பொன்வனம்…..ஆம்பெயருகேற்றார்போல் அழகிய கிராமம் தான் ….எங்கேபார்த்தாலும் பச்சை பசேலென்று நெற்கதிர்கள் ……வீடுகள்தோறும் சாணமிட்டு கோலமிட்டிருந்த அழகு …..மாடுகள்அங்கும் இங்கும் புல்மேய்ந்தபடிநின்றிருந்தன….
வாய்க்கால் தண்ணீர் …..மழைமேகமும்வெயிலும் என இரண்டும் கலந்த தட்பவெட்பம் ….உண்மையிலேயே அது எழில் கொஞ்சும் கிராமம்தான்…..கிஷோருக்குபெண் பார்க்க போவதை விட ஊர் மிகவும் பிடித்து போனது அவன்ஆவென்று ஊரை பார்த்து ரசிக்க…..”கிஷோர் என்னஅதுக்குள்ள பொண்ணபத்தி டிரீமாஎன தங்கை ஆஷா ஓட்ட அவன் சுயநினைவுபெற்றான் …..
“ஹே போடி நான் கிளைமேட் ரசிச்சுட்டு இருந்தேன் ….உடனே வந்துருவா ஓட்றதுக்கு”,…என்றுசிரித்தான் …..
உண்மையில் பெண்எப்படி வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கோட்பாடு எதுவும் அவனிடம் இல்லை ….தன்அம்மா சுமவதிக்குபிடிக்க வேண்டும் அதுபோதும்என்று நினைத்திருந்தான் .
தேன்மொழி வெளியே நின்றிருந்தாள் எதிரேகார் வந்ததை பார்த்ததும் அனைவரிடமும் மாப்ள வந்தாச்சு எல்லாரும் ரெடி ஆகுங்கஎன்றுசிரித்துகொண்டே முற்றத்தை சுற்றி வந்தாள்
….ஹேய்ஆடாம இங்க வாடிகொஞ்சம் அடக்கமா இரு உன்னைய தாண்டிபொண்ணு பார்க்க வந்திருக்காங்க நீஇப்படி எல்லாரையும் வர சொல்லி கத்துற என்றுசீதா காதைதிருகினாள் தன் ஒரே செல்லப்பெண் தேனுவை
இவள் “ஆ அம்மாவிட்ருங்க உங்க மாப்ளகலெக்டராமேஎந்த ஊர்குப்பையைகலெக்ட் பன்றாரு,” என்றுநக்கல் விட
வாசலில்பவளமல்லி மழையில்நனைந்தபடி கொட்டிக்கிடந்ததை பார்த்துரசித்தவாறே இவள்பேசியதையும் கேட்டுக்கொண்டு ….. கிஷோர்கைகட்டிசிரித்த வண்ணம்உள்ளேவந்து தேன்மொழி எதிரே நின்றிருந்தான்
அவள்குறும்புத்தனம் இவனை கவர்ந்தது
தேனுஅவள் முகத்தில் கைவைத்துக்கொண்டு நாக்கை கடித்தவாறு “ஸ்ஸ்ஸ்ஸ் ஆம் சாரி “என்றுஓடியேவிட்டாள்
இவள்அம்மாவிற்குஒரேஅதிர்ச்சி “தம்பி மன்னிச்சுடுங்க அவள்கொஞ்சம்வாய்தான் ஆனா நல்லபொண்ணு” என்றுசொல்ல
நோ ப்ரொப்லெம்ஆண்ட்டி “ஐலைக் ஹெர் சைல்ட்டிஸ்கேரக்டர் ” என்றுவாய்க்குள்ளயே முணுமுணுத்தான்
அதற்குள்கிஷோர்தாய் சுமதி ,ஆஷா வந்துவிட எல்லாரையும்பெண்வீட்டார் வரவேற்றனர் …
மாப்ளவீட்டுக்காரங்களுக்கு காபி கொண்டு வாமா தேன்மொழிஎன்று தந்தை ராமன் கூப்பிட இவள்காபியை அனைவருக்கும்கொடுத்த பின்னர் கிஷோருக்கு கொடுக்க சென்றாள் …அவன்இவளை ஓரக்கண்ணால் பார்க்க ….இவள் சிரித்துகொண்டேகண்ஜாடையில் அவள்கைகளை காட்டினாள் ….இவன்அதை உற்று நோக்க “சாரி “என்று இருந்தது ….
இவன்மொபைல் எடுத்து “இட்ஸ் ஓகே” என்று டைப்செய்து காட்டினான் ……இவளுக்குஇப்பொழுது மெதுவாய் வெட்கம் எட்டிப்பார்க்க ..,.
ராமன் என்னமா தேனு பையன பிடிச்சிருக்கா எனகேட்க …..இவள் தலையசைத்தாள் ….
தம்பி உங்களுக்கு என்று தேனு அப்பா இழுக்க ” ரொம்ப பிடிச்சுருக்கு என்றான் “….காபியைசுவைத்தவாறே…..,,(குறும்புக்காரியை எப்படிவேண்டாம்என சொல்லமனம் வரும் )
கிஷோர்ஜன்னல் ஓரம் நின்றிருந்தவளை ஓரக்கண்ணால்பார்த்தான் அவள் இவனை பார்த்து கண்ணடித்தாள் ….இவனுக்குஷாக் அடித்தாற்போல் இருந்தது ……
தேனுவிற்கும் மகிழ்ச்சி அவள்மனதில்ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1