நடுங்கும் கைகளை இறுக்கி பற்றியவன் வாசலின் அருகில் செல்ல உள்ளேயிருந்து வந்த உமா கதிரை பார்த்தவள். அம்மா அண்ணா வந்தாச்சு உள்ளே குரல் கொடுத்த படி இவன் அருகில் ஓடி வந்தாள்.
ஏய்… மெதுவா வா… ஓடி வந்து விழுந்துடாத. அப்புறம் பல்லு போன பொண்ண கட்டிக்க மாட்டேன்னு மாப்பிள்ளை போயிட போறாரு.
அப்படி சொல்லற மாப்பிள்ளை எனக்கு தேவையில்லை. அப்போது உள்ளிருந்து வந்த மீனாள் கையில் ஆரத்தி தட்டோடு வந்திருந்தார். வா கதிர் வாசலில் வந்து ரெண்டு பேரும் நில்லுங்க…. நிற்கவும் ஆரத்தி எடுதாதவர் உள்ள கூப்பிட்டுட்டு போ உமா என கூறியபடி கரைத்த ஆரத்தியை வெளியில் எடுத்து சென்றார்.
அண்ணா அண்ணி அழகா இருக்கறாங்க.
வாங்கண்ணி உள்ள போகலாம். உள்ளே அழைத்து செல்ல ஹாலிற்கு வந்த கதிருக்கு கடைசியாக வீட்டை விட்டு செல்லும் போது நடந்து வாக்குவிதம் நினைவில் வந்தது.
எப்போதுமே தந்தையின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாதவன் என்ன சொன்னாலும் சரிங்கப்பா சரிங்கப்பா என கூறுபவன் அன்று தான் முதல் முதலாக எதிர்த்து பேசியது. இல்லங்கப்பா நான் அந்த பொண்ணுக்கு வாக்கு கொடுத்து இருக்கிறேன். கடைசி வரைக்கும் உனக்கு துணையாக நான் இருப்பேன்னு. என்னால
அந்த பொண்ண ஏமாத்த முடியாது. தகவல் சொல்லதான் வந்தேனே தவிர உங்க பேச்ச கேட்டுட்டு அவள மறந்திடறேன்னு சொல்ல வரல .
அவனது பேச்சை கேட்டு மீனாள் கோபமாக அழுதபடியே ஏண்டா இப்படி பேசற. உன்னை இப்படியா வளர்த்தேன். உன் வாழ்க்கையை நீயே தீர்மாணம் பண்ணற அளவுக்கு பெரியவன் ஆகிட்டயா…உமா ஒருபுறம் அழுதபடி நிற்க…
நீ அந்த பக்கம் போ மீனா… இனிமே எனக்கு ஓரு பிள்ளை மட்டும் தான். என் பேச்ச கேட்காதவனுக்கு இந்த வீட்டில் இடம் இல்ல. நீ இப்பவே வெளிய போயிடு. இனிமே எந்த காலத்திலேயும் என் மூஞ்சியில முழிக்காத…யோசிக்காமல் வந்தவர் இவனை நெட்டி தள்ள அமைதியாக வெளியேறினான்.
இன்று அன்றைய ஞாபகம் வர தயங்கி நின்றவனை உள்ளேயிருந்து வந்த மாணிக்கம் ஏண்டா இங்கேயே நிக்கற ரூம்ல போய் துணி பேக்கை வச்சிட்டு என் கூட வா. நிறைய வேலை இருக்கு.
இதோங்கப்பா. ஒரு நிமிடம் வந்துடறேன். என பைகளை சுமந்தபடி உள் நுழைய உமாவோ வாங்கண்ணி என்னோட ரூம்க்கு போகலாம். என இவளை அழைத்து சென்றாள். தனது அறைக்கு அழைத்து சென்றவளுக்கு பேச நிறைய இருந்தது.
ஏற்கனவே இவளுக்கும் சேர்த்து உடை வாங்கி வைத்திருக்க எடுத்து தந்தவள்
அம்மா நம்ம ரெண்டு பேருக்கும் ஓரே மாதிரி டிரஸ் எடுத்து இருக்கறாங்க. நாளைக்கு போட்டுக்க. இந்த தடவை இத அட்ஜஸ் பண்ணிகங்க. அடுத்த தடவை உங்களுக்கு பிடிச்ச மாதிரி எடுத்துக்கலாம்.
அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு உறவை போல் இயல்பாக பேச்சு ஆரம்பிக்க பானுவுக்கு லேசாக கண் கலங்கியது.
ஏன் அண்ணி. கண் கலங்குது.
எனக்கு உறவுன்னு சொல்ல யாரும் இல்ல. நீ உரிமையா பேசவும்….. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உமா ..
ஐயோ அண்ணி… உங்கள் எவ்வளவு நாளா பார்க்கனும்ன்னு ஆசை பட்டேன் தெரியுமா.
என் அண்ணா அப்பாவை எதிர்த்து கல்யாணம் பண்ணினாண்ங்கன்னா நீங்க எவ்வளவு பெஸ்டா இருப்பிங்க…
அப்போது மீனாள் காபியோடு வர… உமா பேச ஆள் கிடைச்சா போதுமே. நிப்பாட்ட மாட்ட. காபி குடிச்சதும் ரெண்டு பேரும் சீக்கிரமாக குளிச்சிட்டு சாப்பிட வாங்க.
முக்கியமான சொந்தகாரங்கல்லாம் நேரமா வீட்டுக்கு வந்துடுவாங்க. சரியா.
பூ வாங்கி வச்சிருக்கறேன். வந்து எடுத்து வச்சுக்கோ… கூறியபடி வெளியேறினார்.
வெளியிலோ அந்த காலை வேலையே வேலைக்கு ஆட்கள் வந்திருக்க வீட்டின் முன்பு மண்ணை சமம் செய்து பந்தல் போட்டு கொண்டு இருந்தனர். வருபவர்களுக்கு அமர்ந்து ஒரு புறம் இருக்கைகள் இறங்கி கொண்டு இருந்தது. அதன் அருகில் இருந்து ஒவ்வொரு வேலையாய் மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தான் கதிர். உறவினர்கள் வருபவர்களை சிரித்த முகமாக பேசி வீட்டிற்குல் அனுப்பியபடி…
அப்போது தோட்டத்தில் இருந்து வாழை தாரை மாணிக்கம் வண்டியில் எடுத்து வர
அருகில் சென்றவன் இருங்கப்பா…
உள்ள நான் எடுத்துட்டு போகிறேன் என்றவன்… தனது சட்டையை கலட்ட
அவனை பார்த்தவர் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகி அவனது முகம் பார்க்க …அப்போது தான் அவனது தவறு தெரிந்தது. மூன்று மாதம் முன்பு ஏற்பட்ட சிறு விபத்தில் கைகளில் காயம் ஆகி இருக்க தையல் இட்ட தடத்தை பார்த்தவர் அவனையே பார்த்தபடி நின்றார்.
பானுவை பிரிந்து போக ஒரு வகையில் காரணமாக இருந்த அந்த காயத்தை பார்த்தபடி தந்தையை எப்படி சமாதானம் செய்வது என்ன புரியாமல் அவரது முகம் பார்த்தான் கதிர்.
தொடரும்.