நிலவே உந்தன் நிழல் நானே 9

0
1171
NUNN Tamil Novels 37

கீழே உள்ள வாஷ்  ரூமுக்கு சென்று கொண்டு இருந்தவனின் மேலேயே வந்து விழுந்தாள் அவள்.

வேறு யார்!!!! எல்லாம் நம்ம அம்மணி மிதுலா தான். மயக்கத்தில் தானே இருக்கிறாள் எங்கே ஓடி விட போகிறாள் என்று கதவை வினோத் பூட்டாமல் சென்று விட்டு இருந்தான்.

அரை மயக்க நிலையில் இருந்த மிதுலா தன்னை தானே காப்பாற்றி கொள்வதற்காக தட்டுத்தடுமாறி கதவில் கை வைத்து திறந்தாள்.கதவு திறந்ததும் சீக்கிரம் வெளியே போக வேண்டுமே என்ற எண்ணத்தில் வேகமாக ஓட நினைத்தாள்.ஆனால் அவள் உடல் அதற்கு ஒத்துழைக்காமல் தடுமாறி அந்நேரம் சரியாக கதவினை தாண்டி வாஷ் ரூம் நோக்கி  சென்று கொண்டு இருந்த வசீகரனின் மேல் மோதி வைத்தாள். வசீகரனும் இப்படி ஒரு நிகழ்வை எதிர்பாராததனால், நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

இருவரில் முதலில் சுதாரித்தது வசீகரன் தான். ஆனால் அவனால் உடனே எழுந்திருக்க முடியவில்லை அவன் மேல் தான் மிதுலா கவிழ்ந்து இருக்கிறாளே!!!!

இது என்னடா தொல்லை !!!! ஏய் யார் நீ இப்படி மேலே வந்து விழுந்து வைக்கிறாய்??? முதலில் எழுந்திரு !!!

அப்பொழுது தான் அரை மயக்கத்தில் இருந்த மிதுலா அவனை நிமிர்ந்து பார்த்தாள். மிதுலாவை பார்த்த வசீகரனும் அதிர்ந்து விழித்தான்.

நீயா?? எதுக்கு நான் எங்கே போனாலும் நீ பின் தொடர்ந்து வர???உனக்கு வேற வேலையே இல்லையா  என்று கத்திக் கொண்டு இருக்க, மிதுலாவுக்கு வசீகரன் பேசிய எதுவும் காதில் விழவில்லை.

யாரோ தன்னை மயங்கி விழ வைத்து ஏதோ செய்ய பார்க்கிறார்கள் என்பது மட்டுமே அவள் மூளையில் பதிவாகி இருந்ததால் அந்த தீயவனிடம் இருந்து தப்ப வேண்டும் என்ற நோக்கில் தானே அறையை விட்டு தடுமாறி வெளியேறினாள். அரைகுறை மயக்கத்தில் இருந்த மிதுலாவிற்கு வசீகரன் தான் அந்த கேட்டவன் போல தெரிந்தான்.

டேய் விடுடா என்னை!!! பொறுக்கி!!! என்று மயக்கத்தில் உளற ஆரம்பித்தாள்.

என்ன !!!! டா வா?ஏய் யாரை பார்த்து பொறுக்கினு சொல்றே???முதலில் எழுந்து தொலை என்மேல் இருந்து.”

அவன் பாட்டிற்கு ஒரு பக்கம் கத்த அவன் சொன்ன எதையுமே மிதுலா உணரவே இல்லை. மீண்டும் மீண்டும் என்னை விடு என்னை விடு என்று மட்டும் மயக்கத்தில் புலம்பிக் கொண்டே இருந்தாள்.

ஒரு வழியாக சமாளித்து மிதுலாவுடன்  தானும் சேர்ந்து எழுந்தான்.மிதுலா மேலும் தள்ளாடவே அவளை லேசாக அணைத்தார் போல நிறுத்தி அதே அறையின் உள்ளேயே படுக்க வைத்து விடலாம் என்று  கதவை திறக்க முயன்றான்.

மிதுலா போய் இவ்வளவு நேரம் ஆயிற்றே இன்னும் அவளை காணவில்லையே என்று மகேஷ் மற்றும் அவனது நண்பர்கள் பட்டாளத்துடன்  அவளை தேடிக் கொண்டு இருந்த சுஜியின் கண்களுக்கு மிக சரியாக இந்த காட்சி சிக்கியது.

உடனே வேகமாக மிதுலாவை நோக்கி வந்தவள் ,”ஹலோ மிஸ்டர் அவளை என்ன பண்ணுறீங்க? அவளை விடுங்க???” ஒரு பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்குறீங்களே உங்களுக்கு வெட்கமாக இல்லை???

மைண்ட் யுவர் வார்ட்ஸ்”  நடந்தது தெரியாம சும்மா உளறாதே

என்ன ??? என் பிரின்ட் அவளாவே வேணும்னு வந்து உங்க கைய பிடிச்சு இழுத்து உங்க மேலே விழுந்தாள்ன்னு சொல்ல போறீங்களா?

ஆமாம்!!!! அழுத்தம் திருத்தமாக வந்தது வசீகரனின் பதில்.

மிஸ்டர் வார்த்தையை அளந்து பேசுங்க

அதையே நானும் சொல்லலாம்!!! நீங்களும் உங்க இஷ்டத்துக்கு பேச கூடாது.”

மிதுலா இன்னும் ஏண்டி அவன் தோளை பிடிச்சு தொங்கிகிட்டு இருக்க???

இவர்களுடைய பேச்சு எதையும் காதில் வாங்காது மிதுலா தன் போக்கில் பிதற்றிக்கொண்டே இருந்தாள்.

என் கையை விடுடா பொறுக்கி !!!! என்னை எங்கே இழுத்துகிட்டு போற விடு.”

 மிதுலாவின் வார்த்தைகளை கேட்டதும் சுஜிதா மேலும் ஆத்திரம் அடைந்தாள். மிதுலா என்னடி சொல்ற இந்த ஆள் உன்னை என்ன பண்ணினார்?

தூக்கத்தில் புலம்புவது போல் மிதுலா பேசி கொண்டே இருந்தாள். அப்பொழுது தான் மிதுலாவை நன்கு கவனித்தாள் சுஜி.அவள் நிற்க முடியாமல் தள்ளாடுவதையும் பேச்சு குழறி குழறி வருவதையும்.

அடப்பாவி என்ன செய்த அவளை???ஐயோ அவங்க அம்மா என்னை நம்பி தானே அனுப்பினாங்க???வினோத் அண்ணாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்????மிதுலா உன்னை வினோத் அண்ணாவுடன் சேர்த்து வைக்கலாம்னு தானே நினைச்சேன்.இப்படி ஆகிடுச்சே???மிஸ்டர் அவளை மயக்கி என்ன செய்யலாம்னு நினைச்சீங்க?

என்னை விடுடாமிதுலா தான்.(அட இருடி இவ ஒருத்தி)

இவர்கள் பேச்சை கேட்டு கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது வசீகரனின் தொழிற்துறை நண்பர் கூட்டத்தையும் சேர்த்து.நடந்த பேச்சு வார்த்தை அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த மூர்த்திக்கு அளவிட முடியாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.பின்னே இந்த வசீகரன் எத்தனை முறை தன்னை அவமானப் படுத்தி இருப்பான்.   எப்பேற்பட்ட வாய்ப்பு இது. இவனை இன்று ஒரு வழியாக்க வேண்டும்.வசீகரனிடம் நேரடியாக மோத முடியாது என்பதை நன்கு அறிந்தவன் ஆயிற்றே.மூர்த்தி வசீகரனை பார்த்து கோணலான சிரிப்பு ஒன்றை சிரிக்க ஆரம்பித்தான்.

என்ன வசீகரன் நீங்க பெரிய விசுவமித்திரர்னு இல்ல நாங்க எல்லாரும் நினைச்சோம்.கடைசில நீங்களும் இந்த விஷயத்துல வீக் தானா?

 வசீகரன் அவமானமாக உணர ஆரம்பித்தான்.அவனுக்கு ஆதரவாக பேச கூட அந்த கூட்டத்தில் ஒருவரும் இல்லை.

கொஞ்ச நேரத்திற்கு முன் அவனுடைய நண்பர்கள் அவனை பார்த்த பார்வைக்கும் இப்பொழுது பார்க்கும் பார்வைக்கும் மலை அளவு வித்தியாசம் தெரிந்தது.

 போன நிமிடம் வரை அவர்களின் பார்வையில் ஒரு மரியாதை தெரிந்தது.ஒரு பிரமிப்பு இருந்தது.சுஜிதா பேச பேச அவர்களின் முகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இகழ்ச்சியை காட்டியதுஇத்தனை வருடங்கள் அவன் காத்து வந்த அவனது மரியாதையை பேசியே வீழ்த்திக் கொண்டு இருந்த சுஜியையும்  மிதுலாவையும் கட்டுக்கடங்காத ஆத்திரத்துடன் பார்த்தான்.

சுஜிதா விதவிதமாக பேசி அவனை அசிங்க படுத்தினாள் என்றால், மிதுலாவோ ஒரே வார்த்தையை சொல்லி சொல்லி வெறுப்பேற்றினாள்.

கட்டுக்கடங்காத ஆத்திரத்துடன் வசீகரன் பேச ஆரம்பித்தான். “என் மரியாதையை கெடுப்பது போல பேசினால் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு போடுவேன் ஜாக்கிரதை.”

நீங்கள் செய்து வைத்து இருக்கும் காரியத்திற்கு நீங்கள் ஜெயிலில் களி திண்ணாமல் இருந்தால் பிறகு அதை பற்றி யோசிக்கலாம்.”

இப்பொழுது சுஜியின் துணைக்கு மகேஷின் நண்பர்கள் வந்தனர்.அந்த கூட்டத்தில் வினோத்தின் கை கூலிகளும் சத்தம் இல்லாமல் கலந்து விட்டனர்.

தான் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக வினோத் அவர்களிடம் தன்னை பற்றி கூறாமல் மிதுலாவின் போட்டோவை மட்டும் தான் அனுப்பி இருந்தான்.வினோத்தின் ஆட்களுக்கு வசீகரனே வினோத் ஆக அடையாளம் காணப்பட்டான். அவர்களை பொறுத்தவரை மிதுலாவுடன் இருப்பவனையும் மிதுலாவையும் சேர்த்து வைத்து பேசி பிரச்சினையை பெரிதாக்க வேண்டும் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்று ஒத்துக் கொள்ளும் அளவுக்கு பிரச்சினை செய்ய வேண்டும் என்பது தானே!!

என்ன சார் உங்க இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே போறீங்க? நாங்க எல்லாரும் இவ்வளவு நேரம் மிதுலா கூட தான் இருந்தோம்.அந்த பொண்ணு எவ்ளோ அமைதி (!!!!!) தெரியுமா? ஒரு வார்த்தை கூட பேசலை. அந்த பொண்ணு மேல இப்படி பழி போடறீங்களே? என்ன சார் கேட்க ஆள் இல்லைனு நினைச்சீங்களா???அது மட்டும் இல்லை இதோ என் செல்லுல இந்த போட்டோ பாருங்க நீங்க அந்த பெண்ணை கட்டி பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க!!!!என்ன சார் போட்டோ பார்த்ததும் சைலண்ட்  ஆகிட்டீங்க!!! அடுத்து என்ன சொல்லி தப்பிக்கலாம்னு பார்க்குறீங்களா?நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டி பிடிச்சிட்டு இருந்ததை நாங்க எல்லாரும் தான் பார்த்தோமே?ஆளுங்க வந்ததும் சும்மா நல்லவன் வேஷம் போடறீங்களா???

யோவ் நடந்தது தெரியாம சும்மா உளராதீங்க

காதுல பூ வைச்ச எவனாவது கேணையன் கிட்ட போய் இத சொல்லுங்க??? அவளை மயக்கி ஏதொ செய்ய பார்த்துவிட்டு இப்பொ கூட்டத்தை பார்த்ததும் பிளேட்டை மாத்த பார்க்குறீங்களா???

நான் சொல்றதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா இந்த ஹோட்டலோட சிசிடிவி ஆஹ் பாருங்க அப்ப தெரிஞ்சுடும்.நான் சொல்றது உண்மையா இல்லை பொய்யானு. அப்படி நான் சொல்றது பொய்னு ப்ரூப் ஆகிட்டா நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன். அந்த வார்த்தைகளை சொல்லும் முன் அவன் வாயில் ஏதோ வாஸ்து கோளாறு இருந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் இப்படி சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வானா??? அவனுக்கு எப்படி தெரியும்??? சிசி டிவி யை பார்த்து மிதுலாவை வேறு யாரேனும் காப்பாற்றி விட்டாலோ அல்லது போலீஸ் கேஸ் ஏதும் ஆனால் தான் மாட்ட கூடாது என்பதற்காக ஏற்கனவே காசு கொடுத்து ஒரு வேலையாள் மூலம் சர்வரை ரிப்பேர் ஆக்கி விட்டு இருந்தான் என்பது இவனுக்கு தெரிந்து இருக்காதே???

படையென இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மேனேஜர் அறையை நோக்கி சென்றனர். ஏற்கனவே இவர்கள் பிரச்சினையை அவரும் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டே தானே இருந்தார்.

மேனேஜர் சீக்கிரம் சிசிடிவியை ரிவர்ஸ் செய்து இவர்களுக்கு காண்பியுங்கள்.உங்கள் அத்தனை பேரையும் சும்மா விட மாட்டேன்.அப்படியே போலீஸ்க்கும் போன் செய்து விடுங்கள்.”

மேனேஜர் கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் திருதிருவென முழிக்கத் தொடங்கினார். ரிவேர்ஸ் செய்து எதை காட்டுவது? அங்கே தான் ஒன்றும் இல்லையே. மேனேஜர் கையை பிசைந்தார்.

இதோ இப்பொழுது இவர்கள் அனைவரும் வீடியோவை பார்த்து விட்டு என் காலில் விழுந்து கெஞ்ச போகிறார்கள் என்ற இறுமாப்போடு நின்று கொண்டு இருந்தான் வசீகரன்.

என்ன மேனேஜர் அது தான் சார் சொல்லிவிட்டார் இல்லையா பிளே பண்ணாமல் இருந்தால் என்ன அர்த்தம்?

வசீகரனும் திரும்பி  மேனேஜரை வெறியோடு பார்க்க அவர் அரண்டு விட்டார்.ஐயோ இப்போ எப்படி சொல்வேன்!!!! சொன்னா இந்த ஆளு என்னை இங்கேயே கொன்னுடுவானே??? இவன் அடித்த அடியில் இரண்டு அடியாவது வினோத் தாங்கினான், ஆனா நான்புள்ளை குட்டிகாரானச்சே!!!!

யோவ் மானஜரை எதுக்கு இப்ப முறைக்குற?.குடி போதையில் இவ கிட்ட தப்பா நடந்துக்க  பார்த்துட்டு ஆளுங்க வந்ததும் நல்லவன் வேஷம் போடறீயா????

சுற்றி இருந்தவர்கள் நீ என்று ஒருமையில் பேசுவதை கவனித்தான்.நிலைமை கை மீற தொடங்கி விட்டதோ என்று அவனுக்கு லேசான ஐயம் ஏற்பட தொடங்கியது. வசீகரன் முதன் முதலாக சந்தேகப் பட தொடங்கினான்.சுற்றி உள்ள அனைவரையும் பார்வையாலேயே நோட்டம் இட்டான். எனினும்  அது வெளியே தெரியாத வண்ணம் பேசிக் கொண்டே நோட்டம் இட்டான்.

அதுக்கான அவசியம் எனக்கு இல்லை.நான் விரல் அசைச்சா போதும் ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க.”

!!!! ஆயிரம் பொண்ணுங்க வரலாம் ஆனா மிதுலா வர மாட்டாளே

நீ ரொம்ப பேசுற

நீங்க என்னை பேச வைக்குறீங்க

நான் யாருன்னு தெரியாம என்கிட்ட விளையாடாதே.

ஏன் தெரியாது நீ ஒரு பொம்பளை பொறுக்கி!!!

அவ்வளவு தான் வசீகரனின் பொறுமை பறந்தது.

ஏய்!!!!! யாரை பார்த்து பொறுக்கி னு சொல்ற???

சார்? என்று அவனை தயங்கி தயங்கி அழைத்தபடி வந்து நின்றான் சர்வர்.

என்னய்யா????? உச்சக்கட்ட கோபத்தில் கத்தினான்.

நீங்க ஒருத்தரை அடிச்சு போட்டீங்களே அவரோட அப்பா வந்து இருக்கார்.

   நீ ரௌடியா???

இப்ப நீ வாயை மூட மாட்ட?

என் மிதுலாவுக்கு நியாயம் கிடைக்கிற வரை நான் ஓய மாட்டேன்.

வந்தவர் கங்காதரன்.

டக் ” ”  டக்அம்மா கதவை திறங்க அம்மா? நான் தான் கற்பகம்

என்ன கற்பகம்?

ஒண்ணும் இல்லைமா.உங்க சம்மந்தியோட சொந்தகாரவங்க சில பேரு இப்ப வந்து பொண்ணு மாப்பிள்ளையை பார்க்க வராங்கலாம்.அதுனாலே பாப்பாவை கிளம்பி தயாரா இருக்க சொன்னாங்க

சரி கற்பகம் நீ போ நான் அவளை கூட்டிட்டு வரேன்

இவளுக்கு எப்ப பாரு இதே வேலையா போச்சு நீங்க சொல்லுங்க அம்மா.கங்காதரன் மாமா வந்தாரு.அப்புறம்????

அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம் இப்ப பொய் குளிச்சுட்டு வா

அம்மா ப்ளீஸ் !!! சொல்லுங்க அம்மா!!! அங்கிள் வந்ததும் இது தான் நடந்துச்சுன்னு எக்ஸ்பிளேன் பண்ணி என்னை கூட்டிட்டு வந்து இருக்கலாமே? ஏன் கூட்டிட்டு வரலை?

அது…..

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here