அடி பெண்ணே நீ பெண்ணா,தேவதையா,
உன் ஒவ்வொரு அசைவிலும் அசரவைக்கிறாய்,
குணத்தால், மனத்தால், பேச்சால் கட்டி வைக்கிறாய்..
உன் வயதுக்கும் மனதுக்கும்
என்றுமே பொருந்துவதில்லை,
அதில் நான் குழம்பியதுண்டு தெளிந்ததில்லை,
ஒரு வரையறைக்குள் அடங்காதது எல்லாம் அற்புதம் என்றால்
அதில் நீயும் ஒன்று 😍😍
ஆய கலைகள் அறிந்த அமுதவல்லி, அழகு கள்ளி, என் செல்ல வில்லி…
ஐஷ்வர்யமாய் இருக்கிறாய்,
ஆணவம் இல்லை,
சொல்வன்மை கொண்டிருக்கிறாய்
சொல்லில் வன்மம் இல்லை
எதனோடும் ஒத்து பார்க்க முடியா அதிசயம் நீ
அடி பெண்ணே நீ என்ன பெண்ணா ?தேவதையா ?
Facebook Comments