அருகில் இருந்த இருக்கையில் அமரவும் போன் வரவும் சரியாக இருந்தது ஈஸ்வருக்கு . போனை அட்டென் செய்தவன் ஹலோ என குரல் கொடுக்க எதிர் முனையில் கேட்ட குரலால் சிரித்தபடி சற்று நகர்ந்து உரையாட ஆரம்பித்தான்.
சொல்லுடா எப்படி இருக்கற.
நான் நல்லா இருக்கறேன்ணா. அண்ணாவுக்கு கூப்பிட்டேன். அட்டென் செய்யல. அது தான் உங்கள கூப்பிட்டேன்.
அண்ணா இங்க முக்கியமான மீட்டிங்ல இருக்கறான். நீ என்னனு சொல்லு உமா…
நான் அவன்கிட்ட சொல்லிடறேன்.
அண்ணா அப்பா இங்கே எனக்கு அலையன்ஸ் பார்த்து இருக்கறாங்க. அனேகமா முடிவு ஆகிடும்ன்னு நினைக்கறேன். நிச்சயத்திற்கு டேட் குறிச்சிட்டு அங்கே அண்ணாவை கூப்பிட வருவாங்கன்னு நினைக்கிறேன். அப்பா கூப்பிட மாட்டேன்னு சொல்லறாங்க. அம்மா கூப்பிடணும்ன்னு… ரெண்டு பேர்க்கும் வாக்கு வாதம் நடந்திட்டு இருக்கு.
ஓ… கன்கிராஜ்லேசன் உமா… நீ எத பத்தியும் யோசிக்காத. எல்லாம் நல்ல படியாக நடக்கும். பையன் எப்படி இருக்கிறான். பேர் என்ன. ..
அண்ணா இன்னும் பார்க்கல. பேரும் தெரியாது. கதிரால அப்பா ரொம்ப உடைஞ்சி போயிட்டாங்க. அதனால உங்க விருப்பம்பான்னு சொல்லிவிட்டேன். நிச்சயம் பண்ண வரும் போது தான் பார்க்கணும்.
சரிம்மா. அப்பாவுக்கு புடிச்சா எல்லாம் சரியாதான் இருக்கும். நான் அவன்கிட்ட சொல்லறேன்மா. வச்சிடவா..
சரிண்ணா. அண்ணாவ அப்புறம் பேச சொல்லுங்கண்ணா. வச்சிடறேன்.
பேசியபடி திரும்பி வர இப்போதும் எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இருந்தனர் இருவரும்.
முகத்தை பார்க்க ஏன் இங்கே வந்து உட்கார்ந்து இருக்கறாங்க. மனதில் நினைத்தவன் . சரிடா நீ பேசிவிட்டு வா.
நான் ரூமிற்கு போறேன்.
போன்ல யாரு ஈஸ்வர்.
உமா தான். ரூமிற்கு வா பேசிக்கலாம். பை
என்றவன் கிளம்பி இருந்தான். கதிர் தங்கி இருந்த அறைக்கு வருகையில் ஒன்பது மணியை தாண்டி இருக்க விவரம் எதுவும் சொல்லாமலே அன்றைய நாள் முடிந்தது.
அடுத்து நாள் வழக்கம் போல அழுவலகம் செல்ல பதினோரு மணியை எட்டி இருக்கையில் கதிருக்கு அவனது தந்தை
மாணிக்கத்திடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. டேய் உன் வீட்டு வாசல்ல நிக்கறேன். உன் கிட்ட பேசணும். உன்னோட பொஞ்சாதிய கூப்பிட்டு வீட்டுக்கு வருகிறாயா.
அப்பா பத்து நிமிஷம்பா. வந்துடறேன்பா என்றவன் அரை நாள் விடுப்பு கேட்டபடி கூடவே ஈஸ்வருக்கும் தகவல் சொல்லி விட்டு நேராக பானு இருக்கும் இடத்தை நோக்கி வண்டியை திருப்பினான்.
பானுவின் இருப்பிடம் அடைந்தவன் பானு அப்பா அம்மா வந்து இருக்கறாங்க. அவங்க வீட்டுக்கு வர சொல்லறாங்க. வா என் கூட…. இன்றைக்கு லீவ் சொல்லிடு.
என்ன தீடின்னு.
தெரியலை. போனா தான் தெரியும். வா சீக்கிரம்…அவளை அழைத்தபடி தனது இருப்பிடத்தை அடைந்தான். வரும் வழியிலேயே பால் காபிதூள் வாங்கி வந்திருந்தான். தங்களுக்குள் நடக்கும் எதையும் வெளிக்காட்டதபடி தந்தையை நோக்கி சிரித்தபடி வரவேற்றான்.
கதவை திறந்த படி உள் அழைத்து சென்றவன் பானுவிடம் காபி போடு என கொடுத்து விட்டவன். தந்தையிடம் உட்காருங்கபா.
ம்….ம்.. என்றவர். நீ உட்காரு …
இல்லிங்கப்பா. பரவாயில்லை நான் நிக்கறேன்ங்கப்பா..
மரியாதை மனசுல இருந்தா போதும். இனி என் முன்னாடி நிக்க வேண்டாம். நீங்க தான் பெரிய மனுசன் ஆகிட்ட . செய்யற வேலையும் அப்படி தான். இன்னும் மரியாதையா நடக்கணும்ன்னு அவசியம் இல்ல. உட்காரு. …
உள்ளே காபி போட போனவளோ இடையில் கொஞ்ச நாட்களாய் பிரிந்து இருந்ததினால் எது எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.ஒவ்வொரு டப்பாவாக திறந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். சர்க்கரை டப்பாவை பார்க்க அதில் சர்க்கரை சுத்தமாக இல்லை. வேறு எங்கே இருக்கும் என தேடிக்கொண்டு இருந்தாள்.
வெளியில் பேசிக்கொண்டு இருக்கும் அவனை அழைக்கவும் முடியாமல் திரு திரு வென விழித்தபடி… அதே நேரம் உள் நுழைந்தார் கதிரின் தாயார் மீனாள். என்ன தேடறமா என்ற கேள்வியோடு….
வாங்க அத்தை. சர்க்கரை எங்கே இருக்குன்னு தெரியலை. …
ஏன் உனக்கு தெரியாதாமா….
தெரியலை. இல்ல தெரியும். .. வந்து என்ன சொல்வது என தெரியாமல் உளரினாள் பானு. ஒரு நிமிடம் பார்த்தவர்
கதிரு இங்கே வாய்யா….
உள்ளே வந்தவனிடம் சர்க்கரை எங்க வச்சி இருக்கற. தேடறா பாரு எடுத்து குடு .
நேற்று வாங்கிட்டு வந்தேன். அவ கிட்ட சொல்ல மறந்துவிட்டேன். இதோ இங்க இருக்கு. அம்மா அவ பார்த்துப்பா. காபி எடுத்துட்டு வரு பானு….. நீங்க வாங்கம்மா.
அழைத்து வந்தவன் ஹாலில் அமர வைத்து அருகில் அமர்ந்தான். மாணிக்கமோ உமாவுக்கு நல்ல இடம் அமைஞ்சு இருக்கு. இந்த வாரம் வியாழக்கிழமை நிச்சயம் வச்சிருக்கு. நீயும் உன் பெண்சாதியும் வந்திடுங்க.
உன் கிட்ட சொல்ல மாட்டேன்னு தான் சொன்னேன். நேற்றிலிருந்து உமா ஓரே அழுகை. நீ வரணும்ன்னு. வெளி வீட்டுல வாழ போறவளை அழவைக்க கூடாது பாரு அது தான் என் கோபத்தை ஒரு ஓரமா வைச்சிட்டு வந்தேன். அமைதியாக அமர்ந்திருந்தான் கதிர்.
காபியோடு பானு வர எடுத்து குடித்தவர்கள். எழவும் அப்பா மதியம் சாப்பிட்டு கிளம்பலாம்பா…
நைட் தான் ரயிலுக்கு டிக்கெட் புக் பண்ணி இருக்கு. இப்பவே போக சொல்லறையா…
இல்லிங்கப்பா. நான் சமைக்க தேவையானது வாங்கிட்டு வரேன். இருங்கப்பா….இப்ப வந்துடறேன். மகிழ்ச்சியோடு புறப்பட்டான் கதிர்.
இருவருக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்திடுமா…
தொடரும்.