தன்னுடைய தவறு என்ன என்பதை இந்த நிமிடம் வரை கதிருக்கு தெரியவில்லை.
மூன்று மாதம் அந்த வீட்டில் அடுத்தடுத்த ரூம்களில் இருவரும் இருக்க பானு ஏற்கெனவே கேம்பஸ்சில் வேலைக்கு தேர்வாகி இருக்க வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.
இருவரும் அருகருகே இருந்ததாலோ என்னவோ பானுவுடைய ஒவ்வொரு தேவைக்கும் கதிரின் உதவி வேண்டும். இப்படியே நாட்கள் செல்ல அந்த விபத்து நடந்த அன்று வரை எந்த பிரச்சனையும் இன்றி நாட்கள் சென்று கொண்டிருந்தது.
வண்டியில் சென்றவன் எதிரில் வந்த வாகனம் இடித்து ஏழு தையல் போடும் அளவில் காயம் பெரிதாகி இருக்க…ஹாஸ்பிடலுக்கு சென்றவன் வீட்டிற்கு அன்று பானு நடந்து கொண்டது உண்மையிலேயே பயப்படாது ஆரம்பித்தான்.
இவனை பார்த்தவள் அழுததோடு மட்டும் இல்லாமல் தன்னையும் மீறி முதல் முறையாக புலம்ப ஆரம்பித்தாள்.
கதிர் நான் ராசி இல்லாதவ. நான் யார் மேல அதிகமா பாசம் வச்சாலும் அவங்க என்னை விட்டு பிரிஞ்சி போயிடுவாங்க.
இந்த மாதிரி ஆக கூடாதுன்னு தான் நான் பக்கத்து ரூம்ல தங்கினேன். அப்படி இருந்தும் இப்படி ஆகிடுச்சு. நான் இனிமே இங்க இருக்க மாட்டேன்.
பானு அப்படி எதுவும் இல்ல. எவ்வளவு எடுத்து சொல்லியும் ஒரு வார்த்தை கூட கேட்க வில்லை. அவள் அவளுடொய வார்த்தையிலேயே நிற்க கடைசில் வழி தெரியாது. ப்ளீஸ் பானு பேச வைக்காத. கை ரொம்ப வலிக்குது. இந்த வார்த்தை அன்று சரியாக வேலை செய்தது.
அடுத்து வந்த நாட்களிலும் பேச்சு பெறும்பாலும் குறைந்து இருக்க சதா கதிர் பார்த்த நேரம் எல்லாம் ஏதோ ஒரு யோசனையில் இருந்தாள். அவனுக்கு சரி ஆகும் வரை கூடவே இருந்து கவனிப்பதில் எந்த குறையும் வைக்கவில்லை.
கை காயம் சரி ஆகி அவன் இயல்பாய் தனது வேலைகளை பார்க்க துவங்கவும்
மறுபடியும் ஆரம்பித்து விட்டாள்.
என்னாலதான் உனக்கு இப்படி ஆகிடுச்சி
நான் இனிமே உன்னை கூட இருக்க மாட்டேன். நான் போறேன். எவ்வளவோ எடுத்து கூறியும் முடியாமல் கடைசியில்
கோபத்தோடு கத்தி ஆரம்பித்தான் கதிர்.
உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா…நீ இல்லாட்டியும் இந்த அக்ஸிடெண்ட் நடந்து இருக்கதான் செய்யும். போ… போடி எங்க வேணும்னாலும் போ … உனக்கு நல்லது செய்யறதா நினைச்சு என்னோட அப்பா அம்மா தங்கச்சி எல்லாத்தையும் எதிர்த்துட்டு உன்னை கல்யாணம் பண்ணினேன் இல்லையா. அதுக்கு எனக்கு இது தேவைதான்.
அந்த கத்தல் அன்றைக்கு வேலை செய்ய அடுத்த இரண்டு நாட்கள் இருவருக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இன்றி கழிந்தது.
மறுபடியும் பானு முதலில் இருந்து ஆரம்பிக்க இம்முறை இவனது கத்தல் வேலை செய்யவில்லை.
ஆனால் பானு வேறு ஒரு ஆயூதத்தை கையில் எடுத்து இருந்தாள். கதிர் என் முடிவுல மாற்றம் இல்ல. கடைசியா சொல்லறேன் நீ இதுக்கு சம்மதிக்கலைன்னா நிஜமாகவே மறுபடியும் சாகறதுக்கு டிரை பண்ணுவேன். இருபத்தி நாலு மணி நேரமும் நீ எனக்கு காவல் இருக்க முடியாது. புரியுதா…
உண்மை தானே. கூடவே காவல் இருக்க முடியாது. வேறு வழியில்லாமல் கடைசியில் கதிர் தான் அவளிடம் சரன் அடைந்தான். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ… நானே நல்ல இடமான பார்க்கிறேன். நீ தங்கறதுக்கு….
ஏற்கனவே அவளிடம் பணம் இருப்பது தெரிந்ததால் அருகிலேயே அவளது பெயருக்கு அந்த தனி வீட்டை வாங்கி
தங்க ஏற்பாடு செய்து கொடுத்தான். சில நாட்களில் அதே பேங்கிற்கு திவ்யாவும் பானு அவளை தனது வீட்டில் தங்க அழைத்து கொண்டாள்.
இங்கோ தந்தையோடு விவசாயம் பார்க்க போவதாய் ஊரில் தங்கி இருந்த ஈஸ்வர்யை உமா தொடர்ந்து நச்சரிக்க அவனும் கதிரோடு வந்து இணைந்து கொண்டான்.
திருமணம் வரை தெரிந்திருக்க இங்கு வந்த பிறகுதான் இவர்கள் பிரிந்தது தெரிய வந்தது.
இருவரையும் சேர்த்து வைக்க இவர்கள் ஒரு புறம் முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.
முன்பு நடந்நதை நினைத்து அசைபோட்டபடி படுத்து இருந்தவன் திரும்பி பானுவை பார்க்க எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக சிறு குழந்தை போல் கைகளை தலைக்கு அடியில் கொடுத்தபடி தூங்கி கொண்டிருந்தாள்.
இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும். எதுவுமே புரியாமல் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான். திருமணம் முடிந்த நாட்களில் இருந்து இன்று வரை தனித்தனி அறையில் தூங்கி இருக்க அவள் அருகில் இருப்பதே அவ்வளவு நிறைவை தந்தது அவனுக்கு…
மனம் முழுக்க அமைதியாய் ஒரு வித நிம்மதி உடலெங்கும் பரவி இருக்க அவள் முகம் பார்த்தபடி கண் மூடினான். விடிவதற்கு சில மணி நேரம் முன்பு…
தொடரும்.