அன்றைய நாள் மதியம் வரை அங்கேயே கழிய இரவே ராகவின் தாய் தந்தை சுமியிடைய அப்பா குமாரவேல் மூவறும் திருப்பதி சென்று வர வேண்டுதல் இருந்ததாய் சொல்லி இரவே புறப்பட்டு இருந்தனர். இரண்டு பேருக்குமே பேச வாய்ப்பு தரவே இல்லை. பேச முடியவும் இல்லை.
புறப்படும் போது ராகவை பார்த்து அவனது தந்தை …. ராகவ் வர ரெண்டு நாள் ஆகும். பொறுப்பா பார்த்துக்கோ. ஏதாவதுன்னா உடனே கால் பண்ணு . அங்கே தரிசனம் முடிஞ்சதும் உடனே புறப்பட்டு விடுவோம். ப்ரெண்டுங்க கூட வெளிய கிளம்பிடாதே…நூறு அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்றிருந்தார்.
அடுத்த நாள் எழுந்ததும் தான் தனது மொபைலை தேட ஆரம்பித்தாள் சுமி. ஆன் பண்ணி பார்க்கவும் குருவிடம் இருந்து வந்திருந்த மிஸ்டு கால்ஸை பார்த்தவள் என்ன பதில் சொல்வது. எப்படி பேசுவது ஓன்றும் புரியாமல் போனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். இதுவரை இருவருமே சொன்னதில்லைதான். ஆனால் அவனுடைய அன்பை அவளும் அவளது அன்பை அவனும் உணர முடியுமே. உள்ளுணர்வு நிச்சயம் பொய் சொல்லாது. நிச்சயமாக சுமியால் குருவை விட்டு தர முடியாது. எதா இருந்தாலும் அவனை பார்த்து பேசிவிட்டு முடிவு செஞ்சிக்கலாம்.
இந்த நிமிஷம் வரை எதுவுமே சொல்லல . ஆனால் அவனோட பார்வை பொய் சொல்லாது. குருகிட்ட பேசிவிட்டு ராகவை பார்த்து சொல்லிக்கலாம். இப்படி நினைத்தவள் இங்கே பிரச்சனை எதுவும் இல்லை. ஆபீஸ் தான் வந்துவிட்டு இருக்கிறேன். மெசேஜ் செய்தவள் வேகவேகமாக புறப்பட்டாள்.
கேப்ஸ் புக் செய்து இவள் ஆபீஸ் வரும் போது நேரம் பதினொண்றை தொட்டிருக்கிறது இவளது இருக்கைக்கு வந்த சில நிமிடத்தில் குருவும் இவளை நோக்கி வந்திருந்தான். இவனை பார்த்ததுமே ஏதோ ஆண்டு கணக்கில் பார்க்காமல் பார்த்தது போல் முகம் முழுக்க மகிழ்ச்சியோடு தன்னை அறியாமல் எழுந்து நின்றாள். அதுவும் ஒரு நொடி தான். அடுத்த நொடி ஒரு வேளை விஷயம் தெரிஞ்சதும் நம்மல வெறுத்திடுவானோ… இதை யோசித்தவள் முகம் களை இழக்க கவலையை பூசிக் கொண்டது.
வந்தவன் இவள் முகத்தை மட்டுமே பார்த்திருக்க முகம் காட்டிய தோற்றத்தை பார்த்து நெருங்கி வர நினைக்கையில் அவனது அறையில் இருந்த லேன்ட்லைனிற்கு அழைப்பு வரவும் விலகி நடந்தான். கிட்டத்தட்ட அரைமணி நேரம் தாண்டிய பிறகு வெளியில் வந்து பார்க்க இப்போதும் அதே தோற்றத்தில் தனது கம்ப்யூட்டரை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளது களங்கிய தோற்றமே அவனை ஏதேதோ செய்தது. அருகில் வந்து
சுமி… சரி செய்ய முடியாத பிரச்சனை எதுவுமே இல்ல. நீயா வாயதிறந்து சொல்லாத வரை. என்ன பிரச்சனை ஏன் இப்படி முகத்தை வச்சி இருக்கற…பார்க்க கஷ்டமா இருக்கு சுமி….
அவன் கேட்டதுமே கண்கள் களங்க பார்க்க… அப்போதுதே முடிவு செய்து விட்டாள். எல்லாவற்றையும் சொல்லி விடுவது என … குரு எனக்கு காபி வேணும். கேண்டீன் போகலாமா…
நம்ம கேண்டினுக்கா…
ஆமாம்.
சரி வா. அளவோடு சென்றவன் அவனுக்கு டீ யும் அவளுக்கு காபியும்
எடுத்து வந்தவன் இவள் புறம் காபி கப்பை நகர்த்தி வைத்து விட்டு டீயை
அருந்த ஆரம்பித்தான். கையில் காபியை எடுத்தவள் எப்படி பேச ஆரம்பிக்க என யோசித்தபடி இவன் முகம் பார்க்க ஒரு நொடி பொழுதில் புதிய ஆசை ஒன்று முளையிட்டது. கேன்டினை பார்க்க சுட சுட பஜ்ஜி ரெடி ஆகி கொண்டு இருந்தது.
குரு எனக்கு பஜ்ஜி வேணும். வாங்கிட்டு வாங்க. டீ கோப்பையை வைத்தவன் வாங்கி வர ஒரு நிமிடம் கூட தாமதிக்காது அவனது டீ கோப்பையை எடுத்தவள் அந்த இடத்தில் தனது காபியை நகர்த்தி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதவள் போல எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.
சுவை எதுவுமே தெரிய வில்லை. இது குருவோடது. அதுமட்டுமே தோன புதிதாய் முகத்தில் கூட குறும்பு புன்னகை தோன்றி இருந்தது சுமிக்கு…
தனக்கு சொன்னதுதான் அவனும் வாங்கி இருப்பான் என்ன நினைக்க பஜ்ஜியோடு வந்தவன் எடுத்து வாயில் வைக்கும் போதே தெரிந்து விட்டது. சுமதியின் செய்கை… இப்போது அவன் முகத்தில் தோன்றி இருந்தது. புதுவிதமாய் புன்னகை ஒன்று. தலைகோதியபடி கண்கள் அவளை சிறைசெய்ய உதட்டில் தோன்றிய புன்னகையோடு அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவனது பார்வைக்கு பொருள் தெரியாதவள் கையில் இருந்ததை முழுவதும் குடித்து முடிக்க போகலாம் குரு…. என எழுந்தாள். கூடவே வந்தவன் சுமி டீ நல்லா இருந்ததா …
இந்த கேள்வியே கண்டு கொண்டான் என்பது தெரிய வர….. மொத்த ரத்தமும் முகத்திற்கு குடி ஏறி இருந்தது.ஏற்கனவே சிவந்த முகம் இப்போது சூரிய வெளிச்சத்தில் முகம் செந்தாமரையாய் சிவந்து இருந்தது. இப்போது சிவந்திருந்த கன்னங்களை கைகளில் தாங்கும் விபரீத ஆசை குருவிற்கு வர தன்னை கட்டு படுத்தியவன். உன் கிட்ட பேசணும் சுமி . வெயிட் பண்ணு வரேன். கூறிவிட்டு விலகி நடந்தான்.
அதே நேரம் விதி ராகவ் ரூபத்தில் விளையாட ஆரம்பித்து இருந்தது. கைகளில் இருந்த செல்பேசியில் முந்தய நாளின் புகைப்படத்தை பார்த்தவனுக்கு விபரீத ஆசை ஒன்று தோன்றி இருந்தது. அதை உடனே செயல்படுத்த நினைத்தவன் யோசிக்காது குருவின் நம்பரை தட்டி இருந்தான்.
காரை ஓட்டியபடி குரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும். பக்கத்தில் இருக்கற பார்க்கு வர்றியா என்றபடி….
என்ன விஷயம். போன்ல சொல்லு….
நோ..நோ உன் முகத்தை பார்க்கணும் .நான் சொல்லறதை நீ கேட்கும் போது. அதனால நீ வர்ற…பத்து நிமிஷத்துல…
இவன் ஏன் இப்ப கூப்பிடறான். சுமிகிட்ட பேசணும். அங்கே வெயிட் பண்ணுவா. அன்று வந்தவன் சொன்னது ஞாபகம் வர .. சரி இவனை பார்த்துட்டு வந்து சுமிகிட்ட
பேசிக்கலாம். பார்க்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த இரண்டாவது நிமிடம் ராகவ் உள் நுழைந்தான். அப்புறம் ப்ரோ எப்படி இருக்கற… உன் முகத்தில் சேன்ஜஸ் தெரியுது… ம்… என்னோட கெஸ்சிங் சரியா இருந்தா நீ அந்த சுமித்ராவை லவ் பண்ணற சரியா…
இது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் ஸார்.
எஸ்… எஸ் …எனக்கு தேவையில்லாத விஷயம் தான் ஆனா இந்த தகவல் உனக்கு யூஸ் ஆகுமா பாரு. இது நான் கட்டிக்க போற பொண்ணு. பாரேன். நேற்றய நாளில் எடுத்த புகைபடம். இருவரும் சிரித்தபடி இருக்க… அதிர்ச்சியோடு ராகவை பார்த்தான் குரு.
நீ என்ன நினைச்ச குரு. ஆர். எஸ் குழுமம் அப்படின்னா என்னன்னு எப்பவாவது யோசித்து இருக்கிறாயா. ராகவ் ஆன்ட் சுமித்ரா
எனக்காக என்ன வேணும்னாலும் செய்வா … நீ சாகற வரைக்கும் மறக்க முடியாத அளவுக்கு அடிப்பேன்னு சொன்னேன்ல. செய்துட்டேன்.
ராகவ் எப்பவுமே ராகவ் தான். சொன்னா சொன்னத செஞ்சுடுவான். பை… கண்ணா…விலகி வெளியேற ஆரம்பித்தான் ராகவ்.
அங்கே சுமித்ராவோ குருவின் வரவுக்காக காத்திருந்தாள் நகம் கடித்தபடி கொஞ்சம் படபடப்போடு… இனி வரும் நாட்களில் அழுகை மட்டுமே துணையாய் இருக்க போவதை அறியாமல் …..அந்த நிமிடம் ஒட்டு மொத்த மகிழ்ச்சியையும் தனக்கே சொந்தம் என நினைத்தபடி …
தேடி வந்திடுமா சொர்க்கம். ![?]