இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன் “ஓ ஓ” என்ற பெரும் கூச்சலுடன் கத்தி ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர் மகேஷின் நண்பர்கள். சுஜி மகேஷின் வருங்கால மனைவி என்பது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அவனுடைய நண்பர்கள் அனைவரும் மிதுலாவை நன்றாக பார்வை இட (அது தானுங்க சைட் அடிக்க!!! ) ஆரம்பித்து விட்டார்கள்.
அத்தனை பேரின் ஆர்வமான பார்வையில் மனம் சிணுங்கினாலும் வெளியே தைரியமாக!!!!! சமாளிக்க முயன்றாள்.எல்லாரும் அவளிடம் முந்தி அடித்துக் கொண்டு கை குலுக்க கை நீட்டினர்.
முதலில் திகைத்தாலும், உடனே சமாளித்து எல்லாருக்கும் ஒரு பொதுவான கை அசைப்பை தந்தாள்.
மிதுலாவுக்கு சுஜியிடம், கண்களால் இறைஞ்சி ‘காப்பாத்து டி ‘என்பது போல் பார்க்க,அவளுக்கு உதவ சுஜி வேகமாக முன் வந்தாள் .
ஹலோ,” நானே அவளை கெஞ்சி கூத்தாடி இங்கே கூட்டிட்டு வந்து இருக்கேன்”.நீங்க பண்றத பார்த்து அவ தெரிச்சு ஓடிடுவா போல இருக்கு. ஸோ நீங்க எல்லாரும் இந்த தங்கச்சி மேல இரக்கப் பட்டு என் மேல கருணை காட்டுங்க. ப்ளீஸ!!!!!.உங்க ஆர்வத்துக்கு அணை போடுங்க”.
அதுவும் இல்லாம அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கு ஸோ தேவை இல்லாம அவசர முடிவு எடுத்து இங்க யாரும் தேவதாஸ் ஆக வேண்டாம். ஏன் சொல்றேன்னா, இந்த ஏரியால ஏற்கனவே தெருநாய் கம்மியா இருக்கு.நீங்க பாட்டுக்கு உடனே தேவதாஸ் ஆகிட்டா, அப்பறம் நாங்க தெரு நாய் தேடி ,தெரு தெருவா அலைய வேண்டி இருக்கும்.அதனால இன்னையில இருந்து, ஏன் இந்த நிமிஷத்தில் இருந்து உங்களுக்கு இரண்டு தங்கச்சிங்க ஒண்ணு நானு இன்னொன்னு இதோ இவ சரியா???
கூட்டத்தில் ஒருவன் வேகமாக எழுந்து ,” என்னதுஊஊஊ தங்கச்சியா???? என நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழுவது போல் நடித்தான். அவனை பார்த்து சுஜி,” ஹலோ போதும் ரொம்ப நடிக்காதீங்க!!!! ஆமா உங்களுக்குத் தானே போன மாசம் கல்யாணம் ஆச்சு ” எனக் கேட்கவும், அசடு வழிந்தவாறே,” ஹி ஹி ஆமாம் என்றார்.
“அப்புறம் ஏன் அங்கிள் நீங்க இப்படி ஓவர் ஆக்ட் பண்ணுறீங்க????
” அங்கிளா!!!!” சுஜி சிஸ்டர் நானும் மகேஷும் ஒரே பேட்ச் தான்.
“ஹலோ உங்களுக்கு கல்யாணம் ஆச்சு இல்ல?
“ஆமாம்”
“அப்ப நீங்க எங்களுக்கு அங்கிள் தான்.”
“மறுபடியும் அங்கிளா ???? சிஸ்டர் உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன்,” இன்னொரு தடவை அப்படி சொல்லாதீங்க!!!! நிஜமாவே ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்கு.
ஏன் சிஸ்டர் மகேஷ் குடுத்த பார்ட்டிக்கு நாங்க எல்லாரும் எதுக்கு இப்படி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தோம்????
அவன் கூட வந்தா கண்ணுக்கு குளிர்ச்சியா பார்க்கலாம்னு தானே!!! அதுல போய் இப்படி ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுடீங்களே? இது நியாயமா????
“ஹ்ம்ம் இது ஒண்ணும் வேலைக்கு ஆகாது போல, நீங்க என்னவோ பண்ணுங்க!!! நான் மகேஷ் கிட்ட கேட்டு உங்க சம்சாரத்தோட போன் நம்பர் ஆஹ் வாங்குறேன்”
என் பொண்டாட்டி நம்பர் எதுக்கு சிஸ்டர்???
“இல்லை ஒரு பழமொழி கேள்வி பட்டு இருக்கேன் சம்சாரம் அது மின்சாரம்னு அது உண்மையான்னு தெரிஞ்சுக்கணும்.இப்ப நீங்க பேசுனதை எல்லாம் உங்க பொண்டாட்டிக் கிட்ட சொன்னா ஷாக் அவங்களுக்கு அடிக்குமா இல்லை உங்களுக்கு அடிக்குமானு பார்க்கணும்”
சிஸ்டர்!!!! நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு , இப்படி பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க” நீங்க சொல்லி , அதுவும் சுஜிதா சிஸ்டர் சொல்லி கேட்காம இருப்பேனா??? சும்மா சிஸ்டர், நீங்க போங்க, மிதுலா சிஸ்டர் ஆஹ் நான் பத்திரமா பார்த்துகிறேன்.
அது!!! என்ற பார்வையோடு அங்கு இருந்து கிளம்பியவள், மற்றவர்களையும் இதே முறையில்(!!!!!!) சமாதானப் படுத்தி விட்டு நேரே மகேஷிடம் சண்டைக்கு சென்றாள் சுஜி.
ஏன்டா, உன் பிரின்ட்ஸ் வருவாங்கன்னு சொன்ன ,” அதுக்காக இப்படி ஒரு கூட்டத்தையே கூட்டீட்டு வந்து இருக்க” அறிவு இருக்கா உனக்கு????
“ஹே கோவிச்சுக்காத சுஜி” மீ பாவம்”.பர்த்டே பார்ட்டிக்கு நான் கூப்பிட்டது மூணு பேரை தான் டி. ஆனா எப்படியோ இவளோ பேரும் விஷயம் தெரிஞ்சு வந்துட்டானுங்க. நானே இத்தனை பேருக்கும் சேர்த்து எப்படி பில் கட்டப் போறேன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்”
“ஏன் சுஜி செல்லம் நீ எதுவும் கையில காசு வச்சு இருக்க????
ஹம்மம்!!!! ஊரு உலகத்தை பாரு அவனவன் லவ்வருக்கு எவ்ளோ செலவு பண்ணுறானுங்க???? எனக்குன்னு வந்து வாச்சு இருக்கு பாரு!!!!கடவுளே !!! உனக்கு கண்ணு இல்லையா??? இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க மாட்டியா????
ஹே!!!! சுஜி ப்ளீஸ் டி!!!!
கெஞ்சாத தந்து தொலைக்குறேன்!!!! ஒழுங்கா திருப்பி தந்துடணும் சரியா???? இல்லை நடக்குறதே வேற???
சரி செல்லம், இன்னிக்கு எனக்கு பிறந்த நாள் கிப்ட் ஒண்ணும் வாங்கிட்டு வரலியா????
ஏன்டா ????? முழுசா சுளையா இப்ப தான் காசு வாங்குன!!! மறுபடி கிப்ட் வேற கேக்குற????
“செல்லம் ,ரெண்டும் வேற வேற மா”.அது உன்னோட ஆசை முறைமாமன் இக்கட்டுட்டான ஒரு சூழல்ல இருக்கும் போது பெரிய மனசோட உதவினது. அதுக்கு ஒரு பெரிய மனசு வேணும், அது உங்கிட்ட இருக்கு.
பார்ர்ரா!!!! ம் அப்புறம் !!!!
அதுக்காக பிறந்த நாளும் அதுவுமா உன் அத்தானுக்கு கிப்ட் கொண்டு வராம இருந்து இருக்க மாட்ட!!!! ஏன்னா நீ ரொம்மம்ம்ப நல்லவள் ஆச்சே!!!!! மிதுலா ஏன் இப்படி தனியா நிற்க வைத்து விட்டு வந்துட்ட பாவம் அவங்க அங்கே தனியா முழிச்சுக்கிட்டு இருக்காங்க!!!
சிஸ்டரை உன் கூடவே கூட்டிட்டு வர வேண்டியதுது தான?
மகேஷ் !!!! போதும் அடக்கி வாசிங்க!!!அவ தனியாவே இருக்கட்டும் அவளுக்கு ஒரு ஸர்ப்ரைஸ் இருக்கு.
அடிப்பாவி!!! பிறந்த நாள் எனக்கா இல்லை அவளுக்கா??? ஆமா என்ன டி செல்லம் அது என்கிட்ட சொல்லேன்.????
அதெல்லாம் முடியாது.யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்றவள் அவளுடைய போனை எடுத்து யாருக்கோ அழைத்தாள்.” ஹலோ எங்கே இருக்கீங்க? என்ன இங்கே தான் இருக்கீங்களா? நான் உங்களை பார்க்கவே இல்லையே!!!! ஓ !!! சரி சரி.ஏதொ இந்த ஒரு தடவை உங்களுக்குகாக பெரிய ரிஸ்க் எடுத்து மிதுலாவை இங்கே கூட்டிட்டு வந்து இருக்கேன்.இன்னொரு முறை என்கிட்ட நீங்க இதை எதிர்பார்க்கக் கூடாது.என்னோட பேரும் இந்த விஷயத்தில் வெளி வரக் கூடாது.சரியா???சரி!!! சரி!!!! நான் போனை வைக்குறேன்.
சுஜிதா பேசுவதையே இவ்வளவு நேரம் வாய் பிளந்து பார்த்து கொண்டு இருந்த மகேஷ் அவள் போனை வைத்ததும், “ஹே ப்ளீஸ் !!!ப்ளீஸ் டி !!!! இப்படி எல்லாம் சஸ்பென்ஸ் வைக்காத டி என்னால தாங்க முடியாது தலையே வெடிச்சுடும்.ப்ளீஸ்”!!!!
சொன்னா கேட்க மாட்டியா மகேஷ் நீ???? நீ வாயால சொன்ன எல்லாம் கேட்க மாட்ட!!! உனக்கு அடிதடி தான் கரெக்ட்!!!
அய்யோ!!! அடிக்க ஆரம்பிச்சுட்டாளே!!! யாராவது வந்து என்ன காப்பத்துங்களேன்!!!!
“ஏய்!!! சுஜி அரம்பிச்சுட்டியா??? உன் வேலையை!!!! அண்ணாவை ஏன் டி இப்ப அடிக்குற?
ஏய்!!! உன்னை யாருடி இப்ப கூப்பிட்டது???
சுஜி , அண்ணாவுக்கு இன்னிக்கு பர்த்டேடி பாவம் அவர் பிரின்ட்ஸ் எல்லாம் வந்து இருக்காங்க விட்டுடு!!!!
அப்படின்னா தனியா கூட்டிட்டு போய் ரெண்டு மொத்து மொதிக்கவா???
“மிதுலா தங்கச்சி, அண்ணனை காப்பாத்துமா ப்ளீஸ்”
“சுஜி லேட் ஆகுதுடி ,அண்ணனை கேக் கட் பண்ண சொல்லு”
“உனக்காக இப்ப இவரை விடுறேன் மிதுலா,ஆனா எங்கே போயிட போறார்?கல்யாணத்துக்கு அப்பறம் நான் குடுக்கப் போற ஆயிரம் அடியில இதையும் சேர்த்து கணக்கு வச்சுக்கிறேன்”
ஒரு வழியாக மகேஷ் கேக் வெட்டி முடித்ததும் எல்லாரும் கிளம்பி டிஸ்கோதேக்குள் நுழைந்தனர்.மிதுலா மட்டும் உள்ளே செல்வதா வேண்டாமா என்று குழம்பி கொண்டு இருந்தாள்.
சுஜி மெதுவாக அவள் அருகே வந்து “என்னடி ஏன் இங்கேயே நிக்குற வாடி உள்ளே” என்று அழைத்தாள்.
”இல்ல சுஜி நான் வரலை. நீ மட்டும் போய்ட்டு வாடி. நான் வீட்டுக்கு கிளம்புறேன்.எனக்கு இந்த அட்மோஸ்பியர் பிடிக்கல. இங்க இருந்து உடனே கிளம்பனும் போல இருக்கு”.
“சரி டி கிளம்பலாம் ஒரு டென் மினிட்ஸ் மட்டும் இரு.. சின்னதா ஒரே ஒரு டான்ஸ் ஆடி விட்டு வரேன். ப்ளீஸ் டி என் செல்லம் தான நீ!!!
சரி சரி சீக்கிரம் வந்துடு டென் மினிட்ஸ் தான் உனக்கு டைம்.
“சரிடி அது வரைக்கும் நீ இங்க தனியா இருக்க வேணாம்.உள்ள வந்து இரு.சரியா???
” அங்கே வேணாம்டி நான் இங்கேயே இருக்கேன் நீ போய்ட்டு வந்துடு என்ன”!!!
” இல்லடி அது சரி வராது, உன்னை இங்கே தனியா விட்டுட்டு நான் எப்படி போவேன்??? ப்ளீஸ்!!! ப்ளீஸ்!!! கொஞ்ச நேரம் உள்ள வந்து இருடி.”
“சரி ரொம்ப கெஞ்சி கேக்குற!! .போனா போகுது வரேன். ஆனா உனக்காக ஒண்ணும் நான் வரலை. மகேஷ் அண்ணாகாக தான் வரேன்.
“சரிடி பாச மலரே வா .ஐயையோ புதுசா ஒரு அண்ணன் கிடைச்சதும் உன் பிலுக்கு தாங்க முடியலை டி ஆத்தா.
அரங்கினுள் நுழைந்ததும் முதலில் சில நொடிகள் மிதுலாவிற்க்கு ஒன்றுமே புரியவில்லை.அந்த இருட்டில் யார் மேல் எல்லாமோ மோதி சென்று ஒரு தூணை பிடித்தபடி நின்று மெதுவாக கண்கள் அந்த இருட்டுக்கு பழகும் வரை அங்கேயே நின்றாள்.மிதுலாவிற்க்கு இந்த சுழல் புதிது.மிதுலா இந்த காலத்து பெண் தான் நாகரீகமாக உடை அணிபவள் தான். ஆனால் அவளது உடையில் ஒரு நேர்த்தி இருக்கும்,அழகு இருக்கும் கண்ணியம் இருக்கும்.ஆனால் இன்று அவளது கண் முன்னே தலை விரி கோலமாக ஆடி கொண்டு இருந்த பல பெண்களை பார்த்ததும் அவளுக்கு தோன்றிய உணர்வை எப்படி வரையறுப்பது என்று கொஞ்சம் திணறித் தான் போனாள். உடலை கவ்வும் இறுக்கமான டாப்ஸும் முட்டிக்கு மேல் இருந்த குட்டை பாவாடையும் பார்த்தவள், ‘ஒரு நாள் இது மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு தெய்வா முன்னாடி போய் நின்னா என்ன ஆகும் என்று யோசித்தாள்.
‘ஒன்று நல்லா இருந்த மகளுக்கு ஏதோ காத்து கருப்பு அடித்து விட்டதென நினைப்பார் இல்லை இரண்டாவதாக விளக்கமாறில் அடி பின்னி எடுத்து விடுவார்கள்’.
“ஹாங் எனக்கு என்னமோ ரெண்டாவது தான் நடக்கும் னு தோணுது” என்று குரல் கொடுத்த அவளது மனசாட்சியை அடக்கி விட்டு பேரர் கொடுத்த ஜூஸை பருக தொடங்கினாள்.
சுஜி மகேஷ் உடன் சேர்ந்து ஆடி கொண்டே இருந்தாள். இடையில் சிலர் வந்து அவளை ஆட வருமாறு அழைத்தனர்.நாசுக்காக மறுத்து விட்டு கடிகாரத்தை பார்த்து கொண்டே இருந்தாள்.
நேரம் செல்ல செல்ல மிதுலாவிற்க்கு கண்களை சுழட்டி தூக்கம் வர தொடங்கியது.என்ன ஏது என்று யோசிக்க தொடங்கும் முன் அவள் மயக்கம் அதிகரித்தது.’ இப்படியே இருந்தால் கண்டிப்பாக இங்கயே மயங்கி விழுவோம் என்று அவளுக்கு தோன்றவே நேராக எழுந்து ரெஸ்ட் ரூம் நோக்கி சென்றாள். இரண்டு மூன்று முறை முகத்தை நன்கு கழுவியும் அவளால் நிலையாக நிற்க முடியவில்லை. இது சரி இல்லை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக இங்கு இருந்து வீட்டுக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்து வேகமாக நடக்க முயன்றாள்.’
அப்போது அவளின் கையை பிடித்து தனியே இழுத்து சென்றது ஒரு ஆணின் வலுவான கரம்.அரை மயக்க நிலையிலும் பிடியை உதற எவ்வளவோ முயன்றும் அவளால் முடியவில்லை .தனியே இருந்த அறைக்குள் நுழைந்து தன்னை கட்டிலில் படுக்க வைத்த வரை தான் அவளுக்கு நினைவு இருந்தது.தனக்கு ஏதோ ஆபத்து ஏற்பட போகின்றது என்பதை அவளின் மூளைக்கு எட்டினாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மயங்கி சுய உணர்வை இழந்தாள் அந்த பேதை.