங்க நினைத்தபடி பார்க்க… அவனோ…

வண்டியை இங்க நிப்பாட்ட கூடாது. பார்க்கிங் குடோனுக்கு பக்கத்தில் இருக்கு. அங்கே போய் நிற்பாட்டுங்க…

கட்டளை போல ஒலித்த குரலை கேட்டவள். மனதுக்குள் சரியான திமிர் பிடிச்சவன் போல நினைத்தபடி தலையை ஆட்டியபடி வண்டியை திருப்ப நினைக்க…. வண்டி இவளுக்கு
கட்டுப்படாமல் ஒரு புறம் சறிய ஆரம்பித்தது. வண்டி விழுந்துடுச்சி என நினைத்த நொடி வண்டியை
விலாமல் இவளோடு சேர்த்து நிமிர்த்தி பிடித்திருந்தான். இறங்கி இந்த பக்கம் வாங்க. புதுசா இப்ப தான் வண்டி ஓட்டறிங்களா என்ற கேள்வியோடு….

உண்மையிலேயே கை நடுங்க ஆரம்பித்து இருந்தது சுமித்ராவிற்கு. கூடவே பதட்டம் பயம் மொத்தத்தில்
வண்டியில் இருந்து இறங்கியவள் இவனது முகம் பார்க்க இவளை பார்த்தவனோ….

நானே வண்டியை பார்க்க பண்ணிடறேன். நீங்க உள்ள போங்க.
என்ற தகவலோடு கிளம்பி இருந்தான்.

உள் நுழைந்தவளை நாற்பது வயதை
எட்டியவர் அருகில் வந்து கையில் எடுத்து வந்திருந்த நீரை இவளுக்கு குடிக்க கொடுத்தவர். இங்கே இந்த சேர்ல உட்காருமா. தம்பி இப்ப வந்திடுவாங்க.

அம்மா நீங்க….

நான் யமுனா இங்கே தான் வேலை செய்யறேன். தம்பி போன் பண்ணினாங்க. உள்ள வர்றவங்களுக்கு தண்ணீர் கொடுக்க சொல்லி….

வரவேற்பு அறையில் அமர்ந்து இருக்க பத்து நிமிடம் கழித்து உள் நுழைந்தான் குரு. வண்டியில் சாவியை இவளிடம் நீட்டியவனிடம் இவளது ஐடி கார்டை நீட்ட…

ஓ… நீங்க தானா உள்ள வாங்க… அழைத்து சென்றவன் இவளது இருக்கையை காட்டி. . இதுதான் உங்க சீட்… இவள் சுற்றிலும் பார்க்க ஏற்கனவே பத்து பேர் அளவில் அங்கங்கே அமர்ந்து எதிரில் இருந்த கணினியில் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

நீங்க… என இவள் தொடங்க…

நான் குரு. நானும் இங்கே தான் வேலை செய்யறேன். ஜெனரல் மேனேஜரா… சொன்னவனை திகைத்து பார்த்தாள். இவ்வளவு நேரம் இருந்த உணர்வு மாற… ராகவை அடிச்சவன் இது தோணவும் அவனை முறைக்க ஆரம்பித்தாள் தன்னை அறியாமல்…

தேடி வந்திடுமா சொர்க்கம். !!!

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here