பரபரப்பாக காணப்பட்ட அந்த மருத்துவ மனையில் வரவேற்பு அறையின் இருக்கையில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தான் குரு.
வயது 27. நல்ல உயரம். சிவந்த நிறம்.
ஆளுமையான தோற்றம். காலையில் இவனது நண்பனுக்கு அக்ஸிடென்ட் நடந்திருக்க அவனோடு வந்தவன் நண்பனுக்கு உதவியாக வந்து இங்கு அமர்ந்திருந்தான். ஐ. சி. யூ வில் அட்மிட் செய்திருக்க குடும்பத்தாருக்கு தகவல் சொல்லி கூடவே தேவையான மருந்துகள் வாங்க என்ன பம்பரமாய் சுற்றியவன் பிழைத்து கொண்ட தகவலோடு கண் மூடி இருந்தான். கொஞ்சம் நிம்மதியோடு….
குரு…. குரு சத்தம் கேட்க கண்ணை திறந்தவன் அழைத்தவரை பார்க்க
நீ வேணும்னா வீட்டுக்கு போப்பா. உன் அப்பாவும் கூப்பிட்டாங்களே. இனி பயம் இல்லன்னு சொல்லிட்டாங்கல்ல. ரொம்ப களைப்பா தெரியற. அது தான் நாங்க வந்துட்டமே இனி நாங்க பார்த்துக்கறோம். நீ காலையில் வாப்பா…
ஏற்கனவே தூக்கம் இல்லாத விழிகள் களங்கி சிவந்திருக்க… பேச வாய் திறக்க அதே நேரம் அவனது செல்பேசியில் அழைப்பு வந்தது.
ஹலோ. .. சொல்லுங்கப்பா… நல்லா இருக்கறான். பயம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஹா… அவங்க வீட்டில் இருந்து வந்துட்டாங்க. இப்ப கிளம்ப வேண்டியது தான்பா. வந்துடுவேன். இன்னும் ஆரை மணி நேரத்துல… நீங்க இன்னும் தூங்கலையா… கேட்ட கேள்விகளுக்கு பதில் உரைத்தவன்..
சரிங்கப்பா. பார்த்துக்கோங்க. காலையில் வந்து பார்க்கறேன் .
குரு நீ கூட இருந்து ஊதவினதுக்கு நன்றிபா. நீ இல்லன்னா என்ன நடந்து இருக்குமோ . நினைக்கவே பயமாக இருக்கு. அடி பட்டதுமே முதலில் அழைத்தது இவனது நம்பருக்கு தான். அப்போது வீட்டில் சொல்லி விட்டு வந்தவன் இப்போது தான் வீட்டுக்கு புறப்பட்டான்.
கைகளில் சோம்பல் முறித்தபடி எழுந்தவன் அப்பா… என்ன உதவி வேணும்னாலும் உடனே கூப்பிடுங்க. அரைமணி நேரத்தில் வந்துடுவேன் என கூறியவன் தனது வண்டி நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தான்.
உறவு என்று சொல்லிக்கொள்ள
தகப்பனார் தவிர யாரும் இல்லாதவன் குரு. சிறு வயதிலேயே தாயார் இறந்திருக்க குருவிற்காகவே வாழ்ந்தவர் அவரது தந்தை தனசேகர்.
ரிடைட்டு போஸ்ட் மேன். எப்போதுமே குருவிற்கு முதல் நண்பன் யார் என கேட்டால் … யோசிக்காமல் சொல்வான் தனா.. என அந்த அளவிற்கு நெருக்கம்.
தந்தை என்ற முறையில் நடந்து கொண்டது இவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த போது தான். நண்பர்கள் என கூட இருந்தவர்களோடு திருட்டு தனமாக சிகரெட் பிடிக்க தெரிந்ததும் தனது பெல்ட்டை களட்டி விளாசிவிட்டார்.
அன்றோடு சரி இன்று வரை தவறான
எந்த ஒரு செயலுக்கும் செல்வதில்லை. கொஞ்சம் முன் கோபம். அதுவும் கூட நியாயமான காரணங்களுக்காக மட்டுமே வரும்.
இன்று யோசிக்கும் போது தந்தையின் தியாகம் எப்போதுமே பெரியதாக தோன்றும். நினைத்து இருந்தால் இன்னோரு திருமணம் செய்து இருக்கலாம். நமக்காக தானே இந்த தனிமை. மொத்தத்தில் தற்போது மட்டும் அல்ல எப்போதுமே பாசம் அதிகம் தந்தை மீது…
தந்தை எப்போதும் கூறுவது… குரு கோபத்தை கொஞ்சம் குறைச்சிக்கோ என்பது தான்….
நேரம் பார்க்க மூன்று மணியை தாண்டி இருக்க நிறுத்தி இருந்த தனது வண்டியை எடுத்தவன் தனது வீட்டை நோக்கி வண்டியை திருப்பினான்.குளிர்ந்த காற்று முகத்தில் மோத மிதமான வேகத்தில் வண்டி மேட்டுபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தான். அதே நேரம் எதிர் முனையில் இருந்து
ஆடி கார் ஒன்று தடுமாறியபடி சற்றே வளைந்து வந்து கொண்டு இருந்தது சற்றே வேகத்தோடு…
அமைதியான சாலை சோம்பலாய்
எரியும் தெருவிளக்கு கூடவே வேகமான ….கடைசி நிமிடம் பார்த்து
வண்டியை சற்றே வளைத்து ப்ரேக் அடிக்க… வண்டி ஒருபுறம் சரிந்தபடி கிழே விழுந்திருந்தான் குரு. அதே நேரம் இவன் மேல் மோதாமல் தவிர்க்க காரில் வந்தவனும் வண்டியை வளைத்து ப்ரேக் இட வண்டி பாதி ப்ளாட்பாரம் ஏறி சற்றே சாய்ந்தபடி ப்ரேக்கிட்டு நின்றது.
கீழே விழுந்த குருவிற்கு கையில் சிராய்த்து பயங்கர எரிச்சலோடு ரத்தம் வந்து கொண்டிருந்தது. வண்டியை நிமிர்த்தி ஓரமாக நிறுத்தியவன் காரில் வந்தவனை நோக்கி வர…
குருவிற்கு அவ்வளவு கோபம். காலை முதல் ஹாஸ்பிடலில் இருந்தது. கொஞ்சமும் பொறுப்பில்லாமல் வண்டி ஓட்டி தன் மோத இருந்தது. என மொத்தத்தில் வண்டியில் வந்தவன் மேல் சரி கோபத்தோடு வண்டியை நெருங்கி கார் கண்ணாடியை திறக்கும்படி சைகை காட்ட… ஏற்கனவே ஷேப்டி பலூன் ஓபன் ஆகி இருக்க எந்த ஓரு சிறு அடியும் இல்லாமல் முழு போதையில் சிவந்த கண்களோடு
காரின் கதவை திறந்து வெளிவந்தான்
ராகவ்.
போதை ஏறிய எங்களோடு ராகவ்வும் ….தூங்காமல் சிவந்திருந்த கோப விழிகளோடு குருவின் கண்களும் ஒன்றை ஓன்று பார்ந்து கொண்டது. குடித்து இருந்தான் என தெரிந்த அடுத்த நொடி கோபம்முழுவதும் மொத்தமாய் தலையில் ஏற யோசிக்காது பளார் என ஓங்கி அடித்திருந்தான் குரு.
தொடரும்.