நீயே என் உலகமடி _18

0
230

இன்னமும் நம்ப முடியவில்லை திவ்யாவிற்கு இது வரை வீடு வரை வராதவன் வந்ததும் இல்லாமல் சற்றும் எதிர் பராவகையில் நடந்து கொண்டது. ஏதோ… அவள் தான் தவறு செய்தவள் போல அவளிடம் சண்டையிட்டு கிளம்பி போனது. ஒவ்வொன்றாய் நினைவு வர அழுகை அவளையும் மீறி வந்து கொண்டு இருந்தது.

தான் செய்ததில் தவறு எதுவும் இல்லையென்று தெரியும் தான். .. ஆனாலும் அவனது கோப முகம் கண்களில் நிழலாடியது. அதில் தெரிந்த தீவீரம் நிஜமாகவே தற்சமயம் பயம் கொள்ள வைத்தது. இனி எப்படி அவனை அணுகுவது. அழைத்தால் பேசுவானா… ஒன்றுமே புரியவில்லை. தனது அவசரதனத்தின் மேல் கோபம். கூடவே தன் நிலை புரியாமல் கத்தி சென்ற அவன் மேல் கோபம்…

ஏற்கெனவே அவன் மேல் பைத்தியமாக இருந்தவள் தான். ஏன் தனக்கே தன் மேல் நம்பிக்கை இல்லாமல் அவனை நகர அவள் சொன்ன வாசகம்…அருகில் வரும் போதே தடுமாற ஆரம்பித்ததன் விளைவு. .. இவ்வளவு நடக்கும் என கனவா கண்டாள்…பலவாராக யோசித்து பார்த்தவள் நிசாசயமாக அவ்வளவு எளிதாக தன்னை விட்டு போய் விட மாட்டான் என முடிவுக்கு வரவும் கொஞ்சம் அழுகை நின்றிருந்தது….

ஈஸ்வர் எவ்வளவு தூரம் என்னை விட்டு உன்னால் போக முடியும். அதையும் பார்க்கலாம் நினைத்தவள் அடுத்த வேலையில் கவனத்தை திருப்பினாள்.

அதே நேரம் ஈஸ்வர் கோபத்தோடு தனது அறைக்குள் நுழைந்திருந்தான். எப்படி அவள் நம்மல அப்படி நினைக்கலாம். தன்னுடைய தவறும் அவனுக்கு புரியவில்லை. கோபம் கோபம் மட்டுமே.
இனி அவள் முகத்தை பார்க்க கூடாது.
கொஞ்சம் யோசித்து இருந்தால் அவனது தப்பு புரிந்திருக்குமோ!!!

ஆனால் அதற்கு நேர் எதிரான மனநிலையில் இருந்தாள் பானு. வந்த நாளில் இருந்து இன்று வரை மகிழ்ச்சி மகிழ்ச்சியில் உச்சத்தில் இருந்தாள்.
கதிரின் குடும்பம் மொத்தமும் அவள் மேல் காட்டும் அன்பு அவளை அந்த குடும்பத்தோடு கட்டி போட்டிருந்தது. கதிரின் அன்பு ஒரு புறம். முழுக்க முழுக்க மாறிக்கொண்டு இருந்தாள்.

இப்போதும் தனது அறையில் நின்றபடி உளர்த்திய துணிகளை மடித்து கொண்டிருந்தாள். திருமண அழைப்பிதல் தருவதற்கு காலையில் புறப்பட்டு போனவன் இன்னும் வீட்டிற்கு திரும்ப வில்லை. துணிகளை மடித்தபடி நேரம் பார்க்க நேரம் ஆறுமணியை நெருங்கி இருந்தது. மடித்த துணிகளை அதனதன் இடத்தில் வைத்தவள் தனது அறையில் இருந்து உமாவை தேடி கீழே இறங்கி வந்தாள்.

உமாவோடு கதிரின் தாயாரும் இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தனர். இவளை பார்த்ததும் வா பானு இந்தா இத கொண்டு போய் டைனிங்டேபில்ல வச்சிட்டு வா.

வைத்து விட்டு வந்தவள் தயங்கி நிற்க…

ஏம்மா… என்ன கேளு…

அத்த … இன்னும் கதிர் வீட்டுக்கு வரல …

வந்துட்டான்மா… அரிசி முட்டை எடுக்க ரைஸ்மில் வரைக்கும் போய் இருக்கறாங்க. இப்ப வந்திடுவாங்க… பாரு அவனுக்கு தான் குளிக்க சுடுதண்ணீர் வச்சிட்டு இருக்கிறேன். எப்படியும் இவனும் மூட்டை தூக்கி இருப்பான். எத்தனை ஆளுங்க இருந்தாலும் கேட்க மாட்டான். வந்ததும் தண்ணீர் எடுத்துக்க சொல்லணும்.

உமா… போன் அடிக்குது பாரு. போய் பேசிவிட்டு வா …

சரி என்று அவள் வெளியேற…

போனவள் பத்து நிமிடத்திற்கு மேல் ஆகியும் திரும்பவில்லை. யார் போன்ல… இவ்வளவு நேரம் பேசறா…

தேவன் அண்ணாகிட்ட பேசிவிட்டு இருக்கிறா அத்த…

சரி. இத பார்த்துக்கோ… வந்திடறேன். என்றவர் வெளியேற… வந்த சில நாட்களிலேயே இவர்களோடு ஓன்றி இருக்க எளிதாக அவர்களோடு சேர்ந்து ஓரளவிற்கு சமைக்க கற்றிருந்தாள்.

உமா புகுந்த வீட்டில் சிரமபடக்கூடாது என்ன அவளுக்கு சொல்லிதர அவளோடு சேர்த்து இவளுமே இன்னும் சமையலில் தேறி இருந்தாள். இருவரும் சேர்த்து சமைக்கும் நேரம் அவ்வளவு இனிமையாய் லூட்டி அடித்தபடி கழியும்.

வெளியே கதிரின் சத்தம் கேட்க குளிப்பதற்கு வைத்திருந்த சுடுநீரை வேகமாக எடுத்து கொடுக்க நினைத்தவள்
அந்த பாத்திரத்தை துணியை பிடித்தபடி எடுக்க… எப்படி நடந்தது என புரியும் முன்னமே கைதவற மொத்தமாய் கொட்டியிருந்தாள். அம்மா என்ற அலறலோடு….

ஒரு நிமிடத்தில் மொத்த பேரும் அவள் இருந்த இடத்திற்கு விரைய கை ,கால்களில் நீர் கொட்டியிருக்க கை சிவந்திருக்க எரிச்சலை அடக்கியபடி வழிகின்ற கண்ணீரோடு நின்றிருந்தாள். பார்த்த நொடியே மாணிக்கம் கதிர் மொதல்ல ஹாஸ்பிடல் கூப்பிட்டுட்டு போ… என்றவர் தெரிந்த கால்டாக்சிக்கு அழைத்திருந்தார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அருகில் இருந்த மருத்துவ மனைக்கு இவர்களை சுமந்தபடி வண்டி சென்று கொண்டிருந்தது.

முன் இருக்கையில் மாணிக்கம் அமர்ந்திருக்க பின் புறத்தில் கதிரோடு பானு அமர்ந்திருந்தாள். எரியுது கதிர். ..ரொம்ப எரியுது என கூறியபடி வழிகின்றன கண்ணீரோடு அவன் தோளில் சாய்ந்திருந்தாள்.

தேற்ற வார்த்தைகள் இன்றி அவளை தனது தோளில் சுமந்திருந்தான் கதிர்.

உன் விழியில் இருந்து இறங்கும்

சிறு கண்ணீர் துளியும் கொல்லுதடி

என் இதயம் வரை !!!

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here