சுமி நீ ஏன் இப்படி அதிர்ச்சி ஆகி பார்க்கிற…
டேய்… என்ன செய்ய போற. கொலை கேஸ்ல உள்ள போயிடாத..
என்ன பார்த்தா எப்படி தெரியுது உனக்கு…
ராகவ் நீ அதுக்கு செட் ஆக மாட்டேன்னு தெரியும்…. சரி யார் அவன் எப்படி கண்டு பிடிப்ப…
இந்தா அவனே குடுத்துட்டு போய் இருக்கிறான். பாக்கெட்டில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து நீட்ட… கையில் வாங்கி பார்த்தவள் சிரிக்க ஆரம்பித்தாள்… செம தைரியம். எனக்கே அவனை பார்க்கணும் போல இருக்கு. என்ன பண்ணலாம் இவனை பேசாம உன் கைய கட்டு போட வச்ச மாதிரியே அவனையும் செஞ்சிடு.
இல்லன்னா பேசாம வேலையைவிட்டு தூக்கிடு…
இல்ல அவனுக்கு வேற இருக்கு. ரெண்டு நாளா அது தான் யோசனையே…. சரி நீ சொல்லு. திடீர்ன்னு என்ன பார்க்க வர என்ன காரணம். என்ன குழப்பம் உனக்குல்ல…
குழப்பம் எல்லாம் இல்ல. பிரச்சனை தான். பிரச்சனைக்கு காரணமும் நீ தான்.
நானா… என்ன அது.
பிரபா அங்கிள் இந்த வீட்டுக்கு கூப்பிடறாரு.
கூப்பிட்டா. வர வேண்டியதுதான…
ராகவ் குரங்கே நிரந்தரமாக வர சொல்லறாரு…
என்னது…..
அதே தான்.
நீ என்ன சொன்ன…
எனக்கு அப்பா கூட இருக்கணும். அவ்வளவு தான். சோ… முடிவு எடுக்க வேண்டியது நீதான். ஏன்னா இல்லாத மூளையை கசக்கி நான் ரெடியா இல்ல. எதாவது இருந்தாலும் பிரபா அங்கிள் கிடாட சொல்லிடு நான் வரேன்.
சுமி பேசாம போனா எப்படி. ..
ராகவ் எப்ப உன் கிட்ட இத சொன்னனோ அப்போ இருந்து இது என் பிரச்சனை இல்ல இனிமே அது உன் பிரச்சனை இனிமே இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல. நான் வரேன்.
சுமி ஒரு வேளை ஓகே சொல்லிட்டேன்னா…
விதி வழியது கண்ணா. எதா இருந்தாலும் அனுபவி. …
அடிப்பாவி….
மறுபடியும் சொல்லறேன். நல்லா யோசித்து முடிவு எடு . எனக்கு அப்பா கூட இருக்கணும் அவ்லோ தான். பையன் எந்த குரங்கா இருந்தாலும் ஓகே தான் .அப்புறம் எந்த பதில் சொல்லறதா இருந்தாலும் ஒரு தடவை எனக்கு கால் பண்ணி சொல்லிடு. நானும் அதையே சொல்லிடுவேன்.
மறந்துடாத…சுமி பேசியபடி வெளியேற யோசித்தபடி நின்றான்.
அடுத்த இரண்டு நாட்கள் எந்த தகவலும் இல்லாதிருக்க சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு சுமியை அழைத்திருந்தான் ராகவ்.
ராகவ் உலக அதிசயமா இருக்கு. எங்க இருந்து பேசற.
ஏன் வீட்ல இருந்து தான் சுமி…
நீ… பார்ட்டிக்கு போகலையா…
இல்ல. இப்ப மட்டும் இல்ல. எப்பவுமே. என்ன செயல் இழக்க வச்ச என்ன தடுமாற வச்ச எந்த பழக்கமும் எனக்கு தேவையில்லை. இனிமே எப்பவுமே என்ன லைப்ல இல்ல…
ராகவ் எனக்கு எவ்வளவு ஹேப்பியா இருக்கு தெரியுமா. வீட்ல தான் இருக்கற. இப்ப வரேன். போனை கட் செய்தவள் அவ்வளவு மகிழ்ச்சியோடு அவனை காண சென்றாள்.
வீட்டின் ஹாலில் அமர்ந்திருக்க அருகில் சென்றவள் நீ இப்படி மாறணும்ன்னு ரொம்ப நாள் ஆசை பட்டேன். நீ பழைய ராகவ் தான். தப்புன்னு தெரிஞ்சா விலகி வர்ற அந்த பழைய ராகவ்வேதான்….
ஏய் ஓரேடியா பாசத்தை புளியாத…அப்புறம் அவனுக்கும் யோசிச்சிட்டேன். மன்டே மானேஜிங் அவன்கிட்ட பேசிவிட்டு உன்னை வந்து பார்க்கிறேன். நம்ம கம்பெனியில் வேலை செஞ்சிட்டு நம்மலயே அடிப்பானா. ஆயுசுக்கும் மறக்க முடியாத தண்டனை அவனுக்கு பிக்ஸ் பண்ணியாச்சு. அவன மாதிரியே சொல்லி அடிப்பான் இந்த ராகவ்.
என்னடா செய்ய போற…
செய்ய போற இல்ல. செய்ய போறோம்.
என்னை ஏன் இதுல இழுக்கற.
ஏன்னா நீயும் நானும் மூதல்ல பெஸ்ட் ப்ரெண்ட். முதல்ல உனக்கு தான் கோபம் வரணும். ம்… நான் செம ஹாப்பி…. அவனுக்கு குடுக்க போற தண்டனையை நினைச்சு….வா வெளியில் போய் ஏதாவது சாப்பிலாம். கை பெயின்னா தான் இருக்கு. நீதான் வண்டியை ஓட்டணும்.
இவனது சொல்லுக்கு தலை ஆட்டி தனது ஒட்டு மொத்த மகிழ்ச்சியும் காணாமல் போய் இரண்டு பேருக்கு நடுவே மாட்டிக்கொண்டு இனி முழிக்க போவதை அப்போது அறிய வில்லை சுமி .
தொடரும்.