தேடி வந்த சொர்க்கம் _23

0
304

இதோ இரண்டு நாட்கள் முடிந்திருக்க எதுவுமே சொல்லமுடியாதபடி இருக்கமாய் உணர்ந்தாள் சுமி . எதிரில் தெரிந்த டிரஸ்ஸிங் டேபில் ஆளுயற கண்ணாடி வெறுமையாய் காட்சி அளித்தது அவளது மனம் போலவே. அன்று ராகவின் சட்டையை உழுக்கியவள் அதே கோபத்தோடு நீ வெளியே போ என கத்தியபடி பிளவர் வாஷ்ஷை எடுத்து விச கடைசி நிமிடத்தில் நகர்ந்தவன் அந்த சூழ்நிலையிலும் தெரித்து விழுந்த கண்ணாடி இவள் மேல் படாமல் இழுத்து நகர்ந்திருந்தான் இவளையும் சேர்த்து…..

சுமியின் பிடிவாதம் தெரிந்தவன் சமீபத்திய மாற்றத்தை கவனிக்க தவறியிருந்தான்.

எழும்போதே நிஷா ஹாஸ்பிடலில் அட்மிட் இகியிருப்பதை விநாயக் கூறியிருக்க அவனையும் வர சொல்லியவள் கிளம்பியிருந்தாள் .
சுமியின் தகப்பனாரும் குருவை பார்க்க கிளம்பிக் கொண்டு இருந்தார் இவளிடம் எதுவும் சொல்லாமல்…

அங்கே ஹாஸ்டலுக்கு போனதுமே சுமியை பார்த்த நிஷா எதையுமே மறைக்காமல் அனைத்தையும் சொல்லி இருந்தாள்.

ஸாரி சுமி ரெண்டு பேரை பத்தி முழுசா தெரிஞ்சும் அங்கே ராகவ் அப்பா சொன்னது உண்மையின்னு இப்படி ஒரு பைத்திகாரதனத்தை பண்ணிட்டேன். ராகவ் தன்னை விரும்பியதை சொல்லவும் சுமி கூட நிறைவாய் உணர்ந்தாள். எந்த காலத்திலேயும் நிஷாவிற்கு ராகவிடம் கொண்ட அன்பு மாறாது. இதை பல நேரம் இவள் உணர்ந்து இருந்தாலும் இப்போது ராகவும் புரிந்து கொண்டது மகிழ்ச்சியை தந்தது. மதியம் வரை நிஷா அவளை கூடவே வைத்துக் கொண்டாள்.

அங்கே குருவின் வீட்டிற்கு செல்ல அவனது தந்தை அனைவரையும் அமர வைத்து பேசிக்கொண்டு இருந்தார். குருவோ அப்பா எதுவும் பேச வேண்டாம் அவங்களை முதல்ல வீட்டுக்கு அனுப்பி வச்சிடுங்க….

என்ன கூற….அவருக்குமே இரண்டு நாட்களாய் குருவை கூடவே இருந்து கவனித்தவர் அல்லவா… எதுவும் சொல்லாமல் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தார்.

ராகவ் குருவை பார்த்தவன் பெரியவங்க பேசட்டும் நீ வாயேன் உங்க வீட்டு தோட்டத்தை சுற்றி பார்க்கலாம். இப்போதும் முறைத்து படி நிற்க யோசிக்காமல் அருகில் வந்தவன் தோளோடு கை போட்டு வா ப்ரோ … நாம முதல்ல பேசலாம். தோட்டத்திற்கு அழைத்து சென்றான்.

இது சரி வராது. நீ அவங்கல அழைச்சிட்டு கிளம்பு. என்னை ஏமாற்றினவ அந்த நினைப்பு வந்ததுன்னா வாழ்க்கை நரகமாயிடும்.

அப்போ சுமிய நீ விரும்பல. அப்படிதான ….ஆனால் என்ன நம்ப சொல்லாத. இதோ என் கண்ணு முன்னாடி ரெண்டு நாள் தாடியோட முகத்தை எப்படி வச்சி இருக்கற. உன்னை முன்னாடியும் பார்த்து இருக்கிறேனே… அப்போ இப்படி இருக்கலையே. அங்கே சுமதியும் அழறா. என் மேல இருக்கற கோபத்தை நீ சுமி மேல காட்டாத. ஒரு நிமிடம் கூட அவளோட அன்பை புரிஞ்சிக்கலைன்னா உன் கிட்ட பேசறது வேஸ்ட்…

நீ அவளை கல்யாணம் பண்ணினா கூட நாளைக்கு ஏதாவது ஓன்னுன்னா முதல்ல நான் தான் வருவேன். யார் கிட்டேயும் விட்டு தர மாட்டேன். என்னா எந்த இடத்திலேயும் அவளும் என்னை விட்டு தர மாட்டா . அந்த அளவுக்கு அவளுக்கு என் மேல பாசம் இருக்கு.
என்னோட முதல் பெஸ்ட் ப்ரெண்ட் அவ … அதுக்கப்புறம் தான் மத்தது எல்லாம்….

நீ பேசாம நிக்கும் போதே தெரியுது. ப்ரோ உனக்கு ஓன்று தெரியுமா நான் சீரியசாக இத செய்யல . குத்துமதிப்பா அடிச்சி விட்டேன் அது இப்படி ஆகும்ன்னு யோசிக்கல … நீயே சொல்லு உனக்கு அவ மேல எந்த பீலீங்கும் இல்லன்னா நான் சொன்னது விஷயமே இல்லையே. ஈஸியா தட்டி விட்டுவிட்டு போய் இருக்கலாமே…

சரி பண்ணிடறேன்னு அவ கிட்ட சொல்லி இருக்கிறேன். மறுபடியும் மாத்து வாங்க வச்சிடாத…

என்னது அடி வாங்கினயா….

நீ வாங்குவியோ இல்லையோ தெரியாது. நான் நிறைய வாங்கி இருக்கிறேன்.

வா .. பெரியவங்க என்ன பேசறாங்கன்னு பார்க்க போகலாம்.
ஏற்கனவே பேசிக்கொண்டு இருக்க
அடுத்த முகூர்த்தம் பார்த்து உடனே மணம் முடிக்க முடிவு செய்திருந்தனர். அது கூட ராகவின் ஏற்பாடாய் இருந்தது. பொண்ணுக்கு தேவையானதை வாங்க குரு வீட்டில் பொறுப்பேற்றுக் கொள்ள வேக வேகமாய் சுமிக்கு தெரியாமல் ரகசியமாய் ஏற்பாடுகள் நடந்தது.

மதியம் வீட்டிற்கு வந்தவளுக்கோ ஏற்கனவே டிரஸ்ஸிங்டேபில் கண்ணாடி மாற்றி இருக்க ராகவ் வந்து போனது தெரிந்தது. ஆனால் இவள் கண்ணுக்கு அகப்படாமல் ஒடிக் கொண்டு இருந்தான் அந்த வாரம் முழுவதுமே…

தொடரும்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here