நிலவே உந்தன் நிழல் நானே 29

0
1648
NUNN Tamil Novels 37

தலையும் உடலும் கனக்க , கண்களை திறக்க முடியாமல் சிரமப்பட்டு திறந்தாள் மிதுலா.எழுந்து அமர்ந்தவளுக்கு சற்று நேரம் ஒன்றுமே புரியாமல் திகைத்தாள். மெல்ல முதல் நாள் இரவு நடந்த அனைத்தும் நினைவுக்கு வர , மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று புரியாதவளாக அப்படியே குழம்பி போய் அமர்ந்து இருந்தாள் மிதுலா.’நடந்த நிகழ்விற்கு மகிழ்வதா இல்லை வருந்துவதா????’ தன் கணவன் நடந்த அத்தனையும் மறந்து தன்னை சரிபாதியாக ஏற்று கொண்டதற்கு மகிழ்வதா….இல்லை நேற்று மாலை முதல் மனம் முழுக்க காதலை ஏந்திக் கொண்டு இருந்த தனக்கு இப்படி ஒரு பரிசை அளித்த தன் கணவனை எண்ணி வருந்துவதா ‘ என்று புரியாமல் அப்படியே படுத்தே விட்டாள்.

கண்களாலேயே வசீகரனை தேடினாள். அவனை காணவில்லை.நேற்று இரவு நிவியிடம் இன்று புது ஒப்பந்தத்திற்காக வெளியூர் செல்ல வேண்டும் என்று கூறியது நினைவுக்கு வந்தது.’ஹ்ம்ம் கிளம்பி போய் விட்டார் போல….  இப்பொழுது தான் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டி இருந்தது அவளுக்கு.கண்களை சுழற்றி மணியை பார்த்தாள். கடிகாரம்  மணி  பதினொன்று முப்பதை நெருங்கிக் கொண்டு இருந்தது.

‘தன் பெண்மையை கொஞ்சமும் மதிக்காமல் புருஷர்ர்ர்ர் செய்தது முறையா…. இவர் செய்த காரியத்தை   என்னவென்று  சொல்லி யாரிடம் சொல்லி நியாயம் கேட்பது!!!! இது வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடிய விஷயம் அல்லவே….. யாரிடமும் சொன்னாலும் உன் கணவன் தானே  என்று அல்லவா சொல்வார்கள்  ‘ குழம்பி போய் இருந்தாள்.

கதவு திறக்கும் ஒலியில் அவசரமாக திரும்பி யார் என்று வாசலை பார்த்தாள் வேறு யாரும் அறைக்குள் வரவே மாட்டார்கள். போன் பேசிக் கொண்டே அறையில் நுழைந்தது வசீகரன் தான். வசீகரனை பார்த்ததும் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டாள் மிதுலா.ஏற்கனவே மனம் கலங்கிய நிலையில் வசீகரனை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.

குனிந்த தலையோடு அமர்ந்து இருந்தவளை பார்த்துக் கொண்டே அறைக்குள் போன் பேசியபடி கதவை தாளிட்டு விட்டு வந்தான் வசீகரன்.

“டேய்….உனக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா…. இன்று எனக்கு ‘ முக்கியமான ‘ வேலை இருக்கிறது….இன்று அந்த மீட்டிங்கிற்கு நீ போ”

…………

“என்ன வேலை என்று உனக்கு சொன்னால் தான் போவாயா”

………

“சும்மா பேசி தொனதொணக்காதே சக்தி….இன்று மதியம் 2 மணிக்கு உனக்கு சென்னைக்கு பிளைட் ….தயாராக இரு….ட்ராவெல்ஸில் இருந்து வீட்டுக்கே வந்து அழைத்து செல்வார்கள்…. முக்கியமான பைலை ஏற்கனவே மேனேஜரிடம் கொடுத்து விட்டேன்.இன்னும் பத்து நிமிடத்தில் உன் வீட்டில் இருப்பார்….”

………

“சொல்வது எல்லாம் புரிந்ததா????….சும்மா சும்மா எனக்கு போன் செய்து தொந்தரவு செய்யாதே….எதுவாக இருந்தாலும் நீயே பார்த்துக் கொள்…. புரிந்ததா….

………

“சரி சரி….. புலம்பாதே…போனை வை”

போனில் பேசி முடிக்கும் வரையிலும் தன் பார்வையை மிதுலாவை விட்டு ஒரு கணம் கூட வசீகரன் திருப்பவேயில்லை.

போனை கட் செய்து டேபிளில் வைத்து விட்டுக் கட்டிலில் மெதுவாக மிதுலாவின் அருகில் அமர்ந்தான்.இப்பொழுதும் மிதுலா பார்வையை உயர்த்தவில்லை. மெல்ல இன்னும் கொஞ்சம் நகர்ந்து மிதுலாவின் அருகில் அமர்ந்தான்.மிதுலா இப்பொழுதும் பார்வையை உயர்த்தவில்லை.ஆனால் கொஞ்சம் நகர்ந்து அமர்ந்தாள்.

“என்னடி …..என் அருமை பொண்டாட்டி….இப்ப தான் விடிஞ்சுதா உனக்கு…. மணி என்ன ஆகுது தெரியுமா????”

…………….

“என்ன பதிலை காணோம்??? ….பேசுடி….வாயை திறந்தா மூடாம பேசிக்கிட்டே இருப்ப… இப்ப என்ன ஆச்சு”

………..

“உன்னிடம் தான் பேசுகிறேன்…..காதில் விழுகிறதா…. இல்லையா!!!”

………

“பேச மாட்டாயா….”

………

“இன்று ஒரு முக்கியமான மீட்டிங் போகணும்…..ஆனால் போகலை. எனக்கு பதிலாக சக்தியை போக சொல்லிவிட்டேன்”

இப்பொழுதும் மிதுலா நிமிரவில்லை.மெதுவாக ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தினான்.கண்கள் இரண்டில் இருந்தும் கண்ணீர் அருவியென கொட்ட கண்களை மூடியபடியே இருந்தாள். ஒரு நிமிடம் வசீகரனுக்கு சர்வமும் ஆடி போயிற்று.ஒரு நிமிடம்…..ஒரே ஒரு நிமிடம்…தன் ஈகோவை ஒதுக்கி தள்ளிவிட்டு மிதுலாவிடம் அவன் பேசி இருந்தால் பின்னாளில் ஏற்பட போகும் துன்பங்களில் இருந்து அவன் தப்பி இருக்கலாம்.ஆனால் இளக தொடங்கிய மனதை ஈகோ வந்து ஆக்கிரமிக்க மறுபடியும் முகத்தை கல்லென வைத்துக் கொண்டு பேச தொடங்கினான்.

“ஏய்….புருஷன்….கேட்கிறேன் …பதில் சொல்லுடி…கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்து கொண்டே  என்ன தூக்கம் வேண்டி கிடக்கு….கண்ணை திறந்து என்னை பார்”

மெதுவாக கண்களை திறந்து வசீகரனை பார்த்தாள் மிதுலா.அவள் கண்களை திறக்கும் அந்த நொடிக்காகவே காத்திருந்தவன் ,அவள் மனதை கண்களின் வாயிலாக படிக்க முயன்றான்.

வசீகரனின் கண்களை பார்த்த மிதுலாவிற்கு கண்ணீர் பெருகியதே ஒழிய குறையவில்லை. சற்று நேரம் பொறுத்து பார்த்தவன்,அவள் அழுகையை நிறுத்தாததால் அவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.சற்று நேரம் அவள் அழுது முடிக்கும் வரை அவள் முதுகை ஆதரவாக தடவிக் கொடுத்தான்.அழுது ஓயும் வரை அவனால் பொறுக்க முடியாமல் அவளை பேசி திசை திருப்பினான்.

“இன்று முக்கியமான மீட்டிங் இருக்கிறது தெரியுமா????….உன்னால் தான் போகவில்லை…..அப்பப்பா….ரொம்ப அசதியாக இருக்கிறது” என்று கூறி கண்ணடித்தான்.

பார்வையை சட்டென வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் மிதுலா.

“சரி நீ குளிக்க போகிறாயா…இல்லை இப்படியே இருக்க போகிறாயா….என்னை கேட்டால் இப்படியே இருந்துவிடு என்று தான் சொல்வேன்…. இது தான் எனக்கு வசதியாக இருக்கிறது” என்று கூறிவிட்டு பார்வையாலே அவளை துண்டாட அப்பொழுதுதான்,தான் இருக்கும் நிலையை கவனித்தவள் போர்வையை எடுத்து தன்னை மறைக்க முயற்சிக்க, அவள் கைகளை தடுத்தவன்  பிறகு என்ன நினைத்தானோ,”இம்ம்…. இன்னும் நன்றாக சரி செய்து கொள்….இதோ இந்த நெஞ்சுக்குழியில் இருக்கும் அந்த மச்சத்தை மட்டும் என்னை பார்க்க விட்டு விடாதே….அதன் பிறகு நடப்பதற்கு நான் பொறுப்பல்ல…சொல்லிவிட்டேன்”

‘கணவனின் பேச்சில் முகம் சிவந்தாலும் வசீகரனின் மீது உள்ள வருத்தத்திலும் , கோபத்திலும் ஒன்றுமே பேசாது அப்படியே அமர்ந்து இருந்தாள் மிதுலா.

சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன்,” போய் குளிச்சுட்டு வா…. டிபன் தான் சாப்பிடலை….மதியம் லஞ்சாவது சாப்பிடணும் இல்ல…போ”மென்மையாகவே ஒலித்தது.மிதுலா இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.

“இப்பொழுது நீ போய் குளிக்க போகிறாயா….இல்லை நானே என் கையால் குளிப்பாட்டி விடட்டுமா”

மிதுலா அப்பொழுதும் அசையாமல் இருக்கவும், “என் பொண்டாட்டி ஆசையை நிறைவேற்றுவதை விட வேறு என்ன வேலை எனக்கு…. இதோ வந்துவிட்டேன்” என்று எழுந்து அவளை தூக்குவது போல் குனியவும் மெதுவாக நிமிர்ந்து வசீகரனை பார்த்தாள் மிதுலா.

“வெளியே போங்க”

“நான் ஏன் போக வேண்டும்….. இது என் வீடு….நீ என் பொண்டாட்டி …. நான் இங்கே தான் இருப்பேன்….” பேசிக் கொண்டே சட்டமாக கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டு தலையை கீழே கையை வைத்து அவள் புறமாக திரும்பி படுத்துக் கொண்டான்.

அவள் போர்த்திக் கொண்டு இருந்த போர்வையின் மேலேயே வசீகரன் படுத்து இருந்ததால் மிதுலாவால் எழுந்திருக்க முடியவில்லை.

“இப்போ எழுந்து வெளியே போக போறீங்களா….இல்லையா????”

“முடியாதுடி…… என் ஆசை பொண்டாட்டி….என்ன செய்வாய்..” கிண்டல் வழிந்தது வசீகரனின் குரலில்.

“என்ன செய்வேன்….என்ன செய்ய முடிந்தது என்னால்….நேற்று உங்களிடம் தோற்றுப் போய் இப்படி அழுகிறேனே…. இதை தவிர வேறு என்ன செய்ய முடியும் என்னால்”என்று கூறிவிட்டு முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“அழுவதற்கு அவசியம் இல்லாத பொழுது அழுவானேன்????” மென்மையாகவே பதில் சொன்னான்.

“எது அவசியமற்றது????”

“உன்னுடைய இந்த அழுகை”

“ஆமாம்…. அவசியமற்றது தான்…. எனக்கோ என்னுடைய உணர்வுகளுக்கோ இந்த வீட்டில் என்ன மதிப்பு இருக்கிறது….உங்களையும் இந்த வீட்டையும். பொறுத்தவரை நான் வேலைக்காரி தானே”

“எங்கே என் கண்ணை பார்த்து சொல்….நேற்று இரவு நான் உன்னை அப்படியா நடத்தினேன்”

“நான் குளிக்க போகணும்”

“பேச்சை மாற்றாதே…. கேட்ட கேள்விக்கு பதில் சொல்”

……

“பதில் சொல்லுடி”

“நீங்க நிஜமாவே நிவியை காதலிக்கறீங்களா”

“இந்த கேள்வியை உன் மாமா அந்த கங்காதரன் நம் கல்யாணத்தை முடிவு செய்யும் முன் என்னிடம் கேட்டு இருக்க வேண்டும். இப்பொழுது கேட்டு என்ன பயன்” அசட்டையாக பதில் அளித்தான் வசீகரன்.

“அவர் செய்ததற்கு என்னை தண்டிக்க பார்க்குறீர்களா???”

தோளை குலுக்கிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்தான்.”பால்கனியில் இருக்கிறேன்.சீக்கிரம் குளித்துவிட்டு வா”கூறிவிட்டு பால்கனியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவன் பால்கனிக்கு சென்றதை உறுதி படுத்திக் கொண்டு போர்வையை சுற்றிக் கொண்டு எழுந்து பாத்ரூம் நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.எழுந்ததும் தள்ளாடி கீழே விழ போனவளை நொடி பொழுதில் மின்னலென பாய்ந்து கீழே விழாமல் தாங்கி பிடித்தான்.

“பார்த்து நடக்க மாட்டாயா”ஆத்திரத்தை விட அக்கறையே மிகுந்து காணப்பட்டது.

“எ… என்..என்னால் நடக்க முடியலை” திக்கி திணறி ஒருவாறு சொல்லிவிட்டாள்.

ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றவன் மறுநிமிடம் அவளை பூப்போல கைகளில் ஏந்திக் கொண்டு கட்டிலில் படுக்க வைத்தான்.

சோர்ந்து இருந்த அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து, “நேற்று இரவு நீ ஒழுங்காக சாப்பிடவில்லை இல்லையா அதனால் இருக்கும்……கொஞ்ச நேரம் இப்படியே படுத்து இரு……இதோ வருகிறேன்” என்று கூறிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.

‘இவரை புரிஞ்சுக்கவே முடியலையே…..நேற்று ஆரம்பத்தில் என்னிடம் கோபமாக நடந்து கொண்டாலும் என்னை ஒன்றும் இவர் சித்திரவதை செய்யவில்லையே….பூவை போல தானே கையாண்டார்…… ஆசையாக தானே நடந்து கொண்டார்.  ஆனால் இப்பொழுது கூட அவர் நிவியை காதலிக்கவில்லை என்று மறுப்பாக ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேன் என்கிறார்.

இவருக்கு நேற்று எதனால் அத்தனை கோபம் வந்தது????? அவருடைய பழைய காதல் எனக்கு தெரிந்ததால் ஏற்பட்டதா இல்லை என்னை தொட கூடாது என்று நான் சொன்னதால் ஏற்பட்டதா’ என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் வசீகரன்.

“காபி , ஜூஸ் ரெண்டும் எடுத்துக்கிட்டு வந்து இருக்கேன்….உனக்கு எது வேணுமோ எடுத்து குடி”

‘இதை எல்லாம் செய்வது என் புருஷர்ர்ர்ர் தானா’ என்று ஆச்சரியத்தோடு அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே வசீகரன் இவளின் முகம் பார்க்காமல் வேறு எங்கோ தொலைவில் வெறித்து பார்த்துக் கொண்டே பேச தொடங்கினான்.

“இதோ பார்… எனக்கு இதுவரை யாரிடமும் ஸாரி எல்லாம் சொல்லி பழக்கம் இல்லை….. என்னிடம் அதை எதிர்பார்க்காதே….என்னை பொறுத்தவரை நான் தப்பு செய்யவில்லை….. அவ்வளவு தான்….இதில் பாழானது உன் வாழ்க்கை மட்டும் அல்ல என் காதலும் தான் என்பதை நினைவில் வைத்து கொள்….அதிலும் நேற்று நடந்த சம்பவத்திற்கு பிறகு என் காதலை முற்றிலும் நானே அழித்து விட்டது போல் ஒரு உணர்வு….உன் விஷயத்தில் மட்டும் ஆரம்பத்தில் இருந்து என் கணக்கு தப்பாக தான் போய் விடுகிறது….. என்ன செய்ய ….. நேற்று நடந்த நிகழ்வை எந்த காரணம் முன்னிட்டும் மாற்ற முடியாது ……  நடந்ததை பேசி இனி வருங்காலத்தை நாம் இழக்க வேண்டாம்….இனி நம் எதிர்காலத்தை மட்டும் பார்ப்போம் ….என்ன சரிதானா…..”வசீகரனின் குரலில் உண்மையான வருத்தம் இருந்தது.

மிதுலாவிற்கு வசீகரன் பேசியதில் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. அது வசீகரனின் காதல் அழிய காரணம் மிதுலாவாகிய தான் மட்டுமே என்று. நடந்த தவறை சரி செய்ய இனி இருவரும் ஒற்றுமையாக வாழலாம் என்று சொல்கிறார். ஆனால் இதில் ஒருவரை ஒருவர் நேசித்து புரிந்து கொண்டு வாழலாம் என்று அவர் சொல்லவில்லையே….. வெறும் உடல் கவர்ச்சி மட்டுமே ஒரு திருமண பந்தத்திற்கு போதுமா????’

காபியை அவள் குடித்து முடிக்கும் வரை பொறுத்து இருந்தவன் ,”இப்பொழுது பரவாயில்லையா”

மிதுலா வெறுமனே தலையை மட்டும் ஆம் என்பது போல ஆட்டினாள்.

“சரி வா….. குளித்துவிடு….. குளித்தால் இன்னும் கொஞ்சம் பெட்டரா இருக்கும்”என்று கூறிக் கொண்டே அவள் மறுப்புகளை லட்சியப்படுத்தாமல் கைகளில் ஏந்திக் கொண்டு குளியலறைக்கு தூக்கிச் சென்று கீழே இறக்கி விட்டான்.  

“நீங்க போங்க….நா…. நான் குளிச்ச்சுக்கறேன்” தரையை பார்த்தபடி பேசினாள் மிதுலா.

“முடியாது…..நீ குளி நான் இங்கேயே தான் இருப்பேன்….நான் அந்த பக்கம் போனதும் மறுபடிக் கீழே விழுந்து வைத்தால் என்ன செய்வது????”

…………

“என்ன முழிக்குற”

“ப்ளீஸ்” கெஞ்சுதலாக பார்த்தாள் மிதுலா

“சரி சரி….கண்ணை மூடிக் கொள்கிறேன் சரி தானா” இதழோரம் மெல்லிய  சிரிப்பு  ஒன்று மின்னலென தோன்றி மறைந்தது.மிதுலா அப்பொழுது இருந்த மனநிலையில் அதை கவனிக்க கூட தோன்றவில்லை .

சட்டமாக கைகளை கட்டிக் கொண்டு அங்கேயே நின்றவனை ஒன்றும் சொல்ல முடியாமல் அவனுக்கு முதுகு காட்டி கொண்டு டவலை கட்டிக் கொண்டு ஷவரின் கீழே நின்றாள்.வெந்நீர் குளியல் உடலின் அசதியை போக்க மனம் முழுக்க முதல் நாள் இரவில் நிகழ்ந்ததையே சுற்றி வந்தது. ‘இவர் என்னை வெறுக்கிறாரா…. இல்லை நிவியை காதலிக்கிறாரா இல்லை பழி வாங்குவதற்காக இப்படி எல்லாம் செய்கிறாரா’  இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்ற எண்ணம் தோன்றிய வேகத்தில் தடை பட்டது.எப்பொழுது நடந்தது என்றே தெரியாமல் வசீகரனின் கை வளைவுக்குள் இருந்தாள் மிதுலா.

“இதோ பார்…. இப்படி  வில்லனை பார்ப்பது போல் என்னை  பார்த்து வைக்காதே….நான் உன்னிடம் ஏற்கனவே சொன்னேன்….இந்த மச்சத்தை என் கண்ணில் காட்டி விடாதே என்று…..இதில் என் தவறு எதுவும் இல்லை…அவ்வளவு தான்” என்று கூறியவனின் கைகளும் இதழ்களும் தன்னுடைய பணியை செவ்வனே செய்ய மிதுலா தான் தவித்து போனாள். குளிக்கும் போது ஆடை சற்று நெகிழ்ந்து இருந்ததை கவனிக்காமல் விட்ட தன் மடத்தனத்தை எண்ணி தாமதமாக வருந்தினாள்.  அதற்கு மேல்  பொறுக்க மாட்டாமல் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு. படுக்கை அறையை நோக்கி சென்றான் வசீகரன்.

முதல் நாளை போல மிதுலாவும் எதிர்ப்பை காட்டததால் தன் காரியத்தை. எளிதில் சாதித்துக் கொண்டான் வசீகரன்.அதன் பிறகு கூட அவளை விட்டு விலகாமல் அணைத்தவாரே படுத்து உறங்கியும் விட்டான்.அருகில் படுத்து இருந்த மிதுலாவின் கண்ணீரை அவன் உணரவேயில்லை.

அழுது கொண்டே இருந்தவள் மெல்ல திரும்பி மணியை பார்க்க அது நேரம் பிற்பகல் மூன்றென காட்டியது. இது தான் சரியான தருணம்….அத்தை இந்நேரம் தூங்கிக் கொண்டு இருப்பார்கள்….யாருக்கும் தொந்தரவாக இருக்காது என்று எண்ணி மெல்ல ஓசை எழுப்பாது எழுந்து ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்து பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.

Facebook Comments Box
Previous PostThanalai Erikum Panithuli 6
Next PostMMK tamil novels 8
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here