நேசவிதை தூவும் காரிகையவள்…1

0
125

பகுதி.1

ராத்திரி பாதிசாமம் வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் உள்ள முட்கள் பன்னிரெண்டு முப்பதை தொட்டுக்கொண்டிருந்தது… அம்மாவாசை என்பதால் காரிருள் சூழ்ந்து சுற்றிலும் இருட்டு மட்டுமே அந்த ராத்திரி நேரத்தில் வீட்டின் கொள்ளபுரத்தில் இருந்த தென்னைமரத்தில் கோட்டான் அலரல் சத்தம் ராத்திரி நேரத்தில் மனதை பதரவைத்துக்கொண்டிருந்தது.. அந்த கிராமத்தில் உள்ள ஒரு பெரிய வீட்டில் இந்த நேரத்திலும் தூங்காமல் விழித்திருந்த ஜீவன் அந்த இரவு நேரத்தில் அலரும் கோட்டான் சத்தத்திற்கு துளியும் அஞ்சாமல் திண்ணையில் தூணில் சாயிந்தவாறு உட்கோர்ந்திருந்திருந்தாள் தமிழரசி…

தமிழ்நாட்டு பெண்களுக்கே உரித்தான மாநிறத்தில் ஐந்தடி உள்ள ஆண்களெல்லாம் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் உயர்த்திற்கு ஏற்ற உடல்வாகுடன் சாதாரன காட்டன் புடவையில் கிராமத்து தேவதையாக உட்கார்ந்திருந்தாலும் அவளின் கண்களில் தெரிந்த சோகம் அவள் அவ்வளவு பெரிய வீட்டில் சந்தோசமாக இல்லை என்பதை அப்பட்டமாக எடுத்துக்காட்டியது…

அவள் இந்த வீட்டிற்கு வாழ வந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டது ஆனால் ஆரோட கைப்பிடித்து இந்த வூட்டிற்கு வாழ வந்தாளோ அவனுக்கு இந்த வீட்டில் தனக்காக ஒரு ஜீவன் சாப்பிடாமல் காத்து கொண்டிருக்கும் என்ற என்னம் துளிக்கூட இல்லாமல் தனது நண்பனுடன் வேலை விசயமாக சென்றுவிட்டு புல்லட்டில் வந்து கொண்டிருந்தான் அவளின் கணவன் அந்த வீட்டின் மூத்த வாரிசு சரவண பாண்டியன்…

அவனின் பின்னால் உட்கோர்ந்திருந்த அவனுடைய உயிர் தோழன் கண்ணன் அவனின் தோளை சுரண்டி “டேய் மாப்பிள்ளை இந்த வேலையெல்லாம் பகல்ல பாக்கக்கூடாதா?? ஏன்டா உன்றக்கூட பழகுன பாவத்துக்கு என்ன பட்டினி போட்டு சாகடிக்க பாக்கரியே உனக்கு அப்படி நா என்னடா தொரோகம் பண்ணேன்” என புலம்பிக்கொண்டே வந்தான்.

ஆனால் சரவணனோ அவன் கூறியது எதையும் காதில் வாங்காமல் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான்…

“நா இம்புட்டு பொழம்பரேனே என்னானு ஒரு வார்த்தை கேட்டாதா குறைஞ்சா போயிடுவ ஏன்டா இப்படி அழுத்தக்காரனாவே இருக்க நீ இப்படியே இருந்தினா அந்த புள்ள பாவம்டா”…

வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவன் நண்பனின் புலம்பல் தாங்காமல் வண்டியை நிறுத்திவிட்டு அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்…

‘அவனின் பார்வையே சொன்னது இனி நீ ஒரு வார்த்தை பேசுனினால் உன்ன இங்கனையே இறக்கிவிட்டு போயிடுவேன்’ என்று அதை பார்த்ததும் வாயை தனது கையால் மூடிக்கொண்டு “இனி நா பேசவே மாட்டேன்டா வெரசா வூட்டுக்கு போடா பசில கண்ணு,காதெல்லாம் அடைக்குது” என வாயை மூடியவாறே பேசினான்…

முறைப்பதை விட்டுபோட்டு பதில் ஏதும் பேசாமல் திரும்ப வண்டியை ஸ்டார்ட் பண்ணி ஓட்ட ஆரம்பித்தான்..

அவன் முறைப்பதை விட்டுபோட்டு புல்லட்டை கிளப்பியதும் கண்ணன் வாயில் மேல் வைத்திருந்த கையை எடுத்துவிட்டு ‘அப்பாடா தப்பிச்சேன்டா சாமி எதோ நல்ல மூடுல இருக்கான் போல அதுதா இறக்கி விடாம போறான் இல்லைனா இந்த அர்த்தராத்திரில பேய்க்கூடல நடந்து வூட்டுக்கு போயிருக்கோணும்’ என மனதில் நினைத்துக்கொண்டான்…

சரவணபாண்டியன் தன்பெயருக்கு பின்னால் தன் தாத்தாவின் பெயர் இருந்தாலும் சிறுவயதிலே தனக்கென ஒரு பேரை தனது கடுமையான உழைப்பால் சம்பாதித்து வைத்திருப்பவன்…அழுத்தக்காரன்..அவனின் ஒற்றை பார்வையே எதிராளியை பயம் கொள்ளவைக்கும்..தன் குடும்பத்தினரின் மேல் அன்பையும்,பாசையும் கடலளவு மனதிற்கு வைத்திருந்தாலும் அதனை வெளியே காட்டாதவன்…அப்பத்தாவின் செல்லபேரன்..அவனை முழுவதுமாக புரிந்துவைத்திருப்பவர் அகிலாண்டேஸ்வரி மட்டுமே…

சரவண பாண்டியனின் குடும்பம் அந்த கிராமத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த குடும்பம்..அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவருமே ஒரே இனம் என்பதால் எல்லாருக்கும் எல்லாரும் எதாவது ஒரு வகையில் உறவினர்களாக இருந்தனர்…அந்த வூரில் அனைவருமே தனது பரம்பரை தொழிலான விவசாயத்தை செய்துக்கொண்டே மற்ற தொழில்களில் சிறந்து விளங்கினர்.மொத்தத்தில் பாசத்திற்கும்,பணத்திற்கும் பஞ்சமில்லாத வூர்…எந்த அளவுக்கு பாசத்துக்கு அடிமையானவங்களோ அதே அளவுக்கு மானம் மரியாதை,கௌரவத்துக்காக உயிர எடுக்கவும்,கொடுக்கவும் அஞ்சாதவர்கள்(வெளில இருந்து பார்ப்பவர்களுக்கு காட்டுமிராண்டி கூட்டம்)… ஒரு வீட்டில் விசேசமென்றால் மொத்த வூரும் சேர்ந்து தனது வூட்டு விருந்து போல வேலைகளை இழுத்துபோட்டு செய்வர்.உறவுகளின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள்…

சரவணனும்,கண்ணனும் மாமன் மச்சினன் உறவு முறை உள்ளவர்கள்.நல்ல நண்பர்களும் கூட இருவரும் சேர்ந்து கயிறு திரிக்கும் தொழிற்சாலை,தேங்காய் மண்டி,குடோன்(விவசாய பொருட்களான தேங்காய் பருப்பு,சோளம்,கம்பு,பயிர் வகைகள் அனைத்தையும் விவசாயிகளிடம் மொத்தமாக வாங்கி சேமித்து வைத்து விற்பனை செய்யும் தொழில்)நடத்திக்கொண்டிருக்கின்றனர்.சரவணனின் தந்தையும் அவனின் சித்தப்பாவும் குடும்ப தொழிலான ரைஸ்மில்,செங்கல் சூளை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.பரம்பரை தொழினான விவசாயமும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

சரவணனின் குடும்பம் கூட்டுக்குடும்பம் அகிலாண்டேஷ்வரிக்கும் சங்கர பாண்டியன்னுக்கு இரண்டு பையன்கள்.சங்கர பாண்டியன் சிறு வயதிலையே இறந்துவிட்டதால் அகிலாண்டேஷ்வரி சிறு வயதிலையே கணவனை இழந்ததை நினைத்து துவண்டு போகாமல் குழந்தைகளையும் வளர்த்துக்கொண்டு மொத்த சொத்தையும் அழியாமல் காப்பாத்திகொண்டு வந்தவர் சுருக்கமாக சொல்ல வேண்டு மென்றால் அவர்தான் அந்த வீட்டின் ஆலமரம்.அவரின் அனுமதி இல்லாமல் அந்த வீட்டில் உள்ளவர்கள் ஒரு துரும்பைக்கூட கிள்ளிபோடமாட்டார்கள்.. அகிலாண்டேஷ்வரியின் மூத்த மகன் தென்னரசுக்கும் கங்காவுக்கும் பிறந்தவன்தான் சரவண பாண்டியன்.இரண்டாவது மகன் முத்தரசுக்கும் ராதிகாவுக்கும் பெண் ஒன்று ஆண் ஒன்று பெண்ணிற்கு இதே வூரில் கட்டிக்குடுத்து அவளுக்கு இரண்டு வயதில் ஒரு பையன்.அந்த வீட்டின் கடைகுட்டி அகிலாண்டேஷ்வரின் கடைசி பேரன் இளமாறன்.அவனும் அவனுடைய பெரியப்பா,தந்தையுடன் சேர்ந்து பரம்பரை தொழிலை கவனித்துக்கொள்கிறான்.குறும்புக்காரன் அந்த வீட்டில் அவனை பிடிக்காதவர்கள் ஆருமே இல்லை.சரவணபாண்டியன் எவ்வளவு அமைதியோ அதற்கு நேர்மாறான குணம் கொண்டவன் தன் பேச்சாலையே அனைவரையும் மயக்கி விடுவான் தன் அண்ணனின் மேல் உயிரையே வயித்திருப்பவன்.அழுத்தக்காரனான சரவணனையே பேச வைத்துவிடுவான்..

சரவணன் வண்டியை கண்ணனின் வீட்டு வாசலில் நிறுத்தியதும் இம்புட்டு நேரம் பேசாமல் வந்தவன் வாயதிறந்து “நீ உன்ற மனசுல என்னடா நினச்சிட்டு இருக்க இன்னேரத்துல போய் என்ற அம்மாவ எழுப்பி என்ன வாங்கி கட்டிக் சொல்ரியாடா??தினமும் சாமத்துல வூட்டுக்கு வறேனு இனிமே நேரமாகி வந்தா வூட்டுக்கு வராதனு காலைலதா திட்டி அனுப்புச்சாங்க.எல்லாம் உன்னாலத்தான் ஒழுங்கா வண்டிய உன்ற வீட்டுக்கு விடு தமிழ் ருசியா சமச்சி வச்சிருக்கும் நா சாப்புட்டு போட்டு மாறன் ரூம்ல படுத்துக்கறேன்”…

சரவணன் பதில் ஏதும் பேசாமல் வண்டியை கண்ணனின் வீட்டிற்கு பக்கத்து வீடான தனது வூட்டிற்குள் சென்று புல்லட்டை நிறுத்திப்போட்டு இறங்கியவனின் கண்களில் வாசல் திண்ணையில் உட்கோர்ந்தவாறே தூணில் சாயிந்து அரைதூக்கத்தில் இருந்தவள் பட்டாலும் அதை பாக்காதமாதிரியே உள்ளே சென்றான்…

அவர்கள் வருவதற்கு சிறிது நேரம் முன்னால் வரைலும் விழித்திருந்தவள் அப்போதுதான் கண்ணயர்ந்தாள்…

தனது நண்பன் தமிழை எழுப்பாமல் உள்ளே சென்றதை பார்த்ததும் அவனின் பின்னால் இறங்கி வந்த கண்ணன் “அடப்பாவி பயலே ஏன்டா உன்ற பொண்டாட்டி இங்க உனக்காக இம்புட்டு நேரம் இத்தனை பனில உட்கோர்ந்துருக்கா அத பாத்தும் பாக்காத மாதிரியே போறியேடா உனக்குலா போய் கண்ணாலம் பண்ணிவச்ச அம்மச்சிய சொல்லோணும்” என மனதில் அவனையும் அகிலாண்டேஷ்வரியையும் திட்டிக்கொண்டே தமிழின் அருகில் சென்று அவளை கூப்பிட்டான்…

தமிழ்கண்ணு…தமிழ்கண்ணு என கூப்பிட்டதும் தூக்கத்திலிருந்து திடிக்கிட்டு விழித்தவள் அங்கு நின்ற கண்ணனை பார்த்ததும் எழுந்து நின்று அவனுக்கு பின்னால் தன் கணவன் நிற்கிறானா என்று பார்த்தாள்..

தன் கணவன் இல்லாமல் அவனது புல்லட் மட்டுமே நிற்பதை பார்த்ததும் அவன் உள்ளே சென்று விட்டான் என்பதை அறிந்ததும் மனதில் தினமும் உண்டாகும் விரக்தி நிலை உண்டானது…

அவள் விழித்ததிலிருந்து அவளின் முகத்தையை பார்த்திருந்த கண்ணனால் அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது…ஆனால் அது புரிய வேண்டியவனுக்கோ புரியாமல் போனதுதான் விதியின் செயலோ??

“அவன் அப்பவே உள்ள போயிட்டான் கண்ணு நீ ஏங்கண்ணு இம்புட்டு பனில உட்கோர்ந்துருக்க??உள்ளார போய் உட்கோர்ந்துருக்க வேண்டியதுதானே?…”

“உள்ளார உட்கோர்ந்துருந்தா தூக்கம் வந்துரும்னுதானுங்ண்ணா வெளிய உட்கோர்ந்திருந்தேன் அப்பவும் தூங்கிபோட்டேன் போல சாரிங்ண்ணா வாங்க சாப்பாடு எடுத்து வைக்கறேன்”…

“நீ எதுக்கு கண்ணு சாரி கேக்கர லேட்டா வந்தது எங்க தப்பு இம்புட்டு நேரம் நீ அவனுக்காக முழிச்சிருந்துருக்க ஆனா அவன் அத கண்டுக்காதமாதிரியே போறான் என நண்பனை திட்டினான்..

“விடுங்ண்ணா இது தெனமும் நடக்கரதுதானே??எதிர்பார்ப்பு இருந்தானேங்ண்ணா ஏமாற்றம் வரும்.நாந்தா எதிர்பாக்கரதே இல்லையே” என வாழ்க்கையை வெறுத்த நிலையில் பதில் கூறியவளை கவலையாக பார்த்தான்..

இருவரும் பேசிக்கொண்டே உள்ளே வந்ததும் “அண்ணா நீங்க உட்கோருங்க நா தோசை ஊத்தி எடுத்துபோட்டு வறேன்” என அவள் கண்ணனிடம் பேசி கொண்டிருக்கும்போதே தனது அறையிலிருந்து லுங்கியும் பணியனுடன் வந்தான் சரவணன்.

“இப்ப போய் தோசை ஊத்தப்போரியா கண்ணு அதலாம் வேணாம் ராத்திரிக்கு எல்லாருக்கும் என்ன சமைச்ச கண்ணு”??

இட்லிங்ண்ணா…

“அதுவே போதும் கண்ணு நீ எடுத்து வை நாங்க சாப்படறோம்”…

“இட்லி ஆறி போயிருக்கும்ங்ண்ணா செத்த இருங்க நா தோசை ஊத்திபோடறேன்”…

“அதலாம் ஒன்னும் வேணாம் கண்ணு இப்ப இருக்கரதையே எடுத்து வை நீயும் காலைல வெள்ளென எந்திருச்சி வூட்டுவேலைய செஞ்சிபோட்டு ஸ்கூல்லையும் போய் கால் கடுக்க நின்னுட்டு வந்து திரும்பவும் வேலை செஞ்சிபோட்டுதானே இருக்க இதுல எங்களுக்காக இப்போ தோசை வேர ஊத்தப்போறியாக்கும் பேசாம வந்து எடுத்து வை” அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே சரவணன் டைனிங் டேபில் உட்கோர்ந்து சாப்பிட தட்டை எடுத்தான்…

கண்ணனும் அவனின் அருகில் சென்று சேரை இழுத்து போட்டு உட்கோர்ந்ததும் இருவரும் தமிழ் செய்து வைத்திருந்ததை எடுத்துபோட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்…

“கண்ணு நீயும் உட்கோர்ந்து சாப்புடும்மா” என்றான் கண்ணன்…

நா சாப்ட்டேன் நீங்க சாப்புடுங்ண்ணா…

“நீ சாப்டத நா நம்போணுமாக்கும் பேசாம வந்து உட்கோரு கண்ணு” என்றவன் அவளுக்கும் ஒரு தட்டு வைத்து அதில் இட்லியை எடுத்து வைத்தான்…

அவனின் கணவனோ தனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்பதை போல் சாப்பிட்டு கொண்டிருந்தான்…

அவள் சாப்பிட உட்கோராமல் இருப்பதை பார்த்து கண்ணன் “டேய் மாப்பிள்ளை நீயாவது சொல்லேன்டா” என்றான்…

“அவங்க அவங்களுக்கு பசிச்சா சாப்டபோறாங்க அதுக்கு நா ஏன்டா சொல்லோணும்”தலையை நிமிராமேல சாப்பிட்டவாறே பதில் கூறினான்..

“உன்றகிட்ட போய் சொன்னேன் பாரு என்ன அடிக்கோணும்” என திட்டிவிட்டு கண்ணு நீ உட்கோர்ந்து சாப்பிடு என்றான்…

அவனின் வற்புருத்தலினால் சாப்பிட உட்கோர்ந்தாலும் இட்லி தொண்டையில் மாட்டிய மீன் முள்ளை போல் முழுங்கவும் முடியாமல் வெளியே துப்பவும் முடியாத நிலையில் இட்லி துண்டு தொண்டைக்குள் மாட்டிக்கொண்டு நின்றது…மதியாதார் தலைவாசல் மிதியாதே என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவள் ஆனால் இன்றோ இந்தவிட்டில் தான் வேண்டப்படாதவள் என தெரிந்தாலும் வெளியே போகமுடியாத தனது விதியை நினைத்து நொந்தவாறே சாப்பிட்டாள்.

சரவணன் சாப்பிட்டு
முடிச்சதும் எழுந்து கை கழுவிக்கொண்டு சென்றதும் கண்ணன் சாப்பிட்டுவிட்டு தனக்காக உட்கோர்ந்திருப்பதை பார்த்தவள் “அண்ணா நீங்க எழுந்து போய் கை கழுவுங்க நா சாப்புட்டுக்கறேன்” என்றாள்…

“சரிம்மா நா போனவுடனே எழுந்துடக்கூடாது இன்னும் ரெண்டு இட்லி சாப்புட்டுபோட்டுதான் எழுந்திருக்கோணும்” என கூறிவிட்டு கை கழுவிக்கொண்டு மாறனின் அறைக்கு சென்றான்…

அவன் சென்றதும் தமிழரசியும் எழுந்து சென்று மீதி இட்லியை வீட்டில் வளர்க்கும் நாயிக்கு போட்டுவிட்டு வந்தவள் அவர்கள் சாப்ட்ட பாத்திரைத்தை கழுவி வைத்துவிட்டு தங்களது அறைக்கு சென்றாள்…

கணவன் தூங்குவதை பார்த்தவள் சத்தம் எழுப்பாமல் சென்று கட்டிலில் மறுபுறம் படுத்துக்கொண்டாள்…சிறிது நேரத்திலே கணவனின் கை தன் சேலையால் மூடப்படாத வெற்று பிரதேசமான வயிற்றில் ஊர்ந்து அவளை அனைத்துக்கொண்டது… கண்ணாலம் ஆகி இரண்டு மாதம் மட்டுமே விலகி இருந்தவன் இந்த நான்கு மாதமும் அவளை அனைக்காமல் உறங்கியதே கிடையாது..தூக்கத்தில்கூட அவளின் மேல் இருக்கும் அவனின் கையை அவளால் எடுக்கமுடியாது. உறக்கத்தில்கூட அவனின் பிடி அழுத்தமாக அவளின் வயிற்றை அனைத்தவாறேதான் உறங்குவான்..

அவனின் முகத்தை திரும்பி பார்த்தாள்…அவன் கண்ணை மூடிருந்தாலும் இன்னும் உறங்கவில்லை என்பதை அவனின் கருவிழிகளின் அசைவிலே தெரிந்தது…எதோ மனதில் போட்டு யோசித்துக்கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தாள்…ஆனால் அது என்னவென்று அவளும் கேக்கமாட்டாள் அவனும் சொல்லமாட்டான்…

இவர்களுக்கு கல்யாணம் ஆகி ஆறுமாதங்கள் ஓடிவிட்டது.. அவர்கள் கணவன் மணைவியாக வாழ்ந்தாலும் அதில் அன்போ காதலோ எதுவும் இல்லாத வெறும் உடல் தேவையை போக்கக்கூட தாம்பத்தியத்தை வெறுக்க ஆரம்பித்துவிட்டாள்.அவளுக்கும் தன்னுடைய கல்யாணத்தை பற்றி ஏராளமான கனவுகள் இருந்தது வசதி இல்லாவிட்டாலும் தன்னை உயிராய் காதலிக்கும் கணவன் அமையவேண்டும் என்பது அவளது கனவு ஆனால் அது அத்தனையும் பொய்யாய் போய்விட்டது…இப்போது பணம்,நகை,பட்டு எதற்கும் குறைவில்லை.அவனின் ஏடிஎம் கார்டு முதல்கொண்டு அவன் பணம் வைக்கும் பீரோசாவி வரை அனைத்தும் அவளிடம்தான். ஆனால் காதல்??

படுத்திருந்தவளின் நினைவுகளோ தனது வாழ்க்கை திசைமாறிய நாளை நினைத்து பின்னோக்கி சென்றது.…

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here