தேனுவின் நினைவுகள் இவனுக்குள்ளும் இரசாயன மாற்றங்களை செய்ய
ஆரம்பித்திருந்தன …….
“டேய் கிஷோர் உனக்கும் காதல் வந்துடுச்சா.?…..என அவனாகவே அவன் தலையில்
தட்டிக்கொண்டான்
“கல்நெஞ்சகாரனுக்கும் காதல் வந்ததோ!
உழியை கொண்டு மனம் செதுக்க வந்தாயோ பேரழகே !
துருதுருபார்வையாலே கொள்ளையடித்தாய்!
வெட்கம் காட்டி என்னை எட்டிபறித்தாய்
கரிசகாட்டு பூவே!”
இப்படி அவன் கைகள் பேப்பரில் கவி எழுதிக்கொண்டிருந்தன…..எதரில் வந்த
க்ளெர்க் இவன் முகமலர்ச்சியை பார்த்து…. தம்பி பொண்ண பிடிச்சதா என்று கேட்க
…..நினைவு வந்தவனாய் என்னங்க கந்நசாமி அண்ணா கேட்டிங்க என்று
விசாரித்தான்….பொண்ணு பிடிச்சதானு கேட்டேன் தம்பி என்றார் ….ம்ம்…என்றான்
சிரிப்போடு.
எதையோ நினைத்தவனாய் அவளைக்காண மனம் ஏங்கியது…..
தேனுவின் அம்மா கத்திக்கொண்ணனடிருந்தாள் …..”ஏலே தேனு கல்யாணம்
பேசுன பொண்ணா லட்சணமா வீட்டுல குளிக்காம எதுக்குடி ராசாத்தி,பேச்சி கூட
கம்மாய்க்கு போறேன்னு ஆடுற….உன்னைய பட்டணத்துல படிக்க வச்சாலும்
பட்டிகாட்டு புத்தி போகமாட்டேங்குது”….
போம்மா நான் என்னதான் படிச்சாலும் இந்த மண்ணுக்கு சொந்தகாரிதான்
……..கம்மாய்க்கு போறதுல உனக்கு என்ன பிரச்சனை….வேணும்னா என்ன
கட்டிக்கபோறவனுக்கு கால் பண்ணி கேட்டுடவா என்றவள் அவனுக்கு கால்
செய்துவிட்டாள்….. “ஹலோ” என்ற அவள் …..ஐயோ உண்மையிலேயே கால்
பண்ணிட்டோமே என்று கட் செய்து ஓடியேவிட்டாள்.
அவள் குரல் கேட்ட மயக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவித்தான் கிஷோர்.
ஒரு வேகத்தில் அவள் நம்பரை டயல் செய்துவிட்டபடி எங்கோ கிளம்பினான்.
இவள் எடுத்ததும் “தேனு எப்படி டா இருக்க ,சாப்டியா என்று ஆரம்பித்தான்…..லொட
லொடவென வாயடிக்கும் தேனுவிடம் இருந்து வந்த வார்த்தைகள் எல்லாம் “ம்ம்ம்
“என்ற குழைந்த வார்த்தை மட்டுமே ..ஒன்றிரண்டு நிமிடம் பேசியபின் சரி தேனு
வைக்கிரேன் மா என்று வெளியே கிளம்பினான்….
அப்பொழுது எப்.எம் ல் ஒளித்த பாடல்
“இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளில் கேட்டிடும்
பாடல் கேட்பாயா”
கார் டிரைவ் செய்த அவனும்,வீட்டில் இருந்த இவளும் ஒரே நேரம் பாடலை கேட்டு
இரசித்தனர்.அப்பொழுது வெளியே நின்றிருந்த ராசாத்தி “ஏல தேனு குளிக்க
போலாமா” எனக் கேட்க இதோ வந்துட்டேன் என தலைதெரிக்க ஓடினாள்
பொன்மேனியாள் அவள் குளிக்க மீன்கள் அவள் கால்களை உரச நான்,நீயென
போட்டி போட்டி போட்டிருபனந்தன……நீரில் அமிழ்ந்த தாமரையாய் அவள்
எழுந்துவரநீளவிழியில் தலைமுடி படிந்திட ,அழகேசிலை,அபிநயமிக்க கண்கள்
,கூர்மையான நாசி,பிறை போன்ற நெற்றி ,சிவந்த மாதுளை உதடு,….இவளை
எமழுந்து நிற்க பார்த்த தோழிகள்……
“செம அழகிடி நம்ம தேனு பொட்டச்சிங்க நம்ம கண்ணே இப்படி பார்க்குதே
….குடுத்து வச்சவர்டி அந்த கலக்டரு “என்று பேச்சி சொல்ல ………..
“ஒருமாதிரித்தான்டி திரியுர நீ” என்று ராசாத்தி சொல்ல பேச்சி ராசாத்தியை
சமாளித்தாள்
உடைமாற்றி வீடு திரும்பும்போது மாமரத்து மேலிருந்து
“தேனு தேனு” என்ற குரல் கேட்டு துண்டை தலையில் துவட்டியவாறு வந்தவள்
இன்ப அதிர்ச்சியானாள்
நீஎப்ப வந்ந?என்றவாறு…….