நேசவிதை தூவும் காரிகையவள்…2

0
105

பகுது:2

ஆறுமாதங்கள் முன்பு…

அந்த ஊரிலே மிக்பெரிய கல்யாண மண்டபத்திற்கு வந்திருந்தவர்களின் வருகையால் கூட்டம் நிரம்பி வழிந்தது…பணத்தை வாரி இறைத்து மண்டபத்தை அலங்கரித்திருந்தனர்.. சும்மாவா அகிலாண்டேஷ்வரியின் மூத்த பேரன் சரவண பாண்டியனின் திருமணம் ஆயிற்றே… பெண் வீட்டாரும் சாதாரணமானவர்கள் அல்ல வசதியில் சரவணனின் வீட்டினர்க்கு சமமான வசதி உள்ளவர்கள் அதுவும் ஒற்றை பெண் என்பதால் இருவீட்டாரும் பணத்தை வாரி இறைத்து தனது செல்வ செழிப்பை காட்டியிருந்தனர்…

மணவரையின் அலங்காரம் வந்திருந்தோரை வியக்கவைத்தது… சரவணபாண்டியன் மணவரையில் அமர்ந்தவாறே அருமைக்காரர் சொல்வதை செய்து கொண்டிருந்தான்…

பேரனின் திருமண கோலத்தை மனநிறைவுடன் ஒரு ஓரமாக உட்கோர்ந்து பார்த்து கொண்டிருந்தார் அகிலாண்டேஷ்வரி. வெள்ளை சேலையை பின்கொசுவம் வைத்து கட்டி நெற்றில் விபுதி இட்டு கழுத்தில் ஒரு தங்க சங்கிலி மட்டுமே அணிந்திருந்தார். அவரை பார்த்தாளே தெரியும் ஒரு இரும்பு பெண்மணி என்று… கணவனை இழந்தவர் என்பதால் ஓரமாக அமர்ந்திருந்தார்.

அப்போது அவர் அருகில் அவரைப்போலவே கைம்பெண் கோலத்தில் இருந்த இன்னொரு பெண்மணி அவரின் தோளை தொட்டு பெரியம்மா என அழைத்தார்…

அவரை திரும்பி பார்த்த அகிலாண்டேஷ்வரி “யசோகண்ணு… எப்போ கண்ணு வந்த”?? என கேட்டுக்கொண்டே அவரின் கையை பிடித்து தனது அருகில் அமர வைத்துக்கொண்டார்.

அகிலாண்டேஷ்வரியின் முகத்தில் வந்திருந்தவரை பார்த்ததும் அம்புட்டு சந்தோசம் தெரிந்தது…

இப்போதானுங் பெரியம்மா…

ஏங்கண்ணு நம்ம வூட்டு விசேசத்துக்கூட புள்ளைங்கல கூட்டிட்டு வராம வந்துருக்க??

நீங்க இப்படி கேப்பிங்கனுதானுங் பெரியம்மா இன்னைக்கு உங்க பேத்திங்கல கூட்டிட்டு வந்தேன் என்றவர் சிறிது தூரத்தில் சிரித்து பேசிக்கொண்டே வந்த இரண்டு பெண்களை காட்டி இதோ உங்க பேத்திங்களே வந்துபோட்டுங் பெரியம்மா என்றவர் தமிழ்,எழில் இங்க வாங்க என அவர்களை கூப்பிட்டார்.

அருகில் வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தார்..

நீல வண்ண பட்டு புடவையில் மிதமான ஒப்பனையில் தனது நீளமான கூந்தலில் மல்லிகை சரத்தை சூடி நின்றிருந்தாள் தமிழரசி… அவளின் அருகிலே பாவாடை தாவணி உடுத்தி அக்காவுக்கு நானும் சலைத்தவள் அல்ல என்ற அழகுடன் நின்றிருந்தாள் எழிலரசி…

கண்ணுங்களா நீங்க ரெண்டுபேரும் அப்படியே சின்னவயசுல உங்க ஆத்தாகாரிய பாத்த மாதிரியே இருக்கரிங்கடா.. உங்கல பாத்து எம்புட்டு நாள் ஆகிபோச்சுடா…உங்க ஆத்தாகாரி உங்க ரெண்டுபேரையும் ஆருவூட்டு விசேசத்துக்கும் கூட்டிட்டு வராமளே வச்சிருந்துட்டாளே என இருவரின் கைகளையும் பிடித்துக்கொண்டு பேசினார்…

ஏனுங் பெரியம்மா நானா கூட்டிட்டு வரமாட்டேனு சொல்றேன் இவளுங்கதா ஆருவூட்டுக்கும் வராம படிப்பு படிப்புனு இருக்கராளுங்க இன்னைக்கூட நாந்தா வலுக்கட்டாயமா கூட்டிட்டு வந்துருக்கேன்…

ஏங்கண்ணு உங்க அம்மா சொல்ரது உண்மையா?? நம்ம சொந்தத்துல நடக்கர விசேசத்துக்கு போனாத்தானே நாலு சொந்தபந்தத்த தெரிஞ்சி வச்சிக்கமுடியும்…

இம்புட்டு நாள் ஹாஸ்டல்ல இருந்ததால வரமுடியலைங் அம்மாச்சி இனிமே வறோம் அம்மாச்சி என்றாள் தமிழ்.

சரிடா கண்ணு… என்றா கண்ணு படிக்கர??

எம்எஸ்சி,பிஇஎட் முடிச்சிட்டேனுங், கவர்மென்ட் ஜாப்க்கு எக்ஸ்சாம் எழுதிட்டு இருக்கேனுங் அம்மாச்சி…

நீ கண்ணு??

இந்த வருசம் +12 எக்ஸ்சாம் எழுதிருக்கேனுங் அம்மாச்சி என்றாள் எழில்.

ஏ யசோ புள்ளைக்கு இந்த வருசத்தோட படிப்பு முடிஞ்சிடுச்சுல மேல படிக்க வைக்கரையா இல்லை கண்ணாலம் பண்ணலாம்னு இருக்கரியா??

படிச்சது போதும் பெரியம்மா பெரியவளுக்கு கண்ணாலம் பண்ணிப்போடலாம்னு இருக்கேன் இவளுக்கு நல்லது கெட்டது பண்ணிமுடிக்கரப்போ சின்னவளும் படிச்சி முடிச்சிப்போடுவா அப்பரம் அவளுக்கு ஒருத்தன பாத்து கட்டி குடுத்துபோட்டா என்ற வேலை முடிஞ்சிடும் நானும் நிம்மதியா இருப்பேன்…

சரி யசோ புள்ளையோட ஜாதகம் ஒன்னு என்றகிட்ட குடு நா இந்த பக்கம் புள்ளைக்கு ஏத்தமாதிரி வரன் இருந்தா சொல்றேன்…

சரிங் பெரியம்மா வசதி அதிகம் இருக்கர இடம் வேண்டாம் பெரியம்மா என்ற வசதிக்கு தகுந்தமாதிரி வரன் இருந்தா சொல்லுங்க போதும்…

ஏ யசோ அப்படி சொல்ர உன்றகிட்ட இருக்கர பத்து ஏக்கர் நிலமும் உன்ற மகளுங்களுக்குதானே வரப்போகுது,புள்ளையும் நல்லா படிச்சிருக்கா,அழகாவும் இருக்கா அப்பரம் என்ன நல்ல வசதி உள்ள பையனுக்கே குடுக்கலாமே

அதலா வேணாம்ங் பெரியம்மா நம்ம வசதிக்கு ஏத்தமாதிரி இருக்க நல்ல பையனுக்கு குடுத்தாவே போதும் பெரியம்மா… நா பணக்காரனுக்கு வாக்கபட்டு என்ன சுகத்த கண்டேன் பெரியம்மா..ஏ நிலமை என்ற மகளுங்களுக்கு வரக்கூடாது பணம் காசு இல்லைனாக்கூட பரவாலை புள்ளைக்கு நிம்மதியான வாழ்க்கை குடுக்கரவனா இருந்தா மட்டும் போதும் பெரியம்மா(நீ நினைப்பது நடக்காது நடக்கவும் விடமாட்டேன் என அவரை பார்த்து சிரித்தது விதி)

அருமைக்காரர் மணவரையில் நின்றிருந்த காங்காவை பார்த்து பொண்ண அழைச்சிட்டு வாங்க என்றார்…

கங்கா தன் அருகில் இருந்த நந்தினியிடம் நந்துகண்ணு நீ போய் கூட்டிட்டு வாடா என்றார்…

சரிங் பெரியம்மா அவள் சென்று சிறிது நேரம் கழித்து ஓடிவந்தவளின் முகத்தில் தெரிந்த பதட்டத்தை பார்த்தவர் ஏங்கண்ணு மருமகள கூட்டிட்டு வராம நீ மட்டும் வந்து நிக்கர??

பெரியம்மா அண்ணிய காணாம் என அவள் கூறிக்கொண்டே கண்கலங்கியதை பார்த்ததும் மொத்தகுடும்பமும் அவளை சூழ்ந்து கொண்டது…

என்னடி சொல்ர விடியக்காலம் நாந்தானே நம்ம குடும்ப நகைய கொண்டுபோய் குடுத்துபோட்டு வந்தேன் அப்போ இருந்தாளே என்றார் ராதிகா

அம்மணி நீ நல்லா பாத்தியாடா என்ற அவளின் பெரியப்பாவின் கேள்விக்கு தனது கையில் வைத்திருந்த லெட்டரை அவரிடம் குடுத்தாள்…

அதை வாங்கி படித்ததும் அவர் முகத்தில் வந்துபோன உணர்வுகளை பார்த்து அகிலாண்டேஷ்வரி அந்த லெட்டரை பிடிங்கி படித்தவர் அப்படியே தோய்ந்து போய் கண்கள் இருட்டிவர அப்படியே சரிந்தார்..

அவர் அருகில் நின்றிருந்த தென்னரசு அவர் சாய்வதை பார்த்ததும் பிடித்துக்கொண்டு அவரும் கீழே உட்கோர்ந்து அம்மா என்னங்ம்மா ஆச்சு அவரின் கண்ணத்தை தட்டியவாறே கேட்டார்..

அகிலாண்டேஷ்வரி கீழே விழுந்ததை பார்த்ததும் சரவணன் மணவறையை விட்டு எழுந்து வந்து அவரின் அருகில் உட்கோர்ந்து அப்பத்தா அப்பத்தா அவரை எழுப்ப முயன்றவன் நிமிர்ந்து அங்கு நின்றிருந்த தன்குடும்பத்தாரை பார்த்து ஆராவது போய் தண்ணி கொண்டு வாங்க என கத்தினான்…

அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு வளையல் அணிந்த கரம் தண்ணீர் ஜக்கை அவனிடம் நீட்டியது.. அதை வாங்கி தண்ணீரை தெளித்ததும்தான் அகிலாண்டேஸ்வரி கண் விழித்தார்…

பொண்ணு இல்லை என்பதை அறிந்ததிலே அதிர்ச்சியில் இருந்தவர்கள் அகிலாண்டேஷ்வரி மயங்கி விழுகவும் இன்னும் அதிர்ச்சியாகி அடுத்த என்ன என்பதைக்கூட யோசிக்கமுடியாமல் தடுமாறி நின்றிருந்தனர்…

அதற்குள்ளாகவே வந்திருந்த அனைவருக்கும் பொண்ணு ஓடிப்போன செய்தி கேட்டு ஆள் ஆளுக்கு பேச ஆரம்பித்து விட்டனர்…

கண் விழித்த அகிலாண்டேஷ்வரி அனைவரையும் ஒருமுறை பார்த்தவர் தன் அருகில் உட்கோர்ந்திருந்த ரெண்டாவது மகன் முத்தரசிடம் முத்து நீ போய் அந்த புள்ளையோட அப்பாவையும் அம்மாவையும் அழச்சிபோட்டு வா என்றார்..

அவங்ககிட்ட இனி நமக்கென்னங்ம்மா பேச்சு நீங்க வாங்க ஹாஸ்பிட்டல் போலாம் என்றவரின் முகத்தில் அவ்வளவு கோபம் தெரிந்தது.. அவர் அந்த கடிதத்தை படித்ததில் சம்பந்தி வீட்டாரின் மேல் பயங்கர கோபத்தில் இருந்தார்…

நா சொல்ரத செய் முத்து என்ற அகிலாண்டேஸ்வரின் அழுத்தமான குரலில் மறுபேச்சு பேசாமல் எழுந்து சென்றார்..

அகிலாண்டேஸ்வரின் ஒரு பார்வையை போதும் அவரின் எதிரில் இருப்பவர்கள் பயந்து நடுங்க அதிலும் அவர் பேசினால் சொல்லவே வேண்டாம். அவரின் குணம்தான் சரவணபாண்டியனுக்கு அப்படியே வந்திருக்கு.

பொண்ணுடைய அப்பாவும் அம்மாவும் அச்சத்துடனே அகிலாண்டேஷ்ரின் முன்னால் வந்து நின்றனர்…

அவர்கள் வந்ததும் அகிலாண்டேஸ்வரி அங்கு நின்றிருந்த இளமாறானை பார்த்தவர் அவனிடம் கையை நீட்டினார்…

அவரின் செய்கை அவனுக்கு புரிந்து விட்டது தன்னிடம் வைத்திருந்த செக்புக்கை எடுத்து அவரிடம் குடுத்தான்.

அதை வாங்கியவர் அதில் திருமணத்திற்கு ஆகிருந்த செலவில் அவர்கள் செய்திருந்ததை விட சில லட்சங்கள் அதிகமா போட்டு கையெழுத்திட்டு கொடுத்தவர் இனி உங்கல நா என்ற கண்முன்னாடி இன்னொரு முறை பாக்கக்கூடாது என்ற அவரின் ஆளுமையான குரலை கேட்டதும் பெண்ணை பெத்தவர் எதுவும் பேசாமல் அந்த செக்கை வாங்கி கொண்டார்…

இதுதான் அகிலாண்டேஷ்வரி எப்பவும் முடிந்த விசயத்தை நினைத்துக்கொண்டு அதிலே தேங்கிவிடமாட்டார். அடுத்து என்ன என்பதை சற்றுநேரத்திலே முடிவெடுத்து அதை நோக்கி செல்ல ஆரம்பித்துவிடுவார். அதனாலதான் சிறுவயதில் கணவனை இழந்தாலும் அதனை நினைத்து உடைந்து போகாமல் தன் கணவனின் சாம்ராஜ்யத்தையே தனி மனுசியாக அனைவரையும் தன் கண்ணசைவிலே நடத்திக்கொண்டிருக்கிறார்..

அவரின் மனதில் இவ்வளவு நேரம் இருந்த பயம் போய் நிம்மதி வந்தது அவருக்கு தெரியும் அகிலாண்டேஷ்வரியை பகைத்துக்கொண்டால் அவர்களின் நிலை படுபாதாளத்துக்கு சென்று விடும் என்று அதனாலையே அகிலாண்டேஷ்வரி கொடுத்த செக்கை வாங்கி கொண்டார்… அவரின் மனைவி மனதில் இந்தமாதிரி ஒரு குடும்பத்தில் தன் மகளுக்கு வாழ குடுத்துவைக்கலையே எம்புட்டு தூரம் நானும் அவரும் சொன்னோம் அப்போலா தலைய ஆட்டிட்டு கடைசி நேரத்துல இப்படி எங்கல அசிங்கபடுத்திவிட்டு போயிட்டாளே என மகளின் மேல் கோபத்துடனே இருந்தார்…

செக்கை வாங்கியதும் மனைவியை அழைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டு சென்றார்…அவர்களுடனே உறவினர்களும் சென்றனர்…

அவர்கள் சென்றதும் தென்னரசு அம்மா வாங்க நாம ஹாஸ்பிட்டல் போலாம் என்றார்…

எனக்கு ஒன்னுமில்லை தென்னரசு என்ற பேரனோட கண்ணாலத்த முடிச்சிப்போட்டு அப்பரமா போலாம்.

அவரின் பதிலை கேட்டு அங்கிருந்த அனைவருமே அவருக்கு என்னவாகி விட்டது என்றுதான் நினைத்தனர்..

அம்மா என்ன சொல்ரிங்க??

அத்தை நீங்க தெரிஞ்சித்தா பேசரிங்ளா உடனே வேற பொண்ணுக்கு நாம எங்க போறதுங் அத்தை என்றார் கங்கா…

சரவண பாண்டியனிற்கு அவரின் எண்ணம் புரிந்ததும் அப்பத்தா என்னால கண்ணாலம் பண்ணிக்கமுடியாது வாங்க போலாம் என்றவனின் குரலில் கோபமா, விரக்தியா பிரித்தறிய முடியாமல் இருந்தது..…

இப்ப மட்டுமா இல்லை எப்பவுமேவா பாண்டியா??

அப்பத்தா தன் எண்ணத்தை கண்டுபிடித்து விட்டார் என்பதை உணர்ந்துவிட்டவன் பதில் ஏதும் பேசாமல் அவரை அழுத்தமாக பார்த்தான்…

அவருக்கா தெரியாது தன் பேரனை பத்தி ஒன்னு வேண்டாம் என நினைத்துவிட்டால் அதிலிருந்து துளிக்கூட மாற மாட்டான். இன்னைக்கு அவனுக்கு கண்ணாலம் ஆகவில்லை என்றால் இனி அவனை எப்போதும் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கமுடியாது என்பதால் அவரும் இன்றைக்கே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்துவிட வேண்டும் என உறுதிக்கொண்டார்…

சொல்லு பாண்டியா என்ன அமைதியா இருக்க??

அவன் அவரை கோபமாக முறைத்துவிட்டு பதில் ஏதும் சொல்லாமல் மணமகன் அறைக்கு வந்து அறைக்குள்ளே கோபத்துடன் நடக்க ஆரம்பித்தான்..அவனின் பின்னாலையே வந்த கண்ணன் டேய் மாப்பிள்ளை கோபபடாதடா எல்லாம் அம்மாச்சி சரி பண்ணிப்போடுவாங்க என்றவனை முறைத்து பார்த்தான்..

கண்ணனுக்கு அதிலையே தெரிந்தது இனி தான் எதாவது பேசினால் கொன்னே போட்ருவான் என்று.. வாயை மூடிக்கொண்டு கட்டிலில் உட்கோர்ந்து கொண்டு சரவணன் கோபமாக குறுக்கும் நெடுக்கும் நடப்பதை பார்த்து கொண்டிருந்தான்…

சரவணனுக்கு தெரியும் தனது அப்பத்தாவை பற்றி அவர் ஒன்று செய்யவேண்டும் என நினைத்துவிட்டாள் அதை முடித்தே தீர்வார் என்று இன்னைக்கு எப்படியும் தனக்கு கண்ணாலம் பண்ணிவைக்காமல் விடமாட்டார் என்று தெரிந்தும் தனது அப்பத்தாவின் வார்த்தையை மீற மனமில்லாமல் மண்டபத்திலே இருந்தான்… அவன் நினைத்திருந்தால் இப்பவே மண்டபத்தை விட்டு வெளியே சென்றிருப்பான் ஆனால் தான் அப்படி மட்டும் செய்தால் தனது அப்பத்தாவிற்கு மறுபடியும் எதாவது ஒன்று ஆகிவிடும் என்ற பயத்தினால் மட்டுமே அங்கையே இருக்கிறான்..

அவர் பேரன் கோபமாக செல்வதை கண்டு கொள்ளாமல் தென்னரசுவை பார்த்து நா எடுக்கர முடிவு தப்பாகுதுனு உனக்கு நம்பிக்கை இருக்குதானே தென்னரசு..

என்னங்ம்மா இப்படி கேட்டுபோட்டிங்க நீங்க எது செஞ்சாலும் அது எங்க நல்லதுக்காத்தான் இருக்கும் என்றார்…

தென்னரசுவின் பதிலை கேட்டதும் ஓரமாக பதட்டதுடன் நின்றிருந்த வசுந்தராவிடம் சென்றவர் அவரின் கையை பிடித்துக்கொண்டு வசு உன்னோட மகள என்ற பேரனுக்கு கட்டிதருவியா??? என்றார்…

அகிலாண்டேஷ்வரி சொன்னதை கேட்டதும் அந்த வீட்டு ஆண்களை தவிர பெண்கள் மூவருக்குமே பிடிக்கவில்லை..

அத்தை நீங்க என்ன பண்றிங்க நம்ம வசதி என்ன அவங்க வசதி என்ன நம்ம பையனுக்கு எப்படி இந்த பொண்ணு சரியா இருக்கும்?? என கோபமாக கேட்டார் கங்கா.

அகிலாண்டேஸ்வரி திரும்பி கங்காவிடம் பதில் கொடுக்கு முன்னே தென்னரசு கங்கா நீ பேசாம இருக்கமாட்ட அம்மா எது செஞ்சாலும் அது சரியாத்தா இருக்கும் என்று கங்காவின் வாயை அடைத்துவிட்டார்.

தென்னரசு நீ அமைதியா இரு அவ பேசட்டும் என்றவர் கங்கா நீ சொல்லு உனக்கு ஏ தமிழ புடிக்கல??படிச்சிருக்கா,அழகா இருக்கா நம்ம பாண்டியனுக்கு பொருத்தமா இருக்கா இது போதாதா??

படிப்பு, அழக வச்சிபோட்டு நாம என்னங்த்த பண்றது நம்ம வசதி என்ன இவங்க வசதி என்ன நா என்ற பொறந்த வூட்ல இருந்து கொண்டு வந்ததுல பாதிக்கூட இவங்ககிட்ட இல்லை நா வச்சிருக்கரது ஒத்த பையன் அவனுக்கு ஒரு நாளைக்கு எம்புட்டு வருமானம் வருது அப்படி பட்டவனுக்குபோய் ஒன்னுமில்லாத வூட்ல பொண்ணு எடுக்கோணும்னு நமக்கு என்ன தலையெழுத்தாங்த்தை??

உன்னோட எதிர்பார்ப்பு புரியுது கங்கா,நீ சொல்ர மாதிரி நம்மகிட்ட இல்லாத சொத்தா?? வரவ கொண்டுவந்துத்தா நம்ம வூட்ல அடுப்பு எரியோணும்ங்ர அவசியமில்லையே இம்புட்டு பேசர உனக்கு நம்ம பாண்டியன பத்தி தெரியாததா??இன்னைக்கு இம்புட்டு நடந்ததுக்கப்பரம் அவன் திரும்ப கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பானு நினைக்குர??

அவரின் தலை இல்லை என ஆடியதை பார்த்ததும் இங்க பார் கங்கா எனக்கு என்ற பேரனோட வாழ்க்கை ரொம்ப முக்கியம் உனக்கும் அப்படித்தானு நினைக்குறேன் அதனால புள்ளைங்க நல்லாருக்கோணும்னு ஆசிர்வாதம் பண்ணு…

தன் மகனின் பிடிவாத குணம் தெரிந்ததால் அவரோட மனதிற்கு பிடிக்காவிட்டாலும் இந்த கண்ணாலத்திற்கு சம்மதித்தார்…

மருமகளே நா இப்போ இந்த முடிவு எடுக்கலைனா உன்ற மகன் கடைசி வரைலும் கண்ணாலமே பண்ணிக்கமாட்டான்…

கங்காவை போலவே ராதிகாவுக்கும் இந்த திடீர் கல்யாணத்தில் விருப்பமில்லை தன் மாமியார் சொல்வதைப்போல சரவணனின் வாழ்க்கைக்காக மட்டுமே அமைதி காத்தனர்…

நீ பதில் சொல்லு யசோதா உன்ற மகள என்ற பேரனுக்கு கட்டிக்குடுக்க சம்பந்தம்தானே.இல்லை முதல்ல வசதியான இடத்துல பொண்ணுபாத்துட்டு அது இல்லைனவுடனே கடைசில உன்ற மகள கேக்கறேனு யோசிக்கரையா??

ஐயோ அப்படிலா இல்லைங் பெரியம்மா உங்க வசதிக்கு நா எப்படி அவர் தயங்குவதை பார்த்த அகிலாண்டேஷ்வரி இங்க பாரு யசோதா நீ எதுவும் செய்ய தேவை இல்லை உன்ற மகள ராணிமாதிரி வச்சி காப்பாத்தார அளவுக்கு என்ற பேரனே சம்பாதிக்கரான் நீ எதபத்தியும் யோசிக்காம உன்ற மகள கட்டிகுடு நா பாத்துக்கறேன்…

தென்னரசுவும் தங்கச்சி உன்ற மகள மட்டும் கட்டிகுடும்மா நாங்க நல்லபடியா பாத்துப்போம்.

சிறிது நேரம் தயங்கியவர் தன் அருகில் நின்றிருந்த தன் மகளை பார்த்து விட்டு சரி. பெரியம்மா நா என்ற மகள உங்க பேரனுக்கு கட்டிதறேன் என்றார்…

தன் அம்மா சம்மதம் சொன்னதை நம்பமுடியாமல் பார்த்தாள் தமிழரசி…

ஆனால் எழில் அம்மா அக்காகிட்ட ஒருவார்த்தை கேக்காம நீங்களா முடிவு பண்றிங்க என்றாள்…

எழில் நீ செத்த சும்மா இரு பெரியவங்க பேசிட்டு இருக்கும்போது இப்படித்தா பேசுவியா நா உன்ன அப்படித்தா வளர்த்துருக்கேனா என யசோதா தன் சின்ன மகளை கண்டித்ததும் வாயை மூடிக்கொண்டாள்…

அகிலாண்டேஸ்வரி நந்தினியை பார்த்து நந்துகண்ணு தமிழ கூட்டிட்டுபோய் அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வாடாம்மா என்றார்…

நாந்தினிக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தனது பெரியம்மாவும்,அம்மாவுமே தனது அப்பாத்தாவை எதிர்த்து பேசாதபோது தான் மட்டும் எப்படி பேசரது என நினைத்தவள் எதுவும் பேசாமல் தமிழை மணமகள் அறைக்கு கூட்டி சென்று தமிழுக்கு அலங்காரம் பண்ணினாள்.…

தமிழ் இது எதையுமே உணராமல் விரக்தியாக தன்னை நந்தினியிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தாள்…

அப்போது அங்கு வந்த யசோதா கண்ணு நீ செத்த வெளிய இரும்மா நா தமிழ்கிட்ட கொஞ்சம் பேசோணும் என்றார்…

நந்தினியும் அலங்காரத்தை முடித்து விட்டதால் வெளியே சென்றாள்…
நந்தினி வெளியே சென்றதும் யசோதா,தமிழ் அம்மா மேல கோபமா இருக்கியாடா??

கோபம் எல்லாம் இல்லைங்ம்மா சின்ன வருத்தம் மட்டும்தான் எங்க அம்மா இதுவரைலும் எதுவா இருந்தாலும் எங்கிட்ட என்னோட விருப்பத்த கேட்டுட்டு அப்பரமா செய்யரவங்க இன்னைக்கு என்னோட வாழ்க்கையோட முக்கியமான நிகழ்வ ஏங்கிட்ட கேக்காமையே சரினு சொல்லிபோட்டிங்கனு வருத்தம் அம்மா என்றாள்…

அவளின் கையை இருக பற்றிக்கொண்டவர் உனக்குதா தெரியும்ல கண்ணு இன்னைக்கு நாம இம்புட்டு நல்ல நிலமைல இருக்கோம்னா அதுக்கு காரணம் என்னோட பெரியம்மாதான். பெரியம்மா எங்க அம்மாவோட பெரியப்பா மகதான் அப்படி இருந்தும் உங்க அப்பா அல்லா சொத்தையும் குடிச்சி அழிச்சிட்டு நம்மல தனியா தவிக்க வுட்டுபோட்டு போனதுல நா உங்க ரெண்டுபேரையும் வச்சிட்டு தவிச்சிட்டு நின்னப்ப உன்ற மாமன்கூட நம்மல கண்டுக்கல ஆனா பெரியம்மா மட்டும்தான் நமக்கு உதவி செஞ்சாங்க..அப்படி பட்டவங்களுக்கு ஒரு கஷ்டம் வரும்போது நாம வேடிக்கை பாத்துட்டு நின்னா அது பெரிய பாவம் கண்ணு அதுதா பெரியம்மா ஏங்கிட்ட கேட்டவுடனே உன்றகிட்டக் கூட கேக்காம சரினு சொல்லிப்போட்டேன். என்ன மன்னிச்சிப்போடு கண்ணு என்றவர் கண்கலங்கினார்..

ஐயோ அம்மா நீங்க போய் என்றகிட்ட மன்னிப்பு கேக்கரிங்க முதல்ல கண்ண துடைங்ம்மா நா அம்மாச்சியோட பேரன கட்டிக்குறேன் என்றாள்…

ரொம்ப சந்தோசம்டா கண்ணு…கண்ணு கங்கா அண்ணி நல்லவங்கதான் அவங்க எதாவது கோபத்துல பேசுனாக்கூட பொருத்துபோக்கண்ணு எல்லாம் போகபோக சரியாயிடும்.

சரிங்ம்மா…

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த நந்தினி முகூர்த்தத்துக்கு நேரமாகிடுச்சுனு அப்பத்தா கூட்டிட்டு வர சொன்னாங்க அத்தை என்றாள்.

சரி கண்ணு கூட்டிட்டு போ என்றவர் நந்தினியுடன் தமிழை அனுப்பி வைத்தார்…

சாதாரன அலங்காரத்திலே அழகாக இருந்தவள் இப்போது அவர்களின் பரம்பரை நகை அணிந்து முகத்திற்கு இன்னும் கொஞ்சம் மேக்கப் போட்டு அழகு தேவதையாக வந்தாள்..

சரவணபாண்டியன் அருமைக்காரர் சொல்வதை கடமைக்கு செய்து கொண்டிருந்தான்.. தமிழ் வருவதற்கு முன்பே அகிலாண்டேஷ்வரி தன் பேரனை சம்மதிக்கவைத்து மணமேடையில் கூட்டிவந்து அமரவைத்துவிட்டார்… அவரின் பிடிவாதத்தின் முன்னால் பிடிவாதம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது…மணமேடையில் அமர்ந்திருந்தவனின் மனம் உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தாலும் முகத்தில் எதையும் காட்டாமல் அமர்ந்திருந்தவனிடம் அருமைக்காரர் மாங்கல்யத்தை எடுத்து அவனின் கையில் குடுத்தார்..

அதனை வாங்கியவன் தன் அருகில் அமர்ந்திருந்தவளின் முகத்தை ஏறேடுத்தும் பாக்காமல் பொன்தாலியை கழுத்தில் மாட்டிவிட்டு அதில் சுற்றி வைத்திருந்த மஞ்சள் கயிரை மூன்று முடிச்சிட்டு தமிழரசியை தன் சரிபாதியாக ஆக்கிக்கொண்டான்…

தலையை குனிந்திருந்தவளின் பார்வையில் அவன் கட்டிய தாலி தன் மார்பினை தொடவும் அதனை பார்த்தவளின் மனதில் வெறுமை மட்டுமே இருந்தது.. அதே மனநிலையில் மீதி இருந்த கல்யாண சடங்கை செய்ய ஆரம்பித்தாள்..

திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்ததும் மணமக்கள் இருவரும் வேவ்வேறு மனநிலையில் வீட்டிற்கு வந்தனர்…

வாசலில் கார் வந்து நின்றதும் அதிலிருந்து இறங்கிய சரவணபாண்டியன் வேகமாக வீட்டினுல் செல்வதை பார்த்த அகிலாண்டேஸ்வரி பாண்டியா கொஞ்சம் நில்லு கண்ணு கண்ணாலம் ஆகி புருசன் பொண்டாட்டி ரெண்டுபேரும் முதன் முதலா வூட்டுக்கு வர்ரிங்க ஆலமெடுத்துதான் உள்ள போவோணும் கண்ணு என்றார்..

அவரை முறைத்து பார்த்தாலும் அவர் சொன்னதுக்காக வெளியவே நின்றிருந்தான்…

பெரிய மருமகளை பார்த்து கங்கா என்ன மசமசனு நின்னுட்டு இருக்க போய் ஆரத்தி கரைச்சி எடுத்துபோட்டு வா என்றார்…

இப்போ அது ஒன்னுதான் குறைச்சல் என கோபமாக கூறிவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார்…

அவரின் பின்னால் சென்ற ராதிகா அக்கா இப்போ நீங்க கோபபட்டு எதுவும் மாறப்போறது இல்லை வந்து ஆரத்தி எடுங்க்கா இல்லைனா வூர்ல இருக்கரவங்க தப்பா பேசுவாங்க…

ம்கும் இங்க என்ற மகன் வாழ்க்கையே போச்சுனு நா இருக்கேன் நீ என்னடானா வூர்ல தப்பா பேசுவாங்கனுட்டு இருக்க…

அக்கா இனி நம்மலால எதுவும் மாத்தமுடியாதுங்க்கா ப்ளீஸ்க்கா எழுந்து வாங்க…

அம்மா அதா பெரியம்மா முடியாதுனு சொல்லாங்கல அவங்கல ஏன் வற்புருத்தர

அடியே நீ செத்த வாய மூடிட்டு இருடி என மகளை கடிந்தவர் அக்கா நா சொல்ரத கேளுங்க்கா…

இங்க பாரு ராதிகா என்னால எல்லாம் அவளுக்கு ஆரத்தி எடுக்கமுடியாது வேணும்னா நீயே போய் எடு…

கங்காவின் பிடிவாதத்தை பார்த்தவர் வேரு எதும் பேசாமல் தானே ஆரத்தி கரைத்து எடுத்து சென்று மணமக்களுக்கு ஆரத்தி சுற்றி வரவேற்றார்…

ஆரத்தி எடுத்ததும் உள்ளே சென்ற சரவணன் கோபமாக தனது அறைக்கு சென்று கதவை அறைந்து சாற்றினான். அதிலையே அவனின் கோபம் தெரிந்தது….

அதை பார்த்த தமிழ் மனதில் பெரும் அடிவாங்கினாள் இனி இந்த வீட்டில் தன்னுடைய வாழ்வு எவ்வாறு இருக்கபோகிறது என்ற பயம் மனதில் எழுந்தது…

தன் கணவனின் அறைக்கதவையே பார்த்துக்கொண்டிருந்தவளிடம் வந்த அகிலாண்டேஷ்வரி கண்ணு நீ எதும் தப்பா நினச்சிக்காதடா அவன் கோபத்துல இருக்கான் கொஞ்சநாள் போனா எல்லாம் சரியாயிடும் என்றவர் வந்து விளக்கேத்தி சாமி கும்பிடு என்றார்.

தமிழ் தனது புகுந்த வீட்டில் விளக்கேத்தி சாமி கும்பிட்டதும் நந்தினி கண்ணு உன்ற அண்ணிய உன்னோட அறைக்கு கூட்டிட்டு போடா செத்தநேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார் அப்பத்தா…

அப்போது யசோதா பெரியம்மா நானும் எழிலும் போயிட்டுவறோம் என்றார்..

ஏங்கண்ணு அதுக்குள்ள போறேங்ர இன்னைக்கு இருந்துபோட்டு நாளைக்கு போலாம்ல நீ இருந்தினா பேத்திக்கும் ஒரு ஆருதலா இருக்கும்ல என்றார்…

இல்லைங் பெரியம்மா அங்க வூட்ல ஆடு,மாடு அல்லாம் சும்மா கெடுக்குது அதுவுமில்லாம அத்தைக்கிட்ட ஒருவார்த்தைக்கூட சொல்லாம திடிர்னு தமிழுக்கு கண்ணாலம் வேர ஆயிடுச்சு. அத்தைகிட்ட மத்தவங்க போய் தகவல் சொல்ரதுக்குள்ள நாம்போய் சொல்ரதுதான் மரியாதை. அவளுக்கும் பொறந்தவூட்டு சீர் செய்யோணும்ல அதுக்கு நா போனாதா சரியா இருக்கும் என்றார்…

யசோதா சொல்வதிலும் நியாயம் உள்ளதால் சரி கண்ணு செத்த நேரம் புள்ளைக்கிட்ட பேசிபோட்டு போ..

சரிங் பெரியம்மா என்றவர் தமிழை நந்தினி கூட்டிச்சென்ற அறைக்கு சென்றார் அவருடனே எழிலரசியும் சென்றாள்…

நந்தினி தமிழை கூட்டிவந்து அறையில் விட்டுவிட்டு சென்றதும் தமிழரசி அந்த அறையை சுற்றிபார்க்கக்கூட மனமில்லாமல் அங்கிருந்த கட்டிலில் உட்கோர்ந்தவாறு கண்களில் கண்ணீருடன் விட்டத்தை வெறித்தாள்…

தமிழரசி இருந்த அறைக்கு வந்த யசோதாவும் எழிலரசியும் அவள் உட்கோர்ந்திருக்கும் நிலை பார்த்தும் அவளின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை புரிந்து கொண்டனர்.

கண்ணு…என அழைத்தவாறு அவளின் அருகில் சென்று உட்கார்ந்தார்..

தன் தாயின் குரலை கேட்டதும் சுயநினைவுக்கு வந்தவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு அம்மா…என்றாள்.

என்றா கண்ணு அம்மா மேல கோபமா??

இல்லை என தலையாட்டியவள் எனக்கு பயமா இருக்கும்மா என்றாள்…

அவளின் கையை எடுத்து தனது மடியில் வைத்துகொண்டு கண்ணு இந்த பயம் கண்ணாலம் ஆகி போர எல்லா பொண்ணுங்களுக்கும் வரதுதான்டா. அதுலையும் உன்னோட கண்ணாலம் அவசரத்துல நடந்துடுச்சு.. கொஞ்சம் அனுசரிச்சி போனினா எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாயிடும் கண்ணு. அண்ணி கோபத்துல எதாவது சொன்னா பொருத்து போடாம்மா. இனி இதுதா கண்ணு உன்ற வூடு அத மட்டும் மறந்து போடாதடாம்மா..

சரிங்ம்மா..

சரி கண்ணு நா வூருக்கு போயிட்டு ரெண்டுநாளுக்குள்ள உனக்கு செய்யவேண்டிய சீரோட வரேன் கண்ணு.நாளைக்கு நீ ஒன்னுமில்லாம வந்தேனு இங்க ஆரும் நாக்குமேல பல்லபோட்டு சொல்லிப்போடக்கூடாது.

அம்மா எனக்கு மாத்துதூணி??

நா வூட்டுக்கு போய் வேலு தம்பிகிட்ட குடுத்து விடறேன் கண்ணு.

சரிங்ம்மா..

எழில்கண்ணு வா போலாம் என்றவர் எழுந்து வெளியே சென்றார்.

அவள் கண்ணீருடனே அக்கா போயிட்டு வாறேன் என்று கூறிவிட்டு தனது அம்மாவுடன் வெளியே சென்றாள்..

அவர்கள் செல்வதை கண்ணீருடனே பார்த்தவள் அவர்களை அனுப்ப பின்னால் வந்து நின்றாள்.…

வெளியே வந்த யசோதா அகிலாண்டேஷ்வரிடம் பெரியம்மா நாங்க போயிட்டு வறோம் என்றார்..

சரி கண்ணு நீ புள்ளைய பத்தி எதும் நினச்சி கவலைப்படாத நா என்ற பேத்திய பாத்துக்கறேன்.

நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்னங் பெரியம்மா கவலை என்றவர் அவர்களின் பின்னால் வந்து நின்ற தனது மகளை பார்த்தவர் திரும்வும் அதே வார்த்தையை கூறினார். கண்ணு இனி இதுதான்டா உன்ற வூடு இங்க இருக்கரவங்கத்தா உன்னோட சொந்தம் அத மட்டும் மனசுல வச்சிக்கோடா அவரின் வார்த்தையில் உள்ள அர்த்தம் தமிழுக்கு நன்றாகவே புரிந்தது…

சரிடா கண்ணு அம்மா போயிட்டு வறேன்டா என்றார்..

அவர் போறேனு சொன்னதுமே அவரை கட்டிக்கொண்டு அழுதாள்…

அவளை சாமாதான படுத்திவிட்டு யசோதாவும் எழிலும் கிளம்பி சென்றனர்…

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here