நீயே என் உலகமடி_17

0
361

சிலு சிலுனென இதமாய் காற்று அடிக்க எங்கோ மழை வந்து கொண்டிருக்க காற்றின் ஈரபதம் அந்த இடத்தை குளுமையை தந்து கொண்டிருந்தது. மாலை நேர காற்று இதமாய் வீச ரசிக்கும் மனம் எதுவுமின்றி இயந்திரமாய் நேரத்தை நகர்த்திக் கொண்டு இருந்தாள் திவ்யா.

காபி கப் கையில் இருக்க இத்தனை நாட்கள் வரை இல்லாத வெறுமை அவளை என்னவோ செய்தது. வழக்கமாக பானு கூட இருக்க ஏதாவது பேசியபடி நேரம் நகர்ந்து கொண்டு இருக்கும். அவள் கதிரோடு ஊருக்கு சென்றபிறகு ஓவ்வொரு நாளும் நகர்வது மிகவும் கொடுமையாய் இருந்தது.

தனக்கு தெரியும் தான் பானு கதிரோடு வாழ ஆரம்பித்தால் இந்த தனிமை நிரந்தரமாகும் என… அவள் அவனோடு சேர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும். அந்த ஆசை மனம் முழுக்க நிறைந்திருந்தது. பேங்க்கில் இருந்த அதிக வேலையோ அல்லது இங்கு வீட்டில் தனியாக இருப்பதோ ஏதோ ஒன்று இன்று இந்த விரக்தியை தந்து கொண்டிருந்தது.

தனியாக அமர்ந்து எதையும் யோசிக்க கூடாது இதை நினைத்தவள் யோசிக்காமல் தனது தந்தையின் நம்பருக்கு அழைப்பு விடுத்தாள். நல விசாரிப்பிற்கு பிறகு சிறிது நேரம் பேசியவள் இப்போது சற்றே ஆறுதலாய் உணர… அழைப்பை கட் செய்தாள். அதே நேரம் கேட்டின் முன்பு வண்டியை நிறுத்திய ஈஸ்வர் இவளை நோக்கி கேட்டை திறந்தபடி உள்ளே வந்து கொண்டிருந்தான்.

பாவம்…அவனும் அதே மனநிலையில் வருவதை அவளால் உணர முடியவில்லை. எப்போது வந்தாலும் வாசலோடு வெளியேறுபவன் இன்று உள் வரவும் அந்த நிமிடம் எதுவும் தோணவில்லை அவளுக்கு….

வா… ஈஸ்வர் என்றவள் அருகில் இருந்த இருக்கையை காட்டியபடி உட்காரு… காபி எடுத்துவிட்டு வரேன் என்றவள் சமையலறைக்குள் நுழைய… பின்னோடு அவனுமே வந்திருந்தான்.

பாலை அடுப்பில் வைத்தபடி பின்னோடு வந்தவனை பார்த்தவளுக்கு தன்னை அறியாமல் மனம் மத்தளம் வாசிக்க ஆரம்பித்தது.

எப்போதுமே அவனிடம் வம்பிலுத்தவள் தான் ஆனால் தனிமையில் அவனோடு இருந்தது இல்லை. இன்று அவளோடு அதுவும் அவளது அருகில்… ஏனோ படபடப்பாக உணர்ந்தாள்.

அங்கேயே உட்கார வேண்டியதுதானே ஈஸ்வர். நான் காபி எடுத்துவிட்டு வரேன். போங்க. .. இதை சொல்லும் போதே குரலில் தடுமாற்றம் தெரிந்தது.

இந்த தடுமாற்றத்தை எளிதாய் கண்டு கொண்டான் ஈஸ்வர்… அதுமட்டுமல்ல அவளோடு கொஞ்சம் விளையாண்டு பார்க்கும் ஆர்வம் வந்திருந்தது. இயல்பில் கோபமானவனாய் காட்டிக் கொண்டாலும் திவ்யா என்றுமே அவனுக்கு ஸ்பெஷல் தான். அவளுடைய குறும்பு தனத்தை ரசிப்பவன் தான். இன்று அவளிடம் வம்பிலுக்க நினைத்தவன். யோசிக்காமல் ஏற்கனவே தடுமாறிக் கொண்டு இருந்தவள் அருகில் இன்னும் நெருங்கி நின்றான்.

திவ்யாவிற்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. எப்போதுமே எவ்வளவு பேசினாலும் சிறு இடைவெளியை கடை பிடிப்பவன் இன்று இங்கு வந்தது மட்டும் இல்லாமல் நெருங்கி நிற்பது என்றால்…
நிமிர்ந்து அவனது முகத்தை பார்த்திருந்தால் கண்டு கொண்டு இருப்பாள். அவன் விளையாடுகிறான் என…இருந்த நிலையில் யோசிக்காமல் தோன்றாமல் நின்றவள் அடுத்து அவன் செய்ததை பார்த்து கோபத்தில் கத்த ஆரம்பித்து இருந்தாள் .

விளையாட்டாய் பேசிக்கொண்டு நின்றவன் குரல் குலைய.. ஏன் என்னை விரட்டறதிலேயே குறியா இருக்கற என்ற
ஹஸ்கி குரலோடு அவளை பின் புறமாய் அணைத்துதிருந்தான். ஒரு நிமிடத்தில் அவனை தன்னிடமிருந்து விலக்கியவள்…

என்ன பன்னற… இதுக்காக தான் யாரும் இல்லாதபோது வந்தியா … இவ்வளவு
சீப் பானவனா நீ… உன்னை வீட்டுக்குல்ல விட்டது என்னோட தப்பு…

திவ்யா… திவ்யா நிறுத்து திவ்யா. .. பேசற வார்த்தையை அள்ள முடியாது. இஷ்டம் போல பேசாத…

என்ன பேச கூடாது. இல்லை ஏன் பேச கூடாது. நீ… உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சேன். உன் கிட்ட இத எதிர் பார்க்கல … நீ முதல்ல இந்த இடத்தில் இருந்து வெளியே போ…

இதுதான் உன் பதில் இல்லையா…

ஆமாம் வெளியே போ …

நானும் கடைசியாக சொல்லறேன் கேட்டுக்கோ… நீ என் மேல எவ்வளவு நல்ல அபிப்ராயம் வச்சி இருக்கறேன்னு இப்ப தான் தெரிஞ்சது. நானும் உன்னை பார்க்கிறது இதுதான் கடைசியா இருக்கும். பை…என்னோட லைப்ல உன்னை பார்த்த நிமிஷத்தில் இருந்து இந்த நிமிடம் வரைக்கும் நான் மறக்க விரும்பறேன் என்றபடி வேகமாக வெளியேறி அதே வேகத்தில் வண்டியில் புறப்பட்டு சென்றிருந்தான்.

விளையாட்டு போல ஆரம்பித்தது இப்போது வேறுமாதிரி முடிந்திருந்தது. அவனோடு கோபமாக பேசியவள் அவன் போனபிறகு பேசியதை நினைத்து அழுது கொண்டிருந்தாள்.

தொடரும்.

(இவ்வளவு லேட்டா யூடி கொடுத்துட்டு ஏன் ஜோடியை பிரிச்சிங்கன்னு யாரும் திட்டக்கூடாது)

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here