நிலவே உந்தன் நிழல் நானே 5

0
1262
NUNN Tamil Novels 37

விடிந்தும் விடியாமலும் இருந்தது அந்த ரம்மியமான காலை பொழுது ஆனால் மிதுலாவால் அந்த அழகை ரசிக்க முடியவில்லை.அவளை பற்றி அங்கு யாரும் கவலைப் பட்டதாகவே அவளுக்கு தோன்றவில்லை. விடியலிலேயே பார்லரை சேர்ந்த பெண்கள் வந்து அவளை அழகு படுத்த தொடங்கி விட்டனர்.

அவளுக்கே தான் எப்படி உணர்கிறோம் என்று புரியவில்லை.அன்று ஹோட்டலில் என்ன நடந்தது???? எதற்காக இந்த அவசர கல்யாணம்????  மாப்பிள்ளை யார்???எப்படி என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான்???? என்று குழம்பிய படியே இருந்தாள்.

கிளம்பலாமா மிதுலா ????

சூரிய கதிர்களின் நிறத்தை தனதாக்கி கொண்டது போல அலங்காரத்தில் ஜொலித்தாள் மிதுலா. மகளின் அலங்காரத்தை பார்த்து  ஒரு நிமிடம்  கண்ணை சிமிட்ட கூட  மறந்தாள் தெய்வானை.

லேசாக கலங்கிய கண்ணோடு,  “போம்மா போய் அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வா. இந்த கோலத்தில் உன்னை பாத்தா அப்பா ரொம்ப சந்தோச படுவாங்க”.

அம்மா …..  ப்ளீஸ்!!! எனக்கு ஒண்ணுமே புரியல ஒரே குழப்பமா இருக்கு!!!!

“முதல்ல நீ போய்.  அப்பாவை பார்த்து அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வா. உனக்கு எல்லாத்தையும் சொல்றேன் போ”.

“மாட்டேன்!!!!  இப்பவே சொல்லுங்க அம்மா !!!!

மிதுலா அடம் பிடிக்காத! நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பியாகனும் சீக்கிரம் போ.

தந்தையின் படத்தின் முன்பு நின்று எப்போதும் வாய் ஓயாமல் பேசுபவளுக்கு இன்று என்ன பேசுவது என்றே புரியவில்லை. மனதில் ஒன்றுமே தோன்றாமல் அப்படியே சிலையென அமைதியாக நின்றுவிட்டு கிளம்பி விட்டாள்.

அம்மா இப்ப சொல்லுங்க!!!!

அப்பாகிட்ட என்ன பேசுன????

” அம்மா நான் என்ன கேக்குறேன்.நீங்க என்ன கேக்குறீங்க?

“மிதுலா கேட்டதுக்கு மட்டும்  முதல்ல பதிலை சொல்லு”!!!

“ஒண்ணுமே   தோணலைம்மா மனசுல ஒரே குழப்பம் !!!

உங்க அப்பா உன்னை இப்படி பார்த்தா ரொம்ப சந்தோச படுவார் மிதுலா.இடையில் பேச முயன்ற மிதுலாவை பார்வையாலே அடக்கிவிட்டு, ” ஆனால்  நான் எப்ப சந்தோச படுவேன் தெரியுமா??? இந்த கல்யாணத்தை நீ மதிச்சு அதுக்கு உண்டான மரியாதையை கொடுத்து ஒரு நிறைவான வாழ்க்கையை வாழும் போது தான்”.

உன் கல்யாணத்தை நான் எப்படி எல்லாமோ நடத்தணும்னு ஆசை பட்டேன். ஆனா இப்படி நடத்த வேண்டிய சூழ்நிலை. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நேத்தே பேங்க் போய் லாக்கர்ல இருந்த நகை எல்லாத்தையும் பத்திரமா எடுத்து உன் பேரில் இருக்கிற லாக்கரில் மாத்தி வச்சுட்டேன்.இந்தா சாவி. நேத்தே வக்கீலை பாத்து இந்த வீட்டையும் இன்னும் உங்க அப்பாவோட பேர்ல இருக்கிற வீடு நிலம் எல்லாத்தையும் உன் பேரிலும், மாப்பிள்ளை பேரிலையும் மாத்தி எழுதிட்டேன்.உயிலோட ஒரு காப்பி வக்கீல்கிட்டயும் ஒரிஜினல் லாக்கர்லயும்    இருக்கு.

இப்போ இதுக்கெல்லாம் என்னம்மா அவசியம் வந்துச்சு???? இதை எல்லாம் கொடுத்தாவது எனக்கு இப்ப கல்யாணம் பண்ணி அனுப்பி தான் ஆகணும்னு என்ன கட்டாயம்!!!! ஏன் இதெல்லாம் இல்லாம உங்க மாப்பிள்ளை என் கழுத்தில் தாலி கட்ட மாட்டாரா!!!

முதலில் இப்படி துடுக்கு தனமாக பேசுவதை விடு.அப்படி அவர் கேட்டு இருந்தால் உன் பாதுகாப்பிற்காக எல்லாவற்றையும் உன் பேரில் மட்டுமே எழுதி இருக்க மாட்டேனா??? இனி கொஞ்சமாவது புத்தியோடு  இரு.இந்த கல்யாணம் நடக்குறதுக்கும் அன்னிக்கு நீ ஹோட்டல்ல மயங்கி விழுந்ததுக்கும் காரணம் யார் தெரியுமா???

“வினோத்”

வினோத்  – கங்காதரன் சரஸ்வதி தம்பதியினரின் ஒரே பிள்ளை. மிதுலாவை விட 8 வயது பெரியவன்.  அளவில்லா சொத்து கண்டிக்க ஆள் இல்லை.சரஸ்வதி அவன் கேட்ட பொழுதெல்லாம் பணத்தை என் எதற்கு என்று கேள்வி கேட்காமல் அள்ளி அள்ளி தருவார்.அதன் பலன்   மிக சிறு வயதிலேயே ஊரில் உள்ள அத்தனை கெட்ட பழக்கமும் வந்தது.

சிறு வயதில் அவனும் மிதுலாவும் ஒன்றாக விளையாடி உள்ளனர்.ஆனால் அவனை பற்றி உண்மைகள் தெரிய வந்த பிறகு அவனை வீட்டுக்குள் சேர்க்க வேண்டாம் என்று கங்காதரன் தெய்வானையிடம் சொல்லி இருந்தார்

காரணத்தை ஊகித்த தெய்வானையும் அவரிடம் மேற்கொண்டு வாதாட விருப்பம் இன்றி தலையை ஆட்டினாள்.

வார இறுதியில் பெண்களோடு!!! சேர்ந்து ஊர் சுற்றி அதில் அவனது பணத்தை கண்டு மயங்கிய பெண்களை வளைத்து தன் தேவை தீர்ந்ததும். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உன்னை நான் தங்கச்சி மாதிரி தான் நினைக்க முடியுது என்று சொல்லும் நியாயவாதி!!!!

அவனை பற்றிய விஷயங்கள் கங்காதரனின் காதுக்கு வந்த போது அவன் சொன்னால் கேட்கும் நிலையில் இல்லை என்பதை புரிந்து கொண்டவர்.அவனுக்கு சரஸ்வதி மூலமாக கிடைக்கும் பணத்தை நிறுத்தினார். போதைக்காக குடி ,பெண்கள், டிரக்ஸ் என்று எதையும் செய்பவன்.அவனுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு என்றால்!!!! அவனையா நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன்!!!.   விக்கித்து நின்றாள்.ஏதோ சொல்ல வந்த தெய்வானை வாயை சட்டென மூடிக் கொண்டாள். கதவு திறக்கும் ஓசையில்.

அம்மா எல்லாரும் வந்தச்சாம்! பாப்பாவை கூட்டிட்டு போகலாமா ????

ஓ மணி ஆச்சா? நல்லவேளை நீ வந்து சொன்ன கற்பகம்.இல்லைன்னா நான் பாட்டுக்கு பேசிட்டே இருந்து இருப்பேன். நீ போய் எல்லாரையும் வண்டில ஏற சொல்லு.நான் மிதுலாவை கூட்டிக் கொண்டு வருகிறேன்.

சரி மிதுலா வா போகலாம்.நல்ல நேரத்துக்குள்ள கிளம்பனும்.மத்த விஷயம் எல்லாம் அப்புறமா கூட பேசிக்கலாம்  வா

அப்புறமா பேசிக்கிறதா எதை??? அந்த பொம்பள பொறுக்கியை கல்யாணம் பண்ணிக்கிட்டு எதை பேசுறது? அவனை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் காலம் முழுதும் இப்படியே இருந்துட்டு போயிடலாம் இல்லை உங்களுக்கு.     நான் தொந்தரவாக இருந்தால் சொல்லி விடுங்கள் ஊரில் கிணறு இல்லையா? ஆறு இல்லையா?என்று மனதில் நினைத்தவள் ஒன்றும் பேசாமல் கால்களை அழுத்தி தரையில் ஊன்றி நான் நகர போவதில்லை என்பது போன்று அழுத்தமாக நின்றாள்.

மிதுலாஆஆ!!!!! கிளம்புடி.அப்படி என்ன உன்னை கிணற்றில் பிடித்தா தள்ளி விட போகிறேன்.  என் பொறுமையை ரொம்ப சோதிக்காதே!!!!  போடிடீடீடீ !!!   ஆங்காரத்துடன் வெளிப்பட்டது  தெய்வானையின்  குரல்.

இத்தனை சொந்த பந்தங்கள் முன்னால் இந்த கல்யாணத்தை நிறுத்தி என்னை அவமானப் படுத்த பார்க்கிறாயா???  அப்படி ஏதாவது எண்ணம் இருந்தால் அதை குழி தோண்டி புதைத்து விடு.உனக்கு ரொம்பவும் செல்லம் கொடுத்து விட்டேன்.அதனால் தான் இப்படி எல்லாம் செய்கிறாய்!!!! கிளம்புடி!!!!

சரி மா.நான் வரேன் போகலாம் வாங்க!!! நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்று வரை நான் எப்போதும் எதற்கும் அப்பா இருந்து இருந்தால் என்று எனக்கு தோன்றியதே இல்லை ஏன்னா, அப்பா எப்பவும் என்கூடவே தான் இருக்கார்னு நான் நம்பினேன்மா!!!ஆனா இப்ப எனக்கு தோணுதுமா அப்பா இருந்து இருந்தா இப்படி நடக்குமானு!!!! என்று சொல்லிவிட்டு தாயின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை  காணாதவள் ,பொம்மை போல கிளம்பி கீழே  வந்தாள்.

“சீக்கிரம் காரில் ஏறுங்க நல்ல நேரம் முடிய போகுது”

என் வாழ்க்கையில் இனி ஏது நல்ல நேரம் அதெல்லாம் முடிஞ்சு போச்சு என்று விரக்தியாக எண்ணினாள். கார் நேரே மண்டபதுக்குள் நுழைந்தது….

அனாவசியமான ஆடம்பரமோ இல்லை. அதே நேரம் குறை கூற முடியாத அளவிற்கு சிறப்பாக அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

“பொண்ணு வந்தாச்சு ஆரத்தி எடுத்துட்டு வாங்க” என்றதும் புது பெண்ணை பார்க்கும் ஆவலில் நிறைய பேர் சேர்ந்ததையோ, “பொண்ணு நல்லா லட்சணமா தான் இருக்கு”  என்ற வார்த்தைகள் எதுவுமே அவள் காதில் விழவில்லை.வினோத்தின் பெயர் காதில் விழுந்த அந்த நொடி அவளுக்கு மூளை மரத்துவிட்டது. தன்னை சுற்றி நடந்த எதுவும் அவள் கண்ணிலோ கருத்திலோ பதியவில்லை.

“பொண்ணு ரூம் மணவறைக்கு வலது பக்கம் இருக்கு.பொண்ண அங்க கூட்டிட்டு போங்க ”  என்று ஒரு குரல் கேட்க தெய்வானை பொண்ணை அழைத்து சென்றார்.

 மிதுலாவுக்கு நலங்கு வைக்கும் பொழுது நெற்றிச் சுற்றியை சரி செய்தவாறே முகத்தை சிரிச்சா மாதிரி வைச்சுக்கோ என்று தோளை தொட்டு அழுத்திய தாயின் அழுத்தத்தில் மெதுவாக தலை நிமிர்த்தி சிரிக்க முயன்றாள். அது முடியாமல் மீண்டும் தலையை கவிழ்ந்து கொண்டாள் .

“இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணா???வாயை திறந்து பேசவே மாட்டேங்குது குனிஞ்ச தலை நிமிராம அட!!! அட!!! என்ன ஒரு  அழகு,  அடக்கம்(!!!!!!) நம்ம மாப்பிள்ளை பையன் ரொம்ப குடுத்து வச்சு இருக்கான்.நான் கூட அவசர கல்யாணம்னு ரொம்ப யோசிச்சேன்,ஆனா பொண்ணை பார்த்துக்கு அப்பறம் தானே தெரியுது.இப்படி ஒரு பொண்ணை வேற யாராச்சும் தூக்கிட்டு போய்டுவாங்களோன்னு மாப்பிள்ளைக்கு பயம் வந்து இருக்கும் அதான்”

பக்கத்தில் இருந்த அலங்கார பூச்சாடியை எடுத்து இந்த அம்மா தலை மீது போடலாமா என்ற கொலை வெறி அவளுக்கு வந்தது.அதற்குள் தெய்வானை வந்து அந்த அம்மாவை காப்பாற்றி விட்டாள்.

” வாம்மா முஹர்த்ததுக்கு நேரம் ஆகுது இந்த புடவையை மாத்திக்கோ”

 அறைக்குள் நுழைந்ததும்,  அம்மா ப்ளீஸ் இந்த கல்யாணம் வேண்டாம்ம்மா!!!! நான் அவனை கல்யாணம் செய்துக்க மாட்டேன்.

“மிதுலா!!! எத்தனை முறை சொன்னாலும் வாயை அடக்கவே மாட்டியா?? “இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் நடக்கப் போகுது. கண்டபடி உளராம புடவையை  மாத்திக்கிட்டு கிளம்பு”

அம்மா இது என்னோட கல்யாணம் எனக்குன்னு சில கனவு ஆசை எல்லாம் இருக்குமா , ஆனா இவனை கல்யாணம் செஞ்சுக்கிட்டு அது எல்லாத்துலயும் மண் அள்ளி போட என்னால முடியாதும்மா…

தெய்வானை பேச ஆரம்பிக்கும் முன் கதவு மெதுவாக தட்டப் பட்டது.அறுபது வயதை நெருங்கி கொண்டு இருக்கும் பெண் ஒருவர் வாசலில் நின்று கொண்டு இருந்தார்.

“ஒண்ணும் இல்லை சம்பந்தி நேரம் ஆகுது,  அய்யர் கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லுறார்.அத சொல்ல தான் வந்தேன்”.

இதோ அஞ்சே நிமிசம் சம்மந்தி வந்துடறோம்.மிதுலா இவங்க மாப்பிள்ளையோட பெரியம்மா.

புதிதாக ஒருவரை சம்பந்தி என்று அழைத்ததும் சற்று குழம்பி தான் போனாள். ஆனால் பெரியம்மா என்று சொல்லவும் அந்த வினோதக்கு இது போல யார் எத்தனை சொந்தமோ யாருக்கு தெரியும்.

கனிவான அவரது பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தலை குனிந்து கொண்டாள்.ஆகாய நீல நிறத்தில் அழகான கலை நயத்தோடு இருந்த புடவை அவளை கவரவில்லை. சிலையென நடந்து மணமேடைக்கு வந்தாள்.

சினிமாவில் நடப்பது போல் ஏதாவது அதிசயம் நடந்து இந்த திருமணம் நின்று விடாதா என்று ஏங்கினாள்.ஆனால் அவளையோ அவள் நினைப்பை பற்றியோ யாருக்கும் எந்த கவலையையும் இருப்பதாய் அவளுக்கு தோன்றவில்லை.மணவறைக்கு வந்து அமர்ந்ததும் கத்தி கூச்சல் போட்டு இந்த திருமணத்தை நிறுத்தி விடலாம் என்ற எண்ணம் தோன்றிய வேகத்தில் மறைந்தும் போயிற்று தாயின் நினைவில்.ஹோம குண்டத்தின் முன் இருந்த அக்கினியை வெறித்து கொண்டு இருந்தவள் மறந்தும் அருகில் இருந்தவனை திரும்பிப் பார்க்கவில்லை.கல்லென இருகிப் போய் இருந்தாள்.

இதோ தாலியை கட்டப் போகிறான்.இதோ….. இப்போது….. கட்டி விட்டான்.

மிதுலாவுக்கு என்று தனிப்பட்ட எந்த ஆசையும் கிடையாது திருமண விஷயத்தில் ஆனாலும் இப்படி ஒருவனை மணக்க வேண்டும் என்று தான் கனவிலும் நினைக்கவில்லையே என்று எண்ணி எண்ணி நொந்து போனாள். அக்கினியை வலம் வரும் போது இவன் எல்லாம் என் கையை தோடுவதா என்ற ஆத்திரத்துடன் கையை உருவ முயன்றாள்.எங்கே ???அவன் தான் கையை இறுக்கி பிடித்து தொலைத்து இருக்கிறானே????

என் கையை விடுடா என்று கத்த வேண்டும் போல் இருந்தது மிதுலாவுக்கு.வாயை கஷ்டப்பட்டு இறுக மூடிக் கொண்டாள். அய்யர் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க சொன்னதும் தாயை நோக்கி சென்றவளை இழுத்து நிறுத்தி  அவனுடைய பெரியம்மாவின் அருகில் நின்று ,”ஆசிர்வாதம் பண்ணுங்க பெரியம்மா ”  என்றான்.

ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை பாய்ச்சியது போல் இருந்தது மிதுலாவுக்கு இது … இந்த குரல்….. அவனுடையது ஆயிற்றே!!!!!! அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.   அங்கே நின்றது சாட்சாத் அவனே தான் !!!!!

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here