தேடி வந்த சொர்க்கம் _16

0
344

நாட்கள் வேகமாக நகர இதோ இன்று காலையிலேயே தனது செல் பேசியில் ராகவ் அழைத்திருந்தான் சுமியை…

சுமி இன்னையோட வேலை முடியுது. புறப்பட்டாச்சு. நீ என்ன பண்ணிட்டு இருக்கற.

நானும் ஆபீஸ் கிளம்பிட்டே இருக்கிறேன். லீவு போட்டுடேன்.

சார் எத்தனை மணிக்கு வருவிங்க…

இரண்டு மணி…..

கடைசி நாள்ன்னு அப்பாவையும் கூப்பிட்டுட்டு போயிட்ட.. ரெண்டு நாளா எவ்வளவு போர் தெரியுமா… இரண்டு மணிக்கு வர்றதுக்கு இப்பவே வீட்டுல இருக்கணுமா. நான் கிளம்பறேன்டா…

சுமி நீ வர வர சின்னியர் சிகாமணியா ஆயிடுட்டு வர்ற. இது நல்லா இல்ல பார்த்துக்க …

ஏன். உன் சீட்டுக்கு வந்திடுவேன்ணு பயமா….

எப்பவுமே அந்த சீட் உனக்கு மட்டும் தான். நாங்கல்லாம் வேலைன்னு வந்தா எப்படி இறங்கி வேலை செய்வோம் தெரியுமா….

இந்த வார்த்தை சொன்னதும் அன்றோரு நாள் குரு வேலை செய்தது நினைவு வர அமைதி ஆகியிருந்தாள்.
சுமி… சுமி என இரண்டு முறை சத்தமிட்ட பிறகே என்ன என கேட்க…

இந்த உலகத்தில் தான இருக்கற….

ஏண்டா…

ஷப்பா… சரி வந்ததும் வந்து பார்க்கிறேன். அப்பா நைட் தான் வருவாங்க…

ம்… சரி.

குரு அன்றைய பொழுது பேசியதும் இவள் கைதட்டலை தொடர்ந்து மற்றவர்களும் கை தட்ட இவளை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவன் தான். அடுத்தடுத்து வந்த நாட்களில் ஏனோ பேசுவதை தவிர்த்து வந்தான். இவளாக அருகில் போனாலும் நகர்ந்து கொண்டிருந்தான் குரு.

கம்ப்யூட்டரில் வரும் சந்தேகம் கேட்க யமுனாம்மாவிடம் கூறி இருக்க மொத்தத்தில் அவனை நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டான். இதோ இன்றும் உள் நுழையும் போது பார்த்துக் விட்டு நகர்ந்தவன் தான் புறப்படும் நேரம் ஆகியும் இன்னும் கண்களில் தென் படவில்லை.

வேறு யாராவதாய் இருந்தால் போடா நீயாச்சு. உன் வேலையாச்சு என போயிட்டே இருந்து இருப்பாள். இப்போது அதுவும் முடியாமல் தான் நினைப்பது தான் என்ன எதுவும் புரியாமல் தவித்து கொண்டு இருந்தாள்.

நேரம் முடியவும் குரு வரவேமாட்டான்
என நினைத்தவள் எதுவும் சொல்லாமல் கிளம்ப ஆயத்தம் ஆனாள். பத்து நிமிடம் முன்பு தான் ராகவ் அழைத்து இருந்தான். வந்துட்டேன் என. தனது வண்டியை எடுத்தவள் வெளியில் வரும் அருகில் இருந்த பார்க்கை பார்த்தவள் யோசிக்காது வண்டியை நிறுத்தி உள் நுழைந்தாள். சுமிக்கு தன்னை பற்றி
தனது மனம் போவதை பற்றி யோசிக்க வேண்டி இருந்தது.

காலி இருக்கையில் அமர்ந்தவள் தலை குனிந்து கைகளுக்கு முட்டு கொடுத்தபடி கண் மூடி அமர்ந்து இருந்தாள். கண்கள் மூடி இருக்க எதிரில் குரு நிற்பது போல் தோற்றம்.
அவனது சிரிப்பு. கண்களில் தெரியும் குறும்பு இப்படி ஒவ்வொன்றும். …

தன்னுடைய நிலையை யோசித்தபடி இருக்க வரும் வழியில் வழக்கம்போல கிண்டல் செய்யும் நால்வர் குழு இவள் நுழைந்ததை பார்த்து பின் தொடர்ந்து வந்ததை கவனிக்க வில்லை.

பார்டா… நம்ம ஏஜ்ஜல் இங்க இருக்கறாங்க… சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க இவள் அருகில் வந்தவன் ஏண்டி நீ அவ்வளவு பெரிய ஆளா…
கூப்பிட்டு வச்சி அடிக்கறான். இப்ப காப்பாத்த எவன் வர்றான்னு பார்க்கறேன்.

அருகில் சத்தம் கேட்கவும் கண்களை விழித்தவள் இவர்களை பார்த்ததும் அதிர்ச்சியோடு எழுந்தவள் நகர ஆரம்பிக்க முன் வந்தவன் கைகளை பிடித்து இருந்தான். டேய் விடுடா என்ன கையை உதறியவள் ஹெல்ப் மீ என சத்தமிட…

பார்டா…. இங்கிலீசு என அடுத்தவணும் அருகில் வர அங்கே வேகமாக குரு வந்திருந்தான். வேகமாக வந்தது மூச்சு வாங்கியதிலேயே தெரிந்தது.

ஏண்டா அடி வாங்கினது பத்தல என வேகமாக ஒருவனின் சட்டையை பிடித்து ஓங்கி அறை விழ…. அடுத்தவன் இப்போது அடிக்க வந்திருந்தான்.

தன் கண் முன் குருவோடு நால்வரும் சண்டையிடுவதை பார்த்தவள் பயத்தில் கை கால்கள் அவளையும் அறியாமல் நடுங்கி கொண்டிருந்தது.
பெண்களை கிண்டல் செய்வதை பார்த்தே அறியாதவள் இன்று சண்டையிடுவதை நேரில் பார்த்தால்….

என்ன செய்வது ஒன்றும் அறியாமல் இருக்கையில் கை பட அவளது கைபேசி கையில் கிடைத்தது. எடுத்தவள் யோசிக்காது ராகவை அழைத்து இருந்தாள். அவளுக்கு தெரிந்தது அவன் மட்டும் தான். ..

அழுகையோடு ராகவ் இங்கே பிரச்சனை நீ வா என… அவளுடைய அழுகையை கேட்டதுமே … சுமிக்கு அழாத எங்க இருக்குற.

ஆபீஸ் பக்கத்தில்… பார்க் ல… இங்கே என் கிட்ட நாலுபேரு தகராறு பண்ணினாங்க. குரு சண்டை போடறான். எதுவும் கோர்வை இல்லாமல் திணறியபடி சொல்ல….

ஐந்தே நிமிடம் உன் முன்னாடி இருப்பேன். சொன்னது போல் இரண்டாவது நிமிடம் போலீஸ் உள் நுழைய சண்டையிட்டவர்களை அழைத்து கொண்டு சென்றது. குருவையும் சேர்த்து….

வண்டியில் ஏறும் கடைசி நொடியில் இவளை பார்த்தவன். நீ வீட்டுக்கு கிளம்பு என்ற கட்டளை கண்களில் இருந்தது. கண்கள் கழங்க ஓய்தபடி போகும் அவனை பார்த்தபடி இருக்கையில் அமர்ந்தாள்.

கையோடு சேர்ந்து மனமும் நடுங்க பார்த்தபடி இருக்க… அங்கே குருவிற்கோ பெரிதாக பயம் எதுவும் இல்லை. போனா நடந்ததை சொல்லிட்டு பார்த்துக்கலாம். அந்த எண்ணம் தான்.

அவன் எண்ணம் அந்த நிமிஷம் சுமியைதான் சுற்றி வந்து கொண்டு இருந்தது. இவனை பொறுத்தவரையில் பயந்த சுபாவம். நிச்சயமாக இது போன்ற சூழ்நிலையை அறியாதவள். இவள் உள்ளே நுழையவும் இவளது பின் அவர்கள் தொடர்ந்ததை பார்த்த எதிர் டிபன்ஸ்டால்காரர் உடனே இவனுக்கு தனது செல் போனில் அழைத்து சொல்லி இருந்தார். அவளின் பின்னே நால்வரும் போனார்கள் என…

அங்கு ஆரம்பித்த ஓட்டம் அவளை பார்க்கும் வரை நிற்க வில்லை. எதுவும் ஆக கூடாது. கூடவே
ஐயோ பயந்திடுவாளே… இதை தான் நினைத்தான்.சமீபத்திய பார்வையும் புரிந்தே இருக்க பதில் தான் தெரியாமல் சுற்றி கொண்டு இருந்தான். அதுவும் அவளுக்கு ஒன்று எனவும் அவன் மனமும் அவனுக்கு தெரிந்து விட்டது. தானும் அவளை விரும்புவதை…

வீட்டுக்கு போக சொன்னமே போய் இருப்பாளா இப்படி தான் நினைந்து கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில் போலீஸ்ஸ்டேசன் வந்திருக்க உள்ளே அழைத்து சென்றவரோ வாங்கடா விருந்தாளிக்கு பொறந்தவன்களா என கேட்டுக் கொண்டே யோசிக்காது அடிக்க ஆரம்பித்தார். பெரிய இடத்து பொண்ணுங்க மேல கை வச்சா என்ன நடக்கும்ன்னு இப்ப காட்டறேன் என்றபடி….நால்வரையும் எதுவுமே விசாரிக்காமல் கைகள் ஓயமட்டும் அடித்தவர் ஐந்தாவதாக கையில் லத்தியோடு குருவை நெருங்கி இருந்தார்.

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here