நிழலாக நான் ?

0
194

கடைசியா சொல்லறேன் கேட்டுக்கோ…இதோ பாரு நீ போனேன்னா உன் பின்னாடியே வருவேண்ணு மட்டும் கனவு கானத… நான் ஆம்பள டீ…
இதோட எல்லாம் முடிஞ்சது. இந்த நிமிஷம் எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமாக
இருக்க போறேன். கொஞ்சம் சத்தமாக கத்தியவனை முறைத்தபடி தனது சூட்கேசில் தனது உடைகளை பேக் செய்து கொண்டிருந்தாள் வான்மதி .

திருமணம் ஆகி ஒரு வருடம் முடிந்திருக்க சில நாட்களாய்…சிறு சிறு சண்டை தொடங்கி இன்று சற்று பெரியதாய் முடிய தனது வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருந்தாள் .

நானும் அதையே தான் சொல்லறேன். நீயும் தயவு செஞ்சு வந்து கூப்பிடாத..
ஷப்பா… பட்டது போதும்… எப்படி… என்ன பேசினாலும் கடைசியில் சண்டை போட்டா. உன் முகத்தை பார்க்காமல் கொஞ்ச நாள் நிம்மதியா இருப்பேன்.

கூறியவள் இதோ தனது பேக்கை சுமந்தபடி வெளியேறினாள்.

வா…. வண்டியில ஏறு. பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடறேன் கேட்ட முகிலனை சற்றும் அசட்டை செய்யாது
கேப்ஸை அழைத்து கொண்டிருந்தாள் அவனது கேள்விக்கு பதில் சொல்வதை போல்…

திமிர் திமிர் உடம்பெல்லாம் திமிர். இதுக்கு எங்க போய் பட போறயோ தெரியலை…

அப்படி ஏதாவது நடந்தால் சொல்லறேன் அப்ப வாங்க வந்து பாருங்க. கூறியபடி புறப்பட்டாள் மதி.

தினமும் இரண்டு முறை போன் அடிக்க இதுவரை பதில் தராமல் டிமிக்கி கொடுத்து கொண்டு இருக்கிறாள். கூடவே உறவினர்களோடு எடுத்த புகைபடத்தை வாட்ஸ்அப்பில் அணுப்பி என்னை கடுப்பேற்றிக் கொண்டு இருந்தாள். மேடம்… நான் இல்லாம சந்தோஷமாக இருக்கறாங்களாம்…

அவள் தாய் வீடு சென்று இரண்டு நாட்கள் முடிந்திருக்க இதோ நானும் புறப்பட்டு கொண்டிருக்கிறேன் எனது துணிகளை ஒரு பேக்கில் அடைத்தபடி…. ஹலோ ஹலோ அதுக்காக உங்க கற்பனைய ஓவரா
ஓட்டாதிங்க. கல்யாணம் முடிஞ் சி இது வரை சண்டையே வந்ததில்லை…

அப்புறம் இப்ப மட்டும் எப்படின்னு கேட்கறிங்களா… போன வருஷம் இதே நேரம் எம் பக்கத்தில் உட்கார்ந்துட்டு அவ்வளவு கதை கதையாக சொன்னா… அவளோட ஊரை பத்தி. அங்கே நடக்கிற கோவில் விஷேஷத்தை பத்தி…. தமிழ் புத்தாண்ட நல்லா கொண்டாடுவாங்களாம். அந்த நாள்ல அவங்களோட சொந்தம் எல்லாம் சேர்ந்து குலதெய்வம் கோவிலில் பொங்கல் வச்சி அந்த நாள் முழுக்க அங்கே தான் இருப்பாங்களாம்.

அவளுக்கு போக ரொம்ப ஆசை. தனியா போக பிடிக்கல. எனக்கு லீவ் கிடைக்கல…சண்டை போட்டு அணுப்பி வச்சிட்டேன். லீவ் கிடைக்காதுன்னு அனுப்பி வச்சா… கம்பெனிக்காரன் லீவ் தந்துட்டான். இதோ கிளம்பியாச்சு…

முதல் டைம் சண்டை போட்டணா… அங்கே போனா அவள் என்னை எப்படி சமாதானம் பண்ணுவா… சிரிப்பாளா… இல்ல முறைப்பாளா… இல்லன்னா நான் தான் அவள் கால்ல விழணுமா…
யோசிக்கும் போதே செமையா இருக்கு.

எது எப்படி இருந்தாலும் சரி… ரொம்ப முறுக்கினா…கூடவே நீ இருந்து சண்டை போடு….மாமன் ரொம்ப பாவம். தனியா எல்லாம் இருக்க முடியாது… சொல்லிட்டே கால்ல விழுந்திட வேண்டியது தான் நினைக்கும் போதே முகத்தில் புன்னகை தோன்றியது.

இதோ வாசலில் வண்டி சத்தம் கேட்டுடிச்சி… பேக்கை சுமந்தபடி வெளியேறியவன்…. கதவை பூட்டி விட்டு வண்டி ஏறினான்.

ஏ.சி வண்டியில் ஐன்னலை மூடியபடி…

சொல்ல மறந்துவிட்டேன்…. உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ![?]

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here