நீயே என் உலகமடி_14

0
267

எதிரில் அமர்ந்து இருந்த திவ்யா ஈஸ்வரை பார்த்தவள் இரண்டாவது முறையாக கேட்டு கொண்டிருந்தாள். அங்கே அவங்க ரெண்டு பேரும் அன்பான ஆன்னியோன்யமா இருந்தாங்கன்னா அங்கேயே ரெண்டு பேரையும் இன்னும் பத்து நாள் தங்க வைக்கலாம்ல…அதுல உனக்கு என்ன பிரச்சனை . ..

என்ன சொன்ன….

நீ சொல்ல வர்றது புரியுது. எப்படி திவ்யா இவ்வளவு அறிவாளியா இருக்கற… எனக்கு தோனவே இல்ல பாரேன். இதுக்கே நான் உனக்கு ஏதாவது தரணும் போலவே…

இத பாரு. அங்கேயே உட்காரு. கிட்ட வந்த… அடுத்த தடவை உன் பின்னாடி வெளிய வர மாட்டேன்.

சரி… நாம எப்ப நம்ம விஷயம் பேசலாம்.

நமக்குல்ல பேச என்ன இருக்கு . நீ சுத்த தமிழன். உனக்கு வேற ஊர்காரங்கல பிடிக்காது. நான் ஆந்திரா. தெலுங்கு பேசறவ. நமக்குல்ல எப்படி ஒத்து போகும்.

திவ்யா… தமிழ் நாடு தமிழன் அத விட்டுடேன். நாம எல்லாம் இந்தியன் அப்படி யோசித்து பாரு.. ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கிட்டோம்ல.

இல்ல. பத்து அடி தள்ளி தான் இருக்கிறேன். இதோ பாரு இப்ப வந்தது நம்மல பத்தி பேச இல்ல. சரியா. அப்புறம் நான் என்னோட எதிர் காலத்தை பத்தி இதுவரை யோசிக்க கூட இல்ல.
உமாவுக்கு எப்ப மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்கறாங்க…

எப்படி போனாலும் லாக் பண்ணறாய்யா மனதிற்குள் நினைத்தவன். ம்… இன்னும் ஒரு மாசத்துல…

சரி ஒன்னு பண்ணு ஒரு பதினைந்து நாள் முன்னாடியே அங்கே கல்யாண வீட்டுக்கு் ரெண்டு பேரையுமே அணுப்பி வச்சிடலாம். நீ என்ன பண்ணு… முன்னமே கதிரோட அப்பா அம்மா கிட்ட பேசிடு. அவங்க தான் பானுவை முழுமனசா ஏத்துட்டாங்களே..அங்கே நிறைய வேலை இருக்குமே இவங்க உதவியும் தேவை .இவங்க வந்து தான் ஆகணும். அந்த மாதிரி சூழ்நிலையை ஏற்படுத்தினா போய் தான ஆகணும்.
பேசியபடி உணவு உண்டிருக்க கை கழுகும் இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் திவ்யா.

இதோ முன் சென்று கொண்டிருக்க வேகமாக முன்னேறியவன் இவளை இடித்தபடி முன் சென்று கை கழுவியவன் அது போலவே மறுபடியும் இடித்து விட்டு முன் சென்றான்.

ஈஸ்வர்….

ஏம்மா ஏன் கோபம் வருது. நீ காலேஜ் படிக்கும் போது இப்படி தான இடிச்சி என்ன கடுப்பேத்துவ…

இனிமே எங்கேயாவது கூப்பிடு. பேசிக்கறேன். எருமை எருமை என திட்டியபடி பின் நடந்தாள்.

திவ்யா ரொம்ப மாறிட்ட… முன்னல்லாம் நான் தான் திட்டுவேன். நீ பேசாம இருப்ப. இப்ப நீ மட்டும் தான் திட்டற..

ஈஸ்வர் விளையாடாதீர்… சீர்யஸ்ஸா கொஞ்சம் இரேன்.

சீரியஸ்ஸா கேட்கிறேன். எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்.

கதிருக்கும் பானுவுக்கும் குழந்தை பிறந்த பிறகு…

இதுக்கு நீ கல்யாணமே பண்ண மாட்டேன்னு சொல்லி இருக்கலாம். அவங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி பண்ணறாங்கன்னே தெரியாம மண்டை காயறேன். இதுல நீ வேற கலாய்க்கற….

இப்ப ரெண்டு பேரும் எங்கே இருக்கறாங்க…

வழக்கம்போல ஏதாவது ஹோட்டலில் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு இருப்பாங்க.

ஈஸ்வர் அந்த அர்ச்சனா என்ன ஆனா….

அன்றைக்கு கதிர கடைசியாக பார்த்தது தான். இப்போ அவளை பார்த்தா கதிர் நிக்கறதே இல்ல. பார்த்தாலே சிரிப்பா வருது…அவளும் இன்னும் கொஞ்ச நாள்ல
மேரேஜ் ஆகிவிடும். சீக்கிரமே கல்யாண பத்திரிகை தருவா … அது நமக்கு தேவையில்லாத விஷயம் நீ சொல்லு. நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்.

இப்போது திரும்பி அவனை முறைத்தவள்
நீ தான் ஸ்டெப் எடுக்கணும். நீ குடும்பத்தோடு வந்து பேசு. அப்பா சரியிண்ணா ஒகே….

அப்போ என் வீட்ல உன்னை வேணாமுன்னு சொல்லிட்டா…

சந்தோஷம். தொல்லை விட்டுதுன்னு என்ன அப்பா காட்டற மாப்பிள்ளைக்கு தலையில் நீட்டிடுவேன்.

என்ன அதுவரைக்கும் பார்த்துவிட்டு இருப்பேன்னு பார்க்கறயா. தாமிரபரணி தண்ணீரை குடித்து வளர்ந்தவன்டி.. தூக்கிடுவேன்…

நாங்க மட்டும் யாராம் …

என்ன சொன்ன…

போகலாமா… பேச வான்னு கூப்பிட வேண்டியது. போகும் போது சண்டை போட வேண்டியது. உனக்கு இதே வேலைதானா… என்றைக்காவது பத்து நிமிஷத்துக்கு மேல சண்டை போடாமல் இருக்கிறோமா. எனக்கே கவலையாக இருக்கு ஈஸ்வர். யோசிக்கவே முடியல. பயமா இருக்கு.

இதுவும் உண்மை தான். என்ன பேச எப்படி பேச ஒன்றும் தெரிவது இல்லை. திவ்யாவிடம் பேசிக்கொண்டு இருக்க பிடிக்கும். ஏதாவது சொல்ல வழக்கம்போல் இன்றும் சண்டையில் முடிய கோபமாக தனது டூவிலரை எடுத்து கொண்டு கிளம்பியிருந்தாள்.

காலேஜ் படிக்கும் போது இருந்தே இப்படி தான். யாரையும் நெருங்க விடாமல் இருக்க இப்படி நடந்து கொண்டு இருக்க இன்றும் அதே பழக்கம் இடையிடையே தலைதூக்கிக் கொண்டு இருந்தது.

தனது கைகலால் தலையை அழுத்தி கோதியவன் வழக்கம்போல சமாதான படுத்து ஈஸ்வர்… தனக்குத்தானே கூறியவன் தனது வண்டியை எடுத்து கொண்டு புறப்பட்டான்.

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here