முடி நன்கு கருமையாக வளர இந்த எண்ணையை ஒருநாள் விட்டு ஒருநாள், நன்கு
முடியின் வேர்களில் தேய்த்து, மசாஜ் செய்யவேண்டும். ஒரு அரைமணி நேரம் நன்கு ஊறிய பிறகு, தலைக்கு சிகைக்காயும் அரப்பும் தேய்த்து குளிக்கவேண்டும்.
எண்ணெய் தயாரிக்க தேவையானவை
- சுத்தமான தேங்காய் எண்ணெய் – 10 லிட்டர் (செக்கில் எடுத்தது என்றால் இன்னும் நல்லது )
2 . பெரிய நெல்லிக்காய் சாறு – 3 லிட்டர் - கருவேப்பிலை சாறு – 1 லிட்டர்
- மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு – 2 லிட்டர்
- மருதாணி சாறு – 1/2 லிட்டர்
- காயவைத்த செம்பருத்தி இதழ்கள் – 3 கைப்பிடி அளவு
செய்முறை :slight_smile:
முதலில் வாணலி நன்கு காய்ந்ததும் தேங்காய் எண்ணையை ஊற்றி கொதிக்க விடவேண்டும். அதன் பின்னர் மற்ற பொருட்கள் அனைத்தையும் கொதிக்கும் எண்ணையில் சேர்த்து .. அவற்றை நன்கு சுண்ட விடவேண்டும். கசடுகள் அடியில் தங்கி அவை மெழுகு பாதத்தை அடையும்வரை காய்ச்ச வேண்டும். 10 லிட்டர் எண்ணெய் அதில் பாதி அளவுக்கு சுண்டிய பிறகு, எண்ணையை ஆறவிட்டு வடிகட்டி பாட்டலில் ஊற்றிவிடலாம்.
பின்குறிப்பு : அதிக நேரம் தலையில் ஊறவைக்க வேண்டாம். இந்த எண்ணெய் குளிர்ச்சி மிக்கது. சைனஸ் ப்ரொப்லெம் உள்ளவர்கள் வாரதுக்கு இருமுறை பயன்படுத்தலாம்.
பிரண்ட்ஸ்… இது என்னோட முதல் குறிப்பு…
பயன்படுத்தி பார்த்து உங்க கருத்துக்களை தெரிவியுங்கள்.