இவன் எங்கே இங்கே வந்தான்???? வினோத் என்ன ஆனான்??? அம்மா இதுக்கெல்லாம். காரணம் வினோத்ன்னு இல்ல சொன்னாங்க!!!அப்படின்னா இவன் தான் என் கழுத்தில் தாலி காட்டினானா????
இதுவரை இருந்து வந்த இறுக்கம் மெதுவாக குறைய தொடங்கியது. இருவழியிலும் முக்கிய சொந்தங்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் மணமக்கள் மேடையிலேயே அமர வைக்கப்பட்டனர்.வினோத்தை தான் மணக்கவில்லை என்று ஆனதுமே இறுக்கம் மெல்ல தளர்ந்தவள் முகத்தில் லேசாக சிரிப்பு கூட வந்தது.
அடேயப்பா!!!! நடிப்பு பிரமாதம் தான் போ. கொஞ்ச நேரம் முன்னாடி வரை என்னை கல்யாணமே பண்ணிக்க முடியாதுன்னு குதிச்சுட்டு இருந்த இப்ப என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு???? நினைத்ததை சாதித்த திமிரா????
“நல்லா சிரிச்சுக்கோ, இனி உன் முகத்துல அந்த சிரிப்பு இருக்காது” என்று மிதுலாவின் தலையில் இடியை சிரித்துக் கொண்டே மென்குரலில் கூறினான்.பார்ப்பவர் கண்களுக்கு புதிதாக மணம் முடித்த கணவன் மனைவிக்கு இடையேயான ரகசிய பேச்சு போல தான் இருக்கும்.
என்ன இப்படி பேசுறான்?நான் என்ன பண்ணினேன்?ஒண்ணுமே புரியலையே ஆண்டவா!!!!
நான் அம்மாகிட்ட சொன்னது இவனுக்கு எப்படி தெரிஞ்சது????தெய்வா ஏதும் எட்டப்பி வேலை பார்த்துடுச்சோ!!!!! சீ சீ அதுக்கு வாய்ப்பே இல்லை.அப்படீன்னா இவரோட பெரியம்மாவா தான் இருக்கணும். ஒட்டு கேட்டது மட்டும் இல்லாம இவன் பெரிய குணசீலன்னு இவன்கிட்ட பத்த வச்சுடுச்சா அந்த அம்மா? ஓல்டு லேடி இரு உன்னை ஒரு வழி பண்ணிடறேன்.அந்த அம்மாவை ஒரு வழி பண்ணுறது அப்பறம் முதல இவனை எப்படி சமாளிக்குறதுன்னு யோசி என்று அவளது மனசாட்சி அவளுக்கு இடித்துரைக்க , மிகவும் சீரியசான முக பாவனையோடு யோசிக்க தொடங்கினாள்.
இவன் ஏன் இப்படி எல்லாம் பேசுறான் ஒண்ணுமே புரியலையே!!!!! இந்த தெய்வா வேற வாயவே திறக்க மாட்டேங்குது. மனதில் தாயிற்கு அர்ச்சனை பண்ணிக் கொண்டே தாயை அழைத்தாள்.ஆனால் தெய்வானையால் மேடைக்கு வரவே முடியவில்லை.விருந்தினர்களை உபசரிக்க பந்தியை பார்க்க, தாம்பூல பை குடுக்க என்று ஒவ்வொன்றுக்கும் ஓடிக் கொண்டு இருந்தாள்.
அம்மாகிட்ட இப்போதைக்கு பேச முடியாது போல.பேசாம இவன்கிட்டேயே கேட்டுடுவோமா???? ஆனாலும் மிதுலா உனக்கு இவ்வளவு அறிவு ஆகாது. ஏற்கனவே அவன் மிளகாயை கடிச்சது மாதிரி தையா தக்கா னு குதிக்கிறான்.அவன்கிட்ட பொய் கேட்டா அவ்ளோதான்.நீ செத்த உடனே இந்த ஐடியாவை மூட்டை கட்டி வை.என்று எண்ணியபடியே தலையில் ஓங்கி குட்டிக் கொண்டாள்.
சும்மா ஏதாவது செஞ்சு சீன் போடாமல் கொஞ்ச நேரம் அடங்கி உட்கார். வேறு யார் , மறுபடியும் அவன் தான்.
சே இவன் ஒருத்தன்.!!!!! நான் என்ன பொம்மையா அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார.என்கிட்ட பேசும் போது கடுவன் பூனை மாதிரி பேசிட்டு முகத்தை மட்டும் நல்லா சிரிச்சா மாதிரி வச்சுக்கிறான்.கடுவன் பூனை!!!!! கடுவன் பூனை!!!!! என்று ஆயிரம் முறை அவனது பட்டப் பெயரை சொல்லி மனதுக்குள் திட்டிய பிறகு தான் அவள் திடுக்கிட்டாள். ஆமா இவன் பேரு என்ன?????
———-
இப்ப இதை யார்க்கிட்ட போய் கேட்பது???? தாலி கட்டிய புருஷன் பேரு தெரியாதுன்னு சொன்னா??? எவ்ளோ அசிங்கம்!!!!
இந்த தெய்வானையாச்சும் மாப்பிள்ளை பேரு இதுதான்னு என்கிட்டே சொல்லி இருக்கணும்ல!!! சொல்லி இருந்தா எனக்கு இவ்வளவு டென்ஷன் இருந்து இருக்காது. நானும் இவன் பெரியம்மா காதுபட அப்படி பேசி இருக்க மாட்டேன்ல. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. பேசாம இவன்கிட்டேயே கேட்டுடுவோமா???? ஆமா மிதுலா நீ கேட்டதும் சொல்லிவிட்டுத் தான் இவன் மறுவேலை பார்ப்பான்.உன் மூளையை எங்கே பொருட்காட்சிக்கு அனுப்பி வச்சுட்டியா???
யோசி மிதுலா யோசி.கண்களை நாலா பக்கமும் சுழல விட்டாள். கடவுளே எப்படியாச்சும் காப்பாத்து. அப்படி காப்பாத்தினா. என் புருஷன் இல்லை , இல்லை புருஷர் உன் சந்நிதானத்தை நூற்றி எட்டு முறை சுத்தி வருவார்.
அதென்னடி புருசர்னு சொல்ற? என்று கேட்ட மனசாட்சிக்கு தாலி கட்டிய புருசனுக்கு மரியாதை கொடுக்கணும்ல அதான்”
ஆமாம் ஆமாம் கண்டிப்பா கொடுக்கணும் தான்…. அதுவும் இல்லாம உன்னை மாதிரி ஒருத்திக்கு வாழ்க்கை குடுத்து அவர் வாழ்க்கையே தியாகம் செஞ்சு இருக்காரே அவருக்கு கொடுக்கணும் தான்.
ஏய் மனசாட்சி என்ன கிண்டலா????
“இல்லை சுண்டல்”
வர வர உனக்கு வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு போ போய் பேசாமல் வேலையை பார்!!!!!
யாருக்கு எனக்கு !!! வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு!!! நேரம் தான்டி ஆத்தா!!!!
அது சரி மிதுலா இந்த வேண்டுதல் நீ வேண்டிக்கணும்.ஏன் உன் புருஷனை சாரி புருஷரை பலி ஆக்குற???
அதான் கல்யாணம் ஆகிடுச்சு இல்லை இனி நான் வேண்டினா என்ன அவர் வேண்டினா என்ன?? எல்லாம் ஒண்ணு தான் அதனால மனசாட்சி நீ கொஞ்ச நேரம் அடக்கி வாசி.அதுவும் இல்லாம நான் புது பொண்ணு வேற.எல்லாரும் என்னையே பார்த்துக்கிட்டு இருக்காங்க!!!!! சோ நான் கொஞ்சம் வெக்கப் படணும். ஓர கண்ணால் என் புருஷரை பார்க்க வேண்டும்.
சைட் அடிக்க போறேன்னு சொல்லு.
ஏதொ ஒண்ணு இடத்தை காலி பண்ணு சீக்கிரம்.
அடியேய் நான் உன் மனச்சாட்சிடி எப்பவும் உன்கூடவே இருப்பவள்.தாலி கட்டி அரை மணி நேரம் கூட ஆகலை அதுக்குள்ள என்னை ஒதுக்கி வைக்க பார்க்கிறாயா??????
நீ இன்னும் கிளம்பலை°??? ரொம்ப நேரமா யார்கிட்டயோ பேசிட்டு இருக்கியே???? யாருகிட்ட பேசினாலும் கொஞ்சம் தள்ளி போய் அந்த பக்கம் நின்னு போய் பேசு.
அடிப்பாவி!!!!! இருடி ஒரு நாள் என்னை தேடி வருவாய் இல்லையா??? அப்ப பார்த்துகிறேன் உன்னை.
அப்ப பார்த்துக்கலாம் இப்ப கிளம்பு.
ஒரு வழியாக மனசாட்சியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தவள் மீண்டும் கணவனின் பெயர் என்னவாக இருக்கும் என்று யோசிக்க தொடங்கினாள்.
இவன். இல்லை இல்லை புருஷர் பேரை இப்ப எப்படி தெரிந்து கொள்வது???? கல்யாணமான முதல் நாளே இப்படி என்னை நீ சோதிக்க கூடாது ஆண்டவா.
அடுத்து வேற என்ன வேண்டுதல் வேண்டினா இப்ப நீ எனக்கு உதவி செய்வாய்!!!!
தீச்சட்டி – வேண்டாம் கை புண்ணாகும்
காவடி- நம்ம ஆளுக்கு டான்ஸ் வருமோ வராதோ!!!
மொட்டை – சே !!! சே!!!! பெர்சனாலிட்டி போய்டும்
அடுத்த வேண்டுதலை அவள் ஆரம்பிக்கும் முன் அவளை காப்பாற்றினார் கடவுள்.
நாலா பக்கமும் கண்களை சுழல விட்டவள் கண்களில் பட்டது வாசலில் இருந்த திருமண வரவேற்பு போர்டு.
“வசீகரன் வெட்ஸ் மிதுலா “
“வசீகரன்” வாய்க்குள் சொல்லி பார்த்துக் கொண்டாள்.’ஆளுக்கேத்த மாதிரி கரெக்டான பேரு தான்’.
ஓர கண்ணால் இவள் அடிக்கடி அவனை பார்ப்பதை அவன் உணர்ந்து தான் இருந்தான்.ஆனால் மிதுலாவை அவன் அசட்டையே செய்யவில்லை.
வசீகரனுடைய சொந்தங்களோ, நண்பர்களோ வந்தால் சிரித்துக் கொண்டே அவர்களை அறிமுகப் படுத்தி போட்டோவிற்கு போஸ் கொடுப்பவன்,அவர்கள் மேடையை விட்டு கீழே இறங்கியதும் மறுபடி அவன் முகம் கல்லென இறுகி விடும்.
ஒரு வழியாக வந்து இருந்த உறவினர் அனைவரும் கிளம்பியதும் மிதுலாவும் வசீகரனும் தனி தனி அறைகளில் ஓய்வு எடுக்க சென்றனர்.
உடல் அசதியில் படுத்தவுடன் உறங்க ஆரம்பித்து விட்டாள்.சிறிது நேரம் கழித்து கையில் காப்பியோடு மகளை எழுப்பினார் தெய்வானை.
தாயை பார்த்ததும் சிரித்தப் படியே எழுந்தவள் அருகில் நின்ற மனிதரை பார்த்ததும் அவள் சிரிப்பு அப்படியே நின்றது.வந்து இருந்தவர் கங்காதரன்.என்ன பேசுவது எப்படி பேசுவது என்று இவள் முழித்துக் கொண்டு இருக்கும் போது அவரே இவள் கையை பிடித்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.
“அம்மாடி மிதுலா என்னை மன்னிச்சுடுமா இப்படி ஒரு புள்ளையை பெற்றதற்கு” என்று கண்ணீர் விட தொடங்கினார்.”அவனை நான் சரியா வளர்க்கத் தவறிட்டேன் மா”.
ஏற்கனவே தெய்வானை மூலம் இந்த திடீர் திருமணத்தின் மூல காரணம் வினோத் என்று அறிந்து இருந்தாலும் நடந்தவை எதுவும் தெரியாமல் இவரிடம் என்ன சொல்லி சமாதான படுத்துவது என்று தெரியாமல் விழித்தாள்.