அவன் சென்று அரைமணி நேரம் ஆகியும் அங்கிருந்து நகரும் எண்ணம் இன்றி அதே இடத்தில் அமர்ந்து இருந்தான் குரு. நிஜம் எது பொய் எது எதுவுமே புரியாத நிலை. சற்று முன் சுமி உணர்த்தியது. நிச்சயம் அது பொய் இல்லை. ஆனால் இவன் சொன்னது இதுவும் பொய் இல்லை.
நிறைய யோசிக்க வேண்டி இருந்தது குருவிற்கு . அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் ராணி. இங்கு வந்து வேலை செய்வது…. அது பொய்யில்லையே…
உள்ளுக்குள் கோபம் பல மடங்காய் பெருக எரிமலையின் சீற்றத்தோடு கோபத்தோடு புறப்பட்டான். நேராக அவனது அறைக்கு செல்லவும் கூடவே சுமித்ராவும் எழுந்து வர….அவளது முகத்தை பார்த்தவன் .இப்போதும் முழுக்க முழுக்க கண்களில் காதல் தேங்கி கிடந்தது. தன் கண்களை இருக்கிறாயா மூடி திறந்தவன்…. ஆர் எஸ் ஸோட புல்பார்ம் என்ன சுமித்ரா… ராகவ் அன்ட் சுமித்ராதான…
இதை கேட்டவள் கண் களங்க… குரு நான் சொல்லறத கொஞ்சம் கேளுங்க…
நீயும் ஏமாத்திட்டல்ல. நான் உன்னை எவ்வளவு…. ஷிட் . உன்கிட்ட இத எதிர் பார்க்கல.
இல்லை குரு… உன்கிட்ட சொல்லதான்….
என்ன சொல்ல போற… பேசாத நீ சொல்ல வேண்டியத ராகவ் சொல்லிட்டான். இன்னமும் ஏமாற எதுவுமே இல்ல. பொண்ணா போயிட்டயேன்னு பார்க்கறேன். வேற யாராவதா இருந்தா இந்நேரம் நடக்கறதே வேற… கைகளை ஓங்கியபடி நெருங்கி வர பயத்தில் கண்களை மூடி இருந்தாள் .
என் வாழ்நால்ல இனிமே உன் முகத்தை எப்பவுமே பார்க்க விரும்பல. கண்ணு முன்னாடி நிற்காமல் போயிடு … ஷிட்…. நான் ஒரு பைத்தியக்காரன் . உன்கிட்ட சொல்லறேன் பாரு இது உன் இடம் உன் ஆபீஸ் நீ போக வேண்டாம். இங்கேயே இரு . நான் போறேன். என்னோட இந்த வேலைய விட்டு. ..
சொன்னவன் வேகமாக வெளியேறி இருந்தான். இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லாமலேயே பிரிந்து இருந்தது அவர்களது நேசம்.
அழுகை கேவலாய் வர இன்னமும் நம்ம முடியாத வில்லை. குரு தன்னை விட்டு போய்விட்டான். தன்னை புரிஞ்சிக்காம போய்விட்டான். வழிந்த கண்ணீரை துடைத்தபடி அவளுமே கிளம்பி இருந்தாள். எப்படி வீட்டுக்கு வந்தால் எதுவுமே தெரியாது. தனது அறைக்குள் நுழைந்தவள் அழுகையை துணை கொண்டு ஆற்றுவார் தேற்றுவார் யாரும் இல்லாமல் அழுது கொண்டு இருந்தாள்.
அதே நேரம் அந்த மதிய பொழுதில் குருவை எதிர்பாராதவர் என்னடா இப்பவே வந்து இருக்கற….
தனா இந்த பணக்காரங்கலே சரி இல்ல. நீ சொன்னது தான் சரி. நீ டியூசனுக்கு இடம் பாரு தனா. நான் வேலையை விட்டுவிட்டு மொத்தமா வந்துட்டேன். அந்த ஒரு வார்த்தை தான் அவன் சொன்னது. அதற்கு மேல் எதுவும் கேட்கவும் முடியவில்லை. அவனும் சொல்வதாய் இல்லை.
இரவு பத்து மணியை நெருங்க இன்னும் அழுதுகொண்டு இருந்தாள். மதியமும் சாப்பிடாமல் இருக்க இரவும் சாப்பிட கீழே இறங்கி வரவில்லை. சமையற்கார அம்மா பார்த்தவர் ராகவிற்கு போனில் அழைத்து சொல்லி இருந்தார். வேலையில் இருந்து அப்போது தான் வந்திருக்க நேராக இவரிடம் வந்தவன் கேட்க….
மதியமே ஒரு மாதிரி தான் பாப்பா வந்துச்சி. அப்போது ரூம்குல்ல போனதுதான் இன்னும் வரல. அழற சத்தம் கேட்குது.
நான் பார்த்துக்கறேன். நீங்க சாப்பிட எடுத்து வைங்க….
சுமித்ரா சுமித்ரா கதவை தட்ட மொத்த ஆத்திரமும் அவன் மேல் திரும்பி இருந்தது. கதவை திறந்த நொடி அவனது சட்டையை பிடித்து உழுக்க ஆரம்பித்து இருந்தாள். ஏண்டா இப்படி செஞ்ச… எல்லாம் உன்னாலதான். எனக்கு குரு வேணும். நான் ஏமாத்தறவளா. சொல்லு.. சொல்லு…நீ என்ன சொன்ன…
எனக்கு குரு வேணும் நான் அவனைதான் கல்யாணம் பண்ணிப்பேன். அவள் அழுவதை தாங்க முடியாதவன்
சுமி சுமி இங்கே பாரு. நான் தானே தப்பு பண்ணினேன். நானே சரி பண்ணி தரேன் அழாதடா…
எப்படி சரி பண்ணுவ…
அப்பா கிட்ட பேசறேன். குரு கிட்ட பேசறேன். நீ அழாதடா. நானே நேர் பண்ணிடறேன். ப்ளீஸ். இவன் விளையாட்டு போல துவங்கி வைக்க அவள் உண்மையிலேயே விரும்பியது இவனுக்கு அப்போது தான் தெரிந்தது. ஒருவராக அவளோடு போராடி சமாதானம் செய்து சாப்பிட வைத்து முடிக்க பதினோன்றை தொட்டு இருந்தது.
இதோ அத்தனை ஆர்பாட்டம் முடிந்து அவனது மடியிலேயே உறங்கி இருந்தாள். தூக்கத்திலும் குருவின் பெயரை சொன்னபடி…
சுமித்ரா நான்கு வயதில் அன்னையை கேட்டு அழுதது. இவன் சமாதானம் செய்து உறங்க வைக்க இன்றும் அது போலவே தூங்கிக் கொண்டு இருந்தாள். பெட்.டில் தலையை நகர்த்தி வைத்தவன் சமையற்கார அம்மாவிடம்… கூடவே இருங்க… என்றபடி தனது வீட்டுக்கு புறப்பட்டான். அன்றைய நாள் அவனுக்கு சிவராத்திரி என்பதை அப்போது உணரவில்லை.
அடுத்த அழைப்பு வந்தது நிஷாவிடம் இருந்து… புருவம் சுருக்கியபடி இந்த நேரத்தில் இவள் கூப்பிட மாட்டாளே… நினைத்தவன் அட்டென் செய்ய…
ஸாரி ராகவ் என்ன மன்னிச்சிடு சற்றே குளறலாக வந்து விழ…
எதுக்கு மன்னிக்கணும்…
நான் உன்னை ரொம்ப விருப்பினேன்டா… உனக்கு தெரியவே இல்ல. நீ இல்லாம வாழ முடியும்ன்னு எனக்கு தோனல…விநாயக் கூட ரொம்ப திட்டினான். ஆனால் என்னால நினைச்ச மாதிரி மனசு மாத்திக்க முடியாது…
இவள் பேச பேசவே கொஞ்சம் பதட்டமாக ஆரம்பித்தான். இப்ப என்ன செஞ்ச… நிஷா… என்ன பண்ணின.
அப்பாவோட சிலீப்ங் டேப்லட்ட மொத்தமா போட்டுட்டேன். இனிமே நீ எனக்கு இல்லைன்னு அழ வேண்டாம் பாரு…
பைத்தியமாடி உனக்கு. .. கேட்கும் போதே அவனது வண்டியை எடுத்து கிளம்பி இருந்தான் அவளது வீட்டிற்கு… கூடவே விநாயக்கிற்கும் சொல்லி இருந்தான். இவன் அவளது வீட்டு வாசலுக்கு வரும் போதே சரியாக அவனும் வர காவலாளியிடம் தகவல் சொன்னவன் வேகவேகமாக அவளது அறையை நோக்கி ஒடி இருந்தனர்.
நிஷாவின் பெற்றோர்கள் திருமணத்திற்காய் டெல்லி வரை சென்றிருக்க… நிஷா இருந்த கதவை உடைத்து அவளை கையில் ஏந்தியபடி காரை நோக்கி ஓடிக் கொண்டு இருந்தான். விநாயக் வண்டியை ஓட்ட பதட்டம் பயம் மொத்தமாய் பந்தாடியது ராகவை…
ஓவென கத்தி நடணமாடும் நிஷா. இவன் தோல் சாயும் நிஷா. கண்களை மூடினாள் நிஷாவின் முகம் தெரிய….
அப்போது தான் அவனுக்கும் அவன் மனம் தெரிந்தது. இதோ ஐசியூ வில் அனுமதித்திருக்க வாசலில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தான்.
ராகவின் கண்கள் மூடி இருக்க உறக்கம் சுத்தமாய் விலகி இருந்தது.
விட்டுட்டு போயிடாதடி திரும்ப வந்திடு என்ற வேண்டுதலோடு….
விடியற்காலையில் ஐந்து மணிக்கு மேல் பயம் இல்லை என கூற … சற்றே நிம்மதியாக இருக்கையில் சாய்ந்தான். விநாயக் கும் அருகிலேயே இரவு முழுதும் கூடவே இருந்தான். காலை ஆறு மணியை தொட ராகவின் பெற்றோர் திருப்பதியில் இருந்து திரும்பி இருக்க இவனை அழைத்தவர்
எங்க இருக்கற ராகவ். வீட்டுக்கு வா என கூற … ஏற்கனவே எடுத்திருந்த தீர்மாணத்தை செயல்படுத்த தந்தையை காண புறப்பட்டான்.
தொடரும்.