தேன்மொழி பாகம்8

0
209

வீட்டில் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தன….அவள் புகுந்த வீட்டில் இன்முகத்தோடு விளக்கேற்றினாள்.
ஆஷா “அண்ணி வாங்க உங்களுக்கு நம்ம வீட்டை சுத்தி காட்றேன் என்றபடி எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டினாள்.மாடியில் புதுமண தம்பதிகளாகிய இவர்கள் வாழப்போகும் ரூமையும் காட்டினாள்.ரூம் நல்ல நேர்த்தியான இவளுக்கு பிடித்த ஸ்கைப்ளூ கலர் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது.இதான் அண்ணி உங்க ரூம் பார்த்துட்டீங்கலா ஓகே வாங்க என அவள் அழைக்க இவளுக்கு கொஞ்ச நேரம் அவள் ரூமை நோட்டமிட ஆசை இருந்தாலும் வெளியில் காட்டவில்லை….சரி வாடா ஆஷா நம்ம கீழே போகலாம் அத்தை தேடுவாங்க என கிளம்ப….பால்கனி அருகில் ஒரு ரூம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு இது யார் ரூம் எனக்கேட்க ……இதை அப்புறம் பார்க்கலாம் என மழுப்பியவாறு ஆஷா கீழே அழைத்துச்சென்றாள்.
அவளுடைய மழுப்பல் இவளுக்கு சற்று சந்தேகம் தந்தது ….இங்கதானே இருப்போம் பார்த்துக்கலாம் என மனதில் நினைத்தாள்.
இரவு நெருங்க நொருங்க ஏதோ ஒரு படபடப்பு அவளை தொற்றிக்கொண்டது…கிஷோர் தன்னவள் தன்னுடனே இனி வாழப்போவதை எண்ணி மகிழ்ந்தான்.
கிஷோர் நண்பர்கள் அவனை சுற்றி நின்று ஓட்டு ஒட்டிக்கொண்டிருந்தனர்.
மச்சி என்னடா மூஞ்சில ஒரே பல்ப் எரியுது ….இந்த ஒளிவட்டத்துக்கு என் சிஸ்டர் தான் காரணமா என்றான் திலீப்
கிஷோர் அழகான புன்னகை வீசினான்
காதல்னா காண்டு ஆகுறவனுக்குதான் நம்ம செட்லயே முதல்ல கல்யாணம்…..அப்பறம்…..ம்ம்ம் என ராஜேஷ் இழுக்க…..
டேய் ஒரு ஆள் கிடைச்சா போதுமே வச்சு செஞ்சுடுவீங்களே என சதீஷ் இவனை காப்பாற்ற வந்தான்.
மாப்பிள்ளைக்கு ஸ்ப்ரேயிலிருந்து சர்ட்டு வரை அவன் நண்பர்கள் ரெடி செய்தனர்.
கிஷோர் மனம் அவன் ஹனியை எண்ணி ஏங்கிக்கொண்டுதான் இருந்தது.
நம்ம பொண்ணை மட்டும் சும்மா விட்ருவாங்களா என்ன….ப்ரியா,கனிகா மாப்பிள்ளை தோழிகள் இவளின் தோழி பேச்சி,ராசாத்தி எல்லாரும் இவளை கிண்டல் செய்த வண்ணம் அலங்காரம் செய்து விட்டனர்…அழகிய மஞ்சள் நிற சில்க்காட்னில் சிறிய பிங்க் நிற பூ வேலைபாடுடைய எம்ப்ராய்டரி சாரி…காதுக்கு முத்து பதித்த ஜிமிக்கி,கைநிறைய முகூர்த்த வளையலுடன் தங்க வலையல்கள் குழுங்கின…முகத்தில் கனிகா லைட் மேக்கப் செய்துவிட, செவ்விதழுக்கு மரூன் லிப்ஸ்டிக் போட்டுவிட்டிருந்தாள்…கண்ணுக்கு மையும்,ஐலைனரும் அவள் அழகை இன்னும் மெருகேத்தின……தலையில் பூவை வைத்து சிறிது குங்குமம் வகிட்டில் வைத்திட அழகிய ரதியாய் காட்சியளித்தாள்….
சரி தேனு நாங்க கிளம்புரோம் மூர்த்தி மாமா வந்துருச்சு ரயில்ல ஊருக்கு கிளம்புறோம் என தோழியைக்கட்டிபிடித்து சந்தோஷமா இருடி அடிக்கடி எங்களுக்குலாம் போன் பேசு என விசும்பலோடு ஊருக்கு பிரியாவிடை பெற்றனர்.
இவளீ கண்ணும் கலங்கியிருந்தது …கிஷோர் தோழி ப்ரியா”இங்க பாருமா தேனு எங்க செட்லயே அமைதியானவன் அவன்தான்மா எல்லாத்தையும் பாஸிட்டிவா பார்குற ஸ்பெஷல் கேரக்டர்…..பிரண்ட்ஸ் எங்களையே உயிரா நினைப்பான் கண்டிப்பா உன்னை இன்னும் நல்லா பார்த்துப்பான் நீங்க ஹாப்பியா இருக்கனும் அவனை புரிஞ்சு நடந்துக்கோ டா …..என் பெஸ்ட் பிரண்டுனுதான் 5மந்த்ல வந்துருக்கேன்…என வயிறை தடவியவாறு குட்டிகண்ணா ஆண்ட்டி கிட்ட சொல்லு எனக்கு கட்டிக்க ஒரு அழகு பொண்ணு வேணும் சீக்கிரம் ரெடி பண்ணுங்க என சொல்ல .. தேனுவை வெட்கம் அள்ளிக்கொண்டது.

கனிகா என்னடி ப்ரியா அட்வான்ஸ் புக்கிங்கா….நீ நடத்து நடத்து என கலகலவென சிரித்தாள்..
நல்ல நேரம் பார்த்து கிஷோரை ரூமுக்குள் அனுப்பினர்..இவன் தன்னவளுக்காக பல தயக்கங்களுடன் காத்திருந்தான்.
தேனு சுமதி_கிருஷ்ணனிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு கையில் சுமதி தந்த பால் செம்புடன் நுழைந்தாள் ….
கதவைத்திறந்த இவளுக்கு பேரதிர்ச்சி தன் கணவனை காணவில்லையென்று இரண்டு நிமிடத்தில் கண்களும் கலங்கிவிட்டன…திரைச்சீலை பின்னே ஒளிந்திருந்தவன் அவளை டபக்கென பின்னிருந்து கட்டிப்பிடித்தான்..
“மாமு இப்டியா பண்ணுவ நான் அழுதுருப்பேன் போ என முகம் வாடினாள்…அச்சச்சோ ஸாரி டியர் சர்ப்ரைஸ் குடுக்கலாம்னுதான் இப்படி பண்ணேன் எனக்கூற….தேனு பொய்க்கோபம் காட்டினாள்…அவளை இறுக அணைத்து நெற்றியில் அவன் முத்தமிட அவள் கவலை கரைந்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
அவள் கண்களை தன் கைகள் கொண்டு பொத்தியவன்…ஹனி என்னனு கேக்காம வா உனக்கு இந்த நைட் எப்போதும் ட்ரீம் நைட்டா இருக்கணும் என ஒரு இடத்திற்கு அழைத்துச்சென்று அவள் கண்களை திறக்க சொன்னான்….
கண்களை திறந்தவளுக்கு பேரதிர்ச்சி காலையில் ஆஷா திறந்தே காட்டாத ரூம்தான் அது…..அழகழகான மின்விளக்குகள் சுற்றி மணம் கவழும் 100 செடிகளை எட்டிய ரோஜா செடிகள் அழகாய் பூக்கள் பூத்துக்குழுங்கின…வெல்கம் மை சிண்ட்ரல்லா என மின்விளக்கால் எழுதப்பட்டிருந்தது….இவள் ஆவென பார்த்துக்கொண்டிருக்க அவள் காலடியில் கிஷோர் முட்டி போட்டபடி வைரம் பதித்த மோதிரம் போட்டுவிட்டான்…இவள் கண்ணில் ஆனந்த கண்ணீர் மல்கியது…அவளுக்கு வாங்கிய பெண்டன்ட் இயரிங் செட்டையும் இதுவும் உனக்குத்தான் என கொடுத்தான் அவள் அன்போடு வாங்கிக்கொண்டு வார்த்தைகளற்று நின்றாள் இன்ப அதிர்ச்சியில் ….இன்னொரு சர்ப்ரைஸ் இனி நம்ம இங்கதான் நம்ம பேமிலியோட இருக்கபோறோம் எனக்கு சென்னைக்கோ கலெக்டர் போஸ்ட் கிடைச்சுடுச்சு என சொல்ல அப்ப நான் இனி ஆஷாக்கூடவும் இருக்கலாம் என அவள் மகிழ்ச்சியில் துள்ள….இன்னொரு விஷயம் இதுலாம்
உனக்கு பிடிச்சுருக்கா ஹனி.. இந்த தோட்டம் உங்க அம்மா வீட்ல நீ தோட்டத்தோட வாழ்ந்துட்ட ஸோ உனக்காக நா ரெடி பண்ணுன ரோஜா நந்தவனம்தான் இது மை ஸ்வீட்டி பிடிச்சுருக்கா உனக்காகவே ரெடி பண்ணேன் நம்ம ரூம்ல இருந்து இந்த இடத்துக்கு வர பாதையும் ரெடி பண்ணேன் நீ டெய்லி எழுந்ததும் வந்து பார்க்கலாம் என அவன் சொல்ல கண்ணிமைக்காமல் அவனை பார்த்தவள் ஓடிவந்து இறுககட்டிக்கொண்டாள்…காதலிக்கு ரோஜா கொடுத்தாலே மகிழ்ந்துவிடுவாள் தோட்டத்தையே தந்தவனுக்கு என்னவெல்லாம் கிடைக்கும்…
அவன் முகமெல்லாம் ஆசையாய் முத்தம் பதித்தாள் அவள்….இவனும் அவளிடம் முத்தம் பதிக்க ரோஜாவனத்தில் ஆரம்பித்த அவர்கள் காதல் ஆட்டம் அனுமதி கேட்காமலேயே எதேர்ச்சையாக அவள் வெட்கமெல்லாம் அவன் வசமாக எல்லாம் நடந்தது கூடலும் இனிதே நிகழ்ந்தது இருவரும் ஒருவராயினர்….
“பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய் பார்த்து தான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடலொன்றைஉதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில்… எனது கனவினை…காண போகிறேன்…
ஒன்றா ரெண்டா ஆசைகள்எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமாஅன்பே இரவைக் கேட்கலாம்விடியல் தாண்டியும் இரவே நீளுமா”
என கூடலுக்கு பின் அவள் மனதில் இந்த பாடலொலிக்க மான்விழியாள் கிஷோரின் மார்பெனும் மலர்மஞ்சத்தில் கண்ணயர்ந்து தூங்கிப்போனாள்…இதற்கு காரணம் சிறிது அவனால் ஏற்பட்ட களைப்பும்,தனக்கென ஒருவன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியுமே…
கிஷோர் தூக்க கலக்கத்தில் தன் மேல் சாய்ந்து தூங்கும் தன்னவளை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்
“உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதேதினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதேநீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே
ஓ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணேஎன் கண்ணே கண்ணேஉண்மை சொன்னால் என்னஉன்னைத் தந்தால் என்ன”

என தன் நெஞ்சம் புகுந்த தங்க தாரகையை எண்ணி மனம் மகிழ்ந்து பாடலை வெளிகொணர்ந்தது…பாடலை பாடிய வண்ணம் மெல்ல அவளை அணைக்க அவள் வெட்கம் கொள்ள….மறுமுறையும் கூடல் நிகழ்ந்தது இருவரும் உவந்த வண்ணம்

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here