நேசவிதை தூவும் காரிகையவள்…4

0
101

பகுதி.4

வெள்ளனவே எழுந்து பாலை கறந்து எடுத்துக்கொண்டு தொழுவத்திலிருந்து வீட்டிற்கு வந்தவர் மாடிப்படியில் தயக்கத்துடனே நின்று கொண்டிருந்தவளைப் பார்த்து அவள் அழகில் ஒரு நிமிடம் வியந்துதான் போனார்…அவரின் நினைவில் இந்த வீட்டிற்கு மருமகளாகக் கொண்டு வர இருந்த பெண்ணின் முகம் நினைவில் வந்து அவரையறியாமலே இருவரையும் ஒப்பிட்டு பார்த்தது. விடியற்காலையே குளித்துவிட்டு சேலை உடுத்தி மங்களகரமாக வந்து நின்றவளையும் தங்கள் குடும்பம் வீட்டிற்கு வர இருப்பது தெரிந்தும் தாங்கள் சென்றபின்னே தூங்கி எழுந்து அப்படியே வந்து நின்றவளையும் ஒப்பிட்டுப் பார்த்து தாங்களாகத் தேடிக் கொண்டு வர இருந்தவளை விட தமிழை பார்த்ததும் அவரின் மனம் தன் மகனுக்கு ஏற்ற துணை இவள்தான் என்று அடித்துச் சொன்னது. அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் வாசல் படியிலையே நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவளை பார்த்தவாறே வாசல் படியலையே நின்றிருந்த சின்ன மாமியாரின் அருகில் சென்றவள் தயக்கத்துடனே “அத்தை…” என்றழைத்தாள்…

அவள் குரலில் சுயநினைவிற்கு வந்தவர் ‘என்ன’ என விழிகளாலேயே கேட்டார்?

“நா என்ன வேலை செய்யோனும்னு சொல்லுங்க அத்தை” செய்கிறேன்.

“அதலா நீ எதும் செய்யவேண்டாம் நானே செஞ்சிக்குறேன் நீ போ.”

“ப்ளீஸ்! அத்தை சும்மா உட்கார்ந்துருக்க ஒருமாதிரி இருக்கு எதாவது சொல்லுங்க.”அவள் கெஞ்சவும், “வாசல் தெளிச்சிவிட்ருக்கேன் நீ போய் வாசல கூட்டிப்போட்டு கோலம் போடு” கோல மாவு இருக்கும் இடத்தையும் காட்டிவிட்டு உள்ளே சென்றார்.

தமிழ் கோலம் போடுவதை பார்த்த அந்த வீதியில் சென்றவர்கள் அனைவரும் அவளிடம் ஒருவார்த்தையாவது பேசிவிட்டே சென்றனர்…

ஊர்கார்களின் அன்பான பேச்சு தமிழின் மனதை சந்தோச படுத்தியது என்றால் அது மிகையாகாது…

அதே மகிழ்ச்சியுடன் கோலம் போட்டுக்கொண்டிருக்கும்போதே வெள்ளனவே எழுந்து தோட்டத்திற்குச் சென்று விட்டு வந்தவன் புல்லட்டை வாசலில் நிறுத்திவிட்டு அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் வீட்டிற்குள் சென்றான்…

அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றவள் கணவன் தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் சென்றது முகத்தில் அறைந்ததை போல் உணர்ந்தாள். இவ்வளவு நேரம் இருந்த இதமான மனநிலை மறைந்து வெறுமை சூழ்ந்தது…

கோலம் போட்டு முடித்துவிட்டு உள்ளே சென்றவளை அறையில் உட்கார்ந்திருந்த அப்பத்தா “என்றா கண்ணு வெள்ளனவே எழுந்துபோட்டியா?” என்று கேட்டார்.

“ஆமாங் அம்மச்சி எங்க வீட்லையும் வெள்ளனவே எழுந்துபோடுவேனுங்”.

“சரிடா கண்ணு வா வந்து உட்கோர்.”

“இல்லைங் அம்மச்சி எதாவது வேலை இருந்தால் சொல்லுங்க நா செய்கிறேன்.”

“இன்றைக்கே வேலை செய்யோனும்னு எந்த அவசியமும் இல்லை கண்ணு நீ வந்து உட்கார் உன்ற கிட்டக் கொஞ்சம் பேசோனும்.”

அவரின் அருகில் சென்று கீழே உட்கார்ந்தவள், “சொல்லுங் அம்மச்சி என்ன பேசோணும்?”

“மேல எழுந்திருச்சி உட்காருடா கண்ணு”

“இல்லை வேணாம்ங் அம்முச்சி நா இங்கனையே உட்கார்ந்துக்குறேன் நீங்க சொல்லுங்க.”

“மரியாதை மனசில் இருந்தால் போதும் கண்ணு நீ எழுந்து வந்து என்ற பக்கத்தில் உட்கோர்” அவர் வற்புறுத்தவும் எழுந்து அவர் அருகில் உட்கார்ந்தாள்…

“ஏங்கண்ணு நேற்று ராத்திரி பாண்டியன் எதாவது கோபமா பேசி போட்டானா? அப்படி எதாவது சொன்னா அத மனசில் வச்சுக்காதடாம்மா எல்லாம் போகப் போகச் சரியாகிடும்.”

அப்பத்தாவின் கேள்வியில் குழப்பமடைந்தவள் அம்மாச்சி! மாமா ராத்திரி வூட்டுக்கு வந்தாரா? என அவரையே திருப்பிக்கேட்டாள்.

அவளின் கேள்வியில் ஆச்சரியமடைந்தவர் “ஏங்கண்ணு!அப்போ உனக்கு அவன் வந்தது தெரியாதா?”

“தெரியாதுங் அம்மச்சி நா தூங்கி போட்டேன் காலையில் எழுந்திருச்சு பார்த்தா மாமா அறையில் இல்லை அதான் மாமா ராத்திரி வூட்டுக்கு வரலையோனு நினச்சிபோட்டேனுங் அம்மச்சி” என தயக்கத்துடனே கூறினாள்.

அகிலாண்டேஸ்வரிக்குத் தனது பேரன் அவனது கோபத்தை தன் பேத்தியிடம் காட்டவில்லை என்பதை கேட்டதும் இவ்வளவு நேரம் இருந்த மனக்கவலை விலகியது.

“சரிடா கண்ணு இன்றைக்கு நாம குலதெய்வக் கோவிலுக்குப் பொங்கல் வைக்க போவோணும் நீயும் போய் கிளம்பி வாடா கண்ணு.”

அவரிடம் தலையாட்டியவள் மாமா ராத்திரி அறையில்தான் வந்து தூங்குனாங்ளா? என யோசித்தவாறே எழுந்து படியேறி தன் அறைக்குச் செல்ல ஆரம்பித்தாள்..

அவள் யோசனையுடனே அறையில் தன் கணவன் இருப்பதை மறந்து உள்ளே சென்றவள், சரவணபாண்டியன் அப்போதுதான் குளித்து முடித்து இடுப்பில் துண்டுடன் குளியலறையிலிருந்து வெளியே வந்தவனைப் பார்த்ததும் அவன் கோபத்தில் திட்டப்போகிறான் என்ற பயத்தில் தலை குனிந்தவாறே “சாரிங் மாமா நா எதோ யோசனையில் வந்துபோட்டேன்”எனக் குரலில் தடுமாற்றத்துடனே கூறினாள்.”

அவளின் பயத்தையோ, தடுமாற்றத்தையோ கண்டுகொள்ளாமல் அவன் பாட்டுக்குக் கிளம்ப ஆரம்பித்தான்.

சில நிமிடங்கள் ஆகியும் அவனிடம் இருந்து எந்த பதிலும் வராததால் தலையை நிமிர்ந்து பார்த்தவள் அவன் வேட்டி கட்டி முடித்துவிட்டு சட்டையைப் போட்டு முழுக்கை மடக்கிவிட்டுக்கொண்டிருக்கவும் ஆச்சரியமாக அவனை பார்தவாறே ‘ஒன்று கோபபடோணும், இல்லையென்றால் பரவலானாவது சொல்லோணும் ஆனால் இவர் என்ன எந்த ரியாக்சனுமே காட்டாமல் இருக்கிறார்’ மனதில் நினைத்தவாறே அவனையே வெறித்தாள்.

அங்கு ஒருத்தி தன்னை பார்ப்பதைக்கூட கண்டுகொள்ளாமல் அவன்
பாட்டுக்குக் கிளம்பி வெளியே சென்றான்.

சிறிது நேரம் கழித்து கீழே அப்பத்தாவின் குரல் கேட்கவும் சுயநினைவுக்கு வந்தவள் அறையில் அவனைக் காணாததால் ‘அட ச்சீ இப்படியா அவங்க வெளியே போனதுகூட தெரியாமல் நிப்ப’ என தன்னையே கடிந்துகொண்டு கோவிலுக்குத் தயாரானாள்.

அவர்கள் கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்துவிட்டு வந்த மறுநாள் யசோதா மகளுக்குச் சீர் எடுத்துகொண்டு மகளையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்கு அழைக்கச் சொந்தபந்தத்துடன் அகிலாண்டேஸ்வரியின் வீட்டிற்கு வந்தார்.

சொந்தங்கள் சூழ மகளுக்குச் சீர்வரிசையோடு வந்து நின்ற அம்மாவையும்,அப்பத்தாவையும் பார்த்ததும் தமிழரசி கண்கலங்கியவாறே ஓடிச்சென்று அவரின் கைகளைக் கோர்த்துக்கொண்டு “அப்பத்தா!” என்றழைத்தாள்…

“நல்லாருக்கியா கண்ணு?”

“நல்லாருக்கேனுங் அப்பத்தா”.

அகிலாண்டேஸ்வரி,வா யசோதா,வாங்கம்மா எல்லாரும் உள்ள வந்து உட்கோருங்க என அனைவரையும் வரவேற்று உட்கோர வைத்தவர் சமையலறையில் இருந்த மருமகள்களை அழைத்து அனைவருக்கும் மோர் கொண்டுவரச் சொல்லிவிட்டு உட்கார்ந்தார்.

“ராதிகா, அக்கா எல்லாரும் வந்துபோட்டாங்க போல வாங்கப்
போய் வாங்கனு கேப்போம்.”

“கங்கா, நா வரலை நீ போ ராதிகா.”

“ராதிகா, நீங்க வரலைனா தப்பா நினைப்பார்கள் வந்து ஒருவார்த்தை வாங்கனு கேட்டுபோட்டு வந்துடுங்கஅக்கா”

ஆரு என்ன நினச்சா எனக்கென்ன வந்தது நீவேனா போய் எல்லாரையும் வாங்கனு கேளு ஆனால் நா வரமாட்டேன் ராதிகா எவ்வளவு சொல்லியும் கங்கா பிடிவாதமாக இருக்கவும் ராதிகாவே அவர்களுக்கு மோர் எடுத்துக்கொண்டு வெளியே வந்து அனைவருக்கும் கொடுத்தார்.

ராதிகா எங்க கங்காவ காணோம்? மெதுவாக சின்ன மருமகளிடம் கேட்டார் அகிலாண்டேஸ்வரி.

அத்தை அக்கா சமச்சிபோட்டு இருக்காங்க அப்பரமா வறேனு சொன்னாங்க என மாமியாருக்கு மட்டும் கேட்குமாறு பதில் கூறினார் .

ஆனால் ராதிகா எவ்வளவுதான் மெதுவாகக் கூறினாலும் அது அகிலாண்டேஸ்வரியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த யசோதாவும் அவரின் மாமியாருக்கும் கேட்டது.

கங்காவின் கோபம் இன்னும் குறையவில்லை என்பதை இருவருமே புரிந்துகொண்டனர்.

அப்போது அங்கு வந்த இளமாறனும் அனைவரையும் வரவேற்றான்.

“யசோதா,அகிலாண்டேஸ்வரியிடம் பெரியம்மா! அண்ணா, மாப்பிள்ளை எல்லாம் எங்க காணாம்?”என்று கேட்டார்.

“உன்ற அண்ணன்ங்க இரண்டுபேரும் தோட்டத்துக்கு போயிருக்கிறார்கள் இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துபோடு வாங்கக் கண்ணு பாண்டியன் அறைலதான் இருக்கிறான் இரு வர சொல்லின்” என்றவர் அருகில் நின்ற இளமானிடம் “உன்ற அண்ணன கூட்டி வா கண்ணு” என்றார்.

இளமாறனுடன் கீழே வந்த சரவணபாண்டியன் சம்பிரதாயத்துக்காக அனைவரையும் வரவேற்றுவிட்டு அமர்ந்தான்.

சிறிது நேரத்திலே தோட்டத்திற்குச் சென்றிருந்த தென்னரசும், முத்தரசும் வீட்டிற்கு வந்தவர்கள் வந்திருந்தவர்களை வரவேற்று விட்டு அவர்களுடன் பேச ஆரம்பித்தனர்…

யசோதா கொண்டுவந்திருந்த நகை,பணம் வைத்திருந்த சூட்கேஷை அகிலாண்டேஸ்வரியிடம் கொடுத்தவாறே பெரியம்மா இதில் முப்பது சவரன் நகையும்,ரெண்டுலட்சம் பணமும் இருக்கிறது.என்னால இப்போதைக்கு இம்புட்டுதா செய்யமுடிந்தது இத வாங்கிக்கோங்க பெரியம்மா.

இத எதற்குக்கண்ணு என்றகிட்ட கொடுக்கர?உன்ற மருமகன்கிட்டையும் மககிட்டையும் கொடு அவங்களுக்குதானே கொண்டுவந்த?

அப்பத்தா சொன்னதைக் கேட்டதும் சரவணபாண்டியன் அப்பத்தா! அதை அவங்க மகள்கிட்டையே கொடுத்து போட சொல்லுங்க என்றவன் எழுந்து வெளியே செல்ல ஆரம்பித்தான்..

பாண்டியா நின்னு! அப்பத்தாவின் கடுமையான குரலில் வெளியே செல்லப்போனவன் அப்படியே நின்றான்.

பாண்டியா என்ன பழக்கம் இது யசோதா உங்க இரண்டுபேரையும் அவங்க வூட்டுக்கு அழச்சிட்டு போகத்தான் வந்திருக்கா ஆனால் நீ பாட்டுக்கு பதிலையே வெளியை போனா என்னர்த்தம் என குரலில் அழுத்தத்துடன் கேட்கவும்,சரவணனும் அதே அழுத்தமான குரலில் அவங்க பொண்ண மட்டும் கூட்டிட்டு போய்விட்டுக் கொண்டுவந்து விட சொல்லுங்க என்னால இப்போ எங்கேயும் போகமுடியாதுங் அப்பத்தா என்றவன் வேகமாக வெளியே சென்றான்.சரவணபாண்டியனுக்கு யாசோதா கல்யாண மண்டபத்தில் தன் அப்பத்தா அவரின் பொண்ணு கேட்டதும் அவர் உடனே ஒத்துக்கொண்டது தன்னிடம் இருந்த பணத்துக்காகத்தான் என்று தப்பாக புரிந்துகொண்டிருக்கிறான் அந்த வெறுப்பே இன்று அப்பத்தா தன்னை அங்கு போகச்சொல்லவும் காண்பித்துவிட்டு வெளியே வந்துவிட்டான். இருந்தாலும் அத்தனை பேர் முன்னால் அவரை மதிக்காமல் வந்தது அவனின் மனதை உறுத்தியது.

அவனின் பதிலில் அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியுடனே வெளியே சென்றவனையே பார்த்தனர்…

நீ தப்பா எடுத்துக்கொள்ளாத யசோதா பாண்டியன் கண்ணாலத்தில் நடந்த பிரச்சனையில் கொஞ்சம் கோபத்தில் இருக்கான் நா அவன சாமாதானபடுத்தி உன்ற வூட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்…

பரவாலைங் பெரியம்மா மாப்பிள்ளைக்கு என்றைக்கு என்ற வூட்டுக்கு வரோணும்னு தோணுதோ அன்னைக்கே வரட்டும் உள்ளுக்குள் வருத்தமிருந்தாலும் அதனை மறைத்துக்கொண்டு பேசினார்.

அப்பத்தாவினால் யசோதாவின் வலியை புரிந்துகொள்ள முடிந்தது.யசோதாவின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டு நீ உன்ற மகள பத்தி எதுவும் கவலைப்படாத கண்ணு நா இருக்கிறேன் என்றவர் தமிழு கண்ணு அம்மாவையும் அப்பத்தாவையும் உன்ற அறைக்குக் கூட்டிப்போடா…

“சரிங் அப்பத்தா” என்றவள் அவர்களைக் கூட்டிக்கொண்டு தனதறைக்குச் சென்றாள்..

அறைக்கு வந்ததும் தமிழ், “ஏனுங்ம்மா எழில கூட்டிவராம வந்திங்க?”

எல்லாரும் வந்துட்டா ஆடு,மாடெல்லாம் ஆரு கண்ணு பாத்துக்கரது வயலில் களைவெட்ட ஆள் வந்துருக்காங்க அதான் எழில வூட்லையே விட்டுபோட்டு வந்துட்டோம் கண்ணு என்றார் யசோதா.

அம்மா சீர் செய்ய உடனே எப்படிம்மா இம்புட்டு பணம் வந்தது??ஆருகிட்டையாவது கடன் வாங்குனிங்ளா?

உன்ற கண்ணாலத்துக்கு ஆகும்னு பேங்ல போட்டுவச்சிருந்த பணம்தாங்கண்ணு பத்தாதற்கு வெளியில் கொஞ்சம் கடன் வாங்குணோம் கண்ணு.

ஏன்ம்மா இப்போ கடன் வாங்கிதா சீர் செய்யோணும்னுங்ர என்ன அவசியம் வந்தது?

புரியாமல் பேசாத தமிழ் இதலா செய்யலைனா இந்த வூட்ல உனக்கு மரியாதை இருக்காது கண்ணு, நீ இதபத்திலா எதுவும் யோசிக்காத அம்மா பாத்துக்கறேன். நீங்க நல்லாருந்தா போதும் உங்களுக்காக அம்மா எம்புட்டுவேனாலும்

‘ம்க்கும் அது ஒன்னுத்தா குறைச்சல் இந்த வூட்ல ஒரு வார்த்தை பேசக்கூட யோசிக்கராங்க அம்மச்சியும், இரண்டு மாமாக்களும் இல்லையென்றால் பைத்தியமே புடிச்சிடும்’ என மனதில் நினைத்துக்கொண்டாள்.

அப்பத்தா,ஏங்கண்ணு உன்ற புருசன் உன்றகிட்ட நல்லா பேசரானா?”

“ம்ம் பேசராங்க அப்பத்தா”

சரிடா கண்ணு ஆரு எது சொன்னாலும் கொஞ்சம் பொருத்துப்போ கண்ணு எல்லாம் போகப்போக சரியாகியிடும்.

“சரிங் அப்பத்தா”

யசோதா,இன்னைக்கு உன்னையும் மாப்பிள்ளையும் நம்ம வூட்டுக்கு கூட்டிப்போய் விருந்து போடலாம்னுதா வந்தோம் ஆனா மாப்பிள்ளை வரலைனு சொன்னதுக்கப்பரம் உன்ன மட்டும் கூட்டிப்போன அது நல்லாருக்காது இன்னொரு நாளைக்கு மாப்பிள்ளையும் உன்னையும் வந்து அழச்சிபோட்டு பேறேன் தமிழ்.

அவள் தலையாட்டவும் அவளின் தலையை தடவிக்கொடுத்தவாறே சரிடா கண்ணு நாங்க கெளம்பறோம்.இன்னொரு நாளைக்கு வறோம்.

அம்மா இன்னும் கொஞ்சநேரம் இருந்துபோட்டு போங்கம்மா…

இல்லை தமிழ் நானும் அப்பத்தா மட்டும் வந்துருந்தோம்னா பரவாலை நம்ம சொந்தக்காரர்களும் வந்துருக்காங்க அவங்களுக்கும் வேர சோலிகிடக்கும்ல

சரிங்ம்மா போயிட்டு வாங்க மனதே இல்லாமல் அவர்களை அனுப்பி வைத்தாள்.

கீழே வந்தவர்கள் சாப்புட்டுபோட்டு சொந்தங்களுடன் கிளம்பி சென்றனர்..

அவர்கள் சென்றதும் மீண்டும் அதே தனிமை அவளை ஆட்கொண்டது…

கோபத்துடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சரவணபாண்டியனை ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் உட்கார்ந்திருந்த அப்பத்தாவின் கோபமான முகமே வரவேற்றது…

வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே வந்தனின் பார்வையில் அப்பத்தாவின் கோபமான முகத்தை பார்த்ததும் எதுவும் பேசாமல் அவரை கடந்து செல்லபோனவனை “பாண்டியா இங்க வந்து உட்கார்”என்ற அப்பத்தாவின் கடுமையான குரல் தடுத்து நிறுத்தியது.

அவனை மட்டுமில்லாமல் அகிலாண்டேஸ்வரியின் கோபமான குரல் கேட்டு சமயலறையில் இருந்த கங்காவும்,ராதிகாவும் ஹாலிற்கு வந்தனர்.அறையில் இருந்த இளமாறனும்,தமிழரசியும் பதற்றமாக வந்துநின்றனர்..

அனைவரையும் ஒருமுறை பார்த்தவர் தன் அருகில் உட்கார்ந்திருந்த மூத்தமகன் தென்னரசுவை பார்த்து “தென்னரசு இந்த வூட்ல எல்லாரும் எனக்கு வயசாகிடுச்சு அதனால இனி என்ற வார்த்தைக்கு மரியாதை குடுக்கதேவை இல்லைனு முடிவு பண்ணிபோட்டிங்ளா?”

“என்னங்ம்மா பேசரிங்க? இந்த வூட்ல உங்க வார்த்தைய நாங்க என்னைக்கு மீறி இருக்கோம் அம்மா.”

“அப்படி தெரியலை தென்னரசு.இன்னைக்கு யசோதா சொந்தங்களோட நம்ம வூட்டுக்கு வந்துருக்கா ஆனா உன்ற பொண்டாட்டி அவங்கல வாங்கனு ஒரு வார்த்தை கூப்படல உன்ற பொண்டாட்டி அவங்கல மட்டும் அசிங்கப்படுத்தல என்னையும் சேத்திதான் அசிங்கபடுத்திருக்கா.” அவர் கோபமாக பேசவும்,

தென்னரசு,ஏய் என்னடி குத்துக்கல்லாட்டம் நின்னுட்டு இருக்க அம்மா கேக்கராங்கல பதில் சொல்லு?

கங்கா,என்ன பதில் சொல்லோணும்னு சொல்ரிங்க?உங்க தங்கச்சி நம்மகிட்ட இருக்க பணத்த பாத்துதானே உங்க அம்மா கேட்டதும் பல்ல இளிச்சிட்டு பொண்ணா குடுத்தா?ஒன்னுமில்லாத குடும்பத்துக்கு மரியாதை ஒரு கேடா? நம்ம கால்தூசிக்குகூட ஆகாத உங்க தங்கச்சியையும் தங்கச்சி சொந்தக்காரங்களையும் நா வாங்கனு கேக்கோணுமாக்கும் என்னால முடியாது.”

தமிழுக்கு தன் மாமியாரின் கீழ்தரமான பேச்சை கேட்டு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது தான் எதாவது பேசபோனால் அது இன்னும் தன் அம்மாவுக்குதான் கெட்டப்பேர் வரும் என்பதால் தன் கோபம் அத்தனையையும் அடக்கொண்டு அமைதியாக நின்றாள்..

தென்னரசு,ஏய்! என்னடி ஆரபாத்து என்ன வார்த்தை சொல்லர என கோபமாக கத்திக்கொண்டே கங்காவை அடிக்க கை ஓங்கிவிட்டார்…

தென்னரசு…

அண்ணா…

அப்பா…

அனைவரும் பதட்டமாக கத்திக்கொண்டே அவரை தடுத்து பிடித்தனர்..

சரவணபாண்டியனால் இன்னும் தன் அம்மா பேசியதை கேட்டு அவரை நம்பமுடியாமல் பார்த்து கொண்டிருந்தவன் அதற்கு பதில் தன் தந்தை அம்மாவை அடிக்க கை ஓங்கியதை பார்த்ததும் ஓடிப்போய் தடுத்து பிடித்தான்.

“தென்னரசு என்ன பழக்கம் கட்டுனவல நாலுபேர் முன்னாடி கை நீட்ர” அகிலாண்டேஸ்வரி கோபமாக தென்னரசுவை திட்டயதும்,”பின்ன என்னங்ம்மா இவ எப்படி பேசரா பாருங்க தங்கச்சிய பத்தி இவளுக்கு என்ன தெரியும்?”

அப்பவும் கங்கா அடங்காமல் “இப்போ நா என்ன தப்பா சொல்லிபோட்டேன் நீங்க என்ன அடிக்கவரிங்க”

“ஓஓ… உனக்கு இன்னும் நீ பேசுனது தப்பாவே தெரியலை அப்படிதானேடி”

தென்னரசு நீ செத்த அமைத்தியா இரு நா பேசிக்குறேன் கங்காவின் முன்னால் வந்து நின்றவர் என்ன மருமகளே உன்றகிட்ட இருக்க பணத்த பாத்துத்தா என்ற மக பொண்ணக்குடுத்தானு நினச்சியா?கிடையவே கிடையாது நா கேட்ட ஒரே காரணத்துக்காக நம்ம குடும்ப மானம் போயிடக்கூடாதுங்ரதுக்காக அவளோட மாமியார்கிட்டக்கூட கேக்காம சரினு சொன்னா அவளப்போய் பணத்த பாத்து பல்ல இளிச்சிகிட்டு பொண்ண குடுத்தானு சொல்ர?அவ புருசன பறிகுடுத்துபோட்டு கஷ்டப்பட்ட காலத்துலக்கூட நாங்குடுத்த பணத்த வாங்கிக்க மாட்டேனு சொல்லிட்டு அவளோட உழைப்பும்,தன்னம்பிக்கையாலையுமே அவ இன்னைக்கு நல்லநிலமைக்கு வந்துருக்கா. யசோதாவ என்ன ஒன்னுமில்லாதவனு நினச்சிக்கிட்டாயா?? இப்பவும் பத்து ஏக்கரா பூமீ அவகிட்ட இருக்கு அது போதும் அவ பொண்ண நல்ல இடத்துல கட்டிக்குடுக்க உன்றகிட்ட இருக்க பணத்த பாத்து அவ பொண்ணகுடுக்கவே இல்லை எனக்காகத்தா குடுத்துருக்கா புரியுதா?இனி ஒரு வார்த்தை என்ற மகளையும் பேத்தியையும் தப்பா பேசுனா நா மனுசியாவே இருக்கமாட்டேன் மருமகளிடம் கோபமாக பேசியவர் தன் பேரனை பார்த்து உனக்கும் சேர்த்துதான் சொல்றேன் அதே கோபத்துடன் தன் அறைக்கு சென்றுவிட்டார்…

கங்கா, தான் பேசியபேச்சு தான் இத்தனைக்கும் காரணம் என்பதை மறந்துவிட்டு அங்கு நின்ற தமிழை பார்த்து என்னைக்கும் தன்னிடம் கோபபடாத மாமியார் இன்று கோபபட்டதுக்கு காரணம் தமிழரசி என நினைத்துக்கொண்டு அவளை முறைத்துவிட்டு சென்றார்.

சரவணபாண்டியன், அப்பத்தாவின் பேச்சை கேட்டதும் மனதிற்குள் ‘தன் மாமியார் பணத்துக்காக அவர் பொண்ணை தனக்கு கட்டிவைத்தார் என்ற தவறான எண்ணத்தை மறந்து அவரின்மேல் நல்ல எண்ணம் வந்ததை உணர்ந்தவன்’, அங்கு நின்ற தன் மனைவியை ஒருமுறை பார்த்துவிட்டு விலகி சென்றான்.

நாட்களும் அதன் போக்கில் ஓட அவளின் அமைதியான குணமும்,பொறுமையும்,அக்கறையான செயல்களுமே சரவணபாண்டியனின் மனதில் நல்லெண்ணத்தை உருவாக்கியது. அவன் முகம்குடுத்துக்கூட பேசாதபோதும் அவனுக்கான தேவைகள் ஒரு மனைவியாக அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தாள். அந்த செய்கையே அவனின் மனதில் அவளின் மீதான காதலை உருவாக்கியது. அந்த காதலே அவளுக்கான தேவைகளை அனைத்தையும் அவள் அறியாமையிலே நிறைவேற்றினான். அவளின் கனவு ஆசிரியர் ஆக வேண்டும் என்பதை அறிந்துகொண்டு அவனது ஊரிலே அரசுப் பள்ளியில் அவளுக்கு வேலை கிடைக்குமாறு செய்துகுடுத்தான். ஒவ்வொன்றையும் அவளுக்காக செய்தாலும் அதனைச் சிறு செய் கையிலையாவது அவளிடம் காட்டியிருந்தால் அவளும் கல்யாண வாழ்க்கையையே வெறுக்கும் அளவிற்குச் சென்றிருக்கமாட்டாள்.

என்ன செய்வது எல்லாம் விதிப்படிதானே நடக்கும்.

நாம் ஒருத்தர் மீது வைத்திருக்கும் அன்பை அவர்களிடம் காட்டினால் மட்டுமே அதற்குரிய மதிப்பு கிடைக்கும் தனக்குள்ளையே வைத்துக்கொண்டால் அந்த அன்பினால் ஆருக்கும் பலன் கிடைக்காது. இதை கணவன் மனைவி இருவருமே புரிந்துகொண்டாலே போதும் வாழ்க்கை சொர்க்கமாக மாறும்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here