இந்த நான்கு நாட்கள் சுமித்ராவை வேறு உலகிற்கு அழைத்து சென்று கொண்டு இருந்தது அவளையும் அறியாமல் … அன்று இவளை பார்த்ததும் உடனே வெளியே இவளை அழைத்தபடி வந்தவன் என்ன என கேட்க … இன்னமும் இருமிக் கொண்டு இருந்தாள் சுமித்ரா…
சும்மா… சுற்றி பார்க்கலாம்ன்னு…
இங்கே ஆபீஸ் வரும்போதே உங்களை பற்றி வந்த மெயில்ல… டஸ்ட் கிட்ட போகவிட கூடாதுன்னு தான். பாருங்க அது மாதிரியே இருமிகிட்டு இருக்கறிங்க.
சுமியோ… மனதுக்குள் டேய் ராகவ் இதெல்லாமா அனுப்புவ ….
சுமித்ரா நாளைக்கு பின்னாடி பொண்ணுங்க வேலை செய்யற இடம் கூப்பிட்டுட்டு போறேன். புது புது பர்னீச்சரை பார்க்க நல்லா இருக்கும். அதுவும் மூனு மணிக்கு மேலதான். .
நீதான் வேலையில சரியா இருப்பியே மனதிற்குள் நினைத்தவள்…சரி என தலை ஆட்டினாள். இதோ தினமுமே ஏதாவது அரைமணி நேரத்தை அவனோடு கழிக்க ஆரம்பித்து இருந்தாள். கம்ப்யூட்டரில் ஏதாவது பிரச்சனை வரும். இல்லையென்றால்
பார்க்கும் பைலில் சந்தேகம் வரும் இப்படியாக ஏதோ ஒரு வகையில் அவனது அருகாமையை ஏற்படுத்தி கொண்டு இருந்தாள்.
அன்று மாலை ராகவோ சுமி… இன்னும் பத்து நாளைக்கு டெல்லியில நம்ம பர்னிச்சர் மட்டும் தனியா எக்ஸ்போ மாதிரி போட போறோம். அப்பா என்னை போக சொல்லறாங்க. சோ நான் திரும்ப வர்ற வரைக்கும் பேசாம நீ ஆபீஸ் போக வேண்டாம். வீட்ல இருந்திடு என்ன சொல்ற .
இப்போது ராகவின் கை சரிஆகி இருக்க அன்று இருந்த தீவிரம் தற்சமயம் இல்லாதிருந்தது. குருவிற்குமே காயம் ஆறி இருக்க வெறும் தழும்பாய் காட்சி அளித்தது.
இல்ல ராகவ் . போறனே….எனக்கு அங்க பிரச்சனை எதுவும் இல்ல. பின்னாடி பர்னிச்சர் எல்லாம் பார்க்க நல்லா இருக்கு. ப்ளீஸ் போறனே…
ஏய்… அதுக்கு எதுக்கு ப்ளீஸ் எல்லாம் கேட்கிற. போறேன்டான்னா ஓகே சொல்ல போறேன். கவனமாக இரு .
அன்று புறப்பட்டவன் தினமும் காலை மாலை என இருவேளை மட்டும் போனில் பேசிக்கொண்டு இருந்தான்.
ஆனால் ஆபீசில் செல்லும்வழியில் வேறு புதிய பிரச்சனை சுமிக்கு வந்து கொண்டு இருந்தது. ஆபீஸ் அருகில் சிறுவர்கள் விளையாடும் பார்க் ஒன்று இருக்க அதை தாண்டியதும் இவர்களது ஆபீஸ் இருந்தது. ஆரம்பத்தில் எந்த பிரச்சனை இல்லாமல் போக இப்போது புதிதாக இவள் வரும் வேளையில் காத்திருந்து ஓ. … என கத்தியபடி பயமுறுத்தி கிண்டல் செய்ய ஆரம்பித்து இருந்தனர் நால்வர் குழு ஒன்று வரும் போதும் போகும் போதும்.
அதுவும் கூட இரண்டு நாட்கள் தான். மறுபடியும் வழக்கம் போல செல்ல
கொஞ்சம் மகிழ்ச்சியுடனே வலம்வந்து கொண்டிருந்தாள். இப்போது பேசுவதில் கொஞ்சமாய் முன்னேறி இருந்தனர் இருவரும். இதுவரை சுமியை பற்றிய எந்த விஷயத்தையும் கேட்காதவன் அன்று முதல் முதலில் வீட்டை பற்றி கேட்டிருந்தான்.
நீ உன் வீட்டில் ரொம்ப செல்லமா சுமித்ரா…
ஏன் கேட்கறிங்க…
இல்லை. கைய பார்த்தா எந்த வேலையும் செய்யாத மாதிரி இருக்கு. எனக்கு என்ன தோணுதுன்னா நீ இங்க தான் முதல் தடவையா வேலைக்கு வரேண்ணு நினைக்கறேன். அதுதான் கேட்டேன்.
நானும் அப்பாவும்தான். வீட்டு வேலை செய்ய ஆள் இருக்கறாங்க. அப்புறம் நான் ஒன்னும் சோம்பேறி கிடையாது. வேலை எல்லாம் செய்வேன்.
ஷப்பா… என்னா கோபம் வருது. எங்க வீட்ல கூட நானும் தனாவும் மட்டும் தான்.
தனா யாரு….
என் அப்பா… அவர்கூட இருந்தா நேரம் போறதே தெரியாது தெரியுமா… பேசியபடி அவன் குடோனை நோக்கி செல்ல இவள் இவளது சீட்டிற்கு வந்தவள் புறப்பட தயார் ஆக யமுனாவோ அப்புறம் சுமித்ரா….
இப்ப யாரும் கிண்டல் செய்யறது இல்லதான…
யமுனாம்மா உங்களுக்கு எப்படி தெரியும்.
ஆபீஸ் பக்கத்தில் டிபன்ஸ்டால் இருக்குல்ல அவர் தான் சொன்னாரு.
குரு அந்த பசங்கல பிண்ணி எடுத்துட்டாணாம். ரெண்டு பசங்க ஓடிட்டாங்க அப்படின்னு. குரு கிட்டேயும் கேட்டேன். குரு தான் இந்த பொண்ணு வாய திறந்து சொல்லவே இல்ல பாருங்கன்னு வருத்த பட்டான்.
இல்லம்மா. இதெல்லாம் புசுது. எப்படி ரியாக்ட் பண்ணனும்ன்னு தெரியலை. ஆனால் இன்னும் ரெண்டு நாள் கிண்டல் பண்ணி இருந்தா வீட்ல சொல்லி இருப்பேன்.
அதுக்காக அவன் காதலுக்கு விரோதி கிடையாது. இங்கேயே வீட்ல பேசி ரெண்டு கல்யாணம் முடிச்சி வச்சிருக்கறான்.
அதே நேரம் அடெண்டர் வர யமுனாவிடம் என்ன யமுனாம்மா
குரு தம்பி பேசறதுக்கு கூப்பிட்டு இருக்கறாங்க. நீங்க போகலையா…
யமுனாவோ அது தான் போக போறேன்.
என்ன பேசுவாங்க யமுனாம்மா.
பத்து நிமிடம் தான் பேசுவான். மாதத்தில் ஒரு நாள் இது மாதிரி மீட்டிங் இருக்கு. ஏதாவது தேவைன்னா சொல்லலாம். ஏதாவது பிரச்சனை இருந்தா கூட சொல்லலாம். பெறும் பாலும் சொல்ல எதுவும் இருக்காது. நீயும் வா அங்கே கேன்டின்ல சரி என தலையாட்டியபடி கூடவே நடந்தாள். இவர்கள் அங்கு போகும் போதே எல்லோரும் ஏற்கனவே வந்து இருந்தனர்.
சுமி மனதிற்குள் என்ன பெருசா பேசிட போறான். பார்மாலிட்டிஸ்க்கு ஏதாவது சொல்வானா இருக்கும். ஒரு மனம் இப்படி நினைக்க இன்னொரு மனமோ நூற்றிஐம்பதற்கும் மேற்பட்ட பெண்கள். .. எப்படி பேசுவான். அப்படி என்ன தான் பேசுவான். ஆவலின் மொத்த உருவமாய் கடைசியில் நின்றிருந்தாள்.
குரு வந்ததுமே அந்த இடமே அமைதியாய் இருக்க ஐந்து நிமிடம் அமைதியாக நின்றவன் பேச ஆரம்பித்தான். எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலை…ஆனா பேசணுமே…ம்…சரி . இப்படி ஆரம்பிக்கலாமா….
எட்டு ஆயிரம் சம்பளம் வாங்கறவங்களும் சரி முப்பது நாற்பது ஆயிரம் வாங்கினாலும் சரி நம்ம கிட்ட எது இருக்குமோ இல்லையோ ஆன்டிராய்ட் போன் இருக்கு இத யாராலும் தவிர்க்க முடியாது. ஒரு வகையில கெளரவமா கூட சிலர் நினைக்கலாம். அப்புறம். …
ஒரு ஆணால தொடர்ந்து ஓரே மாதிரியா ரொம்ப நல்லவனா நடந்துக்க முடியாது. ஏன்னா அவனோட படைப்பே கொஞ்சம் கரடுமுரடா கொஞ்சம் லோட லோடன்னு தான் இருக்கும். எஸ் இத நான் சொல்லல. ஒரு பிரபலமான மனநல மருத்துவர் சொன்னது. இதெல்லாம் ஏன் இப்ப சொல்லறேன்னா… தொடர்ந்து ஒருத்தன் உங்கள புகழ்ந்துட்டோ இல்ல உன்ன மாதிரி யாருமே கிடையாது. நீ தைரியசாலி இப்படின்னு யாராவது சொன்னா. நீங்க நம்பாதிங்க. அவன் ஊங்க கிட்ட வேற எதுவோ எதிர் பார்க்கறான்.
எல்லோருக்கும் தெரியும். சமீபத்திய பொள்ளாச்சி பிரச்சனை. அது மாதிரி யாரும் பாதிக்கபட கூடாது. அது தான் என் ஆசை ஒருவேளை யாரையாவது யாராவது மிரட்டிணா நீங்க தைரியமாக இங்கே வந்து சொல்லுங்க. இங்கே நான் மட்டும் இல்ல இங்கே வேலைசெய்யற ஒவ்வொரு ஆணுக்கும் இந்த கடமை இருக்கு. உங்கள பத்திரமா பாத்துக்க எல்லோரும் கடமை பட்டவங்க. அப்புறம் வீட்ல குழந்தைகள விட்டுட்டு
வேலைக்கு வர்றவங்க கூட அரை மணி நேரம் வீட்டுக்கு போணதும் அந்த குழந்தைங்க கிட்ட பேசுங்கள். அன்றைக்கு நடந்தத பற்றி….காலையில் இருந்து என்ன பண்ணினாங்க. எல்லாத்தையும்.
எதையுமே ஆரம்பத்தில் கவனிச்சா பின்னாடி வர போற பிரச்சனைகளை தவிர்க்கலாமே….
நம்ம சுற்றி இருக்கற பெண்களுக்கு நாம தான் பாதுகாப்பு அப்படின்னு ஒவ்வொரு ஆணும் நினைச்சா பிரச்சனையே வராது இது என்னோட கருத்து. …அப்புறம் …. வழக்கம் போல தான் ஏதாவது இருந்தா நீங்க சொல்லலாம்….
பேச பேசவே என்ன உணர்ந்தாள் சுமி. இத விட என்ன வேணும் பெண்களுக்கு… உன் கூட நாங்க இருப்போம் இதை சொன்னாலே போதுமே…. பாதிக்கபடும் பெண்களுக்கு யானை பலம் வந்திடுமே இதை சொல்லதானே இங்கு ஆட்கள் இல்லை….. இதை நினைத்தவள் கண்கள் களங்க நெகிழ்ந்தபடி முதல் முறையாக தனது கைகலால் கை தட்ட ஆரம்பித்தாள். முதல் கரவோசம் அவளுடையதாய் இருந்தது. அவளை தொடர்ந்து மற்றவர்களும் கை தட்ட சத்தம் ஓய நீண்ட நேரம் பிடித்தது. கண்கள் அவனை மட்டுமே பார்க்க ஏதோ ஒரு வகையில் அவளது மனதில் மொத்தமாய் சிம்மாசனம் இட்டு ஆட்சி செய்து கொண்டிருந்தான் குரு.
தொடரும்.