தேன்மொழிபாகம்12

0
154

கிஷோருக்கு இப்பொழுது புதிய தலைவலி ஆரம்பித்துவிட்டது….10 நாளுக்கு முன்னர்
ராஜமாணிக்கம் கிரானைட்ஸுக்கு அரசு இடத்தில் கிரானைட் தோண்டியதால் புகார் செய்யப்பட்டதன் பெயரில் அவன் சீல் வைத்தது இவ்வளவு பெரிய பிரச்சனையை கொண்டு வந்துவிட்டது…ராஜமாணிக்கம் தாதாவாக வடசென்னையில் சுற்றித்திரிபவன் பல புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள்,கடைகள் என அவன் தோதுக்கு அராஜகம் செய்து கொண்டிருந்தான்…அவனால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் மனு கொடுத்தது கிஷோருக்கு சற்று உறுத்தியது கிரானைட் பிரச்சனை வந்ததும் இதுதான் சாக்கு என சீல் வைத்துவிட்டான் .”என்னடா கலெக்டர்னா அவ்வளவு திமிரா நீ எப்படி புள்ளை குட்டியோட சந்தோஷமா வாழுறனு பார்க்கலாம் உனக்கு எங்க செக் வைக்கனுமோ அங்க வைக்குறேன் என கத்திவிட்டு போனவன்தான் …ஐயோ நாளைக்கு என் பொண்டாட்டிக்கு வளைகாப்பு இப்போ என் மேல லஞ்சம் வாங்குனதா குற்றச்சாட்டு குடுத்துருக்காங்க என் வேலை வேற போகுற நிலைமைல இருக்கு நான் என்ன செய்யுறது…சந்தோஷமா இருக்குற என் ஹனிகிட்ட என்ன சொல்றது என தனக்குள்ளே புலம்பிக்கொண்டான்…வளைகாப்புக்கு தயாராகிக்கொண்டிருந்த தேனு கிஷோர் முகவாட்டத்தைக்கண்டாள் என்னாச்சு மாமு ஏன் ஒரு மாதிரியா இருக்க உடம்பு சரியகல்லையா எனத்தொட்டு பார்த்தாள் ஒன்னுமில்லமா லைட்டா தலைவலி என அவளைவிட்டு விலகிச்சென்றான் கிஷோர்…

“மஞ்சளிட்ட முகமும்
நெற்றியில் குங்குமும்
மேடிட்ட வயிறும்
கன்னம் சிவக்க சந்தனமும்
கொஞ்சும் அழகாய்
பாவையவள் வீற்றிருக்க
தேவர்கள் வந்து வாழ்த்துக்கள் முழங்கிட
கைநிறைய வளையல் குலுங்கிட
கணவனை தன் கண்களுக்குள் வைத்திருக்க
குட்டி தேவதையை வயிற்றினிலே
சுமக்கின்றாள் அந்த பேரழகி “

முதல் வளையலை ஆஷா ஆசையுடன் அண்ணி எனக்கு குட்டி மருமகன் தான் வேணும் ப்யூச்சர் மருமகளுக்கு ஜோடியா என வாயடித்து கொண்டே போட்டு விட்டாள்,அடுத்தடுத்து எல்லோரும் வளையல் போட்டுவிட கடைசியாக கிஷோர் அவள் கைகளில் வளையலிட்டு கன்னத்தில் சந்தனமிட வெட்கத்தில் சிவந்தாள் வளைகாப்பு வைபவம் முடிந்தது.மாலை நேரம் சிறிது தூரம் வெளியே சென்று வரலாம் என தேனு கிஷோரிடம் கெஞ்சினாள்.இவனுக்கும் சிறிது மன அமைதி தேவைப்பட்டது .இருவரும் காலாற நடந்தனர் .திடீரென கிஷோருக்கு கால் வந்தது…”ஹலோ சார் நான் உங்க வக்கீல் தனசேகரன் பேசறேன் உங்க மேல ராஜமாணிக்கம் கொடுத்த கேஸ்க்கு தகுந்த ஆதாரம் இல்லாததால கோர்ட்ல கேஸை ரத்து செஞ்சுட்டாங்க மேலும் உங்களுக்கு மக்கள் கிட்ட நல்லபேர் இருக்குறத தவறா கணக்கிடனும்னு பொய்க்கேஸ் போட்டதற்கு 30,000 அபராதம் போட்டுருக்காங்க கோர்ட்ல என்றதும் போன உயிர் திரும்ப வந்ததாய் நிம்மதி பெருமூச்சு விட்டான் கிஷோர்.தன் குழந்தை வளரும் நேரம் சந்தோஷமா இருக்கனும் என்னால அவளுக்கு ஒரு கஷ்டமும் இருக்கக்கூடாதுனு கிஷோர் நினைத்தான்.சிறிது தூரம் நடந்து களைப்படைந்தவளை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தான்.மருமகள் மாசமாயிருந்ததுல இருந்து அம்மா வீட்ல இருந்து இப்பதான் வீட்டுக்கு வந்துருக்கானு விதவிதமா செச்சு அசத்தினாள் சுமதி பாவம் தேனு பல ஐட்டத்தை பக்கத்துல பார்க்கதான் முடிஞ்சது எதையும் சாப்பிட முடியலை…. திடீரென ராசாத்தியிடமிருந்து கால் வருகிறது தேனு என் மூர்த்தி மாமாவே பிறந்துட்டாங்கடி இன்னைக்கு காலைலதான் பிரசவமாச்சு சுப்பிரமணி அண்ணன் பார்க்க வந்துச்சு அது போன்ல இருந்துதான் கால் பண்றேன் இந்நேரம் என் பக்கத்துல இருந்தா எவ்வளவு சந்தோஷப்படும் என அழுதாள் அவளை தேற்ற முயன்ற தேனு தோற்றுப்போனாள்.. நாட்கள்உருண்டோட நிறைமாத மலரானாள் தேனு இன்னைக்கு காலைலயிருந்து வலி விட்டு விட்டு வருது இவள் எதையும் வெளிகாட்டவில்லை. மாலை 5 மணி கடுமையான வலி எடுக்க ஹாஸ்பிட்டலுக்கு தேனுவை கூட்டிக்கொண்டு விரைந்தான் கிஷோர் முகமெல்லாம் வியர்த்து கொட்டியது அவள் வலி இவனுக்கு வேதனையை கூட்டியது ஒருவாராக நேரம் நெருங்க அழகிய மகாலட்சுமி போன்ற பெண் குழந்தை பிறந்தாள் அவன் கையில் அழகு தேவதையை டாக்டர் கொடுக்க தேனுவை பார்க்கலாமா எனக்கேட்டான் கக்ஷ5 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க நான் கூப்பிட்டதும் தேனுவை பார்க்க வாங்க என்றனர்.. சுமதி,கிருஷ்ணன்,ராமன்,சீதா எல்லோரும் அழகு தேவதையை அள்ளிக்கொஞ்சினர்..ஆஷாகுட்டி என்னடி தங்கம் எங்க அண்ணி மாதிரி அழகா பிறந்துருக்க நல்லவேளை இந்த முட்டமுழியன் மாதிரி பிறக்கல என் தங்கம் எனக்கொஞ்ச கையில் நறுக்கென ஒரு கிள்ளு வைத்தான் கிஷோர்..இவள் ஆஆஆ எருமை வலிக்குதுடா எனத்திட்டினாள்… ஆகா அழகிய தருணம் வந்ததை இவனாலே நம்ப முடியவில்லை… டாக்டர் கிஷோர் நீங்க போய் பார்க்கலாம் எனக்கூற பிரசவ களைப்பால் மயங்கியிருந்த தேனுவை தலையை வருடியவாறு கண்ணில் நீர் மல்க பார்த்தான் அருகில் பிஞ்சு விரல் தீண்ட இதோ வந்துட்டேன்டி தங்கம் என தன் குட்டி மகளை முத்தமிட்டான் கிஷோர் IAS இப்போ அப்பா ஆயிட்டான் என மயக்கம் தெளிந்த தேனுவின் காதில் கிசுகிசுக்க அவள் வெட்கப்புன்னகை வீசினாள்.அப்சரா என அழகு தேவதைக்கு பெயர் சூட்டினர் .
பெயர் சூட்டு விழாவிற்கு வந்த ராசாத்தி தன் மகன் பாலாவை கையில் தூக்கி வந்தாள் அச்சு அசல் சிவமூர்த்தியை போலவே காட்சியளித்தான். அடுத்தடுத்து வீட்டில் சுபநிகழ்ச்சிதான் ஆஷாவிற்கு நியூரோ ஸ்பெசலிஸ்ட் மதனை திருமணம் முடித்தனர் எல்லா வேலைகளையும் தேனுதான் தாய்போல் முன்னின்று செய்தாள் அடுத்து அவள் பேர்காலமும் வந்தது இரட்டை குழந்தைகள்
தன்வீர்,தர்ஷினி பிறந்தனர் இருவரையும் பேர்காலம் பார்த்து ஆஷாவை போலவே இவளும் கவனித்துக்கொண்டாள்…வளர்ந்த பின்னரும் அத்தை அத்தை எனதான் இருவரும் சுற்றி வந்தார்கள்… எத்தனை வயது கடந்தாலும் காதலும் அன்பும் மாறுமா… வருடங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தது கல்லூரி மேற்படிப்புக்கு செல்லும் மகள் அப்சரா, 10 ம் வகுப்பு படிக்கும் மகன் சரண் இருந்தாலும் நேர்மையான அரசு அதிகார தான் அவன் இன்று தமிழகத்தில் சிறந்த அரசு அதிகாரி பட்டத்தை லஞ்சம் வாங்காமல் மக்கள் தொண்டாற்றிய கலெக்டர் கிஷோருக்கு வழங்குகிறோம் என கரகோஷங்களோடு விருதினை முதல்வர் கையால் வாங்கினார் 53 வயதாகும் கிஷோர்..அவனை முன்னிருக்கையில் சரண் ,அப்சராவோடு கைத்தட்டி கொண்டே மகிழ்ந்தாள் தேனு…கீழே இறங்கி வந்தவனை லவ்யூமாமு என தேனு காதில் சொல்ல… அம்மா உன் பொண்ணு கல்யாண வயசை எட்டிட்டேன் நீ இன்னும் அப்பாகூட ரொமான்ஸ் பண்ற என சொல்ல சிரித்த கிஷோர் லவ்யூ டியர் என்றான்…அடப்பாவிகளா என்னமோ பண்ணிட்டு வீட்டுக்கு வந்து சேருங்க நானும் சரணும் வீட்டுக்கு என் ஸ்கூட்டியில் கிளம்புறோம் எனக்கிளம்பினாள் அப்சரா.வழியில் தண்பன் வீட்டில் நைட் ஸ்டடி பண்ணிட்டு வாரேன் என இறங்கினான் சரண்.வீட்டிற்கு வந்தவள் அவனை எதிர்பார்க்கவில்லை அப்சராவின் காதலன் இதோ வந்துவிட்டான் லண்டனில் டாக்டருக்கு படித்துவிட்டு அவள் வாசலிலே அவளுக்கு பிடித்த டைரிமில்க் சில்க்குடன் இவள் சந்தோஷப்புன்னகையோடு அவனைக்கண்டு கட்டிக்கொண்டு டேய் அம்மாகிட்ட உன்ன லவ்பண்றேனு சொல்லிடவா நீ சீக்கிரம் கிளினிக் வச்சுடு கொஞ்சநாள் கழிச்சு மேரேஜ் பண்ணிக்கலாம் எனக்கூற சொல்லிடலாமே அத்தைகிட்ட நீ உன் எம்.எப்.சி கோர்ஸ்ஸை முடிடா என்றான் அவன்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here