ஹலோ ஏன் அப்படி பார்க்கறிங்க. முகத்திற்கு நேராக அவனது கை ஆட்டியபடி இருக்க இப்போதுதான் தெரிந்தது. தன்னை அறியாமல் நீண்ட நேரமாய் அவனையே முறைத்ததை…
என்ன சொல்ல.. எப்படி சமாளிக்க எதுவுமே புரியாமல் இப்போது வேறு மாதிரி முழிக்க
உண்மையிலேயே சிரிப்பு ஒன்று உதயமாகி இருந்தது அவனது முகத்தில்….பார்ப்பதற்கு அழகாக….
இதோ இதுதான் உங்க சீட் . நீங்க கம்ப்யூட்டரில் ஏற்ற வேண்டிய பைல் அதோ அந்த பீரோ மேல இருக்கு. வெயிட் பண்ணுங்க வரேன். சொல்லி போனவன் தான் நீண்ட நேரம் ஆகியும் வராமல் போக சற்று நேரம் பார்த்தவள் யோசிக்காது அருகில் இருந்த இருக்கையை எடுத்து போட்டவள் அதன் மீது ஏறி பைலை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தாள்.
அருகில் கேட்ட என்ன செய்யறிங்க சுமித்ரா இதை கேட்டவள் ஏற்கனவே கையில் எடுத்து இருந்த பொத்த பைலும் இவனது சத்தம் கேட்டு தவற விட்டிருந்தாள். அதிலும் விழுந்த இரண்டு பைல்கள் சரியாக அவனது காயம் பட்ட கையை பதம் பார்க்க…
வலியின் சத்தத்தோடு கையை உதறியபடி நகர்ந்து நிற்க இப்போது அடிபட்ட இடத்தில் இருந்து வேகமாக ரத்தம் பரவி அவன் அணிந்திருந்த சட்டையை நனைக்க ஆரம்பித்தது.
இரங்கி ஒரு நிமிடம் கையை பார்த்தவள் ரத்தம் என்ற மயங்கி சரிந்திருந்தாள். சரிய ஆரம்பிக்கவும்
ஒரு கையால் அவளை பிடித்திருந்தான். யமுனாமா என்ற குரலோடு… யமுனாவோடு இன்னும் இருவர் வர அவளை அவர்களிடம் ஒப்படைத்தவன் . தனது கையை கவனிக்க நகர்ந்திருந்தான்.
முகத்தில் விழுந்த நீரின் துளியால் கண் விழித்தவள் யமுனாவை பார்க்க…
கையில் கட்டோடு வேறு சட்டை அணிந்து உள்ள நுழைந்தவன் இவளை பார்த்து என்ன இப்படி பண்ணிட்டிங்க சுமித்ரா. இவ்வளவு பயத்தை வச்சிட்டு எப்படி உங்களுக்கு வண்டியை தணியா ஓட்ட தந்தாங்க. நிஜமாகவே லைசென்ஸ் இருக்குதான. சீரியஸாக கேட்கறானோ என நினைத்து இவள் வேகமாக….
என் கிட்ட கார் ஓட்டவே லைசென்ஸ் வச்சி இருக்கறேன்.
எப்படி பார்க் பண்ணுவிங்க காலையில மாதிரியா …
கிண்டல் பண்ணறானோ என்ன முகம் பார்க்க அவனோ அவளை அந்த நொடி இயல்புநிலைக்கு திருப்ப பேசிக்கொண்டு இருப்பது தெரிய..
யோசிக்காது உங்கள் கைல எப்படி காயம் ஆச்சு. இந்த கேள்வியை கேட்டிருந்தாள். வரும் போது இருந்த கோபம் தற்சமயம் வெகுவாய் குறைந்து இருந்தது.
போன வாரம் ஒரு அக்ஸிடெண்ட்.
ஒரு இடியட்டால ஆச்சு. காபி குடிக்கலாமா…
என்னது….
யமுனாமா இந்த பொண்ண நம்ம கேண்டீன்னுக்கு கூப்பிட்டுட்டு போய் காபி வாங்கி குடுத்து கூப்பிட்டுட்டு வாங்க.
நீயும் வா குரு. டீ டைம் தான. இவளை அழைத்த படி செல்ல… அடுத்த சோதனை அவளுக்கு அங்கு இருந்தது.
அழைத்து சென்று இருவரையும் உட்கார வைத்து காபி வாங்க செல்ல…
கண்களால் சுற்றிலும் பார்த்தவள்
எப்போதோ அடித்த சுண்ணாம்பு சுவரோடு பிசுபிசுப்பும் சேர்த்து போட்டி போட்டபடி இருந்த சுவற்றை பார்த்தவளின் முகம் அஷ்டகோணலுக்கு செல்ல தயாராய் இருந்தது. தரையை பார்க்க மேலும் வாந்தி இப்போதே வந்துவிடுவேன் என கூறுவது போல் இருக்க சட்டென எழுந்து நின்றாள் சுமித்ரா.
காபி இங்கே செமையா இருக்கும். குடித்து பாருங்க என முன்னாள் வைக்க… எந்த வித சிரமமும் இன்றி இருவரும் இயல்பாய் குடிக்க…கஷ்ட பட்டு அதை குடித்து முடிக்க சுமித்ரா பட்ட பாடு அன்று வீட்டிற்கு வந்தவள் ராகவ் வரும் போது வாஷ்பேசனில் வாந்தி எடுத்து கொண்டிருந்தாள்.
சுமித்ரா என்ன ஆச்சு என நெருங்கியவனை தனது கைகலால் அடித்தவள் எல்லாம் உன்னாலதான்.
அங்கே கேன்டியன் எவ்வளவு கேவலமாக இருக்கு தெரியுமா சொன்னவள் மறுபடியும் வாந்தி எடுத்தாள்.
ஸாரிடா. வாந்தி எடுக்கிற அளவுக்கு அப்படி என்ன தான் ஆச்சு.
நீ மொதல்ல உண்மைய சொல்லு ராகவ். அவன் கைலயும் அடி பட்டு இருக்கு.
அதுக்கு நான் காரணம் இல்லை. அவனாதான் சறுக்கி விழுந்தான். முகம் கழுகியபடி திரும்பி வந்த சுமி அன்று அங்கு நடந்ததை கூற…..
சுமி நீ இனிமே அங்கே போக வேண்டாம். இவ்வளவு சீரமமா இருந்தா வேண்டாமே…நான் வேற ஏதாவது யோசிக்கறேன்.
முதல் நாள் போய் ஒண்ணுமே செய்யல. அப்புறம் நீ குடுத்த வேலை எனக்கு பிடிச்ச வேலை. கம்யூட்டரை தொட்டு எவ்வளவு நாள் ஆச்சு.சும்மாவே வீட்டில் இருக்க போர் அடிக்குது. அப்பாவுக்கு தெரியாம போயிட்டு வர்றது செம திரில்லிங்கா இருக்கு.
இன்னும் பத்து நாள் பார்க்கிறேன்.
எனக்கு அங்கே பிடிக்கலன்னா போக மாட்டேன்.
அதே நேரம் போன் வர நிஷா அழைத்திருந்தாள். ஹாய் நிஷா பேபி எப்படி இருக்கற. என்ன தீடின்னு போன். என்னது போர் அடிக்குதா…
உனக்குமா….என்ன பண்ணணும்.
எதிர் முனை குரலோ ராகவ் எங்கயாவது டின்னர் போகலாமா. நீ வர்றயா…
இவ்வளவு தான. வந்துட்டா போச்சு. எங்கன்னு மெசேஜ் பண்ணு வந்துடறேன். பை…
சுமி… நீயும் வர்றயா…
ரொம்ப டயர்டா இருக்கு. நான் தூங்க போறேன். நீ போயிக்கோ…
ஓகே. பை நாளைக்கு பார்க்கலாம்.
இதோ இன்று ஆரம்பித்தது போல் இருக்க பத்து நாட்களை கடந்து இருந்தது சுமி இங்கு வர ஆரம்பித்து…
குரு அவனை அலுவலகத்தில் பார்ப்பதே அரிதாய் இருந்தது. அன்று முதல் நாள் பார்த்ததோடு சரி. இவளது வேலை அதன் போக்கில் செல்ல தினமும் ஒரு முறை பார்ப்பாள் தான். ஆனால் பேச சந்தர்ப்பம் வாய்த்தது இல்லை. உள்ளே வரும் போது ஒரு அறிமுக புன்னகை அவ்வளவே அவனது ரியாக்ஷன். பெரும்பாலும்
இவள் புறப்படும் நேரத்தில் அவன் அங்கு இருப்பதே இல்லை. ராகவ் இன்னமும் கிளம்பலையா. இந்த மெசேஜ் வரவும் எடுத்து வைத்து விட்டு கிளம்பி விடுவாள்.
இன்றும் அதே போல் தான் மெசேஜ் வரவும் எடுத்து வைத்தவள். தன்னுடைய நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து கொல்ல அருகில் இருந்த யமுனாவிடம் பேச்சு கொடுத்தாள்.
யமுனாம்மா… நியாயமா குரு சார் ஆபீஸ்லதான இருக்கணும். ஆனா இவங்க சீட்லயே இருக்கிறது இல்ல.
சுமி அவனை கேட்டா இங்க செய்யற வேலைக்கு ரெண்டு மணி நேரம் போதும். எதுக்கு இங்க உட்காரணும்ன்னு சொல்லுவான்.
அப்படி என்ன வேலை தான் செய்வாங்க.
சுமி ஒரு தடவை வேலை நடக்கற இடத்துக்கு போய் தான் பாரேன். என்ன செய்யறான்னு தெரிஞ்சிட போகுது…
ம்… இன்றைக்கு பார்க்கறேன்மா…சொல்லி விட்டு நகர்ந்தவளை சின்ன சிரிப்போடு பார்த்து இருந்தார். முதல் நாளில் பார்த்த போது குரு சொன்னது அவருக்கு ஞாபகம் வந்தது.
அம்மா அந்த பொண்ணு பெரிய இடத்து பொண்ணு போல. அந்த பொண்ணுக்கு இந்த அட்மாஸ்பியரே புடிக்கலை. அதனால இனிமே கேண்டீன்க்கு வான்னு கூப்பிடாதிங்க. மூனு மாதம்தான் இங்க வரும். சத்தமில்லாமல் அது வேலையில் பார்த்துவிட்டு போகட்டும். இன்றைக்கு அவளே கேட்கவும் மனதில் சிரித்துக்கொண்டார்.
வழக்கம்போல புறப்பட்டவள் நேராக
பின்புறத்தில் உள்ள வேலை நடக்கும் இடத்திற்கு செல்ல…. அங்கோ மரம் அருக்கும் மிஷின்களின் சத்தம் கூடவே முழுக்க மரத்தூலின் தூசியோடு அந்த இடமே புகை மண்டலமாக காட்சி தந்தது. தும்மலோடு இருமலும் வர கண்களால் இவனை தேடினாள். ஆறு மிஷின்களை தாண்டிய இடத்தில் ஒரு பெரியவரோடு சிரித்த பேசிய படி தலையில்
கர்சீப்பை கட்டியிருக்க அவர் செய்யவேண்டிய வேலையை இவன் செய்து கொண்டிருந்தான் .
ஒரு நிமிடம் பார்த்தவள் அவனையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். ஏதோ புரியாத உணர்வு. முதல் முதலாக இவளது பத்தாவது வயதில் தனது தந்தையை பார்க்க போன போது அவர் நின்றிருந்த தோற்றம் கண்முன் வந்து போனது. ராகவும் வேலை செய்வான் தான் ஆனால் இந்த அளவுக்கு கிடையாது. சிறு அழுக்கு கூட படாமல் வேலை செய்பவன். ஏதேதோ தோன்ற அவனை மட்டுமே பார்த்தபடி நின்றிருந்தாள்.
தொடரும்.